Saturday, December 25, 2010

Attempt great things for God

  அனைவருக்கும் கிறிஸ்துமஸ் நல் வாழ்த்துக்கள் ...
இன்று கிறிஸ்துமஸ் செய்தியை இங்கே  கொடுக்க வேண்டும் என்று எவ்வளவோ முயற்சி செய்தேன். ஆனால் என் மனதில் உள்ள வருத்தம் என்னை அனுமதிக்கவில்லை . நான் என் வருத்தத்திற்கு அனுமதி கொடுத்துவிட்டேன் போலும். இருக்கட்டும். இன்று நான்  என் வாழ்க்கைக்கு தேவையான 2 முக்கியமான விஷயங்களை கற்றுக்கொண்டேன் . அதில் ஒன்றை மட்டும்  பகிர்ந்துக்கொள்ள விரும்புகிறேன். இன்று  நான் கேட்ட கிருஸ்துமஸ் செய்தியை இங்கே கொடுக்க வேண்டும் என்று முயற்சி செய்து தோல்வி அடைந்தேன். இதை பற்றி யோசிக்கும் போது  கேள்வியின் நாயகனான எனக்கு  சட்டென்று ஒரு எண்ணம் தோன்றியது, அது ஊழியம் செய்யும் தேவ மனிதர்களின்  பாடுகளை பற்றியது. அவர்களுக்கு என்ன தோல்வி வந்தாலும் தேவன் ஜெயிகிறவர் என்று அவர்கள் மற்றவரை தேற்றத்தான் வேண்டும். அவர்கள் குடும்பத்தில் எவ்வளவு பிரச்சனை இருந்தாலும் அடுத்தவர் குடும்பத்துக்காக ஜெபிக்கத்தான் வேண்டும், அதற்காகவே தேவன் அவர்களை ஊழியராக தெரிந்துக்கொண்டார்.  ஒரு சிறிய பிரச்சனை என் சின்ன முயற்சியை தோற்கடித்துவிட்டது.  சரி அந்த  எண்ணம்  என்ன என்று நீங்கள் கேட்கலாம் .
வில்லியம் கேரி (இவரை பற்றி நான் கேள்விப்பட்டது ) என்னும் மிஷினரி தன் நாட்டை விட்டு தேவனுடைய அழைப்பிற்கு இணங்கி நம் நாட்டிற்க்கு வந்தார், ஊழிய பாதையிலே தன் மகனை பறிகொடுத்தார். இறந்த தன் மகனை அடக்கம் செய்யக்கூட பணம் இல்லாத நிலை. தானே இறந்து கிடந்த தன் மகனை அடக்கம் செய்தார், இதை பார்த்த அவரது மனைவிக்கு பைத்தியம் பிடித்துவிட்டது.... அவரது மனைவியோ  ஓயாமல் கூச்சல் போட்டுக்கொண்டே இருப்பாராம்.ஆனால் இவரோ பக்கத்துக்கு அறையில் அமர்ந்து வேதாகமத்தை (BIBLE) வங்காள (BENGALI) மொழியிலும், சமஸ்கிரதத்திலும் (SANSKRIT ) மொழி பெயர்த்தார்.... யோசித்துப்பார்த்தேன்...  என்ன மனநிலை , எந்த சூழ்நிலை , எத்தனை கடினமான வேலை.  எப்படி செய்திருக்க முடியும் ?   " Expect great things from God; attempt great things for God "  இது  அவர் அடிக்கடி பயன்படுத்தும் அவரது வாக்கியம் .
என்ன ஒரு அர்ப்பணிப்பு அவருக்கு ... ஒருவேளை இதை உணர்த்துவதக்க்காகத்தான் எனக்கு வருத்தமான இந்த சூழ்நிலையோ ?
புனித வெள்ளி மட்டுமல்ல , கிறிஸ்த்துமஸ் கூட கிறிஸ்துவின் தியாகத்தையே காட்டுகிறது ...

ஊற்று கேட்கும் தேவன் உடனடி பதில் - 2 : மேவிபோசேத் - கண்ணீரை துடைக்க கர்த்தர் உண்டு கலங்காதே

       அப்பொழுது நானும் ஏன் குடுபத்தினரும் சபைக்கு சென்றுக்கொண்டிருந்தோம் . சில நாட்களாக பிரச்னைககளால் மனம் நொந்து என் குடுபத்திரிடம் நான...