Friday, December 31, 2010

எண்ணி எண்ணி துதி செய்வாய்

2010 வருடத்திற்க்கான கடைசி செய்தியை கொடுக்கும்படி எங்கள் சபை  போதகர், போதகர்  NEWTON அவர்களை கேட்டுக்கொண்டார்.
செய்தி : இந்த அதிகாரத்தை மோசேயின் பாடல் என்று சொல்லலாம். அது உபாகமம் 32 .இதிலே எப்படி கர்த்தர் இஸ்ரவேல் புத்திரரை ஆச்சரியமாய் , அதிசயமாய்  வழி நடத்தினார் என்று மோசே சொல்லி இருக்கிறான் .
உபாகமம் 32 : 10 - 12
10. பாழான நிலத்திலும் ஊளையிடுதலுள்ள வெறுமையான அவாந்தர வெளியிலும் அவர் அவனைக் கண்டுபிடித்தார், அவனை நடத்தினார், அவனை உணர்த்தினார், அவனைத் தமது கண்மணியைப்போலக் காத்தருளினார்.
11. கழுகு தன் கூட்டைக் கலைத்து, தன் குஞ்சுகளின்மேல் அசைவாடி, தன் செட்டைகளை விரித்து, அவைகளை எடுத்து, அவைகளைத் தன் செட்டைகளின்மேல் சுமந்துகொண்டுபோகிறதுபோல,
12. கர்த்தர் ஒருவரே அவனை வழி நடத்தினார்; அந்நிய தேவன் அவரோடே இருந்ததில்லை.

இங்கு ஒரு மனிதனை நடத்தியது போல என்றும், அவனை, அவனை என்றும் பார்க்கிறோம். அவன் என்பது யாக்கோபின் புத்திரரான இஸ்ரவேல் புத்திரரை குறிக்கிறது. பழைய ஏற்பாடு  காலத்திலே தேவன் கொஞ்சம் பேரை தெரிந்துக்கொண்டு அவர்களோடு உறவாடினார் அவர்கள் தான்  இஸ்ரவேல் புத்திரர் என்று பார்க்கிறோம், ஆனால் புதிய ஏற்பாடு காலத்தில் தேவன், யாரெல்லாம் கர்த்தரை தேடுகிறார்களோ அவர்களோடு உறவாடுகிறார் . இந்த உண்மை இஸ்ரவேலருக்கும்,தேவனை தேடுகிற  நமக்கும் பொருந்தும் . மேற்கூறிய வசனத்திலே 3 காரியங்களை தேவன் செய்தார். அதை மட்டும் தியானிக்கலாம் .  தேவன் யாக்கோபை தெரிந்து கொண்ட முறை வித்தியாசமானது அருமையானவர்களே. 10 வது வசனத்தை படித்தால்...
பாழான நிலத்திலும் ஊளையிடுதலுள்ள வெறுமையான அவாந்தர வெளியிலும் அவர் அவனைக் கண்டுபிடித்தார் ...உணர்த்தினார் என்று பார்க்கிறோம் .  ஆங்கில வேதாகமத்திலே உணர்த்தினார் என்ற வார்த்தை  INSTRUCTED HIM ( KING JAMES ), SCANNED HIM (AMPLIFIED)என்று  சொல்லப்பட்டிருகிறது.SCANNED HIM என்றால்  X-RAY வை  போல  SCAN செய்தார்  என்றேபொருள்படுகிறது.
ஆதியாகமம்  28:11  
  ஒரு இடத்திலே வந்து, சூரியன் அஸ்தமித்தபடியினால், அங்கே ராத்தங்கி, அவ்விடத்துக் கற்களில் ஒன்றை எடுத்து, தன் தலையின்கீழ் வைத்து, அங்கே நித்திரை செய்யும்படி படுத்துக்கொண்டான்.  12. அங்கே அவன் ஒரு சொப்பனம் கண்டான்; இதோ, ஒரு ஏணி பூமியிலே வைக்கப்பட்டிருந்தது, அதின் நுனி வானத்தை எட்டியிருந்தது, அதிலே தேவதூதர் ஏறுகிறவர்களும் இறங்குகிறவர்களுமாய் இருந்தார்கள்.... 

தேவன், யாக்கோபை அவன் தன்  சகோதரனுடைய   ஆசிர்வாதத்தை களவாடி திருட்டளவாய் ஓடிப்போகும்போது   வானாந்திரமான இடத்திலே வானாந்திரமான மனநிலையிலே ஒரு தரிசனத்தை கொடுத்து அவனை சந்திப்பதாக பார்க்கிறோம். அந்த இடம் பாழான ஒரு இடம் , இது தான் அவன் வாழ்க்கையில் தேவனுடைய முதலாவது சந்திப்பு.அருமையானவர்களே யாக்கோபுக்கு மட்டுமல்ல தேவன்  நம்மையும் கூட தெரிந்துக்கொண்ட விதம் இப்படித்தான், பாழான இடத்திலே தேவன் நம்மை சந்தித்தார். அப்படிப்பட்ட நிலையிலே தேவன்  நம்மை கண்டுபிடித்தார். வேதம் சொல்லுகிறது உணர்வுள்ளவன் இல்லை , ஒருவனாகிலும்  இல்லை என்றும்,. மாடு தான் முன்னனையையும், கழுதை தன் எஜமானனையும்  அறியும், ஆனால் மனிதராகிய  நாமக்கோ .... ?  ......உணர்வு இல்லாத நிலை ...
நமக்கு கர்த்தரை யார் என்று உணர்த்திய தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
நம்மை கண்டு பிடித்த  தேவனாகிய  கர்த்தருக்கு ஸ்தோத்திரம் . நாம் யார் என்பதை நமக்கு  உணர்த்தின தேவனாகிய கர்த்தருக்கு  ஸ்தோத்திரம்  
கண்டுபிடித்தது  மட்டுமல்ல 
 நடத்தினார் ,உணர்த்தினார் , காத்தருளினார் .

ஆதியாகமம் 24 : 48
தலைகுனிந்து, கர்த்தரைப் பணிந்துகொண்டு, நான் என் எஜமானுடைய சகோதரன் குமாரத்தியை அவர் குமாரனுக்குக் கொள்ள என்னை நேர்வழியாய் நடத்திவந்த என் எஜமானாகிய ஆபிரகாமின் தேவனாயிருக்கிற கர்த்தரை ஸ்தோத்திரித்தேன்.

தன் எஜமானாகிய ஆபிரகாமின் குமாரனுக்கு பெண் தேட எலேயேசர்  புறப்பட்டு  செல்கிறான், இந்நாட்களில்  இருப்பது  போல அப்போது  MARRIAGE BEURO இல்லை, ஆனால்...
அவன் தேவனிடத்தில் ஜெபிக்கிறான், அவன் தண்ணீர்  கேட்கும்  போது  அவனுக்கும், அவன் ஒட்டகங்களுக்கும்  தருவேன்  என்று சொல்லும் பெண்ணே கர்த்தர்  தன் எஜமானனுடைய  குமாரனுக்கு  நியமித்த  பெண்  என்று தன் இதயத்திலே நினைக்குமுன்னே கர்த்தர் அதை வாய்க்க செய்தார்.  அவனை நேர் வழியாய் கர்த்தர் நடத்தினார். நம்மையும் கூட இந்த ஆண்டு கர்த்தார் நேர் வழியாய் நடத்தினார். காரியங்களை வாய்க்க செய்தார் . தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
யாத்திராகமம் 13 : 21 
அவர்கள் இரவும் பகலும் வழிநடக்கக்கூடும்படிக்கு, கர்த்தர் பகலில் அவர்களை வழிநடத்த மேகஸ்தம்பத்திலும், இரவில் அவர்களுக்கு வெளிச்சங்காட்ட அக்கினிஸ்தம்பத்திலும் அவர்களுக்கு முன் சென்றார்....
இஸ்ரவேல் ஜனங்களை தேவன் இப்படித்தான் ஆச்சரியமாய் நடத்தினார். பகலிலே  மேகம் ஸ்தம்பமாய் நின்றது நிழல் கொடுக்க...! . இரவிலே அக்கினி ஸ்தம்பமாய் நின்றது வெளிச்சம் கொடுக்க... ! இப்படி இயற்க்கை சக்திக்கு மேலாக அவர்களை அதிசயமாய் நடத்தினார் . நம்மையும் கூட அப்படித்தான் எதிர்ப்பாராத உதவிகள், ஆச்சரியமான வழி நடத்துதல்  (SUPPER NATURAL   GUIDANCE OF LORD ...) நம்மை அதிசயமாய் நடத்திய தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம் .
யாத்திராகமம் 15 : 13  
 நீர் மீட்டுக்கொண்ட இந்த ஜனங்களை உமது கிருபையினாலே அழைத்து வந்தீர்; உம்முடைய பரிசுத்த வாசஸ்தலத்துக்கு நேராக அவர்களை உமது பலத்தினால் வழிநடத்தினீர்.
கர்த்தர் ஒருவரே நடத்தினார் ... பரிசுத்த வாசஸ்தலத்துக்கு நேராக... சபைக்கு , வசனத்திற்கு நேராக வழிநடத்திய தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம் .

