Friday, January 10, 2020

ஊற்று கேட்கும் தேவன் உடனடி பதில் - 2 : மேவிபோசேத் - கண்ணீரை துடைக்க கர்த்தர் உண்டு கலங்காதே



       அப்பொழுது நானும் ஏன் குடுபத்தினரும் சபைக்கு சென்றுக்கொண்டிருந்தோம் . சில நாட்களாக பிரச்னைககளால் மனம் நொந்து என் குடுபத்திரிடம் நான் நடந்தவற்றால் எனது மனம் முடமாகிவிட்டது போல உணருகிறேன் இன்று தேவன் செய்தி மூலமாக என்னுடன் பேசுவார்  என்று சொன்னேன். அப்பொழுது ஆலயத்திலிருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் தான் இருந்தேன் , அப்படியே தேவன் செய்தி மூலமாக என்னோடு பேசினார் .                               இது தான் நான் கேட்ட தேவ செய்தி :

2 சாமுவேல்  9 அதிகாரம் . முதல் வசனத்தில் இருந்து :
     யோனத்தான் நிமித்தம் நன்மை செய்ய யாரவது இருக்கிறார்களா என தாவீது தன வேலைக்காரரை கேட்க  ஒருவன் இருக்கிறான்  என்று சொல்லப்பட்டது . மேவிபோசேத் எனற யோனத்தானின் குமரன் தான் அவன்.       யார் இந்த மேவிபோசேத்  ?

      இவன் சவுலின் பேரன் பிறந்ததிலிருந்து ராஜாவின் அரண்மனையில் இருந்த, வளர்ந்த செல்லப்பிள்ளை, யோனத்தானின் மகன் , இவனை வளர்க்க தாதிகள் இருந்தார்கள், கால்கள்  கூடத்தரையில் பட்டதில்லை என நம்ம ஊர்களில் சொல்வார்கள்  அப்படி செல்வாக்காக வளர்ந்தவன் தான் இவன்,  இஸ்ரவேலின் முதல் ராஜாவின் பேரன். அரண்மனையில் இருப்பதால் வெளி உலகம் தெரியாது . மற்ற பிள்ளைகளுடன் பழகும் வாய்பும் இல்லை.

     இஸ்ரவேலுக்கும்  பெலிஸ்தியருக்கும் யுத்தம்.  இந்த முறை சற்று உக்கிரமான யுத்தம். இஸ்ரவேலின் ராஜாவாகிய சவுல் யுத்தத்தை தலைமை தாங்கி நடத்துகிறார். ஒருபக்கம் தாவீது  அமெலேக்கியரை துரத்தி  சென்றுள்ளார் . மறுபக்கம் சவுலுக்கும் பெலிஸ்தியருக்கும் யுத்தம் நடந்து கொண்டிருந்தது  . பெலிஸ்தியர்  இஸ்ரவேலரை முறியடித்தனர் , யுத்தத்தில் சவுலையும் அவரது மகனாகிய யோனத்தானையும் கொன்றுவிட்டனர் .  இந்த செய்தியை கேள்விப்பட்ட தாதிமார் மேவிபோசேத்தை தூக்கிக்கொண்டு தப்பி ஓடும்போது  தடுக்கி விழுந்ததால் மேவிபோசேதின் கால்கள்  முடமாகி போனது என வேதம் கூறுகிறது                  (2 சாமுவேல்  4:4).
    கால்கள் முடமாகி போனதால் மற்றவர்களுடன் பழகும் வாய்ப்பும் குறைந்து போனது.
    இரண்டு குடும்பமோ அல்லது இரண்டு பேரோ  சண்டை போட்டுக்கொண்டால்  அதினால்  பாதிப்பு எனவோ அந்த இரண்டு நபர்களுக்கு இருக்கிறதோ இல்லையோ  மற்ற சிலரும் இதனால்  பாதிக்கபடுகிறார்கள். அப்படியே மேவிபோசேத்தும் பாதிக்கப்பட்டான் .

    அவர் (மேவிபோசேத்) லோதேபாரில் இருக்கிறார் என சொல்லப்படுகிறது.         ( LO DEBAR   MEANS  NO PASTURE  , NO COMMUNICATION , NO WORD )  லோதேபார்  என்றால்  மேய்ச்சல் அற்ற  நிலம் , தொடர்பற்ற நிலை. அல்லது வார்த்தை இல்லாத நிலை . அதாவது புல்  வளர்ந்து மேய்வதற்கு ஆடுகள் இல்லாததை நிலை , இன்னும் சொல்ல போனால் தனித்து விடப்பட்ட நிலைமை என பொருள் ... இவர் தனிமையாக இல்லை    ஆனால்      இவரை தனிமைப்படுத்திவிட்டார்கள் . பேசுவதற்கு கூட  ஆள் இல்லை என ஏங்கி தவிக்கும் நிலை .

