ஒவ்வொரு புதன் கிழமைகளிலும் மாலை 7 மணிக்கு எங்கள் சபையிலே வேதப்பாடம் (பைபிள் STUDY) உண்டு . ஆனால் நேற்றிலிருந்து புதிய வருடத்திற்க்கான ஆயத்த கூட்டங்கள் ஆரம்பித்துவிட்டிருந்தது. நானும் என்னை ஆயத்தப்படுத்துவதற்காக சென்றிருந்தேன். தேவனை ஆராதித்துக்கொண்டிருக்கும்போது போதகர் சொன்ன கருத்து என்னை உற்ச்சாகப்படுத்தியது, அது சமையலை பற்றியது . நம் உணவு வழக்கத்திலே சில உணவு வகைகளை ஊற வைத்து பின் சமைப்பது உண்டு , மோர் மிளகாய் எடுத்துக்கொண்டால் , அந்த மிளகாய் ஊற ஊற அதின் கார தன்மை மாறி வேறே சுவை வந்து விடுகிறது, அது ஊறிவிட்டால் பிறகு அது தன் பழைய காரத்தன்மைக்கு திரும்புவதில்லை. அதே போலத்தான் நாமும் தேவனோடு இணைந்து இருக்க , தேவனுக்குள்ளாக எந்த அளவுக்கு இருகிறோமோ அவ்வளவு நம்முடைய தன்மைகள் மாறி தேவனுடைய தன்மைகளை நாம் வெளிப்படுத்துவோம் .... தேவனுக்குள் நாம் ஊற, ஊற அவருடைய சத்துவங்களை நாம் உட்கிரகித்து கொள்வோம் . யோசித்துப்பார்த்தேன் எவ்வளவு உண்மையான கருத்து இது . நாம் தேவனோடு இருக்க , தேவனுக்குள்ளக இருக்க நம்முடைய QUALITIES மாறி விடுகிறது ....இதற்க்கு என்னை நான் விட்டுகொடுக்க தேவன் எனக்கு உதவி செய்வாராக ....ஆமென்.
Wednesday, December 29, 2010
ஊற்று கேட்கும் தேவன் உடனடி பதில் - 2 : மேவிபோசேத் - கண்ணீரை துடைக்க கர்த்தர் உண்டு கலங்காதே
அப்பொழுது நானும் ஏன் குடுபத்தினரும் சபைக்கு சென்றுக்கொண்டிருந்தோம் . சில நாட்களாக பிரச்னைககளால் மனம் நொந்து என் குடுபத்திரிடம் நான...
-
எசேக்கியா ராஜா - அறிமுகம். ( http://en.wikipedia.org/wiki/Hezekiah ) கடந்த வாரங்களில் நடந்த வேதப்பாடங்களில் நான் கேட்டது. செய்தி : சார்லஸ்...
-
அப்பொழுது நானும் ஏன் குடுபத்தினரும் சபைக்கு சென்றுக்கொண்டிருந்தோம் . சில நாட்களாக பிரச்னைககளால் மனம் நொந்து என் குடுபத்திரிடம் நான...
-
எசேக்கியா ராஜா -2 (வைராக்கியம்) எசேக்கியாவின் அறிமுகத்தை ( http://prithiviraj23.blogspot.com/2011/10/blog-post.html ) பார்த்தோம். தன்னு...