இன்று ஞாயிறு நீங்கள் நினைப்பது சரி தான் . சபைக்கு சென்றேன்.
இன்று ஒரு புது வரவு , ஒரு குழந்தையை பிரதிஷ்டை(dedicate) செய்தார்கள். அப்பொழுது போதகர் பகிர்ந்துக்கொண்ட வசனம்
மத்தேயு 18 : 1 - 4
சீஷர்கள் இயேசுவிடம் பரலோகத்தில் யார் பெரியவன் என்று கேட்கிறார்கள்.
இயேசுவோ ஒரு பிள்ளையை நடுவிலே நிறுத்தி , நீங்கள் மனந்திருந்தி பிள்ளைகளைப்போல் போல் ஆகாவிட்டால் பரோலோக ராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்கு சொல்லுகிறேன் .என்றார் சொன்னார்.
4 ம் வசனம் - இந்த பிள்ளையைபோல தன்னைததாழ்த்துகிறவன் எவனோ அவனே பரலோகராஜ்யத்தில் பெரியவனாயிருப்பான் .
பிள்ளை கிட்ட அப்படி என்னப்பா இருக்கு தாழ்த்துவதற்கு ? .....பிள்ளைக்கிட்ட தன்னை உயர்த்துவதற்கு ஒன்றுமே இல்லை . இந்த பிள்ளையைபோல் நாம் நம்மை தாழ்த்துவோம் . நல்ல செய்தி ....நம்மை தாழ்த்துவதற்கு நமக்கு ஒரு நல்ல உதாரணம்...
இன்று செய்தியை பகிர்ந்து கொடுக்குமாறு திரு. அகஸ்டின் பாலன் அவர்களை போதகர் கேட்டுக்கொண்டார் .
செய்தி : மத்தேயு 4 : 21 அவர் அவர்களை விட்டுப்போகையில் ,வேறே இரண்டு சகோதரராகிய செபதேயுவின் மகன் யாக்கோபும் ,அவன் சகோதரன் யோவானும் தங்கள் தகப்பன் செபதேயுவுடனே படவைளிரிந்து ,தங்கள் வலைகளை பழுதுப்பார்த்துக் கொண்டிருக்கிறபோது, அவர்களைக்கண்டு அவர்களையும் அழைத்தார்
அழைப்பு ( calling ) என்ற பதம் kaleo என்ற கிரேக்க வர்தையில்ருந்து வந்தது. இந்த kaleo என்ற வார்த்தைக்கு 3 விதமான பொருள் உண்டு
kaleo - calling - அழைப்பு -
அழைப்பு ஒன்றுதான் ஆனால் அழைப்பத்தின் நோக்கம் வேறு வேறு .
1 .விருந்துக்கு அழைப்பது - calling for the feast .
2. வேலைக்கு அழைப்பது - calling for the duty
3. நியாயத்தீர்ப்புக்கு அழைப்பது - calling for the judgment
இந்த 3 அழைப்புகளிலிருந்து நம்மை நாமே கேட்க வேண்டிய 3 கேள்விகள் உண்டு
1 நான் தானியே சப்பிடுகிறேனா ?
2 .நான் சரியாகத்தான் வேலை செய்கிறேனா ?
3 . நான் எல்லாக்கடனையும் திருப்பி கொடுத்துவிட்டேனா ?
எதற்காக அழைப்பு ?
விருந்தை சாப்பிட்டுவிட்டு செல்வதற்க்கா ?
சபைக்கு வந்து நல்ல வசனங்களை கேட்டு தேவனுடைய ஆசிவதங்களை பெற்று கொள்வதற்கா ?
நான் மட்டும் சப்பிடுகிறேனா ?
enjoy பண்ணுவதற்காக மட்டும் அல்ல, வேலைக்கும் சேர்த்துத் தான் தேவன் நம்மை அழைத்து இருக்கிறார்
அழைப்பு வேலை செய்வதற்கும் தான்
2 வேலைகள் அங்கு செய்யப்படுவதை பார்க்கிறோம்
1 மீன்பிடிக்க...
ஆத்தும ஆதாயம் செய்ய ... மத்தேயு 18 : 19
மீன் பிடிப்பது என்பது ஒருவரை தேவனிடத்தில் சேர்ப்பது .
சபையில் சேர்ப்பது. தேவனிடமாய் ஒருவனை நடத்துவது.
2 பழுதுப்பர்த்தல்
பழுதுபார்த்தல் - repair என்ற வார்த்தை kartartizo என்ற கிரேக்க வார்த்தையிலிருந்து வந்தது - இதற்க்கு நிறைய பொருள் உண்டு .
தேவனைப்பற்றிய அறிவு ஒருவனுக்கு இல்லை என்றால் அவனுக்கு கேடு , ஆனால் சபைக்கு வந்து பின்வாங்கிபோனால் அதிக கேடு அல்லவா ?
மீன்ப்பிடிக்க நிறையப்பேர் இருக்கிறார்கள்.......... பழுதுப்பார்க்க ?
