Sunday, October 30, 2011

எசேக்கியா ராஜா - 3 (முக்கியத்துவம்)

எசேக்கியா ராஜா - 3 (முக்கியத்துவம்)

எசேக்கியா ராஜா - 2  ( http://prithiviraj23.blogspot.com/2011/10/2.html ) 

எசேக்கியா ராஜாவின் அறிமுகத்தையும், அவன் செய்கின்றவற்றையும் பார்த்துக்கொண்டு வருகிறோம். வாசிக்கலாம்,

2  நாளாகமம் 29-3 
    3. அவன் தன் ராஜ்யபாரத்தின் முதலாம் வருஷம் முதலாம் மாதத்தில் கர்த்தருடைய ஆலயத்தின் கதவுகளைத் திறந்து, அவைகளைப் பழுதுபார்த்து..,
    எசேக்கியா ராஜாவாக பொறுப்பேற்ற முதல் வருஷம், முதல் மதத்திலே அவன் தன் தகப்பன் பூட்டிப்போட்ட கர்த்தருடைய ஆலயத்தின் கதவுகளை திறந்து அதை பழுது பார்கிறான்.
    முதல் வருஷம், முதல் மாதம் இது நாம் கவனிக்கவேண்டிய  வார்த்தைகளாய் இருக்கிறது. எசேக்கியா ராஜா ராஜ்யபாரம் ஏற்ற சில மாதங்கள் கழித்துக்கூட இதை அவன் செய்திருக்கலாம். ஆனால் அவன் முதல் வருஷம், முதல் மாதத்திலே தானே கர்த்தருடைய ஆலயத்தைத்திறந்து பழுதுப்பர்க்கிறான். 
    இது நெடுநாளாய் அவனுடைய உள்ளத்தில் இருந்த காரியம் என்றுத்தான் நான் நினைக்கிறேன். எனவேதான் உடனே அவசரமாய் இதை செய்கிறான்.
    இதிலிருந்து அவன் கர்த்தருக்கு முதல் இடத்தை கொடுக்கிறதை நாம் அறிந்துக்கொள்ள முடியும். (he gave a high priority to open the doors of the house of the lord and repaired them)
    மத்தேயு 6:33 முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்; அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்.
அடுத்ததாக 2 நாளாகமம் 29 :
    4. ஆசாரியரையும் லேவியரையும் அழைத்துவந்து, அவர்களைக் கிழக்கு வீதியிலே கூடிவரச்செய்து, 
    5. அவர்களை நோக்கி: லேவியரே, கேளுங்கள் ...
    யார் இந்த லேவியர்?
    லேவி யாக்கோபுக்கு பிறந்த 3வது மகன். அவர் என்னோடு சேர்ந்திருப்பார் சென்று சொல்லி லேவி என்று அவன் தாய் பெயரிட்டாள். லேவி என்றால் சேர்ந்திருப்பது.(combined or united) 
    ஆதியாகமம் 49 ஆம் அதிகாரத்தை படித்தால், யாக்கோபு தன் கடைசி நாட்களில் தன் பிள்ளைகளை ஆசீர்வதிக்கும் நேரத்தில் லேவியை சபிப்பதை காணாலாம். ஆனால் கர்த்தரோ அதை ஆசீர்வாதமாக மாற்றினார். இதை எண்ணாகமம் 3 ஆம் அதிகாரத்தில் காணாலாம். 
    எண்ணாகமம் 3:41 இஸ்ரவேல் புத்திரரிலுள்ள முதற்பேறான யாவுக்கும் பதிலாக லேவியரையும், இஸ்ரவேல் புத்திரரின் மிருகஜீவன்களிலுள்ள தலையீற்றான யாவுக்கும் பதிலாக லேவியரின் மிருகஜீவன்களையும் எனக்கென்று பிரித்தெடு; நான் கர்த்தர் என்றார்.

    எண்ணாகமம் 3:45 நீ இஸ்ரவேல் புத்திரரிலுள்ள முதற்பேறான யாவருக்கும் பதிலாக லேவியரையும், அவர்களுடைய மிருகஜீவன்களுக்குப்பதிலாக லேவியரின் மிருகஜீவன்களையும் பிரித்தெடு; லேவியர் என்னுடையவர்களாயிருப்பார்கள்; நான் கர்த்தர்
    கர்த்தர் லேவியை முதல் பிறந்தவனுக்கு ஈடாக தெரிந்துக்கொண்டார். லேவி முதலிலே பிறக்கவில்லை, ஆனால் அவன் கர்த்தருக்காக வைராக்கியமாக நிற்கிறவனாக காணப்பட்டான். எனவே லேவியை கர்த்தர் பிரித்தெடுப்பதை காணலாம். 
    நாமும் கூட அப்படிதான். கர்த்தர் நம்மேல் கிருபையாய் இருக்க நமக்கு தகுதி இல்லை, ஆனாலும் முதற்பெறானவராகிய, ஆண்டவராகிய இயேசுவையே தந்து நம்மை தெரிந்துக் கொண்டார். அப்படியானால் நீங்களும் நானும் ஒரு லேவியன் தான். 
    எனவே, லேவியரே கேளுங்கள்.., 
    2 நாளாகமம் 29
    5. அவர்களை நோக்கி: லேவியரே, கேளுங்கள்; நீங்கள் இப்போது உங்களைப்பரிசுத்தம் பண்ணிக்கொண்டு, உங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தருடைய ஆலயத்தைப் பரிசுத்தம்பண்ணி அசுத்தமானதைப் பரிசுத்த ஸ்தலத்திலிருந்து வெளியே கொண்டுபோங்கள்.
    தெளிவாக சொல்லவேண்டுமானால், முதலாவது உங்களை பரிசுத்தம் பண்ணிக்கொண்டு, பிறகு கர்த்தருடைய ஆலயத்தை பரிசுத்தம் பண்ணுங்கள். (sanctify now yourselves and then sanctify the house of the lord.)  நாம் பொதுவாக மற்றவற்றை தான் குறையாக சொல்லுவோம். நம்மை நாம் கவனிப்பதே இல்லை. ஆனால் இங்கு எசேக்கியா உங்களை என்று குறிப்பிட்டு சொல்லுகிறான்,பிறகு கர்த்தருடைய ஆலயத்தை பரிசுத்தம் செய்யலாம் என வழிகாட்டுகிறான். 
    இந்த வசனத்தை கவனிக்கலாம்...
    சங்கீதம் 29:2 கர்த்தருடைய நாமத்திற்குரிய மகிமையை அவருக்குச் செலுத்துங்கள்; பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள்.
    சங்கீதம் 96:9 பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள்;
    பரிசுத்தம் என்பது அசுத்தத்தை பிரிப்பது, அலங்காரம் என்பது இன்னும் அழகை சேர்ப்பது (மெருகூட்டுவது, அழகோடு அழகை சேர்ப்பது.)
    எனவே பிரியமானவர்களே கர்த்தருக்கு பிரியமில்லதவைகளை நம்மிலிருந்து பிரித்து, கர்த்தரை பிரியப்படுத்துகிறவற்றை நம்முடன் சேர்ப்போம். பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுதுகொள்ளுவோம்.
    சரி இதை எப்போது செய்ய வேண்டும். இப்பொழுது என்று பார்க்கிறோம். இதுவும் முக்கியத்துவம் கொடுப்பதை பற்றித்தான். 
    வசனம் 5 ; இபோழுது உங்களை பரிசுத்தம் பண்ணிக்கொண்டு..., 
    வசனம் 10 ; இப்போதும் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய உக்கிரகோபம் நம்மைவிட்டுத் திரும்பும்படிக்கு, அவரோடே உடன்படிக்கைபண்ண மனதிலே நிர்ணயித்துக்கொண்டேன்.
    வசனம் 11 ;  இப்பொழுது அசதியாயிராதேயுங்கள்; 
    இந்த இப்பொழுது என்ற வார்த்தையை கவனியுங்கள்.
    இப்பொழுது பரிசுத்தம் செய்யுங்கள், இப்பொழுது அசதியயிராதேயுங்கள், இப்பொழுது உடன்படிக்கை பண்ண தீர்மானம், 
வசனம் 31. அதின்பின்பு எசேக்கியா: இப்போதும் நீங்கள் கர்த்தருக்கென்று உங்களைப் பரிசுத்தம்பண்ணினீர்கள்; 
    காரியம் முடிந்துவிட்டது. இபோழுதே செய்ததால் அவர்கள் அவர்களை பரிசுத்தம் பண்ணிக்கொன்டர்கள். 
    நேற்று என்பது முடிந்து விட்டது, நாளை நம்முடையது அல்ல, எனவே இன்றைய பொழுதை பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்று சொல்ல கேள்விப்பட்டிருப்பீர்கள். அது இது தான். இபோழுது தீர்மானம் பண்ணுங்கள், இப்பொழுது ஜாக்கிரதையாய் இருங்கள், இப்பொழுது உங்களை பரிசுத்தம் பண்ணிக்கொள்ளுங்கள். இப்பொழுது  உங்களை பரிசுத்தம் பண்ணினீர்கள். இபோழுதே காரியம் முடிந்து விட்டது. இப்பொழுது என்பது நாம் தேவனுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்பதை காட்டுகிறது.
    முதலாவது கர்த்தரை தேடவேண்டும், முதலாவது இப்பொழுதே நம்மை பரிசுத்தம் செய்துக்கொள்ள வேண்டும். ஆமென்.