    கொஞ்சம் இந்த நிலைமையை நினைத்து பாருங்கள் . இவர்  வாழ்க்கையில் நடந்த அனைத்திற்கும் இவர்  காரணமல்ல ஆனால் பாதிப்பு என்னவோ இவருக்கு தான்..இவரால் எதுவும் செய்யமுடியாத நிலை மற்றவர்களும் இவருக்கு எதுவும் செய்ய மாட்டார்கள், அன்பு காட்ட யாரும் இல்லை , பேச கூட ஆள் இல்லை  எனவே முடமாகி போனது கால்கள் மட்டும் அல்ல . அவரது மனதும் தான் . எதுபோனாலும் பரவாயில்லை . ஆனால் மனதை ஒருவன் விட்டுவிட்டால்  அவ்வளவுதான். (எனவே தான் மனச  விடாதிங்க  என சொல்ல கேட்டிருப்போம் ).   இதுதான் நம்மில் பலரின் நிலை  வாழ்க்கை ஓட்டத்தில் பல பிரச்சனையால் நம் மனது முடமாகி போய்  இருக்கலாம், தனித்து விடப்பட்டு இருக்கலாம்  . நமக்கு தான் இந்த செய்தி
மீண்டும் வசனத்திற்கு வரலாம் .  இப்பொழுது தாவீது ராஜாவாக ஆகிவிட்டார்.  இப்பொழுது தாவீதுக்கு யோனத்தானின் ஞாபகம்  வந்த்துவிட்டது. அப்பொழுது அவருக்கு மேவிபோசேத்த்தை பற்றி சொல்ல படுகிறது. தாவீது  மேவிபோசேத்தை வரவழைக்கிறார் ,  மேவிபோசத்தை பார்த்து   மேவிபோசேத்(தே)  என்கிறார் ..... (ஆங்கில வேதாகமத்தில்  ! பயன்படுத்தப்பட்டு இருப்பது )   இது மேவிபோசேத்தை  ஏற்கனவே  தாவீதுக்கு தெரிந்து இருக்கிறது என்பதை காட்டுகிறது .  பின்பு மேவிபோசேத்தை பார்த்து
      1.  நீ  பயப்படாதே .
      2. யோனத்தான் நிமித்தம் நான் உனக்கு தயை செய்து
      3. உன் தகப்பனாகிய சவுலின் நிலங்களை எல்லாம்  திரும்ப கொடுப்பேன்
      4. நீ என் பந்தியில் நித்தம்  அப்பம் புசிப்பாய்  என்றார் .


   அதற்கு மேவிபோசேத் வணங்கி செத்த நாயை போல இருக்கிற என்னை நீர் நோக்கி பார்கிறதிற்கு  உமது அடியான் எம்மாத்திரம் என்றான்.
  இந்த உரையாடலை கவனித்தால் மேவிபோசேத் எந்த அளவிற்கு  மனதளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறார் என தெரியும் . நாய்  ஒருவேளை தான் வளர்ப்பவர்கள் அன்பை பெறும் . ஆனால் செத்த நாயை ஒருவரும் சீண்டமாட்டர்கள்.  தூக்கி குப்பையில்போட்டுவிடுவார்கள்.  அதை எரிக்க கூட மாட்டார்கள் . அது நாறிக்கொண்டு மக்கி போகும்  இதை நம் ஊரில் அடிக்கடி பார்க்கலாம் . மிக சரியான அவரது நிலையை ஒரே  வரியில் அவர் சொல்வதை பார்க்கலாம் .

    ஆனால் தாவீதோ முதலாவது அவரது பயத்தை விலக்குகிறார்.
இரண்டாவதாக மேவிபோசேத்துக்கு தயை செய்கிறார் .எந்த உதவியானாலும் எப்பொழுது வேண்டுமானாலும் அவருக்கு அது கிடைக்கும் .
மூன்றாவதாக  அவருடைய சொத்துக்கள் திரும்ப கொடுக்கப்படுகிறது . நான்காவதாக  ராஜாவின் சாப்பாடை  ராஜாவோட  சமமாக சாப்பிடவேண்டும் என கட்டளை கொடுத்தார் .  மேஜையில் அமரும்பொது முடம் மறைக்கப்படும் ... என்ன ஒரு பாக்கியம் .
தாவீதோ சவுலின் வேலைகாரனான சீபாவை பார்த்து நிலத்தை பயிரிட்டு மேவிபோசேதிற்காக சேர்த்திடு  என கட்டளை கொடுப்பதை பார்க்கலாம் .

   நம் நிலைமை கூட நம் கை மீறி போன சூழ்நிலைகளில் சிக்கி தவிக்கலாம் , தனித்து விடப்பட்டு  இருக்கலாம்  மனம் முடமாகிப்போன நிலைமையில் இருக்கலாம். துன்பமா அல்லது துயரமா எந்த வித துக்கமாக இருந்தாலும் கண்ணீரை துடைக்க கர்த்தர் உண்டு கலங்காதே  .

   ஆனாலும் நம் பரம தாவீதாகிய கர்த்தரை நோக்கி பார்ப்போம் .
கர்த்தர் நம் நிலைமைகளை மாற்றி  நம்மை பயத்திலிருந்து விலக்கி ,
நம்மை ஆசீர்வதிப்பார். இழந்து போனதை திரும்ப தருவார்  அது அவரால் மட்டுமே முடியும் .
 இது போலவே கர்த்தர் உங்களுடன் செய்திகள் மூலமாக , குறிப்புக்கள் மூலமாக வார்த்தையாக பேச வேண்டும் , அதை அவர் உறுதிப்படுத்த வேண்டும் என விரும்புகிறேன் . ஆமென் .(அப்படியே ஆகட்டும் ).

 இந்த  செய்தி உங்களுக்கு பிரயோஜனமாக இருக்கும் என நம்புகிறேன் . கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. ஆமென் .















No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

ஊற்று கேட்கும் தேவன் உடனடி பதில் - 2 : மேவிபோசேத் - கண்ணீரை துடைக்க கர்த்தர் உண்டு கலங்காதே

       அப்பொழுது நானும் ஏன் குடுபத்தினரும் சபைக்கு சென்றுக்கொண்டிருந்தோம் . சில நாட்களாக பிரச்னைககளால் மனம் நொந்து என் குடுபத்திரிடம் நான...