Sunday, November 28, 2010

அற்பமான ஆரம்பம் ஆச்சரியமான முடிவு - எழுப்புதல்

இன்று ஞாயிற்றுக் கிழமை, இதோ தேவ செய்தி,
போதகர் : கடந்த வாரத்தில் ஒரு சாட்சியை கேட்டேன், ஒரு சிறுவன் இறந்து விட்டான் ,  போதகர் அந்த சிறுவனிடம் வந்து இறந்துப்போன அவனுடைய கையை பிடித்துக்கொண்டிருக்கிறார், சற்று நேரம் கழித்து அந்த கைகளிலே அசைவு, சிறுவன் பிழைத்துக்கொண்டான், அந்த போதகர் ஒன்றும் செய்யவில்லை, ஜெபிக்கவில்லை , ஆண்டவரே இந்த சிறுவனுக்கு இறங்கும் என்று அழவில்லை, ஆனால் காரியம் நடந்ததம்மா ...அந்த ஒரு contact  தான், இப்படி ஒரு contact தேவனிடம்  நமக்கு இருந்தால் போதும்  யாரும் நம்மை ஜெபிக்கவோ, ஆராதிக்கவோ உந்தித்தள்ளவேண்டிய அவசியம் இருக்காது, அந்த விதமான  ஆராதனையே வித்தியாசமானதாய்  இருக்கும்.
       நாம் தள்ளு வண்டியாய் இராமல் ,engine ஆக இருக்கவண்டும். தள்ளு வண்டி யாராவது தள்ளினால்த்தான் போகும், ஆனால்  engine மற்றவற்றை இழுத்துச்செல்லும்.
இந்தவருட தொடக்கத்தில் இருந்து நாம் எழுப்புதலை எதிர்பார்த்துக் கொண்டிருகிறோம். ஆனால் தொடங்கிய இடத்திலேயேத்தான் இன்னும் இருக்கிறோம். இதைக்குறித்து தேவன் எனக்கு உணர்த்தின காரியத்தை உங்களிடம் சொல்ல விரும்புகிறேன்.
      
        எந்த ஒரு நல்லக்கரியத்தின் தொடக்கமும்  தெய்வத் தன்மை வாய்ந்ததாக இருக்கிறது.

ஆதியாகமம் 1 : 26  பின்பு தேவன் : நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாகுவோமாக ; ....
தேவன் தாமாகவே இந்த முடிவை எடுக்கிறார், இந்த முடிவு எடுப்பதற்கு யாரும் அவரிடம் சொல்லவில்லை, எந்த காரியங்களும் தேவனை தூண்டவில்லை, தேவன் உலகத்தை படைத்தார், பின்பு மனிதனை படைத்தார், அவர் தமது சாயலாகவே படைத்ததினால் மனிதனுக்கும் சுயமாகவே எதையும் ஆரம்பிக்க கூடிய ,அல்லது தொடங்கக்கூடிய தன்மை இருக்கிறது . இது தேவனுடைய சுபாவமாய் இருக்கிறது.

ரூத் 2 : 2  மோவாபிய ஸ்திரீயான ரூத் என்பவள் நகோமியைப்  பார்த்து : நான் வயல்வேளிக்குப் போய், யாருடைய கண்களில் தயைகிடைக்குமோ, அவர் பிறகே கதிர்களைப் பொறுக்கிக்  கொண்டுவருகிறேன் என்றாள் ; .........
முதல்  அதிகாரத்தை படித்தால்  ரூத் எவ்வளவு கடினமான சூழ்நிலையில் இவ்வாறு கூறுகிறாள் என்று புரியவரும் ,
      மோவாபிய ஸ்திரீ என்று கூறப்பட்டிருக்கிறது, மோவாபிய சந்ததி சபிக்கப்பட்ட சந்ததி, இந்த சபிக்கப்பட்ட ஒரு சந்ததியில் இருந்து வந்தவள்தான்  இந்த ரூத்.
ரூத் ஒரு விதவை ,தன் இளவயதின் வாழ்க்கையை ,சந்தோஷத்தை இழந்த நிலைமை, அதுமட்டுமல்ல தன் எதிர்க்கால நம்பிக்கை அற்றுப்போன நிலைமை என்று பார்க்கிறோம், இந்த சூழ்நிலையில் ரூத் என்பவள் ; நான் போய் என்று ஒரு காரியத்தை ஆரம்பிக்கிறாள்,
இது ஒரு நற்க்கிரியையாய் இருக்கிறது, பிறகு சபிக்கப்பட்ட சந்ததியில் வந்த ரூத் ஒரு ஆசிர்வாததின் வாய்க்காலாக ஆசிர்வாததின் சந்ததியை பெற்றவளாக மாறினாள்.