    உங்கள் கருத்துக்களை prithiviraj23@gmail.com க்கு தெரியப்படுத்துங்கள்; 

Sunday, October 23, 2011

எசேக்கியா ராஜா -2 (வைராக்கியம்)

எசேக்கியா ராஜா -2 (வைராக்கியம்)

எசேக்கியாவின் அறிமுகத்தை ( http://prithiviraj23.blogspot.com/2011/10/blog-post.html ) பார்த்தோம். 

தன்னுடைய சூழ்நிலைகள் தனக்கு சாதகமாக இல்லாத நிலையிலும் கர்த்தரிடம் பற்றுதலாய் அவன் வளர்க்கப்பட்டான். 

நீதிமொழிகள் 22:6 பிள்ளையானவன் நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து; அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான்.
அபியாள் அவனை கர்த்தரிடமாய் நடத்தினாள். 
சரி அவன் என்ன செய்தான் - பார்ப்போம்.

2 இராஜாக்கள் 19:4 
     அவன் மேடைகளை அகற்றி, சிலைகளைத் தகர்த்து, விக்கிரகத்தோப்புகளை வெட்டி, மோசே பண்ணியிருந்த வெண்கலச் சர்ப்பத்தை உடைத்துப் போட்டான்; அந்நாட்கள்மட்டும் இஸ்ரவேல் புத்திரர் அதற்குத் தூபங்காட்டி வந்தார்கள்; அதற்கு நிகுஸ்தான் என்று பேரிட்டான்.
    பாருங்கள் இதுவரைக்கும் இஸ்ரவேலையும், யூதாவையும் ஆண்ட ராஜாக்கள் யாரும் செய்யாததை எசேக்கியா செய்கிறதை பார்க்கிறோம். 
    அவன் மேடைகளை அகற்றுகிறான்(HE REMOVED THE HIGH PLACES). மேடான இடங்கள் மேடைகள் ஆக்கப்பட்டது. இதுமட்டுமல்ல ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு போன்றவர்கள் கர்த்தருக்கு பலியிட பலிபிடத்தை கட்டி பலியிட்டு பின்பு அதை அப்படியே விட்டு சென்றுவிட்டார்கள், இந்த பலிபிடங்கள் மேடைகள் ஆக்கப்பட்டது. இந்த மேடைகளை ஜனங்கள் அந்நிய தெய்வங்களுக்கு பலியிட பயன்படுத்திக்கொண்டார்கள். இதைத்தான் எசேக்கியா ராஜா அகற்றுகிறான். 
    அந்த வசனத்தை படித்தால், அவன் மேடைகளை அகற்றி, சிலைகளைத் தகர்த்து, விக்கிரகத்தோப்புகளை வெட்டி... 
    விக்கிரக ஆராதனைக்கு உண்டான எல்லாவற்றையும் அவன் அழிக்கிறதை பார்க்கிறோம். 
    சரி அவன் மேடைகளை அகற்றினான், பிறகு ஏன் சிலைகளை அழிக்க வேண்டும், தோப்புகளை வெட்டவேண்டும். 
    அருமையானவர்களே எசேக்கியா மிக சரியாக செயல்படுவதை நாம் பார்க்கலாம். விக்கிரகதோப்புகள் இருந்தால் கண்டிப்பாக சிலைகள் வரும். சிலைகள் வந்தால் அது வெறும் சிலைகளாக இருக்காது, விக்கிரகமாக மாறும். பிறகு அதற்கு பலியிட மேடைகள் வரும்.(நம்ம ஊர்ல இத நல்லா பார்க்க முடியும், முதல 3 செங்கல் வரும், பிறகு அது கோயிலாக மாறும்.)  எனவே தான் அவன் எல்லாவற்றையும் அழிக்கிறான்.  
    இப்படித்தான் பாவ பழக்கமும் கூட, உதாரணமாக ஒருவர் புகை பிடிப்பதை விட வேண்டுமானால், வழக்கமாக புகை பிடிக்கும் இடங்களுக்கு செல்வதை தவிர்ப்பது மட்டுமல்ல, புகை பிடிக்கும் நண்பர்களை கூட தவிர்க்க வேண்டும். ஏன் இதை குறிப்பிட்டு சொல்கிறேன் என்றால் புகை பிடிப்பவர்கள் அவர்களுக்கு ஏற்ற புகைபிடிக்கும் பழக்கமுள்ள நண்பர்களை வைத்திருப்பார்கள். குடிப்பவர்களும் அப்படிதான்...என்னதான் முயன்றாலும் அந்த நண்பர்களுடன் இருக்கும்போது என்றாவது மீண்டும் பழைய பழக்கத்திற்கு செல்ல நேரிடும். அந்த பழக்கத்தோடு தொடர்பு உடையவற்றை துண்டிக்க வேண்டும்.  
    இவைகள் தான் நம் வாழ்க்கையில் மேடைகள். இந்த மேடைகள் அகற்றப்பட வேண்டும். அதாவது வேரோடு பிடுங்கப்பட வேண்டும். 
    பிறகு அவன் மோசே பண்ணியிருந்த வெண்கலச் சர்ப்பத்தை உடைத்துப் போட்டான்; அந்நாட்கள்மட்டும் இஸ்ரவேல் புத்திரர் அதற்குத் தூபங்காட்டி வந்தார்கள்; அதற்கு நிகுஸ்தான் என்று பேரிட்டான். 
    நன்றாக கவனியுங்கள், இது சாதாரண வெண்கல சர்ப்பம் அல்ல, உங்களுக்கு தெரியுமா இந்த வெண்கல சர்ப்பம் கர்த்தர் செய்ய சொன்னது,  உங்களுக்கு தெரியுமா இந்த வெண்கல சர்ப்பம் மோசே செய்தது, உங்களுக்கு தெரியுமா இந்த வெண்கல சர்ப்பம் அநேகரை மரணத்திலிருந்து காப்பாற்றியது. இப்படி ஜனங்கள இந்த வெண்கல சர்ப்பத்திற்கு தெய்வத்திற்கு நிகரான மதிப்பளித்து தூபங்காட்டி வந்தார்கள். 
    இப்படி வெண்கல சர்ப்பத்தை போல சில ஊழியர்களை மக்கள் கொண்டாடுவதை நாம் பார்க்ககூடும்.உங்களுக்கு தெரியுமா அவர் கை வைச்சி ஜெபித்தார் நான் சுகம் பெற்றேன், உங்களுக்கு தெரியுமா இவரால தான் எனக்கு இந்த அற்புதம் நடந்தது என்று கர்த்தரை விட்டுவிட்டு மனிதனை பிடித்துக்கொள்கிறார்கள்.  
    இந்த காரணத்தினால்தான் இந்த வெண்கல சர்ப்பத்தை எசேக்கியா உடைத்துப்போட்டன். உடைத்தது மட்டுமல்ல அதற்கு நிகுஸ்தான் என்று பெயரிட்டான். நிகுஸ்தான் (NEHUSHTAN ) என்றால் வெறும் வெண்கலத்துண்டு (" JUST A PIECE OF BRONZE" ) என பொருள். இப்படி இதன் மதிப்பை குறைத்தான் ( HE DEVALUED THE BRASEN SERPENT )  
    2 இராஜாக்கள் 18 :
      5. அவன் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின்மேல் வைத்த நம்பிக்கையிலே, அவனுக்குப் பின்னும் அவனுக்கு முன்னும் இருந்த யூதாவின் ராஜாக்களிலெல்லாம் அவனைப்போல் ஒருவனும் இருந்ததில்லை. 6. அவன் கர்த்தரை விட்டுப் பின்வாங்காமல் அவரைச் சார்ந்திருந்து, கர்த்தர் மோசேக்குக் கற்பித்த அவருடைய கற்பனைகளைக் கைக்கொண்டு நடந்தான்.
      இந்த மாதிரி செய்ய சொல்லி யார் எசேக்கியாவிற்கு சொன்னது. யாரும் சொல்லவில்லை. அவனாகவே முன்வருவதை பார்க்கிறோம். 
      மீண்டும் அந்த வசனத்தை பார்க்கலாம், 

      நீதிமொழிகள் 22:6 பிள்ளையானவன் நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து; அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான்.