இந்நாட்களில் அறுவடை செய்ய போவாஸ் போன்ற ஆட்கள் அதிகம் , ஆனால் சிந்திய கதிர்களை பொறுக்க ரூத் போன்ற நபர்கள் மிகவும் அவசியம் .
ஆசரிப்புகூடாரம் மற்றும் தேவாலயத்தை எடுத்துக்கொண்டால் ஆசாரியர்கள் மிகவும் சுத்தமாக இருக்கவேண்டும். தங்களை சுத்திகரித்துக்கொண்டு , தங்கள் உடைகளையும் சுத்தமாக வைத்துகொண்டு தேவனுக்கு பலியிடுவார்கள், இவ்வளவு சுத்தமாக இருந்தாலும் கூட பரிசுத்த ஸ்தலத்திற்குள் நுழையும்முன் அவர்கள் சுத்திகரிக்க ஒரு வெண்கலத்தொட்டி அவசியம். ஆசாரியன் மக்களுக்காக பரிந்துபேசும் போது தேவன் அவனை அடிக்க கூடாது , பலிகளால் அவன் அசுத்தப்பட்டு இருக்ககூடும், எனவே அவன் மீண்டும் ஒருமுறை தன்னை சுத்திகரிக்க வேண்டும cleansing for the cleansed must required .
சங்கீதம் 68 : 11 ஆண்டவர் வசனம் தந்தார் ,அதை பிரசித்திப்படுத்துகிறவர்களின் கூட்டம் மிகுதி .
விதைப்பதற்கு அநேகர் ... பிரசித்திப்படுத்துகிறவர்களின் கூட்டம் மிகுதி
அறுப்பதற்கு .....?
மீன் பிடிக்க அநேகர் ....
பழுதுப்பார்க்க .....?
எருசலேம் எப்படிக்கட்டபட்டது என்று வரலாற்றைப்பார்தால் தெரியும்,
கி மு 575 - 535 செருபாபேல் எருசலேமைகட்டி எழுப்புகிறான்.
கி மு 455 - எஸ்ரா வசனத்தால் மக்களை கட்டி எழுப்புகிறான்.
கி மு 445 நெகேமியா , எருசலேமுக்கு அலங்கம் இல்லை , நெகேமியா 3 ம் அதிகாரத்தை படித்தால் தெரியும் 6 முறை கட்டினார்கள் என்று வருகிறது ஆனால் 35 முறை பழுதுப்பர்த்துக்கட்டினார்கள் என்று வருகிறது, பழுதுப்பர்த்துக்கட்டுதல் இங்கு ஒரு தனி நபர் செய்யவில்லை 38 நபர்கள் 42 குழுக்கள் 52 நாட்களில் கட்டி முடித்தார்கள், அந்த நாட்களிலும் இந்நாட்களில் உள்ளதுப்போல 3 வகை மக்கள் இருந்தார்கள் ,
முதல் வகை எவ்வளவு பணம் அல்லது பொருள் வேண்டுமானாலும் கொடுப்பார்கள் அவர்கள் வந்து வேலை செய்ய மாட்டார்கள். இரண்டாவது வகை கடினமாக வேலை செய்வார்கள். கிராமம் கிராமாக தேவனை சொல்லுவார்கள். தேவனுக்காக கடினமான காரியங்களை செய்வார்கள். மூன்றாவது வகை பொறுப்புடன் வேலை செய்பவர்கள் கொஞ்சம் பேரை சந்தித்தாலும் அவர்களுக்காக ஜெபிப்பது , தேவனோடிருக்கும் படி அவர்களை வழி நடத்துவது , அவர்கள் சோர்ந்து போனாலும் தேற்றுவது , பொறுப்புடன் வேலை செய்வது .
இந்த மூன்றாவது வகை தான் பழுதுப்பார்ப்பது .
பழுதுபபார்பது அவ்வளவு முக்கியமானதா . ஆம் மிக மிக முக்கியமானது .
தேவாலயத்தில் உள்ள பொன் குத்துவிளக்கு
பசும்பொன்னால் அடிப்புவேலையாய் செய்யப்பட்ட விளக்கு
பொன்னிறமான எண்ணெய் ஊற்றப்பட்ட விளக்கு
வெண்ணிறமான பஞ்சு தான் அதற்கு திரியாக திரிக்க வேண்டும .
அந்த விளக்கை கொளுத்தும் போது கருப்பு நிற திரி வரும் , அது அகற்றப்பட வேண்டும். அப்போது தான் அந்த விளக்கு நன்றாக எறியும். அந்த திரி பழுதுப்பார்க்கப்பட வேண்டும் .
தேவன் உலகத்தை படைத்தார் அப்படியே விட்டு விடவில்லை ஒவ்வொரு முறையும் அதை நல்லது என்று கண்டார் , refine செய்ததாகவே பார்க்கிறோம் .மனிதனை அவன் எடுக்கப்பட்ட நிலத்தை பண்படுத்த சொல்லுகிறார். - பழுதுப்பார்தல்
ஏன் தேவன் மீன் பிடிப்பவர்களை தெரிந்துக்கொண்டார் ?