1 சாமுவேல் 14 : 1  ஒருநாள்  சவுலின் குமாரனாகிய யோனத்தான் தன் ஆயுததாரியாகிய வாலிபனை  நோக்கி : நமக்கு எதிராக அந்தப்பக்கத்தில் இருக்கிற பெலிஸ்தரின் தாணையத்திற்க்குப்போவோம் வா என்று சொன்னான் ; ....
இந்த சூழ்நிலை  முந்தைய அதிகாரங்களை படித்தால் தெளிவாக புரியும் , தன் தகப்பன் தவறு செய்து ரஜ்ஜியபாரத்தை இழந்துவிட்டான், இஸ்ரவேல் மக்களும் பயந்து சிதறி ஓடிபோனார்கள், இவனிடம் இருபவர்களோ 600 பேர் மட்டுமே, அவர்களும் பயந்து கொண்டிருக்கிறார்கள், இவனுடைய ஆயுததாரியிடமோ  ஆயுதங்களே  இல்லை, ஏனென்றால் இஸ்ரவேலிலே ஆயுதங்கள் செய்ய கொல்லர்களும் இல்லை, யோனதானிடமும் , அவன் தகபனிடமும் மட்டுமே பட்டயம் இருக்கிறது,  கடலத்தனையாய் எதிரிகள் சூழ்ந்து இருக்கிறார்கள், என்ன செய்வது, அந்த நேரத்தில் தன் ஆயுததாரியை நோக்கி,
9 வது வசனம்:  அந்த தாணையத்திற்க்குப்போவோம் வா , ஒருவேளை கர்த்தர் நமக்காக ஒரு காரியம் செய்வார்; அநேகம்பேரைக் கொண்டாகிலும் , கொஞ்சம்பேரைக் கொண்டாகிலும், ரட்சிக்க கர்த்தருக்கு தடையில்லை என்றான். ஒரு சின்ன ஆரம்பம்தான், முடிவு  கர்த்தர் இஸ்ரவேலுக்கு ஜெயத்தை கட்டளையிட்டார்.

1 சாமுவேல் 17 : 26  அப்பொழுது தாவிது தன்னண்டையிலே நிற்கிறவர்களைப் பார்த்து ,இந்த பெலிஸ்தனை கொன்று இஸ்ரவேலுக்கு நேரிட்ட நிந்தையை நீக்குகிறவனுக்கு என்ன செய்யப்படும் ; ஜீவனுள்ள தேவனுடைய சேனைகளை நிந்திக்கிறதற்கு விருத்தசேதனம் இல்லாத இந்த பெலிஸ்தன் எம்மாத்திரம் என்றான்.
தன் சகோதரருக்கு பால் கட்டிகளை கொண்டுவந்தவன்,தன் சகோதரருடைய நலத்தை விசாரிக்க வந்தவன்த்தான் இந்த தாவீது,ஆனால் அந்த சூழ்நிலையை பார்த்து அவனால் அமைதியாக இருக்க முடியவில்லை , அங்கே ஆரம்பித்துவிட்டான்,யாரையும் அவன் எதிர்பார்க்கவில்லை,தேவன் அவனுக்கு உதவினார்,ஒரே கல்லால்  கோலியாத்தை கொன்றான்,சத்துருவை வென்றான்,அவன் உயிரோடு இருந்த நாளெலாம் தோல்வியையே சந்திக்கவில்லை 