    உங்கள் கருத்துக்கள் வரவேற்க்கப்படுகின்றன. கருத்துகளை prithiviraj23@gmail.com க்கு தெரியப்படுத்துங்கள். 






    Saturday, October 22, 2011

    எசேக்கியா ராஜா - அறிமுகம்.

    எசேக்கியா ராஜா - அறிமுகம். 

    கடந்த வாரங்களில் நடந்த வேதப்பாடங்களில் நான் கேட்டது.
    செய்தி : சார்லஸ் தாசன்.

    II இராஜாக்கள்
    18 அதிகாரம்

      1. இஸ்ரவேலின் ராஜாவாகிய ஏலாவின் குமாரன் ஓசெயாவின் மூன்றாம் வருஷத்திலே ஆகாஸ் என்னும் யூதாவுடைய ராஜாவின் குமாரனாகிய எசேக்கியா ராஜாவானான்.
      2. அவன் ராஜாவாகிறபோது, இருபத்தைந்து வயதாயிருந்து, எருசலேமிலே இருபத்தொன்பது வருஷம் அரசாண்டான்; சகரியாவின் குமாரத்தியாகிய அவன் தாயின் பேர் ஆபி.
      3. அவன் தன் தகப்பனாகிய தாவீது செய்தபடியெல்லாம் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்.
      2  நாளாகமம் 29 
      1. எசேக்கியா இருபத்தைந்தாம் வயதில் ராஜாவாகி, இருபத்தொன்பது வருஷம் எருசலேமில் அரசாண்டான்; சகரியாவின் குமாரத்தியாகிய அவனுடைய தாயின்பேர் அபியாள்.
      2. அவன் தன் தகப்பனாகிய தாவீது செய்தபடியெல்லாம் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்.
      எசேக்கியா ஆகாஸ் ராஜாவினுடைய குமாரன். இவன் தன் தகப்பன் மரித்தபின்பு தன்னுடைய 25 வயதிலே ராஜாவாகிறான். 
      எசேக்கியா என்றால் யேகோவா என் பெலன் (Jehovah is my strength) என பொருள். 
      II இராஜாக்கள்
      18 அதிகாரம்
      3. அவன் தன் தகப்பனாகிய தாவீது செய்தபடியெல்லாம் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்.
      மற்ற எல்லா ராஜாக்களை பார்த்ததால் தன் தகப்பனாகிய தவிதைப்போல கர்த்தரின் பார்வைக்கு செமையானத்தை செய்தார்கள் என்று குறிப்பிட்டு இருக்கும் , 
      யோசபாத் ராஜாவுக்கு தன் தகப்பனாகிய தாவிதின் முன் நாட்களில் நடந்தது போல என குறிப்பிட்டு இருக்கிறது .(2 நாளாகமம் 17- 3) 
      ஆனால் எசேக்கியாவோ தன் தகப்பனாகிய தாவீது செய்தபடியெல்லாம் கர்த்தரின் பார்வைக்கு செமையானத்தை செய்தான்.
      சரி இவன் இப்படி செய்ய காரணம் என்ன ? இவன் வளர்ந்த சூழ்நிலைதான் என்ன ?  என்று பார்த்தால் நாம் அவனுடைய தகப்பனாகிய ஆகாஸ் ராஜாவினுடைய வாழ்க்கையை ( http://prithiviraj23.blogspot.com/2011/09/blog-post_29.html ) சற்று பார்க்க வேண்டும். ஆகாஸ் ராஜா தன் தேவனாகிய கர்த்தரை விட்டு அந்நிய தெய்வங்களின் உதவியை நாடினான் . அவைகளுக்கு பலிபிடங்களையும் கட்டினான் , அவனால் யூதா நாடு முழுவதும் சிறுமைப்பட்டு போவதாக வேதம் கூறுகிறது. 
      இந்த பாதகமான சூழ்நிலையில் எசேக்கியாவை  கர்த்தரின் மேல் பற்றுதலாய் அவன் தாய் வளர்த்தாள். அவன் தாயின் பெயர் ஆபி (அபியாள்
      யார் இந்த அபியாள் ?
      II இராஜாக்கள் 18 அதிகாரம் 2 வசனம் 
      சகரியாவின் குமாரத்தியாகிய அவன் தாயின் பேர் ஆபி ( அபியாள் ). 
      அபியாள் என்றால் யேகோவா என் தகப்பன்Jehovah is my father ) என பொருள்.
      சகரியா தன் மகளை கர்த்தருக்குள் வளர்த்தான். அப்படியானால் யார் இந்த சகரியா என்று நாம் பார்க்கத்தானே வேண்டும். 
      II நாளாகமம் 26 அதிகாரம் 5 ஆம் வசனம்
        தேவனுடைய தரிசனங்களில் புத்திமானாயிருந்த சகரியாவின் நாட்களிலே தேவனைத் தேட மனதிணங்கியிருந்தான்; 
        சகரியா என்பவன் தேவனுடைய தரிசனங்களில் புத்திமானாய் இருந்தான் என வேதம் சொல்லுகிறது. இவன் ராஜாவாகிய உசியாவை கர்த்தர் பக்கமாக திருப்பினான். 
        நம்முடைய நண்பர்கள், நமக்கு ஆலோசனை சொல்பவர்கள் யார் என நாம் சற்று சிந்தித்து பார்க்கவேண்டும். அவர்கள் தேவனிடமாக நம்மை வழி நடத்துகிறார்களா ? அவர்களுடைய ஆலோசனைகள் வசனத்திற்கு ஒத்து இருக்கிறதா? என்று நாம் பார்க்க வேண்டும் . 
        உசியாவிற்கு சகரியா ...
        எசேக்கியவிற்கு அபியாள் ... நமக்கு ...?  
        அபியாள் தன் மகனை கர்த்தரிடம் பற்றுதலாய் வளர்த்தாள். அவனும் எல்லாவற்றிலும் கர்த்தரை தேடினான். கர்த்தர் அவனை கட்டினார். 
        சூழ்நிலைகள் பாதகமாக இருந்தாலும் கர்த்தரிடம் பற்றுதலாய் இருப்போம். இதற்கு நம்முடைய ஐக்கியம் மிகமிக முக்கியம். இதனால் தான் சபை கூடிவருதலை அசட்டை செய்யாதீர்கள் என்று வேதம் தெளிவாய் சொல்லுகிறது. 
        அபியாள் தன் மகனை சரியாய் வளர்த்தாள். அவன் தன் நாட்டு மக்களை கர்த்தரிடமாய் திருப்பினான். 
      உங்கள் கருத்துக்களை prithiviraj23@gmail.com க்கு தெரியப்படுத்துங்கள்.




            Thursday, September 29, 2011

            ஆகாஸ் ராஜா சொல்லுவது என்ன ?

            ஆகாஸ் ராஜா

            சொல்லுவது என்ன ? what king AHAZ says ...

            கடந்த வாரம் bible studyல் நான் கேட்டது :

            செய்தி : சார்லஸ் தாசன்

            வரப்போகும் செய்தியை படிப்பதற்குமுன் நீங்கள் கருத்திலே கொள்ளவேண்டிய வசனம்
            யாக்கோபு 4 :

                   17. ஆதலால், ஒருவன் நன்மைசெய்ய அறிந்தவனாயிருந்தும், அதைச் செய்யாமற்போனால், அது அவனுக்குப் பாவமாயிருக்கும்.


