Sunday, November 21, 2010

நம்ப முடியவில்லை...! அது ஒரு இனிய நாள்

அது ஒரு ஞாயிறு (sunday)... இனிய காலை நேரம் . ஆம் சபை கூடி வரும் நேரம் .அன்று என் நண்பரை சபைக்கு அழைத்து செல்வது என் எண்ணம் , அதற்கு காரணமும் உண்டு . அது ஒரு வித்தியாசமான தருணம் ...ஆம் ! உண்மை  தான் .அது   ஒரு வித்தியாசமான தருணம்  ... அவரது வீட்டிற்க்கு  சென்றேன் , வீட்டு  முற்றத்தில்  55 வயது மதிக்க தக்க ஒரு பெண்மணி அழுது கொண்டு நின்றார் ..... முகமெல்லாம் கண்ணீர் ...அச்சச்சோ  சோகத்தின் விளிம்பில் நின்றார் அவர் ... எனக்கு அப்பொழுது தெரியாது என் வாழ்வில் மிக முக்கியமான தருணம் அது என்று ... நண்பர் வந்தார் . இருவரும் இரு-சக்கர மோட்டார் வண்டியில் சென்று கொண்டிருக்கும்போது அவர் சொன்ன அந்த வார்த்தை என்னை அதிகமாக யோசிக்கவைத்துவிட்டது , நல்லவர்களுக்கே எப்போதும் பிரச்சனை என்பது தான் அது .

ஏன் அப்படி .?

கடவுள் என்னதான் செய்கிறார் ....நல்லவர்களையே தேடி தேடி சோதிக்கிறாரா ?

கேள்வியின் மேல் கேள்வி ... அந்த கடவுளிடம் ...

சபையின் வாயிலை அடைந்தோம் .
வண்டியை நிறுத்திவிட்டு சபைக்கு செல்வதற்காக முதல் படி எடுத்து வைக்கும் நேரத்தில் மின்னல் போன்ற ஒரு எண்ணம் ,,,

நம்ப முடியவில்லை. ஆம் என் கேள்விக்கு  பதில் தான் அது !

அக்கினியில் தான் தேவனை பார்க்க முடியும் ,
இது தான் அந்த எண்ணம் .
அது ஒரு வேத பகுதி.  நான் ஏற்கனவே  ஒரு முறை என் சிறு வயதில்
படித்த பகுதி தான் அது வேதத்தில்(bible) இருந்து  ... என் கேள்விக்கு பதில் கிடைத்த சந்தோஷம் ஒரு பக்கம் இருக்க, கூடவே சந்தேகம் ஒரு பக்கம் , உண்மையாகவே தேவனுடைய வார்த்தைதான என்று ?

ஆம் சந்தேகம்  வேண்டாம் அது தேவனுடைய வார்த்தை தான் , என் மனம் தெளிவானது
கேள்வியில் இருந்து மீண்டது ,தெளிந்த நீரோடை போல் இருந்தது அப்பொழுது எனக்கு  !
அது தானியேல் 3 : 25 .
 ஒரு பக்கம் கொழுந்து விட்டெறியும் நெருப்பு .
மறு பக்கம் ராஜாவின் பொற்சிலை.
 இன்னொரு பக்கம் தேவன் .
 பொற்சிலையை வணங்கினால் உயிர் தப்பும் ,தேவனுக்காக பொற்சிலையை வணங்க மறுத்தால்........அடுத்த கணம் தீக்கு இரை ஆகவேண்டும் என்பது ராஜாவின் கட்டளை .ஏற்கனவே  கைதியாக கொண்டுவரப்பட்டவர்கள் சாத்ராக் ,மேஷாக்,ஆபேத்நேகோ எனவே நிச்சயமாக ஒரு பெரிய பாடுகள் ,துன்பங்கள் ,பயம் இவையெல்லாம் இருந்து இருக்கும் .
 பாபிலோன் ராஜாவான நேபுகாத்நேச்சாரின் தாரள மனபாங்கு, அடிமைகளுக்கு பயிற்சி, அரசாங்க வேலைக்காக ,தேர்ச்சி பெற்றனர் மூவரும் . அந்நிய நாட்டினில் அடிமைக்கு அரசாங்க வேலை கிடைப்பதே பெரிய விஷயம் !  இந்த நேரத்தில் இப்படி ஒரு சோதனையா ?
ஊரோடு ஒத்து போவது தானே அறிவாளிக்கு அழகு !
பொற்சிலையா அல்லது தேவனா ?
பொற்சிலையை வணங்கினால் உயிர் தப்பும்.

யோசிக்கவில்லை அடுத்தகணம் அந்த 3 பேரும் எடுத்த முடிவு
  தேவனை அக்கினியில் இறக்கியது ...!        என்ன ஒரு பதில் என் மனதில் .... நம்ப முடியவில்லை...!
அது ஒரு இனிய நாள் ...!

No comments:

ஊற்று கேட்கும் தேவன் உடனடி பதில் - 2 : மேவிபோசேத் - கண்ணீரை துடைக்க கர்த்தர் உண்டு கலங்காதே

       அப்பொழுது நானும் ஏன் குடுபத்தினரும் சபைக்கு சென்றுக்கொண்டிருந்தோம் . சில நாட்களாக பிரச்னைககளால் மனம் நொந்து என் குடுபத்திரிடம் நான...