கழுகு தன் கூட்டைக் கலைத்து, தன் குஞ்சுகளின்மேல் அசைவாடி, தன் செட்டைகளை விரித்து, அவைகளை எடுத்து, அவைகளைத் தன் செட்டைகளின்மேல் சுமந்துகொண்டுபோகிறதுபோல....
கழுகு தன் கூட்டைக் கலைத்து... ஏன்  கழுகு  தன் கூட்டை  கலைக்க  வேண்டும்...? அதற்கு  என்ன  பைத்தியமா  .. இல்லை அருமையானவர்களே, கூட்டை  கலைப்பது  அழிப்பதற்கு  அல்ல  , குஞ்சுகள்  பறக்க  கற்றுக்கொள்ள  , பெலப்பட  ..
இந்த வருடத்திலே கர்த்தர் நம்மிடத்திலே  இருந்து  சிலவற்றை  பிடுங்கி  இருக்கலாம்  ...அது உறவுகளாக இருக்கலாம்  , வேலையாக  இருக்கலாம்  . எதுவாய்  இருந்தாலும்  அது  நம்மை நிலை  நிறுத்த, பெலப்படுத்தத் தான்
நம்மை பெலப்படுத்திய  தேவனாகிய  கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
யூதா 1 :24
வழுவாதபடி உங்களைக் காக்கவும், தமது மகிமையுள்ள சந்நிதானத்திலே மிகுந்த மகிழ்ச்சியோடே உங்களை மாசற்றவர்களாய் நிறுத்தவும் வல்லமையுள்ளவரும்,...

வழுவாதபடி - எதிலிருந்து  ...? விசுவாசத்திலிருந்து வழுவாதபடி  நாமை  காத்த  தேவனாகிய  கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ...
நல்ல போராட்டத்தை  போராடினேன்  என்று சொல்லத்தக்கதாக  கர்த்தர் நம்மை காப்பார்
.
என்  கால் சறுக்குகிறது என்று சொல்லும்போது  கர்த்தர் என்னை  தாங்கினார்  ...என்று பக்த்தன் சொல்லுகிறான் .
நம்மை கண்மணிபோல  காத்த  தேவனாகிய  கர்த்தருக்கு ஸ்தோத்திரம்... அவர் நடத்திய நேர் வழிக்காக, அவர் செய்த நன்மைகளை எண்ணி எண்ணி  தேவனாகிய  கர்த்தரை ஸ்தோத்தரிப்போம் ...

   உங்கள் கருத்துக்களை prithiviraj23@gmail.com க்கு தெரியப்படுத்துங்கள்

Wednesday, December 29, 2010

மோர் மிளகாய்

 ஒவ்வொரு புதன் கிழமைகளிலும் மாலை 7 மணிக்கு எங்கள் சபையிலே  வேதப்பாடம் (பைபிள் STUDY) உண்டு . ஆனால் நேற்றிலிருந்து புதிய வருடத்திற்க்கான ஆயத்த கூட்டங்கள் ஆரம்பித்துவிட்டிருந்தது. நானும் என்னை ஆயத்தப்படுத்துவதற்காக சென்றிருந்தேன். தேவனை ஆராதித்துக்கொண்டிருக்கும்போது போதகர் சொன்ன கருத்து என்னை உற்ச்சாகப்படுத்தியது, அது சமையலை  பற்றியது . நம் உணவு வழக்கத்திலே சில உணவு வகைகளை ஊற வைத்து பின் சமைப்பது உண்டு , மோர் மிளகாய் எடுத்துக்கொண்டால் , அந்த மிளகாய்  ஊற ஊற அதின் கார தன்மை மாறி வேறே சுவை வந்து விடுகிறது, அது ஊறிவிட்டால்  பிறகு அது தன் பழைய காரத்தன்மைக்கு திரும்புவதில்லை.  அதே போலத்தான் நாமும் தேவனோடு இணைந்து  இருக்க , தேவனுக்குள்ளாக எந்த அளவுக்கு இருகிறோமோ அவ்வளவு  நம்முடைய தன்மைகள் மாறி  தேவனுடைய தன்மைகளை நாம் வெளிப்படுத்துவோம் .... தேவனுக்குள் நாம் ஊற, ஊற அவருடைய சத்துவங்களை நாம் உட்கிரகித்து கொள்வோம் . யோசித்துப்பார்த்தேன் எவ்வளவு உண்மையான கருத்து இது .  நாம் தேவனோடு இருக்க , தேவனுக்குள்ளக இருக்க நம்முடைய QUALITIES  மாறி விடுகிறது ....இதற்க்கு என்னை நான் விட்டுகொடுக்க தேவன் எனக்கு உதவி செய்வாராக ....ஆமென்.   

Saturday, December 25, 2010

Attempt great things for God

  அனைவருக்கும் கிறிஸ்துமஸ் நல் வாழ்த்துக்கள் ...
இன்று கிறிஸ்துமஸ் செய்தியை இங்கே  கொடுக்க வேண்டும் என்று எவ்வளவோ முயற்சி செய்தேன். ஆனால் என் மனதில் உள்ள வருத்தம் என்னை அனுமதிக்கவில்லை . நான் என் வருத்தத்திற்கு அனுமதி கொடுத்துவிட்டேன் போலும். இருக்கட்டும். இன்று நான்  என் வாழ்க்கைக்கு தேவையான 2 முக்கியமான விஷயங்களை கற்றுக்கொண்டேன் . அதில் ஒன்றை மட்டும்  பகிர்ந்துக்கொள்ள விரும்புகிறேன். இன்று  நான் கேட்ட கிருஸ்துமஸ் செய்தியை இங்கே கொடுக்க வேண்டும் என்று முயற்சி செய்து தோல்வி அடைந்தேன். இதை பற்றி யோசிக்கும் போது  கேள்வியின் நாயகனான எனக்கு  சட்டென்று ஒரு எண்ணம் தோன்றியது, அது ஊழியம் செய்யும் தேவ மனிதர்களின்  பாடுகளை பற்றியது. அவர்களுக்கு என்ன தோல்வி வந்தாலும் தேவன் ஜெயிகிறவர் என்று அவர்கள் மற்றவரை தேற்றத்தான் வேண்டும். அவர்கள் குடும்பத்தில் எவ்வளவு பிரச்சனை இருந்தாலும் அடுத்தவர் குடும்பத்துக்காக ஜெபிக்கத்தான் வேண்டும், அதற்காகவே தேவன் அவர்களை ஊழியராக தெரிந்துக்கொண்டார்.  ஒரு சிறிய பிரச்சனை என் சின்ன முயற்சியை தோற்கடித்துவிட்டது.  சரி அந்த  எண்ணம்  என்ன என்று நீங்கள் கேட்கலாம் .
வில்லியம் கேரி (இவரை பற்றி நான் கேள்விப்பட்டது ) என்னும் மிஷினரி தன் நாட்டை விட்டு தேவனுடைய அழைப்பிற்கு இணங்கி நம் நாட்டிற்க்கு வந்தார், ஊழிய பாதையிலே தன் மகனை பறிகொடுத்தார். இறந்த தன் மகனை அடக்கம் செய்யக்கூட பணம் இல்லாத நிலை. தானே இறந்து கிடந்த தன் மகனை அடக்கம் செய்தார், இதை பார்த்த அவரது மனைவிக்கு பைத்தியம் பிடித்துவிட்டது.... அவரது மனைவியோ  ஓயாமல் கூச்சல் போட்டுக்கொண்டே இருப்பாராம்.ஆனால் இவரோ பக்கத்துக்கு அறையில் அமர்ந்து வேதாகமத்தை (BIBLE) வங்காள (BENGALI) மொழியிலும், சமஸ்கிரதத்திலும் (SANSKRIT ) மொழி பெயர்த்தார்.... யோசித்துப்பார்த்தேன்...  என்ன மனநிலை , எந்த சூழ்நிலை , எத்தனை கடினமான வேலை.  எப்படி செய்திருக்க முடியும் ?   " Expect great things from God; attempt great things for God "  இது  அவர் அடிக்கடி பயன்படுத்தும் அவரது வாக்கியம் .
என்ன ஒரு அர்ப்பணிப்பு அவருக்கு ... ஒருவேளை இதை உணர்த்துவதக்க்காகத்தான் எனக்கு வருத்தமான இந்த சூழ்நிலையோ ?
புனித வெள்ளி மட்டுமல்ல , கிறிஸ்த்துமஸ் கூட கிறிஸ்துவின் தியாகத்தையே காட்டுகிறது ...

Sunday, December 19, 2010

சாட்சி ஆராதனை ...