            ஒருவன் செய்யவேண்டியதை , செய்ய தெரிந்து இருந்தும் செய்யாமல் போனால் அது அவனுக்கு குற்றம் அல்ல, தவறு அல்ல ஆனால் அது பாவம்... பாவத்தின் சம்பளம் மரணம் என்று வேதம் சொல்லுகிறது. இதை மனதிலே வைத்துக்கொண்டு வாசிக்கலாம்,

            II இராஜாக்கள் 16 அதிகாரம் 



                 1. ரெமலியாவின் குமாரனாகிய பெக்காவின் பதினேழாம் வருஷத்தில் யூதாவின் ராஜாவாகிய யோதாமின் குமாரன் ஆகாஸ் ராஜாவானான்.


                 2. ஆகாஸ் ராஜாவாகிறபோது இருபது வயதாயிருந்து, எருசலேமிலே பதினாறு வருஷம் அரசாண்டான்; அவன் தன் தகப்பனாகிய தாவீதைப்போல் தன் தேவனாகிய கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்யாமல்,

            II நாளாகமம் 28 அதிகாரம் 



                 1. ஆகாஸ் ராஜாவாகிறபோது இருபது வயதாயிருந்து, பதினாறு வருஷம் எருசலேமில் அரசாண்டான்; ஆனாலும் அவன், தன் தகப்பனாகிய தாவீதைப்போல், கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்யாமல்,

                 இந்த வசனங்களை வாசிக்கும்போது யோதாமின் மகன், ஆகாஸ் 20 வயதிலே ராஜாவாகிறான். அவன் கர்த்தரின் பார்வைக்கு செம்மையானதை செய்யாமல் .. என்று குறிப்பிடப்பட்டுள்ளது .

            மற்ற எல்லா ராஜாக்களை பற்றி வேதத்திலே பார்க்கும் போது, சிலர் கர்த்தரின் பார்வைக்கு செம்மையானதை செய்தார்கள் என்றும் , சிலர் கர்த்தரின் பார்வைக்கு பொல்லாப்பானதை செய்தார்கள் என்றும் சொல்லப்படிருக்கிறது.

            ஆனால் ஆகாஸ் ராஜாவுக்கு மட்டும் அப்படி சொல்லவில்லை. கர்த்தரின் பார்வைக்கு செம்மையானதை செய்யாமல் .. என்றே குறிப்பிட்டு சொல்லப்பட்டு உள்ளது .

            அவன் தாத்தா உசியா , தகப்பன் யோதாம் , இவர்களை பார்த்தும் , பாரம்பரியமாகவோ அல்லது மறந்தும் கூட இவன் கர்த்தரின் பார்வைக்கு சரியானதை செய்யவில்லை . 

                அப்படியானால் அவன் செம்மையானதை செய்ய அறிந்து இருந்தும்   செய்யவில்லை . இந்த காரியம் அவனுக்கு பாவமாயிற்று.



            ஒருவன் நல்ல பெயர் எடுப்பதோ, அல்லது கெட்ட பெயர் எடுப்பதோ உடனே நடக்கக்கூடிய காரியம் அல்ல. இரண்டிற்குமே சற்று காலம் பிடிக்கும்.

            ஆனால் ஆரம்பிக்கும்போதே கர்த்தரின் பார்வைக்கு செம்மையானதை செய்யாமல் .. என எடுத்த எடுப்பிலே இவன் எதிர்மறையான பதிப்பை இவன் ஏற்ப்படுத்திவிட்டதாக பார்க்கிறோம்.(very first he made a negative impact.)

            First impression is the Best impression .. but we never find a second chance to make a first impression

            சரி அவன் என்ன அப்படி செய்துவிட்டான் . பார்ப்போம் .

            II நாளாகமம் 28 அதிகாரம்

                   2. இஸ்ரவேல் ராஜாக்களின் வழிகளில் நடந்து, பாகால்களுக்கு வார்ப்பு விக்கிரகங்களைச் செய்தான்.


                வார்ப்பு விக்கிரகங்கள் என்றால் அந்த சிலைகளுக்கு அச்சு (mold)  செய்து அதை அதிக எண்ணிக்கையில் மிக துரிதமாக தயாரிக்க வழி செய்தான் , அது மட்டுமில்லாமல் இந்நாட்களில் நாம் பார்ப்பது போல புதுப்புது வடிவமைப்புகளை உண்டாக்கினான். 


            II இராஜாக்கள் 16 அதிகாரம்

                 3. இஸ்ரவேல் ராஜாக்களின் வழியிலே நடந்து, கர்த்தர் இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாகத் துரத்தின ஜாதிகளுடைய அருவருப்புகளின்படியே தன் குமாரனை முதலாய்த் தீக்கடக்கப்பண்ணினான்.

                அவன் ஜீவனுள்ள தேவனை தேடாமல், கர்த்தர் இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாகத் துரத்தின ஜனங்களுடைய தெய்வங்களை தேடினான். தன் குமாரரை தீக்கடக்கப்பண்ணினான்.

            இங்கு தீயை கடக்க பண்ணினான் என குறிப்பிடப்பட்டு உள்ளது, தீ கடக்க பண்ணுவது என்றால் தீ மிதிப்பது அல்ல, ஆனால்

            II நாளாகமம் 28 அதிகாரம் 3 ஆம் வசனத்தை படித்தால் அவன் தன் குமாரனை அந்நிய தெய்வங்களுக்காக தீயில் தகித்தான் என தெரிகிறது.

                3. அவன் இன்னோம் குமாரரின் பள்ளத்தாக்கிலே தூபங்காட்டி, கர்த்தர் இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாகத் துரத்தின ஜாதிகளுடைய அருவருப்புகளின்படியே தன் குமாரரை அக்கினியிலே தகித்துப்போட்டு,....பாருங்கள் இந்த ஆகாஸ் கர்த்தரின் பார்வைக்கு செம்மையானதை செய்திருக்க வேண்டும். அவன் செய்யவில்லை , அவன் பொல்லாப்பானதையும் செய்யவில்லை, இந்த நிலைமை அவனை மிக மிக மோசமான நிலைக்கு இழுத்து சென்றது. இதைவிட இன்னும் மோசமான நிலைக்கு அவன் செல்லவதை அந்த அதிகாரங்களை படித்தால் தெரியும்.

            II நாளாகமம் 28 அதிகாரம்

                   5. ஆகையால் அவனுடைய தேவனாகிய கர்த்தர் அவனைச் சீரியருடைய ராஜாவின் கையில் ஒப்புக்கொடுத்தார்; அவர்கள் அவனை முறிய அடித்து, அவனுக்கு இருக்கிறவர்களிலே பெரிய கூட்டத்தைச் சிறைபிடித்துத் தமஸ்குவுக்குக் கொண்டுபோனார்கள்; அவன் இஸ்ரவேலுடைய ராஜாவின் கையிலும் ஒப்புக்கொடுக்கப்பட்டான்; இவன் அவனை வெகுவாய் முறிய அடித்தான். 
                  6. எப்படியெனில், யூதா மனுஷர் தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரை விட்டபடியினால், ரெமலியாவின் குமாரனாகிய பெக்கா அவர்களில் ஒரேநாளில் லட்சத்திருபதினாயிரம்பேரைக் கொன்றுபோட்டான்; அவர்கள் எல்லாரும் மகா வீரராயிருந்தவர்கள்.


            அவன் கர்த்தரைவிட்டபடியினால் ஒரே நாளில் லட்சத்திருபதினாயிரம் மகா வீரர்களை இழந்தான். அதுமட்டுமல்ல 

                 7. அன்றியும் எப்பிராயீமின் பராக்கிரமசாலியான சிக்ரியும், ராஜாவின் குமாரனாகிய மாசேயாவையும், அரமனைத் தலைவனாகிய அஸ்ரிக்காமையும், ராஜாவுக்கு இரண்டாவதான எல்க்கானாவையும் கொன்றுபோட்டான்.

            ஏறக்குறைய தன்னுடைய எல்லா பெலத்தையும் , தன்னுடைய மெய்காவலர்களையும்  இழந்தான். அப்படியும் அவன் தேவனை தேட மனம் திருந்தவில்லை.

            இந்த அதிகாரங்களை படித்துப்பார்த்தால் சிரியா ராஜா மற்றும் இஸ்ரவேல் ராஜா இருவரும் யுதாவுடன் யுத்தம் செய்ததை தெரிந்துக்கொள்ளமுடியும்.

            2 நாளாகமம் 28
                 8. இஸ்ரவேல் புத்திரர் தங்கள் சகோதரரில் இரண்டு லட்சம்பேராகிய ஸ்திரீகளையும் குமாரரையும் குமாரத்திகளையும் சிறைபிடித்து, அவர்களுடைய அநேக திரவியங்களைக் கொள்ளையிட்டு, கொள்ளைப்பொருளைச் சமாரியாவுக்கு, கொண்டுபோனார்கள்.



