இன்று ஞாயிறு .... காலை வேலை , ஆம் , சபை கூடி வரும் நேரம் ...
கர்த்தருடைய சபைக்கு சென்றேன் , செய்தியை கேட்டேன் , இதோ செய்தி சுருக்கம் ...
போதகர் : விட்டு கொடுப்பவர்கள் மாற்றத்தை எதிர்பார்க்காமல் தங்களை மாற்றிக்கொள்ளுகிறார்கள் ,
... என் வீட்டில் இருந்த கம்ப்யூட்டர் சரியாக இயங்கவில்லை , கம்ப்யூட்டர் சரி செய்ய service engineer'ம் வந்தார் ,கம்ப்யூட்டர் 'ஐ பார்த்துவிட்டு அவர் கேட்டார் உங்கள் CD-DRIVE வேலை செய்யுமா ? என்று ...CD-DRIVE வேலை செய்தால் உங்கள் கம்ப்யூட்டர்'ஐ நான் சரி செய்துவிடுவேன் என்றார் ... ஆனால் CD -DRIVE வேலை செய்யவில்லை , வேறே CD-DRIVE'ஐ மாற்றிய பிறகு கம்ப்யூட்டர் 'ஐ சரி செய்தார் ... இப்படித்தான் நாமும் கூட இருக்கிறோம் ...இது நம்மை போலத்தான் , நம் வாழ்க்கயை காண்பிக்கிறதாய் இருக்கிறது , தேவனோடு POINT OF CONTACT இல்லாதவர்களாய் நாம் இருக்கிறோம் ..மிக நன்றாக நாம் தேவனுக்குள்ளாக இருப்போம் ஆனால் ஒரு சின்ன சோதனை வந்தால் சிக்கிவிடுவோம் , சபையிலே நாற்காலி காலியாக இருக்கும் ,மீண்டும் ஆரம்பிக்க வேண்டும் . RE-BOOT (OR ) RE-INSTALL செய்ய வேண்டிய அவசியம் இருக்கிறது ..!
எப்படி ஒரு CD-DRIVE வேலை செய்யாமல் இருந்ததால் கம்ப்யூட்டர்'ஐ சரி செய்ய முடியவிலையோ அப்படியே நாமும் கூட நம்மை விட்டுக்கொடுக்காமல், சில காரியங்களை மாற்றிக்கொள்ளாமல், தேவனை நம்மிடம் கிரியை செய்யாமல் தடுக்கிறவர்களாய் இருக்கிறோம் ,,, எப்படி இது உண்மை தானா ... ? தேவனை நான் தடுக்க முடியுமா ? அருமையானவர்களே முடியும் (சங்கீதம் 78 : 42 ). ஆம் உலகம் கொள்ளக்கூடாத பெரிய தேவனை மட்டுப்படுத்த இந்த களிமண்ணலே முடியும் என்பதுத்தான் உண்மை ...எத்தனை கொடுமை ஐயா இது ...
கடல் எவ்வளவு பெரியதாய் இருந்தாலும் அது கடக்க கூடாதபடி எல்லையை குறித்தவர் அவர் அல்லவா...
எரேமியா 5 : 22 . கடல் எவ்வளவு பெரியது , எவ்வளவு பெரிய பெரிய அலைகள் வந்தாலும் அதை தடுப்பது எது தெரியுமா ... சிறு மணல்... ஆற்று மணல் கடல் மணலைவிட சற்று பெரியது ... அலையை தடுப்பது பெரிய கல்லோ அல்லது, பெரிய சுவரோ அல்ல ..சிறு மணல்.
நம்மிடம் உள்ள சின்ன சின்ன விஷயங்கள் கூட உலகம் கொள்ளக்கூடாத தேவனை நம்மிடம் செயலிழக்க செய்துவிடும் , எத்தனை பரிதாபம் ... நாம் சாத்தானை அல்லவா செயல்பட அனுமதிக்கிறோம் ...
தானியேல் 3 வேளையும் தவறாமல் ஜெபித்தான் , சட்டம் மாறியது , மீறினால் மரணத்தை தழுவ வேண்டியதுதான் ... ஆண்டவருக்காக மிறினான், ராஜாவை ஆண்டவருக்காக மாற்றிவிட்டான் (தானியேல் 6'ம் அதிகாரம் ).
சாத்ராக்,மேஷாக்,ஆபேத்நேகோ , என்பவர்கள் தங்கள் உயிரையும் ஒரு பொருட்டென்று எண்ணாமல் பொற்ச்சிலையை வணங்காமல் , அக்கினிக்கு தங்களை ஒப்பு கொடுத்தனர் , தேவனை அக்கினிக்கு இறக்கினார்கள் (தானியேல் 3).
மோசே பார்வோனுடைய மகன் எனபடுவதை வெறுத்து துன்பத்தை அனுபவிப்பதை தெரிந்துகொண்டு , கிறிஸ்துவினிமித்தம் வரும் நிந்தையை அதிக பாக்கியம் என்று எண்ணினான் (எபிரெயர் 11 : 24 -26) ,ஒரு நாட்டையே வழிநடத்தினான் , தேவனை நண்பன் ஆக்கினான்....