இன்று எங்கள் சபையில் சாட்சி ஆராதனை ...
              குடும்பம் குடும்பமாக தங்கள் குடும்பத்திலுள்ள ஒவ்வோருவரையும் அறிமுகம் செய்துக்கொண்டு,  கர்த்தர் கடந்த ஆறு மாதத்தில்  செய்த நன்மைகள் மற்றும் ஜெபக்குறிப்புகளை பகிர்ந்துக்கொள்ள வேண்டும் ...இப்படி வருடத்திற்கு 2 சாட்சி ஆராதனை உண்டு ...
இந்த சாட்சி ஆரதானை மிக முக்கியமான ஒன்றாக நான் கருதுவதுண்டு, காரணம்  நான் என் அலுவலக பணியினிமித்தம் 2 ஆண்டுகளாக சபைக்கு செல்ல இயலாத நிலை ஏற்ப்பட்டது. அந்த நேரத்தில் ஏற்கனவே தேவனைப்பற்றியும், சபையைப்பற்றியும் என் உள்ளத்தில் உள்ள பல கேள்விகள் என் உள்ளத்தில் வேர்விட்டு ஆலமரம்போல வளர்ந்துவிட்டிருந்தது. மீண்டும் எனக்கு ஞாயிறு அன்று ஒய்வு கிடைத்தும்  சபைக்கு செல்ல முடியவில்லை. என் கேள்விகள் என்னை தடுத்து நிறுத்தியது. மீண்டும் சபைக்கு வரவேண்டும் என்று நிர்பந்திக்கப்பட்டேன். நான் சபைக்கு சென்றேன்,  அந்த வாரம் சாட்சி ஆராதனை. என் குடும்பத்தின் பெயர் அழைக்கப்பட்டது. நான் என்ன சொல்லுவேன். ஏற்கனவே என் மனதிலே கேள்விகள், தேவன் எனக்கு நன்மைகள் செய்யவேயில்லை என்ற நினைப்பு வேறு, பொய் சொல்லக்கூடாது, பொய் சொல்லுவது எனக்கு பிடிக்காது, நான் தவறாக ஏதாவது சொல்லிவிட்டால் அது மற்றவர் மனதிலே கேள்விகளை ஏற்ப்படுத்திவிடக்கூடும், எனவே என்ன நான் சொல்ல முடியும் ?  எப்படி  நான் சொல்லுவது ?    இப்படி என் மனதிலே குழப்பம் அடைந்த நிமிடங்களை என்னால் மறக்கவே முடியாது.
                என்னுடைய முறை வந்தபோது  என் மனதில் தோன்றிய அந்த வசனத்தை நான் சொல்லி விட்டு  போய் அமர்ந்து கொண்டேன் . ஆனால் தேவன் என்னை ஒரு நோக்கத்தோடுத்தான் அழைத்திருந்தார் என்று எனக்கு அன்று தெரியவில்லை. நான் சபை நடுவே, கர்த்தருடைய சந்நிதியிலே, பரிசுத்தவான்கள் முன்னிலையிலே சொன்ன அந்த வார்த்தையை, அந்த வசனத்தை தேவன் கனப்படுதினார்.  அந்த வார்த்தை தான்  இந்த வசனம்     " நான் நிற்பதும் நிர்மூலம் ஆகாதிருப்பதும் தேவனுடைய சுத்த  கிருபை " .
அதன் பிறகு தேவன் என்னோடு இடைபட ஆரம்பித்தார். இந்த வார்த்தையை சொல்ல எவ்வளவு நேரம் எடுத்திருக்கும் என்று நீங்களே இந்த வார்த்தையை சொல்லிப்பர்த்தால் தெரியும். ஆனால் தேவன் என் உள்ளத்தை மட்டுமே பார்த்தார். பதில் கொடுத்தார். பதில் கொடுக்கும் என் தேவனுக்கு நன்றி.  எனவே தான்  இந்த சாட்சி ஆராதனையை  மகிமை பொருந்திய ஒன்றாக நான் கருதுகிறேன்.


           உங்கள் கருத்துக்களை  prithiviraj23@gmail.com க்கு தெரியப்படுத்துங்கள் ...

Monday, December 13, 2010

God unlimited...


He is the God of  both the mountains and the valleys
He is God of  near  and far
He is God of multitudes and individuals as well
He is God of not only strong ones but also weak
His voice is thunderous and yet could be small and still
He is  magnificent, greater than the Universe in size yet zoom Himself into my heart size..
                                                                                                                                  His name is Jesus

கட்டிடம் கட்டிடும் சிற்பிகள் நாம் ...!

இன்று ஞாயிறு , ஆம் வழக்கம் போல சபைக்கு, ஏற்கனவே நேற்று இரவு தேவனுடைய இடைப்படுதல் என்னை உடைத்துவிட்ட நிலையில் தேவன் என்னிடத்தில் கிரியை செய்ய என்னை நான் விட்டுக்கொடுக்க வேண்டும் என்று நினைத்துகொண்டேன்.
ஆராதனை வேளையில் ஒரு பாடல்
                                                நீர் மாத்திரம் போதும் எனக்கு-
 போதகர் சொன்னார் -இந்த வார்த்தை உள்ளத்திலிருந்து வந்தால் அதுத்தான் நாம் செய்யும் புத்தியுள்ள ஆராதனை - ஆம் எத்தனை அர்த்தமுள்ள வார்த்தை.

இன்று செய்தி கொடுக்க சபை போதகர், pastor NEWTON.அவர்களை கேட்டுக்கொண்டார்.

இதோ செய்தி :                 ஏசாயா (ISAIAH) 58 :12 
உன்னிடத்திலிருந்து தோன்றினவர்கள் பூர்வமுதல் பாழாய்க் கிடந்த ஸ்தலங்களைக் கட்டுவார்கள்; தலைமுறை தலைமுறையாக இருக்கும் அஸ்திபாரங்கள்மேல் நீ கட்டுவாய்; திறப்பானதை அடைக்கிறவன் என்றும், குடியிருக்கும்படி பாதைகளைத் திருத்துகிறவன் என்றும் நீ பெயர் பெறுவாய்.

நீ கட்டுவாய் - தேவன் உலகத்தை படைக்கும்முன் உலகத்தை அவர் மனதிலே பார்த்தார், வெளிச்சத்தை அவர் மனதிலே பார்த்தார், மனிதனை அவர் மனதிலே பார்த்தார் , இல்லாதவற்றை மனதிலே பார்த்து  அதை  படைத்தார், அதே போலத்தான் நான் கட்டவேண்டும் என்று தேவன் பார்கிறார் .
நீ கட்டுவாய் - இங்கு கட்டுவது என்பது ஒரு கட்டிடத்தை கட்டுவது அல்ல .ஆனால் உருவாக்குவது என்பதை குறிக்கிறது.
நீ  கட்டுவாய் ... கட்டுவாய் அல்லது கட்டப்படுதல் என்ற வார்த்தை   OKIDOME - என்ற கிரேக்க வார்த்தையிலிருந்து வந்தது.
   OKIDOME  என்றால் BUILDING UP  பொருள் , ஆங்கிலத்திலே  EDIFICATION - EDIFICE  என்று  சொல்லுகிறார்கள்.

 சரி  முதலாவதாக   -    1 கொரிந்தியர்(CORINTHIANS ) 14 :4 
அந்நியபாஷையில் பேசுகிறவன் தனக்கே பக்திவிருத்தி உண்டாகப் பேசுகிறான்; தீர்க்கதரிசனஞ்சொல்லுகிறவனோ சபைக்கு பக்திவிருத்தி உண்டாகப் பேசுகிறான்.

அந்நியபாஷையில் பேசுகிறவன் தனக்கே பக்திவிருத்தி உண்டாகப் பேசுகிறான். மேல் வீட்டில், கொர்நேலியு வீட்டில் , எபேசு  பட்டணத்தில் காத்திருந்தவர்களை தேவன் நிரப்பினார், அவர்கள் அந்நிய பாஷை பேசினார்கள்  என்று பார்க்கிறோம், அவர்கள் கட்டப்பட்டார்கள். நம்மை கட்டுவதற்கு தேவன் வைத்திருக்கிற SKETCH - PLAN தான் அந்நிய பாஷை.
ஒரு ARCHITECT எப்படி ஒரு கட்டடம் கட்டுவதற்கு PLAN செய்கிறார், அந்த கட்டிடம் வெளியே ,  உள்ளே ,  படிக்கட்டுகள் ,  அறைகள்,  வெளித்தோற்றம்  என்று எப்படி PALN தருகிறாரோ அப்படித்தான் .அதேபோல்தான். நமக்குள்ளே நாம் கட்டப்பட தேவன் தரும் PLAN தான் அந்நிய பாஷை.
அந்நிய பாஷை பேசுகிறதை தடை செய்யக்கூடாது .
நான் கட்டபடுகிறேனா ? நான் தனியே எனக்குள்ளே கட்டப்பட்டால் ,நான் மற்றவர்களை கட்டி எழுப்ப முடியும் .
நான் மட்டும் கட்டப்பட்டு மற்றவர்கள் கட்டபடாமல் இருந்தால் அதற்கு பெயர்  குட்டிச்சுவர் - நாம் மற்றவர்களோடு இசைவாய் கட்டப்பட வேண்டும் 
அந்நிய பாஷை பேசினால் - பக்திவிருத்தி உண்டாகும்
அந்நிய பாஷை பேசினால் - தன்னையே கட்டமுடியும்
அந்நிய பாஷை பேசினால்- தேவனோடு ரகசியங்களை பேசமுடியும் 

 இரண்டாவதாக          1 கொரிந்தியர்  (CORINTHIANS ) 14:3 
தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறவனோ மனுஷருக்கு பக்திவிருத்தியும், புத்தியும், ஆறுதலும் உண்டாகத்தக்கதாகப் பேசுகிறான்.

                                           எபேசியர் (EPHESIANS )  4:12-13 
12. பரிசுத்தவான்கள் சீர்பொருந்தும்பொருட்டு, சுவிசேஷ ஊழியத்தின் வேலைக்காகவும், கிறிஸ்துவின் சரீரமாகிய சபையானது பக்திவிருத்தி அடைவதற்காகவும்,
13. அவர், சிலரை அப்போஸ்தலராகவும், சிலரைத் தீர்க்கதரிசிகளாகவும், சிலரைச் சுவிசேஷகராகவும், சிலரை மேய்ப்பராகவும், போதகராகவும் ஏற்படுத்தினார்.
 
