Thursday, July 28, 2011

மிக எளிய வழியில் விசுவாசத்தை வளர்க்க -

மிக எளிய வழியில் விசுவாசத்தை வளர்க்க  -

செய்தி : போதகர். சார்லஸ் தாசன் .
இது நாம் ஒவொருவரும் பயிற்சி செய்யவேண்டிய ஒன்று , 
இது நமக்கு ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சொல்லிக்கொடுத்த மிக எளிய வழி
லுக்கா 17 :1.  
      பின்பு அவர் தம்முடைய சீஷர்களை நோக்கி: இடறல்கள் வராமல்போவது கூடாதகாரியம், ஆகிலும் அவைகள் எவனால் வருகிறதோ, அவனுக்கு ஐயோ!
இங்கு, ஒருவனுக்கு இடறல்கள் வராமல் போகாது. இடறல்கள் வராமல் இருப்பது தான் கூடாத காரியம். எனவே இடறல்கள் என்பது ஒருவனுடைய வாழ்வில் இன்றியமையாததாகவே உள்ளது என்று சொல்லுவது வேறு யாருமில்லை, நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து. 
பொதுவாக நாம் லுக்கா 17 : 2  ஆம் வசனத்தை மட்டுமே பார்போம் 
    (அவன் இந்தச் சிறுவரில் ஒருவனுக்கு இடறலுண்டாக்குகிறதைப் பார்க்கிலும், அவனுடைய கழுத்தில் ஏந்திரக்கல் கட்டப்பட்டு, அவன் சமுத்திரத்தில் தள்ளுண்டுபோவது அவனுக்கு நலமாயிருக்கும்.)

ஏனென்றால் அதுதான் மற்றவர்களை சுட்டிக்காட்டுகிறது.  
ஆனால் மற்றவர்களை சுட்டிக் காட்டுவதினால் நமக்கு என்ன பயன் ?
இப்படி செய்வதினால் நம் தேவனுக்கு பிரியமாய் நடக்க முடியுமா ?
அல்லது நம்முடைய விசுவாசம்தான்  பெருகுமா?
வாசிக்கலாம்
மத்தேயு 5 :8.
       இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்.
     லுக்கா 17 : 1  வசனத்திற்கும் , மத்தேயு 5 : 8  என்ன சம்பந்தம். 
     இடறல் அடையும் ஒருவன் எப்படி இருதயத்தில் சுத்தமாக இருக்க முடியும் என்றுத்தான் நாம் பொதுவாக யோசிப்போம் .
    ஒரு இடத்தை சுத்தம் செய்ய வேண்டும் என்றால் நாம் என்ன செய்வோம் . தேவையில்லாதவற்றை பெருக்கி வெளியே கொட்டிவிடுவோம். 
    இதை ஒருமுறை செய்தால் மட்டும் போதாது, இது ஒரு தினசரி வேலையாகவே இருக்கிறது . இப்படித்தான் நாம், நம் வீட்டையும் தினமும் சுத்தம் செய்கிறோம் .
    இதைப்போல மருத்துவமனைகளில்( hospitals ) மருத்துவர்கள்  செய்யும்  காரியத்தை கவனித்தோமானால் இன்னும் இதை புரிந்துக்கொள்ள உதவும். மனித உடலில் அடைப்பட்ட சிறுநீரை catheter என்ற சாதனத்தை பயன்படுத்தி வெளியேற்றுகின்றனர்.
    The word catheter was derived from the Greek word "katheter" which means                                          "let down". 
    இந்த catheter சாதனத்தை பயன்படுத்தினால் தானாகவே அந்த கழிவு வெளியேறிவிடும் .
    சரி , நாம் நல்ல உணவுகளைத் தான் சாப்பிடுகிறோம் , வீட்டில் செய்த உணவுகளையே சாப்பிடுகிறோம் , நமக்காக நாம் பார்த்து பார்த்து நல்லவற்றை வாங்கி நன்றாக சமைத்து சாப்பிடுகிறோம் .
    இப்பொது ஒரு கேள்வி ..... பிறகு எப்படி நல்ல உணவுகளில் தேவை இல்லாத கழிவு வருகிறது . நாம் எதையும் தேவை இல்லாமல் உணவுகளில் சேர்த்து சமைப்பதில்லை. 
    சரி, தேவையான உணவில் உடலுக்கு தேவையில்லாத கழிவு வரத்தான் செய்கிறது என்பது நிதர்சனமான உண்மை  , அதுப்போல என்னத்தான் நாம் மிகச்சரியாக வாழ்ந்தாலும் கண்டிப்பாக நம் வாழ்வில் இடறல்கள் வரும் . அதை யாரும் தடுக்கவே முடியாது. இடறல்கள் நம் வாழ்வில் இன்றியமையாதது.
    உடலில் கழிவுகள்  வெளியேற்றப்பட வேண்டும். இல்லையெனில் நிச்சயமாக நமக்கு பல உடல் உபாதைகள் கண்டிப்பாக ஏற்படும் .
    இதைப்போல நம் இருதயத்தை நாம் சுத்தம் செய்ய வேண்டும் . இல்லையெனில் நாம் தேவனை தரிசிக்க முடியாது . நிச்சயமாக பரலோகமும் செல்ல முடியாது .  
    எப்படி நம் உடலில் உள்ள கழிவுகளை  நம் உணர்வுகள் மூலம் கண்டறிந்து வெளியேற்றுகிறோமோ அதைப்போல நம் இருதயத்திலுள்ள கசப்புகளை, கோபங்களை , எரிச்சல்களை வெளியேற்றுவோம் . அப்போது நம் இருதயம் சுத்தமாகும் .
    வாசிக்கலாம் 
    லுக்கா 17 :3. 
    உங்களைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள். உன் சகோதரன் உனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்தால், அவனைக் கடிந்துகொள்; அவன் மனஸ்தாப்பட்டால், அவனுக்கு மன்னிப்பாயாக.
    யாரை மன்னிக்க வேண்டுமாம். . .  யார் நமக்கு இடறல் உண்டாக்கினார்களோ அவர்களை மன்னிக்க வேண்டுமாம் .  
    சரி திரும்ப அவர்கள் அதே இடறலை உண்டாக்கினால் ?
    லுக்கா 17 :4. 
    அவன் ஒருநாளில் ஏழுதரம் உனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்து, ஏழுதரமும் உன்னிடத்தில் வந்து: நான் மனஸ்தாபப்படுகிறேன் என்று சொன்னால், அவனுக்கு மன்னிப்பாயாக என்றார்.
இப்படி நாம் மன்னிப்பதின் மூலம் இருதயத்தை சுத்தம் செய்ய வேண்டும்.
இங்கு நாம் உபயோகப்படுத்த வேண்டிய catheter - மன்னிப்பு .

