Saturday, December 11, 2010

உடைந்த உள்ளத்திலிருந்து...

                      இன்று மதியத்திலிருந்து என் இதயத்தில் ஒரு பாரம் , என்னை இருக்கவிடவில்லை ,நான் அப்படி என்ன செய்தேன், அதிகமாக கோபப்பட்டேன், பொறுமையை இழந்தேன் என்பது அப்போது தான் தெரிந்தது.இன்று 2nd Saturday என்பதால்  திரு.சுந்தர் ராஜ்  அவர்களுடைய  வீட்டில் ஜெப கூடுகை இருந்தது, ஆரம்பத்திலிருந்தே தேவன் இடைப்பட ஆரம்பித்தார், நான் என்னுடைய கோபத்துக்காக ஜெபிக்க வேண்டும என்று யோசித்துக்கொண்டு இருந்தேன், ஆனால் ஜெபத்தை நடத்தியவரோ என்னுடைய அல்லது நான் என்னக்காக செய்ய வேண்டிய ஜெபத்தை அவர் செய்தார், நான் கோபப்படும்போது என்னுடைய பொறுமையை இழந்து வார்த்தைகளை கொட்டிவிடுகிறேன். இதற்க்கு காரணம் நான் முடிந்தவரை  சரியாக இருக்க வேண்டும என்று நினைப்பது, அதில் என்ன தவறு என்று நீங்கள் கேட்க கூடும், தவறில்லை ஆனால் நான் அவ்வாறு நினைப்பதால் மற்றவர்கள் சிறு தவறு செய்தால் கூட என்னால் பொறுக்க முடியவில்லை.அடுத்தவர்களும் நான் நினைபதுபோல் இருக்கவேண்டும் என்ற கட்டயம் இல்லையே. அடுத்தவர்களை கேட்டால்தான்   தெரியும் நான் என்ன தவறு செய்கிறேன்  என்று.
                    நேரம் வந்தபோது என்னுடைய ஜெபக்குறிப்பை நான் சொன்னேன். அதற்க்கு அந்த தேவ மனிதனோ கோபத்திற்கு முக்கிய காரணம் பெருமை என்றார். நான் என்ற எண்ணம், மட்டுமல்ல, ஒரே விஷயத்தை(தவறை ) திரும்ப திரும்ப யோசிப்பதும் இதற்கு காரணம் என்று சொன்னார். மிக சரி , ஆம் நான் என்ற எண்ணம் எனக்குள் இல்லை என்ற எண்ணம் எனக்கு, மன்னிக்கிறேன் ஆனாலும் திரும்ப திரும்ப யோசிக்கிறேன் விட்டு விட இயலவில்லை காரணம் நான் சரி என்ற எண்ணம் தான் . ஜெபித்தோம் . என் இதயம் உடைந்தது . அழ வேண்டும  என்பது போலத்தான் இருந்தது. நான் எல்லாவற்றையும் சரி செய்ய நினைக்கிறன் ஆனால் அதற்காக காத்துக்கிடக்க வேண்டும், அதுத்தான் பிரச்சனை. பொறுமை இல்லை . இது தேவனை அனுமதிக்காமல் நானாக எல்லாவற்றையும் செய்ய நினைப்பதை சுட்டிக்காட்டியது .

உங்கள் கருத்துக்களை,அனுபவத்தை பகிர்ந்துக்கொள்ள விரும்பினால்                               prithiviraj23@gmail.com க்கு தெரியப்படுத்துங்கள் .

ஊற்று கேட்கும் தேவன் உடனடி பதில் - 2 : மேவிபோசேத் - கண்ணீரை துடைக்க கர்த்தர் உண்டு கலங்காதே

       அப்பொழுது நானும் ஏன் குடுபத்தினரும் சபைக்கு சென்றுக்கொண்டிருந்தோம் . சில நாட்களாக பிரச்னைககளால் மனம் நொந்து என் குடுபத்திரிடம் நான...