இங்கே குறிபிடுகிற 5 வித ஊழியங்களும் சபை பக்திவிருத்தி உண்டாகவே இருக்கிறது .இது தேவனுடைய ஈவு .
அதில் ஒன்று தீர்க்கதரிசனம் .
தீர்க்கதரிசனம் என்ன செய்கிறது ?
மனுஷரை கட்டி எழுப்புகிறது , தீர்க்கதர்சனம் ஒரு ஈவு .
எதற்கு நாமில் பலர் தீர்க்கதரிசனத்தை நாடி ஓடுகிறார்கள்  ?
1 . ஆதாயத்திற்காக
2 . ஏதாவது ஒன்றை தெரிந்துகொள்ள .
தீர்க்கதரிசனம் பக்தி விருத்தியை உண்டாக்க வேண்டும் .
நம்மில் 2 வகை மக்கள் உண்டு
1 . எல்லாவற்றிக்கும் தீர்க்கதரிசனத்தை நாடுவது
2 . தீர்க்கதரிசனமே வேண்டாம் .
நாம் BALANCED ஆக இருக்கவேண்டும் .
                                           1 கொரிந்தியர் (CORINTHIANS) 14:1 
அன்பை நாடுங்கள்; ஞானவரங்களையும் விரும்புங்கள்; விசேஷமாய்த் தீர்க்கதரிசன வரத்தை விரும்புங்கள்.
தீர்க்கதரிசன வரத்தை விரும்புங்கள்- தீர்க்கதரிசனம் சொல்லுவது கத்தி மேல் நடப்பது போல - தேவனுடைய வார்த்தையை சரியாக சொல்லவேண்டும் .
                                          எபேசியர் (EPHESIANS ) 4:29 
கெட்ட வார்த்தை ஒன்றும் உங்கள் வாயிலிருந்து புறப்படவேண்டாம்; பக்திவிருத்திக்கு ஏதுவான நல்ல வார்த்தை உண்டானால் அதையே கேட்கிறவனுக்குப் பிரயோஜனமுண்டாகும்படி பேசுங்கள்.
இந்த வசனம் எபேசு சபைக்கு எழுத்தப்பட்டது.
                                          வெளிபடுத்தின விசேஷம் (REVALATION ) 2:2 
உன் கிரியைகளையும், உன் பிரயாசத்தையும், உன் பொறுமையையும், நீ பொல்லாதவர்களைச் சகிக்கக்கூடாமலிருக்கிறதையும், அப்போஸ்தலரல்லாதவர்கள் தங்களை அப்போஸ்தலரென்று சொல்லுகிறதை நீ சோதித்து அவர்களைப் பொய்யரென்று கண்டறிந்ததையும்;
இவ்வளவு நல்ல காரியங்களை உடைய எபேசு சபை - அதின் வாயிலே கெட்ட வார்த்தை
கெட்ட வார்த்தை பக்திவிருத்தி உண்டாக்காது . நல்ல வார்த்தை உண்டானால் அதையே பேசுவோம்.
                                        பிலிப்பியர் (PHILIPPIANS )  4:8
கடைசியாக, சகோதரரே, உண்மையுள்ளவைகளெவைகளோ, ஒழுக்கமுள்ளவைகளெவைகளோ, நீதியுள்ளவைகளெவைகளோ, கற்புள்ளவைகளெவைகளோ, அன்புள்ளவைகளெவைகளோ, நற்கீர்த்தியுள்ளவைகளெவைகளோ, புண்ணியம் எதுவோ, புகழ் எதுவோ அவைகளையே சிந்தித்துக்கொண்டிருங்கள்.
வேதம் சொல்லுகிறது இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும் .
அவைகளையே சிந்தித்துக்கொண்டிருங்கள்- நல்லவைகளை சிந்திப்போம் . நல்ல 
நினைவுகள் நல்ல வார்த்தைகளை பேசும் .
இயேசுவின் பாடுகளின் பொது பேதுருவை மற்றவர்கள் பார்த்து இவனும் அவர் சிஷர்களில் ஒருவன் என்றார்கள் . ஏன் அப்படி சொன்னார்கள், அவன் இயேசுவோடு இருந்து அவன் பேசுகிற பேச்சு இயேசுவை போல மாறியிருந்தது .
இத்தனை வருடம் தேவனோடு இடைபடும் நம் வார்த்தையும் கூட தேவனுடைய வார்த்தையை போலத் தான் இருக்கவேண்டும் .
                                        எபேசியர் EPHESIANS 5 :4 
 அப்படியே வம்பும், புத்தியீனமான பேச்சும், பரியாசமும் தகாதவைகள்; ஸ்தோத்திரஞ்செய்தலே தகும்.
சில நேரங்களில் நாம் கவனித்திருக்ககூடும் காகங்கள் நம் வீட்டின் மேல் எச்சம் செய்து விடும் , அதில் சில விதைகள் இருக்கும் . கொஞ்சம் காலம் கழித்து அது ஒரு செடியாய் வளரும், அது வளர்ந்து வீட்டின் சுவரை உடைக்கும் .
நம் கட்டடத்தை உடைக்கும் எந்த காரியத்தையும் நாம் அனுமதிக்க வேண்டாம் .
ஸ்தோத்திரஞ்செய்தலே தகும்.
இதை தான் சங்கீதக்காரன்  சொல்லுகிறான் 
துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடவாமலும், பாவிகளுடைய வழியில் நில்லாமலும், பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காராமலும்,.....
ஸ்தோத்திரஞ்செய்தலே தகும். பக்திவிருத்தி உண்டாக பேசுவோம் .


 மூன்றாவதாக              ரோமர் (ROMANS )14 : 19
ஆனபடியால் சமாதானத்துக்கடுத்தவைகளையும், அந்நியோந்நிய பக்திவிருத்தி உண்டாக்கத்தக்கவைகளையும் நாடக்கடவோம்.
சமாதானத்தை நாடக்கடவோம் .
                                           1கொரிந்தியர் (CORINTHIANS) 8:1 
விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டவைகளைக்குறித்த விஷயத்தில், நம்மெல்லாருக்கும் அறிவு உண்டென்று நமக்குத் தெரியுமே. அறிவு இறுமாப்பை உண்டாக்கும், அன்போ பக்திவிருத்தியை உண்டாக்கும்.
நம்முடைய அறிவு நமக்கு இறுமாப்பை உண்டாக்கும் - அன்போ பக்திவிருத்தியை உண்டாக்கும்
                                           சங்கீதம் (PSALM ) 34:14 
தீமையை விட்டு விலகி, நன்மை செய்; சமாதானத்தைத் தேடி, அதைத் தொடர்ந்துகொள்.
சமாதானத்தை தேடு ...
                                          ரோமர் (ROMANS ) 12: 18
கூடுமானால் உங்களாலானமட்டும் எல்லா மனுஷரோடும் சமாதானமாயிருங்கள்.
                                          எபிரெயர் (HEBREWS)12 :14
யாவரோடும் சமாதானமாயிருக்கவும், பரிசுத்தமுள்ளவர்களாயிருக்கவும் நாடுங்கள்; பரிசுத்தமில்லாமல் ஒருவனும் கர்த்தரைத் தரிசிப்பதில்லையே.
யாவரோடும் சமாதானத்தையே நாடுங்கள்
நாம் கட்டப்பட - பக்திவிருத்தி உண்டாக அந்நிய பாஷையை பேசுவோம்.
நாம் கட்டப்பட - பக்திவிருத்தி உண்டாக தீர்க்கதரிசன வரத்தை நாடுவோம்
நாம் கட்டப்பட - பக்திவிருத்தி உண்டாக சமாதானத்தை நாடுவோம் ....
 தேவன் நம்மை கட்டி எழுப்புவாராக - ஆமென் .


                உங்கள் கருத்துக்களை prithiviraj23@gmail.com க்கு தெரியப்படுத்துங்கள்

Saturday, December 11, 2010

உடைந்த உள்ளத்திலிருந்து...

                      இன்று மதியத்திலிருந்து என் இதயத்தில் ஒரு பாரம் , என்னை இருக்கவிடவில்லை ,நான் அப்படி என்ன செய்தேன், அதிகமாக கோபப்பட்டேன், பொறுமையை இழந்தேன் என்பது அப்போது தான் தெரிந்தது.இன்று 2nd Saturday என்பதால்  திரு.சுந்தர் ராஜ்  அவர்களுடைய  வீட்டில் ஜெப கூடுகை இருந்தது, ஆரம்பத்திலிருந்தே தேவன் இடைப்பட ஆரம்பித்தார், நான் என்னுடைய கோபத்துக்காக ஜெபிக்க வேண்டும என்று யோசித்துக்கொண்டு இருந்தேன், ஆனால் ஜெபத்தை நடத்தியவரோ என்னுடைய அல்லது நான் என்னக்காக செய்ய வேண்டிய ஜெபத்தை அவர் செய்தார், நான் கோபப்படும்போது என்னுடைய பொறுமையை இழந்து வார்த்தைகளை கொட்டிவிடுகிறேன். இதற்க்கு காரணம் நான் முடிந்தவரை  சரியாக இருக்க வேண்டும என்று நினைப்பது, அதில் என்ன தவறு என்று நீங்கள் கேட்க கூடும், தவறில்லை ஆனால் நான் அவ்வாறு நினைப்பதால் மற்றவர்கள் சிறு தவறு செய்தால் கூட என்னால் பொறுக்க முடியவில்லை.அடுத்தவர்களும் நான் நினைபதுபோல் இருக்கவேண்டும் என்ற கட்டயம் இல்லையே. அடுத்தவர்களை கேட்டால்தான்   தெரியும் நான் என்ன தவறு செய்கிறேன்  என்று.
                    நேரம் வந்தபோது என்னுடைய ஜெபக்குறிப்பை நான் சொன்னேன். அதற்க்கு அந்த தேவ மனிதனோ கோபத்திற்கு முக்கிய காரணம் பெருமை என்றார். நான் என்ற எண்ணம், மட்டுமல்ல, ஒரே விஷயத்தை(தவறை ) திரும்ப திரும்ப யோசிப்பதும் இதற்கு காரணம் என்று சொன்னார். மிக சரி , ஆம் நான் என்ற எண்ணம் எனக்குள் இல்லை என்ற எண்ணம் எனக்கு, மன்னிக்கிறேன் ஆனாலும் திரும்ப திரும்ப யோசிக்கிறேன் விட்டு விட இயலவில்லை காரணம் நான் சரி என்ற எண்ணம் தான் . ஜெபித்தோம் . என் இதயம் உடைந்தது . அழ வேண்டும  என்பது போலத்தான் இருந்தது. நான் எல்லாவற்றையும் சரி செய்ய நினைக்கிறன் ஆனால் அதற்காக காத்துக்கிடக்க வேண்டும், அதுத்தான் பிரச்சனை. பொறுமை இல்லை . இது தேவனை அனுமதிக்காமல் நானாக எல்லாவற்றையும் செய்ய நினைப்பதை சுட்டிக்காட்டியது .

