இன்று ஞாயிறு , ஆம் வழக்கம் போல சபைக்கு, ஏற்கனவே நேற்று இரவு தேவனுடைய இடைப்படுதல் என்னை உடைத்துவிட்ட நிலையில் தேவன் என்னிடத்தில் கிரியை செய்ய என்னை நான் விட்டுக்கொடுக்க வேண்டும் என்று நினைத்துகொண்டேன்.
ஆராதனை வேளையில் ஒரு பாடல்
நீர் மாத்திரம் போதும் எனக்கு-
போதகர் சொன்னார் -இந்த வார்த்தை உள்ளத்திலிருந்து வந்தால் அதுத்தான் நாம் செய்யும் புத்தியுள்ள ஆராதனை - ஆம் எத்தனை அர்த்தமுள்ள வார்த்தை.
இன்று செய்தி கொடுக்க சபை போதகர், pastor NEWTON.அவர்களை கேட்டுக்கொண்டார்.
இதோ செய்தி : ஏசாயா (ISAIAH) 58 :12
உன்னிடத்திலிருந்து தோன்றினவர்கள் பூர்வமுதல் பாழாய்க் கிடந்த ஸ்தலங்களைக் கட்டுவார்கள்; தலைமுறை தலைமுறையாக இருக்கும் அஸ்திபாரங்கள்மேல் நீ கட்டுவாய்; திறப்பானதை அடைக்கிறவன் என்றும், குடியிருக்கும்படி பாதைகளைத் திருத்துகிறவன் என்றும் நீ பெயர் பெறுவாய்.
நீ கட்டுவாய் - தேவன் உலகத்தை படைக்கும்முன் உலகத்தை அவர் மனதிலே பார்த்தார், வெளிச்சத்தை அவர் மனதிலே பார்த்தார், மனிதனை அவர் மனதிலே பார்த்தார் , இல்லாதவற்றை மனதிலே பார்த்து அதை படைத்தார், அதே போலத்தான் நான் கட்டவேண்டும் என்று தேவன் பார்கிறார் .
நீ கட்டுவாய் - இங்கு கட்டுவது என்பது ஒரு கட்டிடத்தை கட்டுவது அல்ல .ஆனால் உருவாக்குவது என்பதை குறிக்கிறது.
நீ கட்டுவாய் ... கட்டுவாய் அல்லது கட்டப்படுதல் என்ற வார்த்தை OKIDOME - என்ற கிரேக்க வார்த்தையிலிருந்து வந்தது.
OKIDOME என்றால் BUILDING UP பொருள் , ஆங்கிலத்திலே EDIFICATION - EDIFICE என்று சொல்லுகிறார்கள்.
சரி முதலாவதாக - 1 கொரிந்தியர்(CORINTHIANS ) 14 :4
அந்நியபாஷையில் பேசுகிறவன் தனக்கே பக்திவிருத்தி உண்டாகப் பேசுகிறான்; தீர்க்கதரிசனஞ்சொல்லுகிறவனோ சபைக்கு பக்திவிருத்தி உண்டாகப் பேசுகிறான்.
அந்நியபாஷையில் பேசுகிறவன் தனக்கே பக்திவிருத்தி உண்டாகப் பேசுகிறான். மேல் வீட்டில், கொர்நேலியு வீட்டில் , எபேசு பட்டணத்தில் காத்திருந்தவர்களை தேவன் நிரப்பினார், அவர்கள் அந்நிய பாஷை பேசினார்கள் என்று பார்க்கிறோம், அவர்கள் கட்டப்பட்டார்கள். நம்மை கட்டுவதற்கு தேவன் வைத்திருக்கிற SKETCH - PLAN தான் அந்நிய பாஷை.
ஒரு ARCHITECT எப்படி ஒரு கட்டடம் கட்டுவதற்கு PLAN செய்கிறார், அந்த கட்டிடம் வெளியே , உள்ளே , படிக்கட்டுகள் , அறைகள், வெளித்தோற்றம் என்று எப்படி PALN தருகிறாரோ அப்படித்தான் .அதேபோல்தான். நமக்குள்ளே நாம் கட்டப்பட தேவன் தரும் PLAN தான் அந்நிய பாஷை.
அந்நிய பாஷை பேசுகிறதை தடை செய்யக்கூடாது .
நான் கட்டபடுகிறேனா ? நான் தனியே எனக்குள்ளே கட்டப்பட்டால் ,நான் மற்றவர்களை கட்டி எழுப்ப முடியும் .
நான் மட்டும் கட்டப்பட்டு மற்றவர்கள் கட்டபடாமல் இருந்தால் அதற்கு பெயர் குட்டிச்சுவர் - நாம் மற்றவர்களோடு இசைவாய் கட்டப்பட வேண்டும்
அந்நிய பாஷை பேசினால் - பக்திவிருத்தி உண்டாகும்
அந்நிய பாஷை பேசினால் - தன்னையே கட்டமுடியும்
அந்நிய பாஷை பேசினால்- தேவனோடு ரகசியங்களை பேசமுடியும்
இரண்டாவதாக 1 கொரிந்தியர் (CORINTHIANS ) 14:3
தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறவனோ மனுஷருக்கு பக்திவிருத்தியும், புத்தியும், ஆறுதலும் உண்டாகத்தக்கதாகப் பேசுகிறான்.