            அப்போது கர்த்தருடைய வார்த்தை அங்கே இருக்கும் ஒரு தீர்க்கதரிசிக்கு வெளிபடுகிறது, 
               9. அங்கே ஓதேத் என்னும் பேருள்ள கர்த்தருடைய தீர்க்கதரிசி ஒருவன் இருந்தான்; அவன் சமாரியாவுக்கு வருகிற சேனைக்கு திரளாகப் போய், அவர்களை நோக்கி: இதோ, உங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் யூதாவின்மேல் கோபங்கொண்டபடியினால் அவர்களை உங்கள் கைகளில் ஒப்புக்கொடுத்தார்; நீங்களோ வானபரியந்தம் எட்டுகிற உக்கிரத்தோடே அவர்களைச் சங்காரம்பண்ணினீர்கள்.


               அந்த தீர்க்கதரிசி இஸ்ரவேலரை பார்த்து தேவன் உங்களை அடிக்க சொன்னால் நீங்களோ குனிய குனிய குட்டவேண்டும் என்று மிகவும் அடித்துவிட்டீர்கள் என அவர்கள் செய்த தவறை சுட்டிக்காட்டினான். 
            அபோதுதான் அவர்கள் அந்த ஸ்திரிகளுக்கும், பிள்ளைகளுக்கும் உடுக்க வஸ்திரம் கொடுக்கிறர்கள். யூதாவிலிருந்து சமரியாவிற்க்கு ஏறக்குறைய 30 மைல், இவளவு தூரம் அவர்கள் நிர்வாணமாய் செல்கின்றனர்.எவ்வளவு ஒரு மோசமான நிலைமை. அவர்கள் கர்த்தரை விட்டபடியால், கர்த்தர் அவர்களை விட்டார். கர்த்தருடைய வார்த்தையை கேட்டும் ஆகாஸ் திருந்தியபாடில்லை.
            ஆகாஸ் கர்த்தரை தேடாமல் அசீரியா ராஜாவுக்கு தனக்கு பாதுகாப்பு தரும்படிக்கு தன் ஆட்களை அனுப்புகிறான். கூடவே  கர்த்தருடைய ஆலயத்திலிருந்து பொன்னையும் வெள்ளியையும் எடுத்து காணிக்கையாக அனுப்புகிறான்.


            II இராஜாக்கள்16 அதிகாரம்   
               7. ஆகாஸ் அசீரியாவின் ராஜாவாகிய திகிலாத்பிலேசரிடத்திற்கு ஸ்தானாபதிகளை அனுப்பி: நான் உம்முடைய அடியானும் உம்முடைய குமாரனுமாயிருக்கிறேன்; நீர் வந்து, எனக்கு விரோதமாயெழும்பின சீரியா ராஜாவின் கைக்கும், இஸ்ரவேல் ராஜாவின் கைக்கும் என்னை நீங்கலாக்கிவிடும் என்று சொல்லச்சொல்லி;  
               8. கர்த்தருடைய ஆலயத்திலும் ராஜாவின் அரமனைப் பொக்கிஷங்களிலும் அகப்பட்ட வெள்ளியையும் பொன்னையும் எடுத்து, அசீரியாவின் ராஜாவுக்குக் காணிக்கையாக அனுப்பினான். 
               9. அசீரியா ராஜா அவனுக்குச் செவி கொடுத்து, தமஸ்குவுக்குப்போய் அதைப் பிடித்து, அதின் குடிகளைக் கீர்பட்டணத்திற்குச் சிறைபிடித்துக்கொண்டுபோய், ரேத்சீனைக் கொன்றுபோட்டான்.
              இப்பொது ஆகாஸ் ராஜா செய்வது என்ன? தான் நினைத்தது போலவே அசீரியா ராஜா உதவி செய்யவில்லை.
            II நாளாகமம் 28 அதிகாரம்
                   21. ஆகாஸ் கர்த்தருடைய ஆலயத்தில் ஒரு பங்கும் ராஜ அரமனையில் ஒரு பங்கும், பிரபுக்களின் கையில் ஒரு பங்கும் எடுத்து, அசீரியாவின் ராஜாவுக்குக்கொடுத்தும், அவனுக்கு உதவிகிடைக்கவில்லை.

               இந்த சூழ்நிலையிலாவது ஆகாஸ் கர்த்தரை தேடி இருக்க வேண்டும் செய்யாததினால் என்ன நடக்கிறது என்று அடுத்த வசனத்தை படித்தால் தெரியும்.
            II இராஜாக்கள்16 அதிகாரம் 
               10. அப்பொழுது ராஜாவாகிய ஆகாஸ் தமஸ்குவிலுள்ள அசீரியாவின் ராஜாவாகிய திகிலாத்பிலேசருக்கு எதிர்கொண்டு போய்த் தமஸ்குவிலுள்ள பலிபீடத்தைக் கண்டான். ராஜாவாகிய ஆகாஸ் அந்தப் பலிபீடத்தின் சாயலையும், அதினுடைய சகல வேலைப்பாடாகிய அதின் மாதிரியையும் ஆசாரியனாகிய உரியாவுக்கு அனுப்பினான்.

               11. ராஜாவாகிய ஆகாஸ் தமஸ்குவிலிருந்து வருகிறதற்குள் ஆசாரியனாகிய உரியா அப்படிக்கொத்த பலிபீடத்தைக் கட்டி, ராஜாவாகிய ஆகாஸ் தமஸ்குவிலிருந்து அனுப்பின கட்டளையின்படியெல்லாம் செய்தான்.
                   12. ராஜா தமஸ்குவிலிருந்து வந்தபோது, அவன் அந்தப் பலிபீடத்தைப் பார்த்து, அந்தப் பலிபீடத்தண்டையில் சேர்ந்து, அதின்மேல் பலியிட்டு, 

                   13. தன் சர்வாங்க தகனபலியையும் தன் போஜனபலியையும் தகனித்து, தன் பானபலியை வார்த்து, தன் சமாதானபலிகளின் இரத்தத்தை அந்தப் பலிபீடத்தின்மேல் தெளித்தான். .... 

                  14. கர்த்தரின் சந்நிதியில் இருந்த வெண்கலப் பலிபீடத்தை அவன் தன் பலிபீடத்திற்கும் கர்த்தரின்ஆலயத்திற்கும் நடுவே ஆலயத்தின் முகப்பிலிருந்து எடுத்து, அதைத் தன் பலிபீடத்திற்கு வடபுறமாய் வைத்தான் 
               15. ராஜாவாகிய ஆகாஸ் ஆசாரியனாகிய உரியாவை நோக்கி: இந்தப் பெரிய பலிபீடத்தின்மேல் நீ காலைச் சர்வாங்க தகனபலியையும், மாலைப்போஜனபலியையும், ராஜாவின் சர்வாங்க தகனபலியையும், அவருடைய போஜனபலியையும், தேசத்தினுடைய சகல ஜனத்தின் சர்வாங்க தகனபலியையும், அவர்கள் போஜனபலியையும், அவர்கள் பானபலிகளையும் செலுத்தி, அதின்மேல் சர்வாங்க தகனங்களின் சகல இரத்தத்தையும், பலிகளின் சகல இரத்தத்தையும் தெளிப்பாயாக; அந்த வெண்கலப் பலிபீடமோ, நான் சன்னதம் கேட்கிறதற்கு உதவும் என்றான்.
              16. ராஜாவாகிய ஆகாஸ் கட்டளையிட்டபடியெல்லாம் ஆசாரியனாகிய உரியா செய்தான்.
              ஏன் ஆகாஸ் இவ்வாறு  செய்ய வேண்டும்? 
                   தன்னை யுத்தத்தில் வெற்றிக்கொள்ள அவர்கள் தெய்வங்கள் அவர்களுக்கு உதவி செய்கிறது, நாமும் அவர்கள் தெய்வத்தை வணங்கினால் நமக்கும் உதவி கிடைக்கும் என எண்ணினான் . 

               அவன் , தன் பிதாக்களை இந்நாள்  மட்டும் வழிநடத்தின, சத்துருக்களிடம் இருந்து காத்த,தன் தெய்வமாகிய கர்த்தரை மறந்தே போனான். 