உங்கள் கருத்துக்களை,அனுபவத்தை பகிர்ந்துக்கொள்ள விரும்பினால்                               prithiviraj23@gmail.com க்கு தெரியப்படுத்துங்கள் .

Wednesday, December 8, 2010

நான்- தேவனுக்கு தடைக்கல்லா அல்லது படிக்கல்லா ?

ÍÁ¡÷ 11 ÅÕ¼í¸û þÕì̦ÁýÚ ¿¢¨É츢§Èý, «ô¦À¡Ð ¿¡í¸û ´Õ ÀûǢ¢§Ä ¬Ã¡¾¢ì¦¸¡ñÊÕ󧾡õ. ´ÕÅ÷ Ó¸ò¨¾Ü¼ ´ÕÅ÷ À¡÷ì¸ÓÊ¡¾ ¿¢¨Ä «ýÚ. ¬í¸¡í§¸ ÌÚ째 ÍÅ÷. ¬É¡ø þó¾ ¦ºö¾¢ ±í¸û ¯ûÇò¾¢Ä¢Õó¾ ÍŨà ¯¨¼ò¾Ð  ±ýÚ ¦º¡ýÉ¡ø Á¢¨¸Â¡¸¡Ð. «ÉÚ ÁðÎÁøÄ þýÚõܼò¾¡ý. ¾¢Õ c.m.À¢§Ãõ ÌÁ¡÷ «Å÷¸û ÅÆí¸¢Â §¾ÅÛ¨¼Â ¦ºö¾¢ þ§¾¡.

²º¡Â¡ (isaiah) 6 : 1  ¯º¢Â¡ ს ÁýÁ¨¼ó¾ ÅÕ„ò¾¢ø, ¬ñ¼Å÷ ¯ÂÃÓõ ¯ýɾÓÁ¡É º¢í¸¡ºÉò¾¢ý§Áø Å¢üÈ¢Õì¸ì¸ñ§¼ý; «ÅÕ¨¼Â ÅŠ¾¢Ãò¦¾¡í¸Ä¡ø §¾Å¡ÄÂõ ¿¢¨Èó¾¢Õó¾Ð.

 ±ó¾ ´Õ ¸¡¡¢ÂÓõ Áí¸ÄÁ¡¸ò¾¡ý ¬ÃõÀ¢ìÌõ, ¬É¡ø þíÌ ÁðÎõ ²ý §¾Åý ´Õ «Áí¸ÇÁ¡É  ´Õ ¿¢¸ú¨Å ¬ÃõÀÁ¡¸ ¦¸¡Îì¸ §ÅñÎõ, ¯º¢Â¡ ს×ìÌõ, §¾ÅÛìÌõ ±ýÉ ºõÀó¾õ , ¯º¢Â¡ სŢý Áýò¾¢üìÌõ §¾Åý º¢í¸¡ºÉ¾¢ø Å¢üÈ¢ÕôÀ¾üìÌõ ±ýÉ ºõÀó¾õ .
¡÷ þó¾ ¯º¢Â¡ ს ....?

2 ¿¡Ç¡¸Áõ(chronicles) 26 ¬õ «¾¢¸¡Ãò¨¾ ÀÊò¾¡ø ¦¾¡¢Ôõ.
Ó¾ø źÉõ : À¾¢É¡Ú ž¡É ¯º¢Â¡¨Å «¨ÆòÐÅóÐ, «Å¨É «Åý ¾¸ôÀý Š¾¡Éò¾¢§Ä სš츢ɡ÷¸û.

3õ źÉõ : «Åý 52 ÅÕ„õ «Ãº¡ñ¼¡ý .
4õ źÉõ : «Åý ¸÷ò¾¡¢ý À¡÷¨ÅìÌ ¦ºõ¨Á¡ɨ¾î ¦ºö¾¡ý .
5õ źÉõ : «Åý §¾Å¨É §¾¼ Áɾ¢½í¸¢É¡ý. §¾Åý «ÅÛìÌ ¸¡¡¢Âí¸¨Ç Å¡öì¸î ¦ºö¾¡÷.
6õ źÉõ :  ÀÊò¾¡ø - «Åý ±¾¢¡¢Â¢ý 3 Ó츢ÂÁ¡É §¸¡ð¨¼¸¨Ç þÊòÐ, ±¾¢¡¢Â¢ý      ¿¡ðʧħ Àð¼½í¸¨Ç ¸ðÊÉ¡ý
7 õ źÉõ : 3 Ó츢ÂÁ¡É ±¾¢¡¢¸¨Ç ¦ÅøÄ §¾Åý «ÅÛìÌ Ð¨½ ¿¢ýÈ¡÷.
8 õ źÉõ : «õ§Á¡É¢Â÷ ¯º¢Â¡×ìÌ ¸¡½¢ì¨¸¸¨Ç ¦¸¡ñÎÅó¾¡÷¸û.
                  «ÅÛ¨¼Â ¸£÷ò¾¢ ±¸¢ô¾¢ý ±ø¨ÄÁðÎõ ±ðÊÉÐ.«Åý  Á¢¸×õ           ÀÄí¦¸¡ñ¼¡ý
9 õ źýõ : «Åý ±Õº§ÄÁ¢§Ä ã¨ÄÅ¡ºø¸û§ÁÖõ, ÀûÇò¾¡ì̸û §ÁÖõ ,
                  «Äí¸òÐ §¸¡Ê¸û §ÁÖõ §¸¡ÒÃí¸¨Ç ¸ðÊ  «¨Å¸¨Ç ÀÄôÀξ¾¢É¡ý.

1õ źÉò¾¢Ä¢ÕóÐ 9õ źÉõ ŨÃìÌõ À¡÷ò¾¡ø «Åý «ÅÛ¨¼Â ±øÄ¡ ±¾¢¡¢¸¨ÇÔõ, §¾ÅÛ¨¼Â Ш½ì¦¸¡ñÎ ¦ÅüÈ¢ º¢È츢ȡý ±ýÚ À¡÷츢§È¡õ, ¦ÅüÈ¢ , ¦ÅüÈ¢ ±íÌõ ¦ÅüÈ¢, «ÅÛ¨¼Â Ò¸ú ±øÄ¡ þ¼ò¾¢§ÄÔõ ÀÃÅ¢ÂÐ. ±ó¾ ¿¡ð椀 «Å÷¸û «Ê¨Á¸Ç¡¸ þÕó¾¡÷¸§Ç¡ «ó¾ ¿¡Î ŨÃìÌõ «ÅÛ¨¼Â Ò¸ú ÀÃÅ¢ÂÐ. «Åý Á¢¸×õ ÀÄí¦¸¡ñ¼¡ý , þý¦É¡Õ Å¡÷ò¨¾Â¢ø ¦º¡ýÉ¡ø «Åý ¿¡ð¨¼ ÅøÄÃÍ ¿¡¼¡¸ Á¡üȢŢð¼¡ý ±ý§È ¦º¡øÄÄ¡õ.
  «ÐÁðÎÁøÄ 10 ÅРźÉõ Ó¾ø 15 Ũà À¡÷ò¾¡ø «Åý «§¿¸õ ¬Î¸¨ÇÔõ , Á¡Î¸¨ÇÔõ , «Åü¨È ÀáÁ¡¢ì¸ ²üÈ ¬ð¸¨ÇÔõ ¯¨¼ÂÅɡ¢Õó¾¡ý , «Åý ¿¡ð椀 §¸¡ð¨¼¸¨Ç ¸ðÊÉ¡ý , ÐÃ׸¨Ç ¦ÅðÊÉ¡ý , Ţź¡Â¾¢§Ä «¾¢¸ ®ÎÀ¡Î ¯¨¼ÂÅɡ¢Õó¾¡ý. ¿øÄ Ôò¾ Å£Ãɡ¢Õó¾¡ý , «ÅÛìÌ Àá츢ÃÁº¡Ä¢Â¡É ¾¨ÄÅ÷¸§Ç 2600 §À÷. ს ܼ Ш½ ¿¢ýÚ Ôò¾õ ¦ºö ÁðÎõ 3,07,500 §À÷ þÕó¾¡÷¸û ±ýÚ À¡÷츢§È¡õ.
«ÐÁðÎÁøÄ «ÅÛ¼ý þÕó¾ÅÕ¸ÙìÌ ¬Ô¾õ ¦ºöÂ×õ , ¸ø ±¡¢¸¢È ¸Åñ¸¨ÇÔõ ¬Âò¾ôÀÎò¾¢É¡ý.
þýÛõ ¦º¡øÄ §À¡É¡ø «Åý ¦¾¡ð¼¦¾øÄ¡õ Å¡öò¾Ð . ±íÌõ ¦ÅüÈ¢ ±¾¢Öõ ¦ÅüÈ¢ , ¿¡ý ±¨¾ ¦ºö¾¡Öõ ¦ÅüÈ¢ , ¿¡ý , ¿¡ý , ¿¡ý ±ýÚ ¿¢¨Éì¸ ¬ÃõÀ¢ò¾¡ý,
16- 21 źÉõ
þýÛõ ´Õ ÀÊ §Á§Ä §À¡ö þ¨¾Ôõ ¦ºö§Åý ±ýÚ àÀí¸¡ð¼ §¾Å¡ÄÂò¾¢ø À¢Ã§Åº¢ò¾¡ý.¸÷òÕ¨¼Â ¬º¡¡¢Â÷ ±ýÉ ¦º¡øÄ¢Ôõ  §¸ð측Áø,§¸¡ÀÁ¡ö «Å÷¸Ù¼ý ¾÷¸õ ¦ºö¾¡ý. «Åý §¾ÅÛ¨¼Â ¬º¡¡¢ÂÕìÌ Å¢§Ã¡¾Á¡¸ §ÀÍõ§À¡§¾ «Å¨É §¾Åý «Êò¾¡÷ , «ÅÛ¨¼Â ¦¿üȢ¢ø ̉¼§Ã¡¸õ Åó¾Ð . «Åý º¡Ìõ ÁðÎõ §¾ÅÉ¢¼ò¾¢ø ÁÉõ ¾¢ÕõÀ¡Áø, ¿¡ý ±ýÈ ±ñ½õ ¦¸¡ñÎ Á¡¢òÐô§À¡É¡ý . ¿¡ý ±ýÈ ±ñ½õ «Å¨É §¾ÅÉ¢¼ò¾¢ø ¾¢ÕõÀ ÅÃÅ¢¼§Å¢ø¨Ä.

