எசேக்கியா ராஜா - அறிமுகம்.
கடந்த வாரங்களில் நடந்த வேதப்பாடங்களில் நான் கேட்டது.
செய்தி : சார்லஸ் தாசன்.
II இராஜாக்கள்
18 அதிகாரம்- 1. இஸ்ரவேலின் ராஜாவாகிய ஏலாவின் குமாரன் ஓசெயாவின் மூன்றாம் வருஷத்திலே ஆகாஸ் என்னும் யூதாவுடைய ராஜாவின் குமாரனாகிய எசேக்கியா ராஜாவானான்.
- 2. அவன் ராஜாவாகிறபோது, இருபத்தைந்து வயதாயிருந்து, எருசலேமிலே இருபத்தொன்பது வருஷம் அரசாண்டான்; சகரியாவின் குமாரத்தியாகிய அவன் தாயின் பேர் ஆபி.
- 3. அவன் தன் தகப்பனாகிய தாவீது செய்தபடியெல்லாம் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்.
- 2 நாளாகமம் 29
- 1. எசேக்கியா இருபத்தைந்தாம் வயதில் ராஜாவாகி, இருபத்தொன்பது வருஷம் எருசலேமில் அரசாண்டான்; சகரியாவின் குமாரத்தியாகிய அவனுடைய தாயின்பேர் அபியாள்.
- 2. அவன் தன் தகப்பனாகிய தாவீது செய்தபடியெல்லாம் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்.
- எசேக்கியா ஆகாஸ் ராஜாவினுடைய குமாரன். இவன் தன் தகப்பன் மரித்தபின்பு தன்னுடைய 25 வயதிலே ராஜாவாகிறான்.
- எசேக்கியா என்றால் யேகோவா என் பெலன் (Jehovah is my strength) என பொருள்.
- II இராஜாக்கள்
- 18 அதிகாரம்
- 3. அவன் தன் தகப்பனாகிய தாவீது செய்தபடியெல்லாம் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்.
- மற்ற எல்லா ராஜாக்களை பார்த்ததால் தன் தகப்பனாகிய தவிதைப்போல கர்த்தரின் பார்வைக்கு செமையானத்தை செய்தார்கள் என்று குறிப்பிட்டு இருக்கும் ,
- யோசபாத் ராஜாவுக்கு தன் தகப்பனாகிய தாவிதின் முன் நாட்களில் நடந்தது போல என குறிப்பிட்டு இருக்கிறது .(2 நாளாகமம் 17- 3)
- ஆனால் எசேக்கியாவோ தன் தகப்பனாகிய தாவீது செய்தபடியெல்லாம் கர்த்தரின் பார்வைக்கு செமையானத்தை செய்தான்.
- சரி இவன் இப்படி செய்ய காரணம் என்ன ? இவன் வளர்ந்த சூழ்நிலைதான் என்ன ? என்று பார்த்தால் நாம் அவனுடைய தகப்பனாகிய ஆகாஸ் ராஜாவினுடைய வாழ்க்கையை ( http://prithiviraj23.blogspot.com/2011/09/blog-post_29.html ) சற்று பார்க்க வேண்டும். ஆகாஸ் ராஜா தன் தேவனாகிய கர்த்தரை விட்டு அந்நிய தெய்வங்களின் உதவியை நாடினான் . அவைகளுக்கு பலிபிடங்களையும் கட்டினான் , அவனால் யூதா நாடு முழுவதும் சிறுமைப்பட்டு போவதாக வேதம் கூறுகிறது.
- இந்த பாதகமான சூழ்நிலையில் எசேக்கியாவை கர்த்தரின் மேல் பற்றுதலாய் அவன் தாய் வளர்த்தாள். அவன் தாயின் பெயர் ஆபி (அபியாள்)
- யார் இந்த அபியாள் ?
- II இராஜாக்கள் 18 அதிகாரம் 2 வசனம்
- சகரியாவின் குமாரத்தியாகிய அவன் தாயின் பேர் ஆபி ( அபியாள் ).
- அபியாள் என்றால் யேகோவா என் தகப்பன் ( Jehovah is my father ) என பொருள்.
- சகரியா தன் மகளை கர்த்தருக்குள் வளர்த்தான். அப்படியானால் யார் இந்த சகரியா என்று நாம் பார்க்கத்தானே வேண்டும்.
- II நாளாகமம் 26 அதிகாரம் 5 ஆம் வசனம்
- தேவனுடைய தரிசனங்களில் புத்திமானாயிருந்த சகரியாவின் நாட்களிலே தேவனைத் தேட மனதிணங்கியிருந்தான்;
- சகரியா என்பவன் தேவனுடைய தரிசனங்களில் புத்திமானாய் இருந்தான் என வேதம் சொல்லுகிறது. இவன் ராஜாவாகிய உசியாவை கர்த்தர் பக்கமாக திருப்பினான்.
- நம்முடைய நண்பர்கள், நமக்கு ஆலோசனை சொல்பவர்கள் யார் என நாம் சற்று சிந்தித்து பார்க்கவேண்டும். அவர்கள் தேவனிடமாக நம்மை வழி நடத்துகிறார்களா ? அவர்களுடைய ஆலோசனைகள் வசனத்திற்கு ஒத்து இருக்கிறதா? என்று நாம் பார்க்க வேண்டும் .
- உசியாவிற்கு சகரியா ...
- எசேக்கியவிற்கு அபியாள் ... நமக்கு ...?
- அபியாள் தன் மகனை கர்த்தரிடம் பற்றுதலாய் வளர்த்தாள். அவனும் எல்லாவற்றிலும் கர்த்தரை தேடினான். கர்த்தர் அவனை கட்டினார்.
- சூழ்நிலைகள் பாதகமாக இருந்தாலும் கர்த்தரிடம் பற்றுதலாய் இருப்போம். இதற்கு நம்முடைய ஐக்கியம் மிகமிக முக்கியம். இதனால் தான் சபை கூடிவருதலை அசட்டை செய்யாதீர்கள் என்று வேதம் தெளிவாய் சொல்லுகிறது.
- அபியாள் தன் மகனை சரியாய் வளர்த்தாள். அவன் தன் நாட்டு மக்களை கர்த்தரிடமாய் திருப்பினான்.
உங்கள் கருத்துக்களை prithiviraj23@gmail.com க்கு தெரியப்படுத்துங்கள்.