2010 வருடத்திற்க்கான கடைசி செய்தியை கொடுக்கும்படி எங்கள் சபை போதகர், போதகர் NEWTON அவர்களை கேட்டுக்கொண்டார்.
செய்தி : இந்த அதிகாரத்தை மோசேயின் பாடல் என்று சொல்லலாம். அது உபாகமம் 32 .இதிலே எப்படி கர்த்தர் இஸ்ரவேல் புத்திரரை ஆச்சரியமாய் , அதிசயமாய் வழி நடத்தினார் என்று மோசே சொல்லி இருக்கிறான் .
உபாகமம் 32 : 10 - 12
10. பாழான நிலத்திலும் ஊளையிடுதலுள்ள வெறுமையான அவாந்தர வெளியிலும் அவர் அவனைக் கண்டுபிடித்தார், அவனை நடத்தினார், அவனை உணர்த்தினார், அவனைத் தமது கண்மணியைப்போலக் காத்தருளினார்.
11. கழுகு தன் கூட்டைக் கலைத்து, தன் குஞ்சுகளின்மேல் அசைவாடி, தன் செட்டைகளை விரித்து, அவைகளை எடுத்து, அவைகளைத் தன் செட்டைகளின்மேல் சுமந்துகொண்டுபோகிறதுபோல,
12. கர்த்தர் ஒருவரே அவனை வழி நடத்தினார்; அந்நிய தேவன் அவரோடே இருந்ததில்லை.
இங்கு ஒரு மனிதனை நடத்தியது போல என்றும், அவனை, அவனை என்றும் பார்க்கிறோம். அவன் என்பது யாக்கோபின் புத்திரரான இஸ்ரவேல் புத்திரரை குறிக்கிறது. பழைய ஏற்பாடு காலத்திலே தேவன் கொஞ்சம் பேரை தெரிந்துக்கொண்டு அவர்களோடு உறவாடினார் அவர்கள் தான் இஸ்ரவேல் புத்திரர் என்று பார்க்கிறோம், ஆனால் புதிய ஏற்பாடு காலத்தில் தேவன், யாரெல்லாம் கர்த்தரை தேடுகிறார்களோ அவர்களோடு உறவாடுகிறார் . இந்த உண்மை இஸ்ரவேலருக்கும்,தேவனை தேடுகிற நமக்கும் பொருந்தும் . மேற்கூறிய வசனத்திலே 3 காரியங்களை தேவன் செய்தார். அதை மட்டும் தியானிக்கலாம் . தேவன் யாக்கோபை தெரிந்து கொண்ட முறை வித்தியாசமானது அருமையானவர்களே. 10 வது வசனத்தை படித்தால்...
பாழான நிலத்திலும் ஊளையிடுதலுள்ள வெறுமையான அவாந்தர வெளியிலும் அவர் அவனைக் கண்டுபிடித்தார் ...உணர்த்தினார் என்று பார்க்கிறோம் . ஆங்கில வேதாகமத்திலே உணர்த்தினார் என்ற வார்த்தை INSTRUCTED HIM ( KING JAMES ), SCANNED HIM (AMPLIFIED)என்று சொல்லப்பட்டிருகிறது.SCANNED HIM என்றால் X-RAY வை போல SCAN செய்தார் என்றேபொருள்படுகிறது.
ஆதியாகமம் 28:11
ஒரு இடத்திலே வந்து, சூரியன் அஸ்தமித்தபடியினால், அங்கே ராத்தங்கி, அவ்விடத்துக் கற்களில் ஒன்றை எடுத்து, தன் தலையின்கீழ் வைத்து, அங்கே நித்திரை செய்யும்படி படுத்துக்கொண்டான். 12. அங்கே அவன் ஒரு சொப்பனம் கண்டான்; இதோ, ஒரு ஏணி பூமியிலே வைக்கப்பட்டிருந்தது, அதின் நுனி வானத்தை எட்டியிருந்தது, அதிலே தேவதூதர் ஏறுகிறவர்களும் இறங்குகிறவர்களுமாய் இருந்தார்கள்....