            வாசிக்கலாம் 2 நாளாகமம் 28 .
               23. எப்படியென்றால்: சீரியா ராஜாக்களின் தெய்வங்கள் அவர்களுக்குத் துணைசெய்கிறபடியினால், அவர்கள் எனக்கும் துணைசெய்ய அவர்களுக்குப் பலியிடுவேன் என்று சொல்லி, தன்னை முறிய அடித்த தமஸ்குவின் தெய்வங்களுக்கு அவன் பலியிட்டான்; ஆனாலும் அது அவனும் இஸ்ரவேல் அனைத்தும் நாசமாகிறதற்கு ஏதுவாயிற்று.
              ஆகாஸ் ராஜா இதோடு நிறுத்திக்கொள்ளாமல் தேவனுடைய ஆலயத்திள்ளவற்றை எடுத்து, ஆலயத்தை பூட்டி போடுகிறான்.

               24. ஆகாஸ் தேவனுடைய ஆலயத்தின் பணிமுட்டுகளைச் சேர்த்து, தேவனுடைய ஆலயத்தின் பணிமுட்டுகளைத் துண்டுதுண்டாக்கி, கர்த்தருடைய ஆலயத்தின் கதவுகளைப் பூட்டிப்போட்டு, எருசலேமில் மூலைக்குமூலை பலிபீடங்களை உண்டுபண்ணி,
              
               25. அந்நிய தெய்வங்களுக்குத் தூபங்காட்டும்படிக்கு, யூதாவின் ஒவ்வொரு பட்டணத்திலும் மேடைகளை உண்டுபண்ணி, தன் பிதாக்களின் தேவனாகிய கர்த்தருக்குக் கோபமூட்டினான்.

            இந்த காரணத்தினால்தான் கர்த்தர் யுதாவை தாழ்த்துவதை பார்க்கிறோம்.

            2 நாளாகமம் 28 
               19. யூதாவின் ராஜாவாகிய ஆகாசினிமித்தம் கர்த்தர் யூதாவைத் தாழ்த்தினார்; அவன் யூதாவைச் சீர்குலைத்து, கர்த்தருக்கு விரோதமாய் மிகவும் துரோகம்பண்ணினான்.

               27. ஆகாஸ் தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின்பு, அவனை எருசலேம் நகரத்தில் அடக்கம்பண்ணினார்கள்; ஆனாலும் இஸ்ரவேல் ராஜாக்களின் கல்லறைகளில் அவனைக் கொண்டுவந்து வைக்கவில்லை;
              இவ்வாறாக அவனுடைய வாழ்க்கை முடிகிறது. எதை செய்ய வேண்டுமோ, செய்ய பெலன் இருந்தும் செய்யாமல் போனதினால் இவனுடைய ஆத்துமாவும், ராஜ்யமும், மக்களையும், தன் செல்வாக்கையும் இழந்து போனான். 
              இவன் தேவனாகிய கர்த்தரை தேடி இருக்கவேண்டும், கர்த்தரை தேட சமயமும், உதாரணங்களும், ஆலோசனைகளும் நிச்சயம் அவனுக்கு இருந்தது. இதை செய்யாததினால் கர்த்தரின் பார்வைக்கு பொல்லாப்பானதை செய்த ராஜாக்களைவிட இவன் மிக மோசமான நிலைக்கு சென்றான்.அவன் மட்டுமல்ல அவனை சார்ந்தவர்களும் தான். மீண்டும் வசிக்கலாம்,
              யாக்கோபு 4 :
              17. ஆதலால், ஒருவன் நன்மைசெய்ய அறிந்தவனாயிருந்தும், அதைச் செய்யாமற்போனால், அது அவனுக்குப் பாவமாயிருக்கும்.  
              உங்கள் கருத்துக்களை prithiviraj23@gmail.comக்கு தெரியப்படுத்துங்கள் 

            Saturday, September 17, 2011

            ராஜாவாகிய யோதாம்- updated

            கடந்த வரத்திலே நடந்த bible study ல் நான் கேட்டது :
            செய்தி : சார்லஸ் தாசன் .

               2 இராஜாக்கள் 15 : 32. இஸ்ரவேலின் ராஜாவாகிய ரெமலியாவின் குமாரன் பெக்காவின் இரண்டாம் வருஷத்தில், யூதாவின் ராஜாவாகிய உசியாவின் குமாரன் யோதாம் ராஜாவானான்.
              33. அவன் ராஜாவாகிறபோது, இருபத்தைந்து வயதாயிருந்து, எருசலேமிலே பதினாறுவருஷம் அரசாண்டான்; சாதோக்கின் குமாரத்தியாகிய அவன் தாயின் பேர் எருசாள்.
              34. அவன் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்; தன் தகப்பனாகிய உசியா செய்தபடியெல்லாம் செய்தான். 35. மேடைகள்மாத்திரம் அகற்றப்படவில்லை; ஜனங்கள் இன்னும் மேடைகளின்மேல் பலியிட்டுத் தூபங்காட்டி வந்தார்கள்; இவன் கர்த்தருடைய ஆலயத்தின் உயர்ந்த வாசலைக் கட்டினான். 36. யோதாமின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்தவை யாவும், யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.
              இந்த பகுதி ராஜாவாகிய யோதாமைப்பற்றியது...முதலாவதாக  நாளாகமத்தில் யோதாமை பற்றி பார்க்கலாம்.
              2 நாளாகமம் 27 :

              1. யோதாம் ராஜாவாகிறபோது இருபத்தைந்து வயதாயிருந்து, பதினாறு வருஷம் எருசலேமிலே அரசாண்டான்; சாதோக்கின் குமாரத்தியாகிய அவன் தாயின்பேர் எருசாள். 
               2. அவன் தன் தகப்பனாகிய உசியா செய்தபடியெல்லாம் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்;

            இந்த யோதாம் ராஜாவை பற்றி... அவன் தன் தகப்பனாகிய உசியா செய்ததுப்போல கர்த்தரின் பார்வைக்கு செம்மையானதை செய்தான். 
            தன் தகப்பன் செய்தது போல என்று சொல்லும்போது இது ஒரு பாரம்பரியமான(traditional) ஒன்றாக இருக்கிறது. சரி அப்படியான அவன் தகப்பன் சரியாக செய்தானா என்று பார்க்க வேண்டிய அவசியம் நமக்கு உண்டு .
            2 நாளாகமம் 26 : 4 

              4. அவன் தன் தகப்பனாகிய அமத்சியா செய்தபடியெல்லாம் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்து,...
              இந்த வசனத்தை பார்த்தால் , அவன் தகப்பனும் அவனுடைய தகப்பனை பின்பற்றுவதை பார்க்கிறோம் . 
            ஆனாலும் யோதாம் ஒரு பாடத்தை கற்றுகொண்டான். 2 ஆம் வசனம். கடைசி பகுதி . 


            ஆனாலும் அவனைப்போலக் கர்த்தரின் ஆலயத்திற்குள்பிரவேசியாதிருந்தான்; 


            இந்த காரியத்தை தன் தகப்பனிடம் இருந்து கற்றுகொண்டான். அவன் ஆலயத்துக்குள் பிரவேசிக்கவில்லை. 
             உசியா ராஜா தேவ ஆலயத்திற்குள் துணிகரமாக நுழைந்து கர்த்தருடைய கோபத்துக்கு ஆளானான். கர்த்தர் அவனை அடித்ததால் அவன் நெற்றியிலே குஷ்டம் வந்தது. எனவே இதை பார்த்த யோதமும் அந்த தவறை செய்ய முற்படவில்லை. 
             ஒரு விஷயத்தில் தோல்வி ஏற்படுவது என்பது அந்த விஷயத்தில் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் ஒன்று உண்டு என்பதை சுட்டிக்காட்டுகிறது. நாம் பாடம் கற்றுக்கொள்ளாத வரை நாம் அதே விஷயத்தில் தோற்றுக்கொண்டே இருப்போம் எனபது தெளிவாக தெரிகிறது.


            அடுத்ததாக,
            யோதாம் ராஜாவுக்கு அனேக ஆலோசனைகாரர்கள் இருந்தார்கள். என்று சற்று கூர்ந்து கவனித்தால் தெரியும் . 
              முதலாவதாக அவன் தகப்பன் உசியா, அவனை தேவன் அடித்ததால் அவன் தனியே இருந்து தன் மகனுக்கு ஆலோசனை கொடுத்தான் . 
              மட்டுமல்லாமல் ஓசியா (ஓசியா 1 :1 ), மீகா (மீகா:1:1 ) போன்ற தீர்க்கதரிசிகள் அவனுக்கு ஆலோசனை வழங்கினார்கள் என்று பார்க்கிறோம் .
            நீதிமொழிகள் 11:14 ஆலோசனையில்லாத இடத்தில் ஜனங்கள் விழுந்துபோவார்கள்; அநேகஆலோசனைக்காரர் உண்டானால் சுகம் உண்டாகும்.
            நீதிமொழிகள் 19:20 உன் அந்தியகாலத்தில் நீ ஞானமுள்ளவனாயிருக்கும்படி, ஆலோசனையைக்கேட்டு, புத்திமதியை ஏற்றுக்கொள்.