 þó¾ ¿¡ý ±ýÈ ±ñ½õ ¦¸¡ñ¼ ¯º¢Â¡ ÁýÁ¨¼ó¾ ÅÕ„¾¢§ø ¬ñ¼Å÷ ¯ÂÃÓõ ¯ýɾÓÁ¡É º¢í¸¡ºÉ¾¢ø Å¢üÈ¢Õì¸ ¸ñ§¼ý , «ÅÕ¨¼Â ÅŠ¾¢Ãò¦¾¡í¸Ä¡ø §¾Å¡ÄÂõ ¿¢¨Èó¾¢Õó¾Ð......
 ¿¡ý ±ýÈ ±ñ½õ ±ô¦À¡Ð º¡¸¢È§¾¡ «ô¦À¡Ð ¿¡õ §¾Å¨É , «ÅÕ¨¼Â Á¸¢¨Á¨Â, ¿¡õ ¿¢îºÂÁ¡¸ ¸¡½ÓÊÔõ ±ýÀÐ ¯ñ¨Á ...
¿¡ý ±ýÈ ±ñ½õ º¡¸ðÎõ, §¾ÅÛ¨¼Â Á¸¢¨Á ±ýÉ¢§Ä ¦ÅÇ¢ôÀ¼ðÎõ !


உங்கள்  கருத்துகளை prithiviraj23@gmail.com க்கு தெரியப்படுத்துங்கள் ...

Sunday, December 5, 2010

அழைப்பு

இன்று ஞாயிறு நீங்கள் நினைப்பது சரி தான் . சபைக்கு சென்றேன்.
இன்று ஒரு புது வரவு , ஒரு குழந்தையை பிரதிஷ்டை(dedicate) செய்தார்கள். அப்பொழுது  போதகர்  பகிர்ந்துக்கொண்ட வசனம்
மத்தேயு 18 : 1 - 4
சீஷர்கள் இயேசுவிடம் பரலோகத்தில் யார் பெரியவன் என்று கேட்கிறார்கள்.
இயேசுவோ ஒரு பிள்ளையை நடுவிலே நிறுத்தி , நீங்கள் மனந்திருந்தி  பிள்ளைகளைப்போல்  போல் ஆகாவிட்டால் பரோலோக  ராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள்  என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்கு சொல்லுகிறேன் .என்றார் சொன்னார்.
4 ம் வசனம் - இந்த பிள்ளையைபோல தன்னைததாழ்த்துகிறவன் எவனோ அவனே பரலோகராஜ்யத்தில் பெரியவனாயிருப்பான் .
பிள்ளை கிட்ட அப்படி என்னப்பா இருக்கு தாழ்த்துவதற்கு ? .....பிள்ளைக்கிட்ட தன்னை உயர்த்துவதற்கு ஒன்றுமே இல்லை . இந்த பிள்ளையைபோல் நாம் நம்மை தாழ்த்துவோம் .    நல்ல செய்தி ....நம்மை  தாழ்த்துவதற்கு நமக்கு ஒரு நல்ல உதாரணம்...

இன்று செய்தியை பகிர்ந்து கொடுக்குமாறு திரு. அகஸ்டின் பாலன் அவர்களை போதகர் கேட்டுக்கொண்டார் .
செய்தி : மத்தேயு 4 : 21 அவர் அவர்களை விட்டுப்போகையில் ,வேறே இரண்டு சகோதரராகிய செபதேயுவின் மகன் யாக்கோபும் ,அவன் சகோதரன் யோவானும் தங்கள் தகப்பன் செபதேயுவுடனே படவைளிரிந்து ,தங்கள் வலைகளை பழுதுப்பார்த்துக் கொண்டிருக்கிறபோது, அவர்களைக்கண்டு அவர்களையும் அழைத்தார் 
அழைப்பு ( calling ) என்ற பதம்  kaleo என்ற கிரேக்க வர்தையில்ருந்து வந்தது. இந்த kaleo என்ற வார்த்தைக்கு  3 விதமான பொருள் உண்டு  
kaleo -  calling  -  அழைப்பு   -  
 அழைப்பு  ஒன்றுதான் ஆனால் அழைப்பத்தின் நோக்கம் வேறு வேறு .

1 .விருந்துக்கு அழைப்பது - calling for the feast .
2. வேலைக்கு அழைப்பது - calling for the duty 
3. நியாயத்தீர்ப்புக்கு அழைப்பது  - calling for the judgment
இந்த 3 அழைப்புகளிலிருந்து நம்மை நாமே கேட்க வேண்டிய 3 கேள்விகள் உண்டு
1 நான் தானியே சப்பிடுகிறேனா ?
2 .நான் சரியாகத்தான் வேலை செய்கிறேனா ?
3 . நான் எல்லாக்கடனையும்  திருப்பி கொடுத்துவிட்டேனா ?
எதற்காக அழைப்பு ?
விருந்தை சாப்பிட்டுவிட்டு செல்வதற்க்கா ?
   சபைக்கு வந்து நல்ல வசனங்களை கேட்டு தேவனுடைய ஆசிவதங்களை பெற்று கொள்வதற்கா ?
நான் மட்டும் சப்பிடுகிறேனா ?
 enjoy பண்ணுவதற்காக  மட்டும் அல்ல,  வேலைக்கும் சேர்த்துத் தான் தேவன் நம்மை அழைத்து இருக்கிறார்
அழைப்பு வேலை செய்வதற்கும் தான்
2 வேலைகள் அங்கு செய்யப்படுவதை பார்க்கிறோம்
   1   மீன்பிடிக்க...
        ஆத்தும ஆதாயம்  செய்ய ... மத்தேயு 18 : 19
         மீன் பிடிப்பது  என்பது  ஒருவரை தேவனிடத்தில் சேர்ப்பது .
         சபையில் சேர்ப்பது. தேவனிடமாய் ஒருவனை நடத்துவது.

2  பழுதுப்பர்த்தல்  
பழுதுபார்த்தல் - repair என்ற வார்த்தை kartartizo என்ற  கிரேக்க வார்த்தையிலிருந்து  வந்தது - இதற்க்கு நிறைய பொருள் உண்டு . 
தேவனைப்பற்றிய அறிவு ஒருவனுக்கு இல்லை என்றால் அவனுக்கு கேடு , ஆனால் சபைக்கு வந்து பின்வாங்கிபோனால் அதிக கேடு அல்லவா ?
மீன்ப்பிடிக்க நிறையப்பேர் இருக்கிறார்கள்.......... பழுதுப்பார்க்க ?

இந்நாட்களில் அறுவடை செய்ய போவாஸ் போன்ற ஆட்கள் அதிகம் , ஆனால் சிந்திய  கதிர்களை பொறுக்க ரூத் போன்ற  நபர்கள் மிகவும்  அவசியம் .

ஆசரிப்புகூடாரம் மற்றும் தேவாலயத்தை எடுத்துக்கொண்டால் ஆசாரியர்கள் மிகவும் சுத்தமாக இருக்கவேண்டும். தங்களை சுத்திகரித்துக்கொண்டு , தங்கள்  உடைகளையும் சுத்தமாக வைத்துகொண்டு தேவனுக்கு பலியிடுவார்கள், இவ்வளவு சுத்தமாக இருந்தாலும் கூட பரிசுத்த ஸ்தலத்திற்குள் நுழையும்முன் அவர்கள் சுத்திகரிக்க ஒரு வெண்கலத்தொட்டி  அவசியம். ஆசாரியன் மக்களுக்காக  பரிந்துபேசும் போது தேவன் அவனை அடிக்க கூடாது , பலிகளால் அவன் அசுத்தப்பட்டு இருக்ககூடும், எனவே அவன் மீண்டும் ஒருமுறை தன்னை சுத்திகரிக்க வேண்டும cleansing for the cleansed must required .