ஏன் மன்னிக்க வேண்டும் . தேவனை தரிசிக்க ...
ஏன் மன்னிக்க வேண்டும் . மன்னிப்பை பெற்றுக்கொள்ள ...
நாம் பாவிகளாய் இருக்கையில் நம்மை தேவன் மன்னிக்கவில்லையா ?
என் கடனாளிக்கு நான் மன்னிகிறது போல எங்களை எங்கள் பாவங்களிலிருந்து மன்னியும் என நாம் ஜெபிப்பதில்லையா ? ( பரமண்டல ஜெபம் )

இப்படி செய்வது சற்று கடினமே .. எனவேத்தான் சீஷர்கள் தங்கள் விசுவாசத்தை வர்த்திக்க செய்ய வேண்டும் என்று கேட்டனர் ... என அடுத்த வசனத்தை வாசித்தால் தெரியும் .

    5. அப்பொழுது அப்போஸ்தலர் கர்த்தரை நோக்கி: எங்கள் விசுவாசத்தை வர்த்திக்கப்பண்ணவேண்டும் என்றார்கள்.
      தேவன் நம்மை மன்னித்தார் என நம்பும் நாம், இப்படி மனிப்பத்தின் மூலம் தேவன் நம்மை மன்னிப்பார் என நம்ப வேண்டும் 

    இப்படியே நம் விசுவாசம் மேலும் மேலும் வளரும் . 
    உங்கள் வாழ்க்கையில் இருதயத்திற்க்கான catheter'ஐ (மன்னிப்பை)  பயன்படுத்துங்கள். உங்கள் விசுவாசத்தை வளர்த்திடுங்கள் .
    உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன, கருத்துக்களை  prithiviraj23@gmail.com க்கு தெரியப்படுத்துங்கள் .

ஊற்று கேட்கும் தேவன் உடனடி பதில் - 2 : மேவிபோசேத் - கண்ணீரை துடைக்க கர்த்தர் உண்டு கலங்காதே

       அப்பொழுது நானும் ஏன் குடுபத்தினரும் சபைக்கு சென்றுக்கொண்டிருந்தோம் . சில நாட்களாக பிரச்னைககளால் மனம் நொந்து என் குடுபத்திரிடம் நான...