              அவனுக்கு அனேக ஆலோசனைகாரர்கள் இருந்தார்கள் என்பது அவன் ஆலோசனையை கேட்க தயாராகவே இருந்தான் என்றே தெரிகிறது .
            நீதிமொழிகள் 12:15 மதியீனனுடைய வழி அவன் பார்வைக்குச் செம்மையாயிருக்கும்; ஆலோசனைக்குச் செவிகொடுக்கிறவனோ ஞானமுள்ளவன்
            நீதிமொழிகள் 13:10 அகந்தையினால்மாத்திரம் வாது பிறக்கும்; ஆலோசனையைக் கேட்கிறவர்களிடத்திலோ ஞானம் உண்டு.


            அடுத்ததாக,
            2 நாளாகமம் 27: 
              3. அவன் கர்த்தருடைய ஆலயத்தின் உயர்ந்த வாசலைக் கட்டினதுமல்லாமல், ஓபேலின் மதிலின்மேல் அநேக கட்டடங்களையும் கட்டினான். 4. யூதாவின் மலைகளிலே பட்டணங்களையும், காடுகளிலே கோட்டைகளையும் கோபுரங்களையும் கட்டினான்.
              இந்த வசனங்கள் அவன் வெறும் கட்டடங்களை கட்டினான் என்பதை மாத்திரம் குறிக்கவில்லை, அவன் தன் அரணாக இந்த மதில்களையும், கோட்டைகளையும், கோபுரங்களையும் நம்பினான் என்று ஓசியா தீர்ககதறின புத்தகத்திலே பார்க்கலாம்.
            ஓசியா 8 : 

              14. இஸ்ரவேல் தன்னை உண்டாக்கினவரை மறந்து கோவில்களைக் கட்டுகிறான்; யூதா அரணான பட்டணங்களைப் பெருகப்பண்ணுகிறான்;

             இஸ்ரவேலருக்கு கர்த்தரே அரண். தாவீது கூட கர்த்தரே எனக்கு அரண், அவரே என் கோட்டை , என் துருகம் என்று சொல்லுவதை சங்கீதங்களின் புத்தகத்திலே பார்க்க முடியும்.    இதை தான் யோதாம் மறந்து போனான். கட்டடங்களை கட்டுவது தவறல்ல. தன் நம்பிக்கையை தான் கட்டின கோட்டைகளின் மேல் வைத்தான். அது தான் தவறு. 

            நாமும் கூட நம் நம்பிக்கையை எங்கு , எதில் , யார் மேல் வைக்கிறோம் 
            சிலர் நம் நம்பிக்கையை நம்முடைய savings மேல் வைக்கிறோம்.
            எல்லா காலத்திலும், எல்லா சூழ்நிலையிலும் கர்த்தரே நமக்கு நம்பிக்கையாக இருக்க வேண்டும். 

            அடுத்ததாக 
            2 நாளாகமம் 27 :
                6. யோதாம் தன் வழிகளைத் தன் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக நேராக்கினதினால் பலப்பட்டான்.

            தன் வழிகளை கர்த்தருக்கு முன்பாக நேராகினான். 
            நேராகினான் என்றால் அதற்கு முன் அவனுடைய வழி நேராக இல்லை.
            அவன் தன் வழியை நேராக்க தீர்மானம் பண்ணினான். 
            நான் தான் இதை செய்ய வேண்டும். ஏதும் தானாக நடக்காது. நான் தான் கர்த்தரை தேட வேண்டும் , நான் தான் என் வழியை சரி செய்ய வேண்டும் . 
            சங்கீதம் 16:8 கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்; அவர் என் வலதுபாரிசத்தில் இருக்கிறபடியால் நான் அசைக்கப்படுவதில்லை

            இந்த வசனத்தை இன்னும் தெளிவாக சொன்னால் கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக நான் வைத்திருக்கிறேன்.

            சங்கீதம் 119 :
              57. கர்த்தாவே, நீரே என் பங்கு; நான் உமது வசனங்களைக் கைக்கொள்ளுவேன் என்றேன்.

              93. நான் ஒருபோதும் உம்முடைய கட்டளைகளை மறக்கமாட்டேன்; அவைகளால் நீர் என்னை உயிர்ப்பித்தீர்.

              105. உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது.
            இப்படி பல வசனங்களை நாம் வேதத்திலிருந்து பார்க்கலாம். 
            நான் என் வாய்க்கு காவல் வேண்டும் என்று சங்கீதகாரன் சொல்லுகிறான் . 
            சங்கீதம் 141:3 கர்த்தாவே, என் வாய்க்குக் காவல் வையும்; என் உதடுகளின் வாசலைக் காத்துக்கொள்ளும்.


            சங்கீதம் 5:6 பொய் பேசுகிறவர்களை அழிப்பீர்; இரத்தப்பிரியனையும் சூதுள்ள மனுஷனையும் கர்த்தர்அருவருக்கிறார்


            நீதிமொழிகள் 12:22 பொய் உதடுகள் கர்த்தருக்கு அருவருப்பானவைகள்; உண்மையாய் நடக்கிறவர்களோ அவருக்குப் பிரியம்.


            இருதயமே திருக்குள்ளது என்று வேதம் சொல்லுகிறது . நம் இருதயத்தை தேவனுக்கு முன்பாக சீரக்குவோம்.


            சங்கீதம் 27:8 என் முகத்தைத் தேடுங்கள் என்று சொன்னீரே, உம்முடைய முகத்தையே தேடுவேன் கர்த்தாவே, என்று என் இருதயம் உம்மிடத்தில் சொல்லிற்று

            மேலே சொல்லப்பட்ட வசனங்கள் அனைத்தும் தேவனுக்கு முன்பாக அவர்களுடைய தாங்களாகவே எடுத்த தீர்மானத்தை காட்டுகிறது. எனவே 
            இதற்கு முன் நாம் எப்படி இருந்தாலும் பரவாயில்லை ஆனால் இனி நாம் நம் வழியை கர்த்தருக்கு முன்பாக நேராக்குவோம். ஆமென்.


            குறிப்பு:
            2 நாளாகமம் 27
             8. அவன் ராஜாவாகிறபோது இருபத்தைந்து வயதாயிருந்து, பதினாறு வருஷம் எருசலேமில் அரசாண்டான். 
            ராஜாவாகிய யோதாம் 41 வயதிலே மரித்துப்போகிறான். அவன் வியாதிப்பட்டோ அல்லது யுத்தத்திலோ மரித்தான் என குறிப்பிட படவில்லை. ஆனால் அவன் ஜனங்களை கர்த்தரிடம் திருப்பாமல் போனது அவன் செய்த மிக பெரிய தவறு ஆகும். 2 ஆம் வசனத்தின் கடைசி பகுதி 
               ஜனங்கள் இன்னும் தங்களைக் கெடுத்துக்கொண்டிருந்தார்கள்.
              அவன் ஜனகளை பற்றி கவலைப்பட்டதாக தெரியவில்லை. ராஜாவாக இருந்தும் பிரோஜனமற்ற வாழ்க்கை வாழ்ந்ததால், அவனுடைய வாழ்க்கை மிக குறுகிய காலத்திலே முற்றுப்பெற்றது. 