சங்கீதம் 68 : 11     ஆண்டவர் வசனம் தந்தார் ,அதை பிரசித்திப்படுத்துகிறவர்களின் கூட்டம் மிகுதி .
விதைப்பதற்கு அநேகர் ...  பிரசித்திப்படுத்துகிறவர்களின் கூட்டம் மிகுதி
அறுப்பதற்கு .....?
மீன் பிடிக்க அநேகர் ....
பழுதுப்பார்க்க .....?
எருசலேம் எப்படிக்கட்டபட்டது  என்று வரலாற்றைப்பார்தால் தெரியும்,
கி மு 575 - 535  செருபாபேல் எருசலேமைகட்டி எழுப்புகிறான்.
கி மு 455 - எஸ்ரா வசனத்தால் மக்களை கட்டி எழுப்புகிறான்.
கி மு 445 நெகேமியா , எருசலேமுக்கு அலங்கம் இல்லை , நெகேமியா 3 ம் அதிகாரத்தை படித்தால் தெரியும்  6 முறை கட்டினார்கள் என்று வருகிறது ஆனால் 35 முறை பழுதுப்பர்த்துக்கட்டினார்கள் என்று வருகிறது, பழுதுப்பர்த்துக்கட்டுதல் இங்கு ஒரு தனி நபர் செய்யவில்லை 38 நபர்கள்  42 குழுக்கள்  52 நாட்களில் கட்டி முடித்தார்கள், அந்த நாட்களிலும் இந்நாட்களில் உள்ளதுப்போல 3 வகை  மக்கள் இருந்தார்கள் ,
முதல் வகை  எவ்வளவு பணம் அல்லது பொருள் வேண்டுமானாலும் கொடுப்பார்கள் அவர்கள் வந்து வேலை செய்ய மாட்டார்கள்.   இரண்டாவது வகை கடினமாக வேலை செய்வார்கள். கிராமம் கிராமாக தேவனை சொல்லுவார்கள். தேவனுக்காக கடினமான காரியங்களை செய்வார்கள். மூன்றாவது வகை பொறுப்புடன் வேலை செய்பவர்கள் கொஞ்சம் பேரை சந்தித்தாலும் அவர்களுக்காக ஜெபிப்பது , தேவனோடிருக்கும் படி அவர்களை வழி நடத்துவது , அவர்கள் சோர்ந்து போனாலும் தேற்றுவது , பொறுப்புடன் வேலை செய்வது .
 இந்த மூன்றாவது வகை தான் பழுதுப்பார்ப்பது .
பழுதுபபார்பது அவ்வளவு  முக்கியமானதா . ஆம்  மிக மிக முக்கியமானது .

தேவாலயத்தில் உள்ள பொன் குத்துவிளக்கு
பசும்பொன்னால் அடிப்புவேலையாய்  செய்யப்பட்ட விளக்கு
பொன்னிறமான எண்ணெய் ஊற்றப்பட்ட விளக்கு
வெண்ணிறமான பஞ்சு தான் அதற்கு திரியாக திரிக்க வேண்டும .
அந்த விளக்கை கொளுத்தும்  போது கருப்பு நிற திரி வரும் , அது அகற்றப்பட வேண்டும். அப்போது தான் அந்த விளக்கு நன்றாக எறியும். அந்த திரி பழுதுப்பார்க்கப்பட  வேண்டும் .

தேவன் உலகத்தை படைத்தார் அப்படியே விட்டு விடவில்லை ஒவ்வொரு முறையும் அதை நல்லது என்று கண்டார் , refine செய்ததாகவே பார்க்கிறோம் .மனிதனை அவன் எடுக்கப்பட்ட நிலத்தை பண்படுத்த சொல்லுகிறார். - பழுதுப்பார்தல்

ஏன் தேவன் மீன் பிடிப்பவர்களை தெரிந்துக்கொண்டார்  ?
மீன் பிடிப்பவர்களின் தன்மைகளை பார்ப்போம்
காத்திருக்குதல் 
மத்தேயு 13 : 48 ... அது நிறைந்தபோது ....
வலை நிறையும் வரை காத்திருக்க வேண்டும் .
காத்திருக்குதல் என்றால் நம்மால் தாங்க கூடாத பாரம் நம்மை அழுத்தும் போது நாம் எப்படி அமைதியாக இருக்கத்தான் வேண்டுமோ அப்படி காத்திருக்குதல்.
(crushing under the weight or abiding under )

 லுக்கா 5 : 5
......இராத்திரியெல்லாம் பிரயாசப்பட்டு ஒன்றும் கிடைக்கவில்லை  - விடா முயற்சி

யோவான் 21 : 2 ,3 .... நேரத்தை குறித்ததான அறிவு (knowledge about time )

சங்கீதம் 22  : 6 ....  நானோ ஒரு புழு (இயேசுவை குறிக்கிறது ) புழு தூண்டிலில் மாட்டப்படுவதற்க்கு, அது மீனை கவர்வதற்கு அல்ல , ஆனால் தூண்டிலில் இருக்கும் முள்ளை மறைப்பதற்கு . சிலுவையில்  மரிப்பதற்காக ஒரு சரிரத்தை ஆயத்தப்படுத்தினார் என்று சொல்லப்பட்டு இருப்பது , இதற்க்கு ஒப்பனையாய் இருக்கிறது.

மத்தேயு 17: 22  படி அவர்கள் தன்னை  மறைத்துகொள்வார்கள் , they have courage to hide them self
லுக்கா 5 : 5
வலைகளைபோட்டர்கள் மீன்களோ சிக்கவில்லை , ஆனால் வலைகள் மட்டும் கடலில் இருந்த  பாறைகளில் மாட்டிக்கிழிந்துவிட்டன.
நாம் கூட இப்படி பட்ட மக்களை சந்தித்து இருக்ககூடும் . இவர்கள் தோற்றுபோனவர்கள் . ஒருவேளை பெரிய ஊழியக்காரர் சற்று  சறுக்கினால் அவரை கவனிக்க , தேற்ற, சிலர் வரலாம் , ஆனால் என்ன தான் பிரயசப்பட்டாலும் ஒன்றும் இல்லாத ஊழியங்களை, ஊழியகரர்களை யார் தாங்குவார் , யார் தேற்றுவார் .-  பழுதுப்பர்க்கவேண்டும்
கலாத்தியர் 6 : 1   ஒருவன் யாதொரு  குற்றத்தில் அகப்பட்டால் ,ஆவிக்குரியவர்களாகிய  நீங்கள் சாந்த்தமுள்ள ஆவியோடே அப்படிப்பட்டவர்களை சீர்பொருந்தப்பண்ணுங்கள் ...  
 இங்கே குற்றம் செய்து அகப்பட்டவன் என்று சொல்லி இருக்கிறது .
அப்படியானால்  நாம் யார்  ? . குற்றம் செய்து அகப்படாதவர்கள் .
கர்த்தர் நம்மை காட்டிக்கொடுக்கவில்லை .
யாராவது குற்றம் செய்தா போதும் வசனம் சொல்லியே அவர்களை மிதிப்பது நம் பழக்கமாகிவிட்டது,,,,
வசனம் என்ன சொல்லுகிறது ............ஆவிக்குரியவர்களாகிய  நீங்கள் சாந்த்தமுள்ள ஆவியோடே அப்படிப்பட்டவர்களை சீர்பொருந்தப்பண்ணுங்கள் .
சீர்பொருந்த பண்ணுவது - பழுதுப்பார்பது 

கர்த்தர் தாமே இந்த பழுதுப்பார்க்கும் கனமான ஊழியத்திற்கு நம்மை  ஆயத்தப்படுத்துவராக

Friday, December 3, 2010

சொல்லத்துடிக்குது மனசு ...

முதலில் நான் எனது தலைப்பைப்பற்றி சொல்லவேண்டும். இதற்கு உடையும் உறவுகள் உணர்வற்ற மனிதர்கள் என்ற வாக்கியத்தை தலைப்பாக வைக்கலாம் என்று யோசித்தேன், ஆனால் இதை  எதிர்மறையான தலைப்பாகவே எல்லோரும் கருத வாய்ப்புகள் அதிகம் . எனவே என் மனதில் உள்ள ஆதங்கத்தயும்,  நான் சந்தித்த சில நிகழ்வுகளை சொல்ல விரும்பியதால், இந்த சொல்லத்துடிக்குது மனசு என்ற தலைப்பை வைக்க முடிவு செய்தேன்...

எனக்கு குறிப்பிடட்ட சிலரே நண்பர்களாக உள்ளனர், காரணம் பல உண்டு. சில காரணங்களை சொல்லுகிறேன்,தவறாக நினைக்கவேண்டாம், இது என்னுடைய கருத்துமட்டுமே. எனக்கு எந்த கெட்ட  பழக்கமும் இல்லை, நான் என்னை பெருமைப்படுத்துவதர்க்காக சொல்லவில்லை, என் பெற்றோர் என்னை அப்படி வளர்த்தார்கள், எனக்கும் ஏதாவது பழக்கத்தை வைத்துக்கொள்ளவேண்டும் என்ற எண்ணம் இல்லை, நிச்சயமாக என் பெற்றோருக்கு நான் நன்றி சொல்லத்தான் வேண்டும். கெட்டபழக்கத்துக்கும் FRIENDSHIP  'க்கும் என்ன சம்பதம் என்று தானே யோசனை!. இந்த காலகட்டத்தில் ஒவ்வொரு பழக்கத்திற்கும் ஒரு குறிப்பிட்ட  நண்பர்களை தெரிந்துகொள்கிறார்கள். உங்களுக்கு எந்த பழக்கமும் இல்லை என்றால் தானாகவே உங்கள் நண்பர்களின்  வட்டம் சிறியதாகிவிடும். இது நிதர்சனமான உண்மை.  தோழர்கள் எவ்வளவோ பரவாஇல்லை, ஆனால் தோழிகளோ சொல்லவே தேவையில்லை. உங்களில் பலப்பேர் இதை ஒத்துக் கொள்ளக்கூடும்.எனக்கு சில  நல்ல தோழிகளும்  உண்டு , அவர்கள் திருமணதிற்கு பிறகும் கூட அவர்கள் கணவர்களும் நல்ல நட்பை ஆதரிக்கிறார்கள், இது வரவேற்க்கதக்க ஒன்று.

சரி 2  சம்பவங்களை உங்களிடம் சொல்கிறேன், 2 ம் தோழிகளை பற்றியதே, ஏன் நான் தோழிகளை பற்றி சொல்கிறேன் என்றால் அவர்களுடைய செயல்கள் அதிகமாக என்னை பாதித்தது.

