அன்று ஆகஸ்ட் 13 காலை சுமார் 8 மணி இருக்கும், எனது தோழியிடம் கேள்வியின் நாயகனான எனக்கு இருந்த பல கேள்விகளில் ஒரு கேள்வியை பற்றி பேசிக்கொண்டு இருந்தேன். அந்த கேள்வி இது தான், ஏன் ஆண்டவர் நம்மை அதிகமாக ஆசிர்வதிக்கவில்லை , நாம் ஏன் இவ்வாறாக நடுத்தர மக்களாகவே இருக்கிறோம்? நான் இவ்வாறு கேட்பதற்கு காரணம் உண்டு. எல்லாரும் இவ்வாறாகத் தான் கேள்விகளை கேட்பார்களா என்று எனக்கு தெரியாது ,,, ஆனால் நான் இப்படியாகத்தான் யோசிப்பேன். வேதத்திலே தேவன், ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, இன்னும் பலரை அதிகமாக ஆசிர்வதித்தார் , 30 மடங்கு , 60 மடங்கு,100 மடங்கு என்று ஆசிர்வாதங்களின் மடங்கு அல்லது அறுவடையின் பலன்கள் உண்டு , இதை நான் கோடிட்டு, மட்டுமல்லாமல் கர்த்தருடைய ஆசிர்வாதமே ஐஸ்வரியத்தை தரும், அதனோடே வேதனையைக்கூட்டார் என்ற நீதிமொழிகளில் உள்ள வசனத்தையும் காரணமாக வைத்துக்கொண்டு பேசிக்கொண்டு இருந்தேன்.
என்னுடைய இந்த சந்தேகத்தை முதலாவது ஒரு போதகரிடம் கேட்டேன், அவர் : அது பழைய ஏற்பாடு காலம், புதிய ஏற்பாட்டிலே ஆசிர்வதங்களின் அடிப்படை பணம் அல்ல என்று சொன்னார், எனக்கு இந்த பதில் ஏற்புடையதாக இல்லை,என் மனமும் இதை ஒத்துக்கொள்ளவில்லை.ஏனெனில் கர்த்தருடைய ஆசிர்வாதமே ஐசுவரியத்தை தரும் .என்று சொல்லி அது எந்த ஆசிர்வதமாய் இருந்தாலும் அது ஐஸ்வரியத்தில் தான் முடியும் என்றும் சொன்னேன். ஒரு சில தினங்களில் என்னுடைய சபை போதகரை சில காரியங்களுக்காக சந்தித்தேன் அப்போது நான் இந்த கேள்வியை அவரிடம் கேட்டேன் அதற்கு அவர் ; தேவன் என்னை அவ்வாறாக தான் ஆசிவதிக்கிறார் என்று சொன்னார் இப்படி பேசிக்கொண்டு இருக்கும்போது அவரைப்பார்க்க சிலர் வந்ததினால் என்னிடம் விடைபெற்றுக்கொண்டு அவர் சென்றுவிட்டார் ,எனக்கோ என்னுள் திருப்தியே இல்லை, அடுத்தநாள் என் மூத்த சகோதரியின் திருமணம் எனவே எனக்கு யோசிக்க நேரம் இல்லை , ஆனால் அடுத்த நாள் ஆகஸ்ட் 13 எனது தோழியிடம் இதை பற்றி பேசினேன் , ஏன் தேவன் நம்மை 30 மடங்கு , 60 மடங்கு,100 மடங்குஆசிர்வதிக்கவில்லை என்று பேசிக்கொண்டு இருக்கும் போது அங்கு ஒரு வசனம் என் கண்ணில் பட்டது அது, நீங்கள் இப்பொது இருக்கிறதை பார்க்கிலும் கர்த்தர் உங்களை ஆயிரம் மடங்கு ஆசிர்வதிப்பார் என்பது (உபாகமம் 1 : 11 ) , எத்தனையோ முறை நான் அந்த இடத்திற்கு சென்று இருக்கிறேன் ஆனால் அந்த வசனம் என் கண்ணில் பட்டதே இல்லை, இதை என்னால் நம்பவே முடியவில்லை, நம்பாமல் இருக்கவும் முடியாது ,ஏனென்றால் நான் பல முறை அதே இடத்தில அமர்ந்து பேசி இருக்கிறேன் அந்த வசனமும் அங்கே தான் இருந்தது ,ஆனால் அந்த நேரத்தில் , அந்த TOPIC 'ஐ பேசும்போதுத்தான் அது என் கண்ணில்பட்டது.
நான் வெறும் 30 ,60 ,100 மடங்கு ஆசிர்வததிலே என் தேவனை மட்டுப்படுத்திவிட்டேன் ஆனால் தேவனோ இரக்கமும் உருக்கமும் நிறைந்தவர், அவர் எல்லாவற்றிலும் எல்லைகளற்றவர் என்பதை புரிந்துக்கொண்டேன்.
வேதத்தில் ஒரு வசனம் உண்டு கர்த்தருக்கு பயந்தவர்கள் பேசிக்கொள்வார்கள்,கர்த்தர் உற்று கவனிப்பார் என்று ... அதை முதல் முறையாக அனுபவித்தேன் ....
உங்கள் கருத்துக்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் - prithiviraj23@gmail.com
Subscribe to:
Post Comments (Atom)
ஊற்று கேட்கும் தேவன் உடனடி பதில் - 2 : மேவிபோசேத் - கண்ணீரை துடைக்க கர்த்தர் உண்டு கலங்காதே
அப்பொழுது நானும் ஏன் குடுபத்தினரும் சபைக்கு சென்றுக்கொண்டிருந்தோம் . சில நாட்களாக பிரச்னைககளால் மனம் நொந்து என் குடுபத்திரிடம் நான...
-
அப்பொழுது நானும் ஏன் குடுபத்தினரும் சபைக்கு சென்றுக்கொண்டிருந்தோம் . சில நாட்களாக பிரச்னைககளால் மனம் நொந்து என் குடுபத்திரிடம் நான...
-
எசேக்கியா ராஜா - அறிமுகம். ( http://en.wikipedia.org/wiki/Hezekiah ) கடந்த வாரங்களில் நடந்த வேதப்பாடங்களில் நான் கேட்டது. செய்தி : சார்லஸ்...
-
எசேக்கியா ராஜா -2 (வைராக்கியம்) எசேக்கியாவின் அறிமுகத்தை ( http://prithiviraj23.blogspot.com/2011/10/blog-post.html ) பார்த்தோம். தன்னு...
No comments:
New comments are not allowed.