              உங்கள் கருத்துக்களை prithiviraj23@gmail.com க்கு தெரியப்படுத்துங்கள் 

              Thursday, July 28, 2011

              மிக எளிய வழியில் விசுவாசத்தை வளர்க்க -

              மிக எளிய வழியில் விசுவாசத்தை வளர்க்க  -

              செய்தி : போதகர். சார்லஸ் தாசன் .
              இது நாம் ஒவொருவரும் பயிற்சி செய்யவேண்டிய ஒன்று , 
              இது நமக்கு ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சொல்லிக்கொடுத்த மிக எளிய வழி
              லுக்கா 17 :1.  
                    பின்பு அவர் தம்முடைய சீஷர்களை நோக்கி: இடறல்கள் வராமல்போவது கூடாதகாரியம், ஆகிலும் அவைகள் எவனால் வருகிறதோ, அவனுக்கு ஐயோ!
              இங்கு, ஒருவனுக்கு இடறல்கள் வராமல் போகாது. இடறல்கள் வராமல் இருப்பது தான் கூடாத காரியம். எனவே இடறல்கள் என்பது ஒருவனுடைய வாழ்வில் இன்றியமையாததாகவே உள்ளது என்று சொல்லுவது வேறு யாருமில்லை, நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து. 
              பொதுவாக நாம் லுக்கா 17 : 2  ஆம் வசனத்தை மட்டுமே பார்போம் 
                (அவன் இந்தச் சிறுவரில் ஒருவனுக்கு இடறலுண்டாக்குகிறதைப் பார்க்கிலும், அவனுடைய கழுத்தில் ஏந்திரக்கல் கட்டப்பட்டு, அவன் சமுத்திரத்தில் தள்ளுண்டுபோவது அவனுக்கு நலமாயிருக்கும்.)

              ஏனென்றால் அதுதான் மற்றவர்களை சுட்டிக்காட்டுகிறது.  
              ஆனால் மற்றவர்களை சுட்டிக் காட்டுவதினால் நமக்கு என்ன பயன் ?
              இப்படி செய்வதினால் நம் தேவனுக்கு பிரியமாய் நடக்க முடியுமா ?
              அல்லது நம்முடைய விசுவாசம்தான்  பெருகுமா?
              வாசிக்கலாம்
              மத்தேயு 5 :8.
                     இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்.
                 லுக்கா 17 : 1  வசனத்திற்கும் , மத்தேயு 5 : 8  என்ன சம்பந்தம். 
                 இடறல் அடையும் ஒருவன் எப்படி இருதயத்தில் சுத்தமாக இருக்க முடியும் என்றுத்தான் நாம் பொதுவாக யோசிப்போம் .
                ஒரு இடத்தை சுத்தம் செய்ய வேண்டும் என்றால் நாம் என்ன செய்வோம் . தேவையில்லாதவற்றை பெருக்கி வெளியே கொட்டிவிடுவோம். 
                இதை ஒருமுறை செய்தால் மட்டும் போதாது, இது ஒரு தினசரி வேலையாகவே இருக்கிறது . இப்படித்தான் நாம், நம் வீட்டையும் தினமும் சுத்தம் செய்கிறோம் .
                இதைப்போல மருத்துவமனைகளில்( hospitals ) மருத்துவர்கள்  செய்யும்  காரியத்தை கவனித்தோமானால் இன்னும் இதை புரிந்துக்கொள்ள உதவும். மனித உடலில் அடைப்பட்ட சிறுநீரை catheter என்ற சாதனத்தை பயன்படுத்தி வெளியேற்றுகின்றனர்.
                The word catheter was derived from the Greek word "katheter" which means                                          "let down". 
                இந்த catheter சாதனத்தை பயன்படுத்தினால் தானாகவே அந்த கழிவு வெளியேறிவிடும் .
                சரி , நாம் நல்ல உணவுகளைத் தான் சாப்பிடுகிறோம் , வீட்டில் செய்த உணவுகளையே சாப்பிடுகிறோம் , நமக்காக நாம் பார்த்து பார்த்து நல்லவற்றை வாங்கி நன்றாக சமைத்து சாப்பிடுகிறோம் .
                இப்பொது ஒரு கேள்வி ..... பிறகு எப்படி நல்ல உணவுகளில் தேவை இல்லாத கழிவு வருகிறது . நாம் எதையும் தேவை இல்லாமல் உணவுகளில் சேர்த்து சமைப்பதில்லை. 
                சரி, தேவையான உணவில் உடலுக்கு தேவையில்லாத கழிவு வரத்தான் செய்கிறது என்பது நிதர்சனமான உண்மை  , அதுப்போல என்னத்தான் நாம் மிகச்சரியாக வாழ்ந்தாலும் கண்டிப்பாக நம் வாழ்வில் இடறல்கள் வரும் . அதை யாரும் தடுக்கவே முடியாது. இடறல்கள் நம் வாழ்வில் இன்றியமையாதது.
                உடலில் கழிவுகள்  வெளியேற்றப்பட வேண்டும். இல்லையெனில் நிச்சயமாக நமக்கு பல உடல் உபாதைகள் கண்டிப்பாக ஏற்படும் .
                இதைப்போல நம் இருதயத்தை நாம் சுத்தம் செய்ய வேண்டும் . இல்லையெனில் நாம் தேவனை தரிசிக்க முடியாது . நிச்சயமாக பரலோகமும் செல்ல முடியாது .  
                எப்படி நம் உடலில் உள்ள கழிவுகளை  நம் உணர்வுகள் மூலம் கண்டறிந்து வெளியேற்றுகிறோமோ அதைப்போல நம் இருதயத்திலுள்ள கசப்புகளை, கோபங்களை , எரிச்சல்களை வெளியேற்றுவோம் . அப்போது நம் இருதயம் சுத்தமாகும் .
                வாசிக்கலாம் 
                லுக்கா 17 :3. 
                உங்களைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள். உன் சகோதரன் உனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்தால், அவனைக் கடிந்துகொள்; அவன் மனஸ்தாப்பட்டால், அவனுக்கு மன்னிப்பாயாக.
                யாரை மன்னிக்க வேண்டுமாம். . .  யார் நமக்கு இடறல் உண்டாக்கினார்களோ அவர்களை மன்னிக்க வேண்டுமாம் .  
                சரி திரும்ப அவர்கள் அதே இடறலை உண்டாக்கினால் ?
                லுக்கா 17 :4. 
                அவன் ஒருநாளில் ஏழுதரம் உனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்து, ஏழுதரமும் உன்னிடத்தில் வந்து: நான் மனஸ்தாபப்படுகிறேன் என்று சொன்னால், அவனுக்கு மன்னிப்பாயாக என்றார்.
              இப்படி நாம் மன்னிப்பதின் மூலம் இருதயத்தை சுத்தம் செய்ய வேண்டும்.
              இங்கு நாம் உபயோகப்படுத்த வேண்டிய catheter - மன்னிப்பு .

              ஏன் மன்னிக்க வேண்டும் . தேவனை தரிசிக்க ...
              ஏன் மன்னிக்க வேண்டும் . மன்னிப்பை பெற்றுக்கொள்ள ...
              நாம் பாவிகளாய் இருக்கையில் நம்மை தேவன் மன்னிக்கவில்லையா ?
              என் கடனாளிக்கு நான் மன்னிகிறது போல எங்களை எங்கள் பாவங்களிலிருந்து மன்னியும் என நாம் ஜெபிப்பதில்லையா ? ( பரமண்டல ஜெபம் )

              இப்படி செய்வது சற்று கடினமே .. எனவேத்தான் சீஷர்கள் தங்கள் விசுவாசத்தை வர்த்திக்க செய்ய வேண்டும் என்று கேட்டனர் ... என அடுத்த வசனத்தை வாசித்தால் தெரியும் .

                5. அப்பொழுது அப்போஸ்தலர் கர்த்தரை நோக்கி: எங்கள் விசுவாசத்தை வர்த்திக்கப்பண்ணவேண்டும் என்றார்கள்.
                  தேவன் நம்மை மன்னித்தார் என நம்பும் நாம், இப்படி மனிப்பத்தின் மூலம் தேவன் நம்மை மன்னிப்பார் என நம்ப வேண்டும் 

                இப்படியே நம் விசுவாசம் மேலும் மேலும் வளரும் . 
                உங்கள் வாழ்க்கையில் இருதயத்திற்க்கான catheter'ஐ (மன்னிப்பை)  பயன்படுத்துங்கள். உங்கள் விசுவாசத்தை வளர்த்திடுங்கள் .
                உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன, கருத்துக்களை  prithiviraj23@gmail.com க்கு தெரியப்படுத்துங்கள் .

              ஊற்று கேட்கும் தேவன் உடனடி பதில் - 2 : மேவிபோசேத் - கண்ணீரை துடைக்க கர்த்தர் உண்டு கலங்காதே

                     அப்பொழுது நானும் ஏன் குடுபத்தினரும் சபைக்கு சென்றுக்கொண்டிருந்தோம் . சில நாட்களாக பிரச்னைககளால் மனம் நொந்து என் குடுபத்திரிடம் நான...