எபேசியர் (EPHESIANS ) 4:12-13
12. பரிசுத்தவான்கள் சீர்பொருந்தும்பொருட்டு, சுவிசேஷ ஊழியத்தின் வேலைக்காகவும், கிறிஸ்துவின் சரீரமாகிய சபையானது பக்திவிருத்தி அடைவதற்காகவும்,
13. அவர், சிலரை அப்போஸ்தலராகவும், சிலரைத் தீர்க்கதரிசிகளாகவும், சிலரைச் சுவிசேஷகராகவும், சிலரை மேய்ப்பராகவும், போதகராகவும் ஏற்படுத்தினார்.
இங்கே குறிபிடுகிற 5 வித ஊழியங்களும் சபை பக்திவிருத்தி உண்டாகவே இருக்கிறது .இது தேவனுடைய ஈவு .
அதில் ஒன்று தீர்க்கதரிசனம் .
தீர்க்கதரிசனம் என்ன செய்கிறது ?
மனுஷரை கட்டி எழுப்புகிறது , தீர்க்கதர்சனம் ஒரு ஈவு .
எதற்கு நாமில் பலர் தீர்க்கதரிசனத்தை நாடி ஓடுகிறார்கள் ?
1 . ஆதாயத்திற்காக
2 . ஏதாவது ஒன்றை தெரிந்துகொள்ள .
தீர்க்கதரிசனம் பக்தி விருத்தியை உண்டாக்க வேண்டும் .
நம்மில் 2 வகை மக்கள் உண்டு
1 . எல்லாவற்றிக்கும் தீர்க்கதரிசனத்தை நாடுவது
2 . தீர்க்கதரிசனமே வேண்டாம் .
நாம் BALANCED ஆக இருக்கவேண்டும் .
1 கொரிந்தியர் (CORINTHIANS) 14:1
அன்பை நாடுங்கள்; ஞானவரங்களையும் விரும்புங்கள்; விசேஷமாய்த் தீர்க்கதரிசன வரத்தை விரும்புங்கள்.
தீர்க்கதரிசன வரத்தை விரும்புங்கள்- தீர்க்கதரிசனம் சொல்லுவது கத்தி மேல் நடப்பது போல - தேவனுடைய வார்த்தையை சரியாக சொல்லவேண்டும் .
எபேசியர் (EPHESIANS ) 4:29
கெட்ட வார்த்தை ஒன்றும் உங்கள் வாயிலிருந்து புறப்படவேண்டாம்; பக்திவிருத்திக்கு ஏதுவான நல்ல வார்த்தை உண்டானால் அதையே கேட்கிறவனுக்குப் பிரயோஜனமுண்டாகும்படி பேசுங்கள்.
இந்த வசனம் எபேசு சபைக்கு எழுத்தப்பட்டது.
வெளிபடுத்தின விசேஷம் (REVALATION ) 2:2
உன் கிரியைகளையும், உன் பிரயாசத்தையும், உன் பொறுமையையும், நீ பொல்லாதவர்களைச் சகிக்கக்கூடாமலிருக்கிறதையும், அப்போஸ்தலரல்லாதவர்கள் தங்களை அப்போஸ்தலரென்று சொல்லுகிறதை நீ சோதித்து அவர்களைப் பொய்யரென்று கண்டறிந்ததையும்;
இவ்வளவு நல்ல காரியங்களை உடைய எபேசு சபை - அதின் வாயிலே கெட்ட வார்த்தை
கெட்ட வார்த்தை பக்திவிருத்தி உண்டாக்காது . நல்ல வார்த்தை உண்டானால் அதையே பேசுவோம்.
பிலிப்பியர் (PHILIPPIANS ) 4:8
கடைசியாக, சகோதரரே, உண்மையுள்ளவைகளெவைகளோ, ஒழுக்கமுள்ளவைகளெவைகளோ, நீதியுள்ளவைகளெவைகளோ, கற்புள்ளவைகளெவைகளோ, அன்புள்ளவைகளெவைகளோ, நற்கீர்த்தியுள்ளவைகளெவைகளோ, புண்ணியம் எதுவோ, புகழ் எதுவோ அவைகளையே சிந்தித்துக்கொண்டிருங்கள்.
வேதம் சொல்லுகிறது இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும் .
அவைகளையே சிந்தித்துக்கொண்டிருங்கள்- நல்லவைகளை சிந்திப்போம் . நல்ல
நினைவுகள் நல்ல வார்த்தைகளை பேசும் .
இயேசுவின் பாடுகளின் பொது பேதுருவை மற்றவர்கள் பார்த்து இவனும் அவர் சிஷர்களில் ஒருவன் என்றார்கள் . ஏன் அப்படி சொன்னார்கள், அவன் இயேசுவோடு இருந்து அவன் பேசுகிற பேச்சு இயேசுவை போல மாறியிருந்தது .
