முதலில் நான் எனது தலைப்பைப்பற்றி சொல்லவேண்டும். இதற்கு உடையும் உறவுகள் உணர்வற்ற மனிதர்கள் என்ற வாக்கியத்தை தலைப்பாக வைக்கலாம் என்று யோசித்தேன், ஆனால் இதை எதிர்மறையான தலைப்பாகவே எல்லோரும் கருத வாய்ப்புகள் அதிகம் . எனவே என் மனதில் உள்ள ஆதங்கத்தயும், நான் சந்தித்த சில நிகழ்வுகளை சொல்ல விரும்பியதால், இந்த சொல்லத்துடிக்குது மனசு என்ற தலைப்பை வைக்க முடிவு செய்தேன்...
எனக்கு குறிப்பிடட்ட சிலரே நண்பர்களாக உள்ளனர், காரணம் பல உண்டு. சில காரணங்களை சொல்லுகிறேன்,தவறாக நினைக்கவேண்டாம், இது என்னுடைய கருத்துமட்டுமே. எனக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்லை, நான் என்னை பெருமைப்படுத்துவதர்க்காக சொல்லவில்லை, என் பெற்றோர் என்னை அப்படி வளர்த்தார்கள், எனக்கும் ஏதாவது பழக்கத்தை வைத்துக்கொள்ளவேண்டும் என்ற எண்ணம் இல்லை, நிச்சயமாக என் பெற்றோருக்கு நான் நன்றி சொல்லத்தான் வேண்டும். கெட்டபழக்கத்துக்கும் FRIENDSHIP 'க்கும் என்ன சம்பதம் என்று தானே யோசனை!. இந்த காலகட்டத்தில் ஒவ்வொரு பழக்கத்திற்கும் ஒரு குறிப்பிட்ட நண்பர்களை தெரிந்துகொள்கிறார்கள். உங்களுக்கு எந்த பழக்கமும் இல்லை என்றால் தானாகவே உங்கள் நண்பர்களின் வட்டம் சிறியதாகிவிடும். இது நிதர்சனமான உண்மை. தோழர்கள் எவ்வளவோ பரவாஇல்லை, ஆனால் தோழிகளோ சொல்லவே தேவையில்லை. உங்களில் பலப்பேர் இதை ஒத்துக் கொள்ளக்கூடும்.எனக்கு சில நல்ல தோழிகளும் உண்டு , அவர்கள் திருமணதிற்கு பிறகும் கூட அவர்கள் கணவர்களும் நல்ல நட்பை ஆதரிக்கிறார்கள், இது வரவேற்க்கதக்க ஒன்று.
சரி 2 சம்பவங்களை உங்களிடம் சொல்கிறேன், 2 ம் தோழிகளை பற்றியதே, ஏன் நான் தோழிகளை பற்றி சொல்கிறேன் என்றால் அவர்களுடைய செயல்கள் அதிகமாக என்னை பாதித்தது.
முதல் தோழியோ என்னிடம் எல்லவற்றையும் பகிர்ந்துக்கொள்வாள்,சுகங்கள், துக்கங்கள், ஆலோசனை,எல்லவற்றையும் தான், காலபோக்கில் அவளுக்கு காதல் மலர்ந்தது, அவளுடன் கூட வேலை செய்பவர் அவர். சிறிது நாள் கழித்து என்னிடம் பேசிய என் தோழியோ சில விஷயங்களை அவரின் காதலரிடம் சொல்லவேண்டாம் என்று சொன்னாள் ஏனென்றால் நான் முடிந்தவரை உண்மை பேசுவேன் என்பது அவளுக்கு தெரியும், எனவே சில விஷயங்கள் அவருக்கு தெரியவேண்டாம் என்று சொன்னாள். நான் அவளிடம், நானாக எதையும் சொல்லமாட்டேன் ஆனால் அவர் கேட்டால் நான் உண்மையை சொல்வேன் என்றேன், அவ்வளவு தான், அவள் அவளது தொடர்பையே துண்டித்துக் கொண்டாள், என்ன இது உண்மை பேசினால் என்ன தவறு.