மீன் பிடிப்பவர்களின் தன்மைகளை பார்ப்போம்
காத்திருக்குதல்
மத்தேயு 13 : 48 ... அது நிறைந்தபோது ....
வலை நிறையும் வரை காத்திருக்க வேண்டும் .
காத்திருக்குதல் என்றால் நம்மால் தாங்க கூடாத பாரம் நம்மை அழுத்தும் போது நாம் எப்படி அமைதியாக இருக்கத்தான் வேண்டுமோ அப்படி காத்திருக்குதல்.
(crushing under the weight or abiding under )
லுக்கா 5 : 5
......இராத்திரியெல்லாம் பிரயாசப்பட்டு ஒன்றும் கிடைக்கவில்லை - விடா முயற்சி
யோவான் 21 : 2 ,3 .... நேரத்தை குறித்ததான அறிவு (knowledge about time )
சங்கீதம் 22 : 6 .... நானோ ஒரு புழு (இயேசுவை குறிக்கிறது ) புழு தூண்டிலில் மாட்டப்படுவதற்க்கு, அது மீனை கவர்வதற்கு அல்ல , ஆனால் தூண்டிலில் இருக்கும் முள்ளை மறைப்பதற்கு . சிலுவையில் மரிப்பதற்காக ஒரு சரிரத்தை ஆயத்தப்படுத்தினார் என்று சொல்லப்பட்டு இருப்பது , இதற்க்கு ஒப்பனையாய் இருக்கிறது.
மத்தேயு 17: 22 படி அவர்கள் தன்னை மறைத்துகொள்வார்கள் , they have courage to hide them self
லுக்கா 5 : 5
வலைகளைபோட்டர்கள் மீன்களோ சிக்கவில்லை , ஆனால் வலைகள் மட்டும் கடலில் இருந்த பாறைகளில் மாட்டிக்கிழிந்துவிட்டன.
நாம் கூட இப்படி பட்ட மக்களை சந்தித்து இருக்ககூடும் . இவர்கள் தோற்றுபோனவர்கள் . ஒருவேளை பெரிய ஊழியக்காரர் சற்று சறுக்கினால் அவரை கவனிக்க , தேற்ற, சிலர் வரலாம் , ஆனால் என்ன தான் பிரயசப்பட்டாலும் ஒன்றும் இல்லாத ஊழியங்களை, ஊழியகரர்களை யார் தாங்குவார் , யார் தேற்றுவார் .- பழுதுப்பர்க்கவேண்டும்
கலாத்தியர் 6 : 1 ஒருவன் யாதொரு குற்றத்தில் அகப்பட்டால் ,ஆவிக்குரியவர்களாகிய நீங்கள் சாந்த்தமுள்ள ஆவியோடே அப்படிப்பட்டவர்களை சீர்பொருந்தப்பண்ணுங்கள் ...
இங்கே குற்றம் செய்து அகப்பட்டவன் என்று சொல்லி இருக்கிறது .
அப்படியானால் நாம் யார் ? . குற்றம் செய்து அகப்படாதவர்கள் .
கர்த்தர் நம்மை காட்டிக்கொடுக்கவில்லை .
யாராவது குற்றம் செய்தா போதும் வசனம் சொல்லியே அவர்களை மிதிப்பது நம் பழக்கமாகிவிட்டது,,,,
வசனம் என்ன சொல்லுகிறது ............ஆவிக்குரியவர்களாகிய நீங்கள் சாந்த்தமுள்ள ஆவியோடே அப்படிப்பட்டவர்களை சீர்பொருந்தப்பண்ணுங்கள் .
சீர்பொருந்த பண்ணுவது - பழுதுப்பார்பது
கர்த்தர் தாமே இந்த பழுதுப்பார்க்கும் கனமான ஊழியத்திற்கு நம்மை ஆயத்தப்படுத்துவராக
Sunday, December 5, 2010
ஊற்று கேட்கும் தேவன் உடனடி பதில் - 2 : மேவிபோசேத் - கண்ணீரை துடைக்க கர்த்தர் உண்டு கலங்காதே
அப்பொழுது நானும் ஏன் குடுபத்தினரும் சபைக்கு சென்றுக்கொண்டிருந்தோம் . சில நாட்களாக பிரச்னைககளால் மனம் நொந்து என் குடுபத்திரிடம் நான...
-
எசேக்கியா ராஜா - அறிமுகம். ( http://en.wikipedia.org/wiki/Hezekiah ) கடந்த வாரங்களில் நடந்த வேதப்பாடங்களில் நான் கேட்டது. செய்தி : சார்லஸ்...
-
அப்பொழுது நானும் ஏன் குடுபத்தினரும் சபைக்கு சென்றுக்கொண்டிருந்தோம் . சில நாட்களாக பிரச்னைககளால் மனம் நொந்து என் குடுபத்திரிடம் நான...
-
எசேக்கியா ராஜா -2 (வைராக்கியம்) எசேக்கியாவின் அறிமுகத்தை ( http://prithiviraj23.blogspot.com/2011/10/blog-post.html ) பார்த்தோம். தன்னு...