Sunday, December 19, 2010

சாட்சி ஆராதனை ...

இன்று எங்கள் சபையில் சாட்சி ஆராதனை ...
              குடும்பம் குடும்பமாக தங்கள் குடும்பத்திலுள்ள ஒவ்வோருவரையும் அறிமுகம் செய்துக்கொண்டு,  கர்த்தர் கடந்த ஆறு மாதத்தில்  செய்த நன்மைகள் மற்றும் ஜெபக்குறிப்புகளை பகிர்ந்துக்கொள்ள வேண்டும் ...இப்படி வருடத்திற்கு 2 சாட்சி ஆராதனை உண்டு ...
இந்த சாட்சி ஆரதானை மிக முக்கியமான ஒன்றாக நான் கருதுவதுண்டு, காரணம்  நான் என் அலுவலக பணியினிமித்தம் 2 ஆண்டுகளாக சபைக்கு செல்ல இயலாத நிலை ஏற்ப்பட்டது. அந்த நேரத்தில் ஏற்கனவே தேவனைப்பற்றியும், சபையைப்பற்றியும் என் உள்ளத்தில் உள்ள பல கேள்விகள் என் உள்ளத்தில் வேர்விட்டு ஆலமரம்போல வளர்ந்துவிட்டிருந்தது. மீண்டும் எனக்கு ஞாயிறு அன்று ஒய்வு கிடைத்தும்  சபைக்கு செல்ல முடியவில்லை. என் கேள்விகள் என்னை தடுத்து நிறுத்தியது. மீண்டும் சபைக்கு வரவேண்டும் என்று நிர்பந்திக்கப்பட்டேன். நான் சபைக்கு சென்றேன்,  அந்த வாரம் சாட்சி ஆராதனை. என் குடும்பத்தின் பெயர் அழைக்கப்பட்டது. நான் என்ன சொல்லுவேன். ஏற்கனவே என் மனதிலே கேள்விகள், தேவன் எனக்கு நன்மைகள் செய்யவேயில்லை என்ற நினைப்பு வேறு, பொய் சொல்லக்கூடாது, பொய் சொல்லுவது எனக்கு பிடிக்காது, நான் தவறாக ஏதாவது சொல்லிவிட்டால் அது மற்றவர் மனதிலே கேள்விகளை ஏற்ப்படுத்திவிடக்கூடும், எனவே என்ன நான் சொல்ல முடியும் ?  எப்படி  நான் சொல்லுவது ?    இப்படி என் மனதிலே குழப்பம் அடைந்த நிமிடங்களை என்னால் மறக்கவே முடியாது.
                என்னுடைய முறை வந்தபோது  என் மனதில் தோன்றிய அந்த வசனத்தை நான் சொல்லி விட்டு  போய் அமர்ந்து கொண்டேன் . ஆனால் தேவன் என்னை ஒரு நோக்கத்தோடுத்தான் அழைத்திருந்தார் என்று எனக்கு அன்று தெரியவில்லை. நான் சபை நடுவே, கர்த்தருடைய சந்நிதியிலே, பரிசுத்தவான்கள் முன்னிலையிலே சொன்ன அந்த வார்த்தையை, அந்த வசனத்தை தேவன் கனப்படுதினார்.  அந்த வார்த்தை தான்  இந்த வசனம்     " நான் நிற்பதும் நிர்மூலம் ஆகாதிருப்பதும் தேவனுடைய சுத்த  கிருபை " .
அதன் பிறகு தேவன் என்னோடு இடைபட ஆரம்பித்தார். இந்த வார்த்தையை சொல்ல எவ்வளவு நேரம் எடுத்திருக்கும் என்று நீங்களே இந்த வார்த்தையை சொல்லிப்பர்த்தால் தெரியும். ஆனால் தேவன் என் உள்ளத்தை மட்டுமே பார்த்தார். பதில் கொடுத்தார். பதில் கொடுக்கும் என் தேவனுக்கு நன்றி.  எனவே தான்  இந்த சாட்சி ஆராதனையை  மகிமை பொருந்திய ஒன்றாக நான் கருதுகிறேன்.


           உங்கள் கருத்துக்களை  prithiviraj23@gmail.com க்கு தெரியப்படுத்துங்கள் ...

ஊற்று கேட்கும் தேவன் உடனடி பதில் - 2 : மேவிபோசேத் - கண்ணீரை துடைக்க கர்த்தர் உண்டு கலங்காதே

       அப்பொழுது நானும் ஏன் குடுபத்தினரும் சபைக்கு சென்றுக்கொண்டிருந்தோம் . சில நாட்களாக பிரச்னைககளால் மனம் நொந்து என் குடுபத்திரிடம் நான...