அடுத்த தோழி சற்று வித்தியாசமானவள், என் நண்பன் என் வாழ்க்கைக்கு அவள் ஏற்றவள் என்று என்னை அவளுக்கு அறிமுகம் செய்தான், அவளும் என்னிடம் தொடர்பு கொண்டு பேசினாள்.நானும் பேசினேன், அவளும் வேதத்திலே அதிக நாட்டமுடையவளாகவே இருந்தாள். நான் அதிகமாக நான் எப்படி தேவனிடம் பற்றுக்கொண்டேன் என்பதையும் , தேவன் என்னிடம் எப்படி இடைப்பட்டார் என்பதையும் பேசுவேன். அவளும் அப்படியே அவளுடைய கேள்விகளையும், தேவனுக்கும் அவளுக்கும் இடையேயான உறவு , ஞாயிறு செய்தி எல்லவற்றையும் பேசுவோம். திருமணத்தை பற்றியும் பேசினோம் , அவளுக்கு என்னை பிடித்திருகிறது என்று சொன்னாள், நேரம் வரும்போது அவள் தகப்பனிடம் வந்து பேசவேண்டும் என்றும் சொன்னாள்.ஒருமுறை என்னிடம் அவள் இப்படி கேட்டாள் : சண்டை வந்தால் நீங்கள் பேசுவீர்களா ? நான் சொன்னேன் நான் சண்டை போட்டுக்கொண்டாவது பேசுவேன் என்றேன்,எனக்கும் அதுதான் வேண்டும் என்றாள் அவள் , பேசாமல் மட்டும் இருந்துவிடதிர்கள் என்றும் சொன்னாள்...., இப்படியாக 50 நாட்களுக்கும் மேலாக நாங்கள் பேசினோம். அன்று செப்டம்பர் 27 . ஒரு சிறு சண்டை (புரிந்துக்கொள்ளளுக்கான முதல் படி என்று கூட சொல்லலாம் ), அவ்வளவு தான் அத்துடன் அவள் என்னிடம் பேசவில்லை, நான் call பண்ணினாலும் எடுப்பதில்லை, இப்படியே ஒரு வரம் கழிந்தது. என் நண்பனிடம் சொல்லி காரணம் கேட்டேன் குளத்தில் போட்ட கல் போல பதில் ஏதும் இல்லை இதுவரை. அவள் என்னிடம் சொல்லியவற்றை அவள்செய்யவில்லை, ஒரே ஒரு சொல்லை தவிர, அதுதான் அவள் சொன்னது: நான் ஒருமுறை முடிவு செய்தால் யார் என்ன சொன்னாலும் நான் மாற்றிக்கொள்ள மாட்டேன், முடிவு எடுத்ததால் எடுத்ததுதான் என்றாள் .அவள் காப்பாற்றிய அவளது வார்த்தை இதுதான்.நான் என்னுடைய கோணத்திலிருந்து எனக்கு தெரிந்தவற்றை மட்டுமே இங்கு சொல்லுகிறேன். ஏன் நான் இதை சொல்லவேண்டும், எல்லா உறவுகளிலும் சண்டைகள் வரும்,சண்டையே வராது என்று யாராலும் சொல்ல முடியாது, ஆனால் பிறகு பேசி சரிசெய்துக்கொள்ள வேண்டும்.
அங்கு மனசாட்சிக்கு இடம்கொடுக்க வேண்டும், மனது எடுக்கும் முடிவுக்கு அல்ல.
நான் அவளை வாரத்தில் மூன்று முறையாவது பார்பதுஉண்டு ஆனாலும் அவளோ என்னை யார் என்றே தெரியாதவர் போல , எதுவுமே நடக்காதது போலவே நடந்துக்கொள்கிறாள், இது ஒவ்வொருமுறையும் அவளது மனசாட்சியை (conscious) நசுக்கிவிட்டு அவளது decision' கே முக்கியத்துவம் தருவதாக எனக்கு தெரிகிறது. இவ்வாறாக ஒவ்வொரு முறையும் மனசாட்சிக்கு இடம் கொடுக்காமல் போனால், தவறு செய்கிறோம் என்ற உணர்வே இல்லாமல் போய்விடும் ... இது மிகவும் வருந்தக் கூடிய ஒன்று .
