Sunday, October 23, 2011

எசேக்கியா ராஜா -2 (வைராக்கியம்)

எசேக்கியா ராஜா -2 (வைராக்கியம்)

எசேக்கியாவின் அறிமுகத்தை ( http://prithiviraj23.blogspot.com/2011/10/blog-post.html ) பார்த்தோம். 

தன்னுடைய சூழ்நிலைகள் தனக்கு சாதகமாக இல்லாத நிலையிலும் கர்த்தரிடம் பற்றுதலாய் அவன் வளர்க்கப்பட்டான். 

நீதிமொழிகள் 22:6 பிள்ளையானவன் நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து; அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான்.
அபியாள் அவனை கர்த்தரிடமாய் நடத்தினாள். 
சரி அவன் என்ன செய்தான் - பார்ப்போம்.

2 இராஜாக்கள் 19:4 
     அவன் மேடைகளை அகற்றி, சிலைகளைத் தகர்த்து, விக்கிரகத்தோப்புகளை வெட்டி, மோசே பண்ணியிருந்த வெண்கலச் சர்ப்பத்தை உடைத்துப் போட்டான்; அந்நாட்கள்மட்டும் இஸ்ரவேல் புத்திரர் அதற்குத் தூபங்காட்டி வந்தார்கள்; அதற்கு நிகுஸ்தான் என்று பேரிட்டான்.
    பாருங்கள் இதுவரைக்கும் இஸ்ரவேலையும், யூதாவையும் ஆண்ட ராஜாக்கள் யாரும் செய்யாததை எசேக்கியா செய்கிறதை பார்க்கிறோம். 
    அவன் மேடைகளை அகற்றுகிறான்(HE REMOVED THE HIGH PLACES). மேடான இடங்கள் மேடைகள் ஆக்கப்பட்டது. இதுமட்டுமல்ல ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு போன்றவர்கள் கர்த்தருக்கு பலியிட பலிபிடத்தை கட்டி பலியிட்டு பின்பு அதை அப்படியே விட்டு சென்றுவிட்டார்கள், இந்த பலிபிடங்கள் மேடைகள் ஆக்கப்பட்டது. இந்த மேடைகளை ஜனங்கள் அந்நிய தெய்வங்களுக்கு பலியிட பயன்படுத்திக்கொண்டார்கள். இதைத்தான் எசேக்கியா ராஜா அகற்றுகிறான். 
    அந்த வசனத்தை படித்தால், அவன் மேடைகளை அகற்றி, சிலைகளைத் தகர்த்து, விக்கிரகத்தோப்புகளை வெட்டி... 
    விக்கிரக ஆராதனைக்கு உண்டான எல்லாவற்றையும் அவன் அழிக்கிறதை பார்க்கிறோம். 
    சரி அவன் மேடைகளை அகற்றினான், பிறகு ஏன் சிலைகளை அழிக்க வேண்டும், தோப்புகளை வெட்டவேண்டும். 
    அருமையானவர்களே எசேக்கியா மிக சரியாக செயல்படுவதை நாம் பார்க்கலாம். விக்கிரகதோப்புகள் இருந்தால் கண்டிப்பாக சிலைகள் வரும். சிலைகள் வந்தால் அது வெறும் சிலைகளாக இருக்காது, விக்கிரகமாக மாறும். பிறகு அதற்கு பலியிட மேடைகள் வரும்.(நம்ம ஊர்ல இத நல்லா பார்க்க முடியும், முதல 3 செங்கல் வரும், பிறகு அது கோயிலாக மாறும்.)  எனவே தான் அவன் எல்லாவற்றையும் அழிக்கிறான்.  
    இப்படித்தான் பாவ பழக்கமும் கூட, உதாரணமாக ஒருவர் புகை பிடிப்பதை விட வேண்டுமானால், வழக்கமாக புகை பிடிக்கும் இடங்களுக்கு செல்வதை தவிர்ப்பது மட்டுமல்ல, புகை பிடிக்கும் நண்பர்களை கூட தவிர்க்க வேண்டும். ஏன் இதை குறிப்பிட்டு சொல்கிறேன் என்றால் புகை பிடிப்பவர்கள் அவர்களுக்கு ஏற்ற புகைபிடிக்கும் பழக்கமுள்ள நண்பர்களை வைத்திருப்பார்கள். குடிப்பவர்களும் அப்படிதான்...என்னதான் முயன்றாலும் அந்த நண்பர்களுடன் இருக்கும்போது என்றாவது மீண்டும் பழைய பழக்கத்திற்கு செல்ல நேரிடும். அந்த பழக்கத்தோடு தொடர்பு உடையவற்றை துண்டிக்க வேண்டும்.  