இத்தனை வருடம் தேவனோடு இடைபடும் நம் வார்த்தையும் கூட தேவனுடைய வார்த்தையை போலத் தான் இருக்கவேண்டும் .
எபேசியர் EPHESIANS 5 :4
அப்படியே வம்பும், புத்தியீனமான பேச்சும், பரியாசமும் தகாதவைகள்; ஸ்தோத்திரஞ்செய்தலே தகும்.
சில நேரங்களில் நாம் கவனித்திருக்ககூடும் காகங்கள் நம் வீட்டின் மேல் எச்சம் செய்து விடும் , அதில் சில விதைகள் இருக்கும் . கொஞ்சம் காலம் கழித்து அது ஒரு செடியாய் வளரும், அது வளர்ந்து வீட்டின் சுவரை உடைக்கும் .
நம் கட்டடத்தை உடைக்கும் எந்த காரியத்தையும் நாம் அனுமதிக்க வேண்டாம் .
ஸ்தோத்திரஞ்செய்தலே தகும்.
இதை தான் சங்கீதக்காரன் சொல்லுகிறான்
துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடவாமலும், பாவிகளுடைய வழியில் நில்லாமலும், பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காராமலும்,.....
ஸ்தோத்திரஞ்செய்தலே தகும். பக்திவிருத்தி உண்டாக பேசுவோம் .
மூன்றாவதாக ரோமர் (ROMANS )14 : 19
ஆனபடியால் சமாதானத்துக்கடுத்தவைகளையும், அந்நியோந்நிய பக்திவிருத்தி உண்டாக்கத்தக்கவைகளையும் நாடக்கடவோம்.
சமாதானத்தை நாடக்கடவோம் .
1கொரிந்தியர் (CORINTHIANS) 8:1
விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டவைகளைக்குறித்த விஷயத்தில், நம்மெல்லாருக்கும் அறிவு உண்டென்று நமக்குத் தெரியுமே. அறிவு இறுமாப்பை உண்டாக்கும், அன்போ பக்திவிருத்தியை உண்டாக்கும்.
நம்முடைய அறிவு நமக்கு இறுமாப்பை உண்டாக்கும் - அன்போ பக்திவிருத்தியை உண்டாக்கும்
சங்கீதம் (PSALM ) 34:14
தீமையை விட்டு விலகி, நன்மை செய்; சமாதானத்தைத் தேடி, அதைத் தொடர்ந்துகொள்.
சமாதானத்தை தேடு ...
ரோமர் (ROMANS ) 12: 18
கூடுமானால் உங்களாலானமட்டும் எல்லா மனுஷரோடும் சமாதானமாயிருங்கள்.
எபிரெயர் (HEBREWS)12 :14
யாவரோடும் சமாதானமாயிருக்கவும், பரிசுத்தமுள்ளவர்களாயிருக்கவும் நாடுங்கள்; பரிசுத்தமில்லாமல் ஒருவனும் கர்த்தரைத் தரிசிப்பதில்லையே.
யாவரோடும் சமாதானத்தையே நாடுங்கள்
நாம் கட்டப்பட - பக்திவிருத்தி உண்டாக அந்நிய பாஷையை பேசுவோம்.
நாம் கட்டப்பட - பக்திவிருத்தி உண்டாக தீர்க்கதரிசன வரத்தை நாடுவோம்
நாம் கட்டப்பட - பக்திவிருத்தி உண்டாக சமாதானத்தை நாடுவோம் ....
தேவன் நம்மை கட்டி எழுப்புவாராக - ஆமென் .
உங்கள் கருத்துக்களை prithiviraj23@gmail.com க்கு தெரியப்படுத்துங்கள்
ஊற்று கேட்கும் தேவன் உடனடி பதில் - 2 : மேவிபோசேத் - கண்ணீரை துடைக்க கர்த்தர் உண்டு கலங்காதே
அப்பொழுது நானும் ஏன் குடுபத்தினரும் சபைக்கு சென்றுக்கொண்டிருந்தோம் . சில நாட்களாக பிரச்னைககளால் மனம் நொந்து என் குடுபத்திரிடம் நான...
-
எசேக்கியா ராஜா - அறிமுகம். ( http://en.wikipedia.org/wiki/Hezekiah ) கடந்த வாரங்களில் நடந்த வேதப்பாடங்களில் நான் கேட்டது. செய்தி : சார்லஸ்...
-
அப்பொழுது நானும் ஏன் குடுபத்தினரும் சபைக்கு சென்றுக்கொண்டிருந்தோம் . சில நாட்களாக பிரச்னைககளால் மனம் நொந்து என் குடுபத்திரிடம் நான...
-
எசேக்கியா ராஜா -2 (வைராக்கியம்) எசேக்கியாவின் அறிமுகத்தை ( http://prithiviraj23.blogspot.com/2011/10/blog-post.html ) பார்த்தோம். தன்னு...