இதன் மூலம் நான் என்ன கற்றுக்கொண்டேன் ? மீண்டும் என் வாழ்வில் மாற்றத்திற்கு உறுதுணையாய் இருந்த புத்தகத்தை படிக்க ஆரம்பித்தேன்.மீண்டும் மீண்டும் மன்னிக்க வேண்டும், ஒவ்வொரு முறையும் இந்த சம்பவம் ஞாபகம் வரும்போது கோவம் தலையெடுக்கும், ஆனால் மன்னிக்கவேண்டும் என்று மன்னித்துவிடுவேன், எவ்வளவு முறை ஒருவரை மன்னிக்க வேண்டும் ஏழு எழுபது முறை ,,,,,7 * 70 இப்படியா,இல்லை இல்லவே இல்லை ,77777777777777777 .... இப்படி எழுபது 7 . இப்படியானால் மன்னிக்க எத்தனைமுறை. கணக்கே இல்லை என்று வேதம் சொல்லுகிறது.
நீங்கள் அளக்கிற அளவின்ப்படியே உங்களுக்கும் அளக்கப்படும் என்ற வேத வசனத்தின் படி மன்னித்து தேவனிடத்தில் நாம் மன்னிப்பை பெற்றுக்கொள்வோம்.
பிரிந்துப்போகிறவன் தன் இஷ்ட்டப்படி செயயப்பார்க்கிறான் என்று வேதம் சொல்லுகிறது.
commitment இல்லாத relationship ' யையே பெரும்பாலோர் விரும்புகின்றனர்.
orkut , facebook போன்ற network site களில் நண்பர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க விரும்புகிறார்கள், இன்னொரு வார்த்தையில் சொல்ல வேண்டுமானால் hi bye relationship 'யைத்தான் விரும்புகிறார்கள், அரவணைப்பை அல்ல.
பிரிந்து சொல்லவேண்டும் என்று முடிவு செய்துவிட்டால் ஒரு காரணமும் தேவையில்லை,ஆனால் சேரவேண்டும் என்று முடிவு செய்துவிட்டால் 1000 காரணங்கள் இருந்தாலும் சேரலாம், மனது தான் வேண்டும்.where there is a will there is a way, where there is no will there is no way . எத்தனையோ பேர் உண்மையான அன்பால் திருந்தி வாழ்கிறார்கள்,நம்மில் ஒவ்வொருவரும் ஒரு உதாரணத்தை சொல்லமுடியும்.
எந்த உறவாய் இருந்தாலும் , நட்பு , காதல், திருமணம் , குடும்ப உறவு எதுவாய் இருந்தாலும் விட்டுக்கொடுப்போம், மன்னிப்போம்,பேசி சரிசெய்துக்கொள்வோம்.
நான் இறந்த காலத்தையும், வரும் காலத்தையும் சரியாக சொன்னாலும், நான் தூதர் பாஷைகளை பேசினாலும் அன்பு எனக்கு இராவிட்டால் நான் ஓசை இடுகிற வெண்கலத்தைப்போலவும் சத்தமிடுகிற கைத்தாளத்தைபோலவும் இருப்பேன் என்று வேதம் சொல்லுகிறது
இந்த படத்தை பார்ப்போம் , அன்பு ஒருக்காட்டு மிருகத்தை எப்படி மாற்றியிருக்கிறது என்று இதை பார்த்தால் புரியும்.
உறவுகளில் உண்மையாக இருப்போம். உண்மை முள்ளாக குத்துவது போலதான் இருக்கும், ஆனால் அது மருந்து போல எல்லவற்றையும் சரிசெய்துவிடும் . உண்மைக்கு எந்த சாயமும் தேவையில்லை. உண்மை பலாச்சுளை போல , அதை சுற்றிலும் முள் இருந்தாலும் உண்மை இனிக்கும். அப்படியானால் உணமையான உறவு எப்படி இருக்கும் என்று பாருங்கள், அது தேனில் இட்ட பலாச்சுளை போல இனிக்கும்.
உங்கள் கருத்துக்களை prithiviraj23@gmail.com க்கு தெரியப்படுத்துங்கள்...

No comments:
New comments are not allowed.