எஸ்தர் தன்னை விட்டுகொடுத்ததினால் 120 நாடுகளிலுள்ள மக்களை காப்பாற்றினாள்(எஸ்தர் 1)
பவுல் தனக்கு இருக்கும் முள் மிக பாரமாய் இருந்தாலும் அதையும் பொருட்படுத்தாமல் எத்தனை ஊழியங்களை செய்தான் ,எத்தனையோ நாடுகளுக்கு கிறிஸ்துவை கொண்டு சென்றான் .
வில்லியம்கேரி ஊழியத்திநிமிதம் தன்னுடைய மகனை இழந்த நிலைமைலே சவத்தை அடக்கம் செய்யக்கூட வழி இல்லாமல் தானே தன்னுடைய மகனுடைய சவத்தை தானே அடக்கம் செய்தார், அதை பார்த்த அவரது மனைவிக்கு பைத்தியம் பிடித்துவிட்டது, அவர் ஆயிரக்கணக்கான மக்களை தேவனுக்கென்று ஆதாயப்படுத்திகொண்டார் என்று வரலாறு சொல்லுகிறது . ஏன், எதற்காக இந்த பாடுகள்...., நீங்களும் நானும் தேவனை அறிந்துக்கொள்ள ...
எத்தனையோபேர் தங்கள் உயிரையும் பாராமல் கிறிஸ்துவை அறிவித்ததினால் நாம் இன்றைக்கு இத்தனை சுகங்களோடு ,கல்வியோடு, அறிவோடு , கிறிஸ்துவோடு இருக்கிறோம் , இதை மறந்து நாம் எப்படி இருக்கமுடியும் ...
நாம் எதை ஆண்டவருக்காக, மற்றவருக்காக இழக்க ஆயத்தமாய் இருக்கிறோம்?
இயேசு தன் மரணதருவாயிலும் தன் வலியையும் , தன் வேதனையை பாராமல் ஒரு கள்ளனை ஆதாயப்படுத்திக்கொள்வதை வேதத்தில் பார்க்கிறோம் ... எது நம்மை தடுக்கிறது ,,, நம்முடைய STATUS , நம்முடைய பெருமை, மன்னிக்க முடியாதத்தன்மை, நம்முடைய கசப்பு, நம்முடைய வேதனை, எது நம்மை தேவனிடம் இருந்து தடுக்கிறது, அல்லது எது தேவனை நம்மிடம் கிரியை செய்யவிடாமல் தடுக்கிறது, விட்டுக்கொடுப்போம் அருமையானவர்களே விட்டுக்கொடுப்போம் , தேவனுடைய மகத்துவத்தை காண்போம் ...!
ஆதலால் மேகம் போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மை சூழ்ந்து இருக்க .... சாக்கு சொல்லவே முடியாது ... இப்படி செய்யாமல் போனால் உம்முடைய இராஜ்ஜியம் வருவதாக என்று நாம் பொய் சொல்லுவதாக இருக்கும் ... மாற்றத்தை விரும்பி நம்மை மாற்றிகொள்வோம்...
செய்தி : (தேவன்- சார்லஸ் தாசன் மூலமாக ...)
கேள்வியின் நாயகனுக்கு இன்னுமொரு பதில் ..ஆம் ... நான் ஜெபிப்பதில் சோர்ந்துவிட்டேன் , தேவனிடம் கேட்டேன் , என்னிடம் என்ன கோளாறு , எதை நான் சரி செய்ய வேண்டும் என்று , சரியான பதில் . செய்தி முடியும்முன் ஓவென்று கத்தி அழ வேண்டுமென்று இருந்தது எனக்கு , அழுகையும் வந்துவிட்டது ,என்னை அடக்கிகொண்டேன், எனக்குள் ஏதோ செய்தது . ஏனென்றால் , ஏசாயா : 4 படி அவர் என்னை காலைதோறும் எழுப்புகிறார், நானோ எழுந்து என் பணியை செய்யாமல் வேறு எதையாவது யோசித்து கொண்டு இருக்கிறேன் ,சில நேரங்களில் மட்டுமே ஜெபிக்கிறேன் ... என் இந்த நிலைமை மாற்றப்பட வேண்டும், நான் என்னை மாற்றிக்கொள்ள தேவன் எனக்கு உதவி செய்வராக.....ஆமென்.
Subscribe to:
Post Comments (Atom)
ஊற்று கேட்கும் தேவன் உடனடி பதில் - 2 : மேவிபோசேத் - கண்ணீரை துடைக்க கர்த்தர் உண்டு கலங்காதே
அப்பொழுது நானும் ஏன் குடுபத்தினரும் சபைக்கு சென்றுக்கொண்டிருந்தோம் . சில நாட்களாக பிரச்னைககளால் மனம் நொந்து என் குடுபத்திரிடம் நான...
-
எசேக்கியா ராஜா - அறிமுகம். ( http://en.wikipedia.org/wiki/Hezekiah ) கடந்த வாரங்களில் நடந்த வேதப்பாடங்களில் நான் கேட்டது. செய்தி : சார்லஸ்...
-
அப்பொழுது நானும் ஏன் குடுபத்தினரும் சபைக்கு சென்றுக்கொண்டிருந்தோம் . சில நாட்களாக பிரச்னைககளால் மனம் நொந்து என் குடுபத்திரிடம் நான...
-
எசேக்கியா ராஜா -2 (வைராக்கியம்) எசேக்கியாவின் அறிமுகத்தை ( http://prithiviraj23.blogspot.com/2011/10/blog-post.html ) பார்த்தோம். தன்னு...
No comments:
New comments are not allowed.