    இவைகள் தான் நம் வாழ்க்கையில் மேடைகள். இந்த மேடைகள் அகற்றப்பட வேண்டும். அதாவது வேரோடு பிடுங்கப்பட வேண்டும். 
    பிறகு அவன் மோசே பண்ணியிருந்த வெண்கலச் சர்ப்பத்தை உடைத்துப் போட்டான்; அந்நாட்கள்மட்டும் இஸ்ரவேல் புத்திரர் அதற்குத் தூபங்காட்டி வந்தார்கள்; அதற்கு நிகுஸ்தான் என்று பேரிட்டான். 
    நன்றாக கவனியுங்கள், இது சாதாரண வெண்கல சர்ப்பம் அல்ல, உங்களுக்கு தெரியுமா இந்த வெண்கல சர்ப்பம் கர்த்தர் செய்ய சொன்னது,  உங்களுக்கு தெரியுமா இந்த வெண்கல சர்ப்பம் மோசே செய்தது, உங்களுக்கு தெரியுமா இந்த வெண்கல சர்ப்பம் அநேகரை மரணத்திலிருந்து காப்பாற்றியது. இப்படி ஜனங்கள இந்த வெண்கல சர்ப்பத்திற்கு தெய்வத்திற்கு நிகரான மதிப்பளித்து தூபங்காட்டி வந்தார்கள். 
    இப்படி வெண்கல சர்ப்பத்தை போல சில ஊழியர்களை மக்கள் கொண்டாடுவதை நாம் பார்க்ககூடும்.உங்களுக்கு தெரியுமா அவர் கை வைச்சி ஜெபித்தார் நான் சுகம் பெற்றேன், உங்களுக்கு தெரியுமா இவரால தான் எனக்கு இந்த அற்புதம் நடந்தது என்று கர்த்தரை விட்டுவிட்டு மனிதனை பிடித்துக்கொள்கிறார்கள்.  
    இந்த காரணத்தினால்தான் இந்த வெண்கல சர்ப்பத்தை எசேக்கியா உடைத்துப்போட்டன். உடைத்தது மட்டுமல்ல அதற்கு நிகுஸ்தான் என்று பெயரிட்டான். நிகுஸ்தான் (NEHUSHTAN ) என்றால் வெறும் வெண்கலத்துண்டு (" JUST A PIECE OF BRONZE" ) என பொருள். இப்படி இதன் மதிப்பை குறைத்தான் ( HE DEVALUED THE BRASEN SERPENT )  
    2 இராஜாக்கள் 18 :
      5. அவன் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின்மேல் வைத்த நம்பிக்கையிலே, அவனுக்குப் பின்னும் அவனுக்கு முன்னும் இருந்த யூதாவின் ராஜாக்களிலெல்லாம் அவனைப்போல் ஒருவனும் இருந்ததில்லை. 6. அவன் கர்த்தரை விட்டுப் பின்வாங்காமல் அவரைச் சார்ந்திருந்து, கர்த்தர் மோசேக்குக் கற்பித்த அவருடைய கற்பனைகளைக் கைக்கொண்டு நடந்தான்.
      இந்த மாதிரி செய்ய சொல்லி யார் எசேக்கியாவிற்கு சொன்னது. யாரும் சொல்லவில்லை. அவனாகவே முன்வருவதை பார்க்கிறோம். 
      மீண்டும் அந்த வசனத்தை பார்க்கலாம், 

      நீதிமொழிகள் 22:6 பிள்ளையானவன் நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து; அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான்.

    உங்கள் கருத்துக்கள் வரவேற்க்கப்படுகின்றன. கருத்துகளை prithiviraj23@gmail.com க்கு தெரியப்படுத்துங்கள். 






    ஊற்று கேட்கும் தேவன் உடனடி பதில் - 2 : மேவிபோசேத் - கண்ணீரை துடைக்க கர்த்தர் உண்டு கலங்காதே

           அப்பொழுது நானும் ஏன் குடுபத்தினரும் சபைக்கு சென்றுக்கொண்டிருந்தோம் . சில நாட்களாக பிரச்னைககளால் மனம் நொந்து என் குடுபத்திரிடம் நான...