தேவன், யாக்கோபை அவன் தன் சகோதரனுடைய ஆசிர்வாதத்தை களவாடி திருட்டளவாய் ஓடிப்போகும்போது வானாந்திரமான இடத்திலே வானாந்திரமான மனநிலையிலே ஒரு தரிசனத்தை கொடுத்து அவனை சந்திப்பதாக பார்க்கிறோம். அந்த இடம் பாழான ஒரு இடம் , இது தான் அவன் வாழ்க்கையில் தேவனுடைய முதலாவது சந்திப்பு.அருமையானவர்களே யாக்கோபுக்கு மட்டுமல்ல தேவன் நம்மையும் கூட தெரிந்துக்கொண்ட விதம் இப்படித்தான், பாழான இடத்திலே தேவன் நம்மை சந்தித்தார். அப்படிப்பட்ட நிலையிலே தேவன் நம்மை கண்டுபிடித்தார். வேதம் சொல்லுகிறது உணர்வுள்ளவன் இல்லை , ஒருவனாகிலும் இல்லை என்றும்,. மாடு தான் முன்னனையையும், கழுதை தன் எஜமானனையும் அறியும், ஆனால் மனிதராகிய நாமக்கோ .... ? ......உணர்வு இல்லாத நிலை ...
நமக்கு கர்த்தரை யார் என்று உணர்த்திய தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
நம்மை கண்டு பிடித்த தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம் . நாம் யார் என்பதை நமக்கு உணர்த்தின தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
கண்டுபிடித்தது மட்டுமல்ல
நடத்தினார் ,உணர்த்தினார் , காத்தருளினார் .
ஆதியாகமம் 24 : 48
தலைகுனிந்து, கர்த்தரைப் பணிந்துகொண்டு, நான் என் எஜமானுடைய சகோதரன் குமாரத்தியை அவர் குமாரனுக்குக் கொள்ள என்னை நேர்வழியாய் நடத்திவந்த என் எஜமானாகிய ஆபிரகாமின் தேவனாயிருக்கிற கர்த்தரை ஸ்தோத்திரித்தேன்.
தன் எஜமானாகிய ஆபிரகாமின் குமாரனுக்கு பெண் தேட எலேயேசர் புறப்பட்டு செல்கிறான், இந்நாட்களில் இருப்பது போல அப்போது MARRIAGE BEURO இல்லை, ஆனால்...
அவன் தேவனிடத்தில் ஜெபிக்கிறான், அவன் தண்ணீர் கேட்கும் போது அவனுக்கும், அவன் ஒட்டகங்களுக்கும் தருவேன் என்று சொல்லும் பெண்ணே கர்த்தர் தன் எஜமானனுடைய குமாரனுக்கு நியமித்த பெண் என்று தன் இதயத்திலே நினைக்குமுன்னே கர்த்தர் அதை வாய்க்க செய்தார். அவனை நேர் வழியாய் கர்த்தர் நடத்தினார். நம்மையும் கூட இந்த ஆண்டு கர்த்தார் நேர் வழியாய் நடத்தினார். காரியங்களை வாய்க்க செய்தார் . தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
யாத்திராகமம் 13 : 21
அவர்கள் இரவும் பகலும் வழிநடக்கக்கூடும்படிக்கு, கர்த்தர் பகலில் அவர்களை வழிநடத்த மேகஸ்தம்பத்திலும், இரவில் அவர்களுக்கு வெளிச்சங்காட்ட அக்கினிஸ்தம்பத்திலும் அவர்களுக்கு முன் சென்றார்....
இஸ்ரவேல் ஜனங்களை தேவன் இப்படித்தான் ஆச்சரியமாய் நடத்தினார். பகலிலே மேகம் ஸ்தம்பமாய் நின்றது நிழல் கொடுக்க...! . இரவிலே அக்கினி ஸ்தம்பமாய் நின்றது வெளிச்சம் கொடுக்க... ! இப்படி இயற்க்கை சக்திக்கு மேலாக அவர்களை அதிசயமாய் நடத்தினார் . நம்மையும் கூட அப்படித்தான் எதிர்ப்பாராத உதவிகள், ஆச்சரியமான வழி நடத்துதல் (SUPPER NATURAL GUIDANCE OF LORD ...) நம்மை அதிசயமாய் நடத்திய தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம் .