முதல் தோழியோ என்னிடம் எல்லவற்றையும் பகிர்ந்துக்கொள்வாள்,சுகங்கள், துக்கங்கள், ஆலோசனை,எல்லவற்றையும் தான், காலபோக்கில் அவளுக்கு  காதல் மலர்ந்தது, அவளுடன் கூட வேலை செய்பவர் அவர். சிறிது நாள் கழித்து என்னிடம் பேசிய என் தோழியோ சில விஷயங்களை அவரின் காதலரிடம் சொல்லவேண்டாம் என்று சொன்னாள் ஏனென்றால்  நான் முடிந்தவரை உண்மை பேசுவேன் என்பது அவளுக்கு தெரியும், எனவே சில விஷயங்கள் அவருக்கு தெரியவேண்டாம் என்று  சொன்னாள். நான் அவளிடம்,  நானாக எதையும் சொல்லமாட்டேன் ஆனால் அவர் கேட்டால் நான் உண்மையை  சொல்வேன் என்றேன், அவ்வளவு தான்,  அவள் அவளது தொடர்பையே துண்டித்துக் கொண்டாள்,  என்ன இது உண்மை பேசினால் என்ன தவறு.

அடுத்த தோழி சற்று வித்தியாசமானவள், என் நண்பன் என் வாழ்க்கைக்கு அவள் ஏற்றவள் என்று என்னை அவளுக்கு அறிமுகம் செய்தான், அவளும் என்னிடம்  தொடர்பு கொண்டு பேசினாள்.நானும் பேசினேன், அவளும் வேதத்திலே அதிக நாட்டமுடையவளாகவே  இருந்தாள். நான்  அதிகமாக நான் எப்படி தேவனிடம் பற்றுக்கொண்டேன் என்பதையும் , தேவன் என்னிடம் எப்படி இடைப்பட்டார் என்பதையும் பேசுவேன். அவளும் அப்படியே அவளுடைய கேள்விகளையும், தேவனுக்கும் அவளுக்கும் இடையேயான உறவு , ஞாயிறு செய்தி எல்லவற்றையும் பேசுவோம். திருமணத்தை  பற்றியும் பேசினோம் , அவளுக்கு என்னை பிடித்திருகிறது என்று சொன்னாள், நேரம் வரும்போது அவள் தகப்பனிடம் வந்து பேசவேண்டும் என்றும் சொன்னாள்.ஒருமுறை என்னிடம் அவள் இப்படி கேட்டாள் : சண்டை வந்தால் நீங்கள் பேசுவீர்களா ? நான் சொன்னேன் நான் சண்டை போட்டுக்கொண்டாவது பேசுவேன் என்றேன்,எனக்கும் அதுதான் வேண்டும் என்றாள் அவள் , பேசாமல் மட்டும் இருந்துவிடதிர்கள் என்றும் சொன்னாள்...., இப்படியாக  50 நாட்களுக்கும் மேலாக நாங்கள் பேசினோம்.  அன்று செப்டம்பர் 27 . ஒரு சிறு சண்டை (புரிந்துக்கொள்ளளுக்கான முதல் படி என்று கூட சொல்லலாம் ), அவ்வளவு  தான் அத்துடன் அவள் என்னிடம் பேசவில்லை, நான் call பண்ணினாலும் எடுப்பதில்லை, இப்படியே ஒரு வரம் கழிந்தது. என் நண்பனிடம் சொல்லி காரணம் கேட்டேன் குளத்தில் போட்ட கல் போல  பதில் ஏதும் இல்லை இதுவரை. அவள் என்னிடம் சொல்லியவற்றை அவள்செய்யவில்லை, ஒரே ஒரு சொல்லை தவிர, அதுதான் அவள் சொன்னது:  நான் ஒருமுறை முடிவு செய்தால் யார் என்ன சொன்னாலும் நான் மாற்றிக்கொள்ள மாட்டேன், முடிவு எடுத்ததால் எடுத்ததுதான் என்றாள் .அவள் காப்பாற்றிய அவளது வார்த்தை இதுதான்.நான் என்னுடைய கோணத்திலிருந்து எனக்கு தெரிந்தவற்றை  மட்டுமே இங்கு சொல்லுகிறேன். ஏன் நான் இதை சொல்லவேண்டும், எல்லா உறவுகளிலும் சண்டைகள் வரும்,சண்டையே வராது  என்று யாராலும் சொல்ல முடியாது, ஆனால் பிறகு பேசி சரிசெய்துக்கொள்ள வேண்டும்.
அங்கு மனசாட்சிக்கு இடம்கொடுக்க வேண்டும்,  மனது எடுக்கும் முடிவுக்கு அல்ல.
நான் அவளை வாரத்தில் மூன்று முறையாவது பார்பதுஉண்டு ஆனாலும் அவளோ என்னை யார் என்றே தெரியாதவர் போல , எதுவுமே நடக்காதது போலவே நடந்துக்கொள்கிறாள், இது ஒவ்வொருமுறையும் அவளது மனசாட்சியை (conscious) நசுக்கிவிட்டு அவளது decision' கே முக்கியத்துவம் தருவதாக எனக்கு தெரிகிறது. இவ்வாறாக ஒவ்வொரு முறையும்  மனசாட்சிக்கு  இடம் கொடுக்காமல் போனால், தவறு செய்கிறோம் என்ற உணர்வே இல்லாமல் போய்விடும் ... இது மிகவும் வருந்தக் கூடிய ஒன்று .

இதன் மூலம் நான் என்ன  கற்றுக்கொண்டேன் ? மீண்டும் என் வாழ்வில் மாற்றத்திற்கு உறுதுணையாய் இருந்த புத்தகத்தை படிக்க ஆரம்பித்தேன்.மீண்டும் மீண்டும் மன்னிக்க வேண்டும், ஒவ்வொரு முறையும் இந்த சம்பவம்  ஞாபகம் வரும்போது கோவம் தலையெடுக்கும், ஆனால் மன்னிக்கவேண்டும் என்று மன்னித்துவிடுவேன், எவ்வளவு முறை ஒருவரை மன்னிக்க வேண்டும் ஏழு எழுபது முறை ,,,,,7 * 70  இப்படியா,இல்லை  இல்லவே இல்லை ,77777777777777777 .... இப்படி எழுபது 7 . இப்படியானால் மன்னிக்க எத்தனைமுறை. கணக்கே இல்லை என்று வேதம் சொல்லுகிறது.
நீங்கள் அளக்கிற அளவின்ப்படியே உங்களுக்கும் அளக்கப்படும் என்ற வேத வசனத்தின் படி மன்னித்து தேவனிடத்தில் நாம் மன்னிப்பை பெற்றுக்கொள்வோம்.
பிரிந்துப்போகிறவன் தன் இஷ்ட்டப்படி செயயப்பார்க்கிறான் என்று வேதம் சொல்லுகிறது. 
commitment இல்லாத relationship ' யையே பெரும்பாலோர் விரும்புகின்றனர்.
orkut , facebook போன்ற network site களில் நண்பர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க விரும்புகிறார்கள், இன்னொரு வார்த்தையில் சொல்ல வேண்டுமானால் hi bye relationship 'யைத்தான் விரும்புகிறார்கள், அரவணைப்பை அல்ல.

பிரிந்து சொல்லவேண்டும் என்று முடிவு செய்துவிட்டால் ஒரு காரணமும் தேவையில்லை,ஆனால் சேரவேண்டும் என்று முடிவு செய்துவிட்டால் 1000 காரணங்கள் இருந்தாலும் சேரலாம், மனது தான் வேண்டும்.where there is a will there is a way, where there is no will there is no way .  எத்தனையோ பேர் உண்மையான அன்பால் திருந்தி வாழ்கிறார்கள்,நம்மில் ஒவ்வொருவரும் ஒரு உதாரணத்தை சொல்லமுடியும். 
எந்த உறவாய் இருந்தாலும் , நட்பு , காதல், திருமணம் , குடும்ப உறவு எதுவாய் இருந்தாலும் விட்டுக்கொடுப்போம், மன்னிப்போம்,பேசி சரிசெய்துக்கொள்வோம்.
நான் இறந்த காலத்தையும், வரும் காலத்தையும் சரியாக சொன்னாலும், நான் தூதர் பாஷைகளை பேசினாலும் அன்பு எனக்கு இராவிட்டால் நான் ஓசை இடுகிற வெண்கலத்தைப்போலவும் சத்தமிடுகிற கைத்தாளத்தைபோலவும் இருப்பேன் என்று வேதம் சொல்லுகிறது 
  இந்த படத்தை பார்ப்போம் , அன்பு ஒருக்காட்டு மிருகத்தை எப்படி மாற்றியிருக்கிறது என்று இதை பார்த்தால் புரியும்.



உறவுகளில் உண்மையாக இருப்போம். உண்மை முள்ளாக குத்துவது போலதான் இருக்கும், ஆனால் அது மருந்து போல எல்லவற்றையும் சரிசெய்துவிடும் . உண்மைக்கு எந்த சாயமும் தேவையில்லை. உண்மை பலாச்சுளை போல , அதை சுற்றிலும் முள் இருந்தாலும் உண்மை  இனிக்கும். அப்படியானால் உணமையான  உறவு எப்படி இருக்கும் என்று பாருங்கள், அது தேனில் இட்ட பலாச்சுளை போல இனிக்கும்.


உங்கள் கருத்துக்களை prithiviraj23@gmail.com க்கு தெரியப்படுத்துங்கள்...

ஊற்று கேட்கும் தேவன் உடனடி பதில் - 2 : மேவிபோசேத் - கண்ணீரை துடைக்க கர்த்தர் உண்டு கலங்காதே

       அப்பொழுது நானும் ஏன் குடுபத்தினரும் சபைக்கு சென்றுக்கொண்டிருந்தோம் . சில நாட்களாக பிரச்னைககளால் மனம் நொந்து என் குடுபத்திரிடம் நான...