யாத்திராகமம் 15 : 13
நீர் மீட்டுக்கொண்ட இந்த ஜனங்களை உமது கிருபையினாலே அழைத்து வந்தீர்; உம்முடைய பரிசுத்த வாசஸ்தலத்துக்கு நேராக அவர்களை உமது பலத்தினால் வழிநடத்தினீர்.
கர்த்தர் ஒருவரே நடத்தினார் ... பரிசுத்த வாசஸ்தலத்துக்கு நேராக... சபைக்கு , வசனத்திற்கு நேராக வழிநடத்திய தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம் .
கழுகு தன் கூட்டைக் கலைத்து, தன் குஞ்சுகளின்மேல் அசைவாடி, தன் செட்டைகளை விரித்து, அவைகளை எடுத்து, அவைகளைத் தன் செட்டைகளின்மேல் சுமந்துகொண்டுபோகிறதுபோல....
கழுகு தன் கூட்டைக் கலைத்து... ஏன் கழுகு தன் கூட்டை கலைக்க வேண்டும்...? அதற்கு என்ன பைத்தியமா .. இல்லை அருமையானவர்களே, கூட்டை கலைப்பது அழிப்பதற்கு அல்ல , குஞ்சுகள் பறக்க கற்றுக்கொள்ள , பெலப்பட ..
இந்த வருடத்திலே கர்த்தர் நம்மிடத்திலே இருந்து சிலவற்றை பிடுங்கி இருக்கலாம் ...அது உறவுகளாக இருக்கலாம் , வேலையாக இருக்கலாம் . எதுவாய் இருந்தாலும் அது நம்மை நிலை நிறுத்த, பெலப்படுத்தத் தான்
நம்மை பெலப்படுத்திய தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
யூதா 1 :24
வழுவாதபடி உங்களைக் காக்கவும், தமது மகிமையுள்ள சந்நிதானத்திலே மிகுந்த மகிழ்ச்சியோடே உங்களை மாசற்றவர்களாய் நிறுத்தவும் வல்லமையுள்ளவரும்,...
வழுவாதபடி - எதிலிருந்து ...? விசுவாசத்திலிருந்து வழுவாதபடி நாமை காத்த தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ...
நல்ல போராட்டத்தை போராடினேன் என்று சொல்லத்தக்கதாக கர்த்தர் நம்மை காப்பார்
.
என் கால் சறுக்குகிறது என்று சொல்லும்போது கர்த்தர் என்னை தாங்கினார் ...என்று பக்த்தன் சொல்லுகிறான் .
நம்மை கண்மணிபோல காத்த தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம்... அவர் நடத்திய நேர் வழிக்காக, அவர் செய்த நன்மைகளை எண்ணி எண்ணி தேவனாகிய கர்த்தரை ஸ்தோத்தரிப்போம் ...
உங்கள் கருத்துக்களை prithiviraj23@gmail.com க்கு தெரியப்படுத்துங்கள்
ஊற்று கேட்கும் தேவன் உடனடி பதில் - 2 : மேவிபோசேத் - கண்ணீரை துடைக்க கர்த்தர் உண்டு கலங்காதே
அப்பொழுது நானும் ஏன் குடுபத்தினரும் சபைக்கு சென்றுக்கொண்டிருந்தோம் . சில நாட்களாக பிரச்னைககளால் மனம் நொந்து என் குடுபத்திரிடம் நான...
-
எசேக்கியா ராஜா - அறிமுகம். ( http://en.wikipedia.org/wiki/Hezekiah ) கடந்த வாரங்களில் நடந்த வேதப்பாடங்களில் நான் கேட்டது. செய்தி : சார்லஸ்...
-
அப்பொழுது நானும் ஏன் குடுபத்தினரும் சபைக்கு சென்றுக்கொண்டிருந்தோம் . சில நாட்களாக பிரச்னைககளால் மனம் நொந்து என் குடுபத்திரிடம் நான...
-
எசேக்கியா ராஜா -2 (வைராக்கியம்) எசேக்கியாவின் அறிமுகத்தை ( http://prithiviraj23.blogspot.com/2011/10/blog-post.html ) பார்த்தோம். தன்னு...