 நெகேமியா 2 : 3 ராஜாவை நோக்கி :ராஜா என்றைக்கும் வாழ்க ;என் பிதாக்களின் கல்லறைகள் இருக்கும் ஸ்தலமாகிய நகரம் பழானதும் ,அதின் வாசல்கள் அக்கினியால் சுட்டெரிக்கப்பட்டதுமாய்க் கிடக்கும்போது, நான் துக்க முகத்தோடு இராதிருப்பது எப்படி என்றேன் .
தன் சொந்தப்பட்டினம் இடிக்கப்பட்டது என்று கேள்விப்பட்டவுடன் மகா வேதனை அடைந்து  தன் இதயத்தினுள் அடக்க முடியாதபடி முகம் வாடி இருந்தான், ராஜா இதை பார்த்து என்ன காரியம், ஏன் முகம் வாடி இருக்கிறது என்று கேட்டவுடன் நிலைமையை சொல்லி , எருசலேமை கட்டப்பட  வேண்டும் ராஜாவிடம் சொல்ல ராஜாவும் அனுமதி கொடுக்கிறார் ,எருசலேமை கட்ட ஆரம்பிக்கிறான் , எவ்வளவோ பிரச்சனை வந்தபோதும் தொடர்ந்து கட்டி முடிக்கிறான் .
2 இராஜாக்கள் 7 : 3 , 9   (படிக்க) , நான்கு குஷ்ட்டரோகிகள் தன்னுடைய நாட்டு மக்கள் படும் கஷ்டத்தை பார்த்து ஒரு காரியத்தை தொடங்கினார்கள்.
அவர்களுடைய நோய் அவர்களை கண்டிப்பாக தடுத்து இருக்கும் . ஏனெனில் குஷ்ட்டரோகம் உள்ளவர்கள் ஊர் எல்லைக்குள்ளே வரவே கூடாது என அந்த நாட்டின் கட்டளை, அப்படி வந்தால் தீட்டு , தீட்டு என்று கத்திகொண்டுத்தான் வரவேண்டும் ,யாரும் தொட மாட்டார்கள்,யாரும் அருகே வரவும் மாட்டார்கள், அதே நாட்டு மக்கள் தான் அவர்களை ஊரை விட்டு வெளியேற செய்தவர்கள், ஆனால் அந்த நாட்டு மக்களுக்காக அவர்கள் அந்த முடிவை எடுக்கிறார்கள்,ஏனெனில்  அந்த நாட்களில் கொடிய பஞ்சம் இருந்தது, எந்த அளவுக்கு பஞ்சம் என்றால் தன் மகனையே சமைத்து சாப்பிடும் அளவுக்கு பஞ்சம் கொடியதாய் இருந்தது , அந்த குஷ்ட்டரோகிகள் தொடங்கிய காரியத்தால் நாட்டு மக்களுக்கு நன்மை.

அடுத்த உதாரணமாய்  ஏன்  நீங்கள்  இருக்க கூடாது ?
எதாவது ஒரு காரியத்தை தேவனுக்காக  நீங்கள் ஏன் தொடங்க கூடாது ?

ரூத் , யோனத்தான் , தாவீது ,நெகேமியா  இவர்களுகெல்லாம் சூழ்நிலைகள்  சாதகமாக இல்லை , சாதகமான சூழ்நிலைக்காக அவர்கள் காத்திருக்கவில்லை, மற்றவர்களுக்காக அவர்கள் காத்திருக்கவில்லை.மறவர்களும் அவர்களுக்கு சாதகமாக இல்லை, அவர்கள் தொடங்கினார்கள் . எழுப்புதலை பெற்றுக்கொண்டார்கள் , 
    
எதற்காக உங்கள் காத்திருக்குதல் ? மற்றவர்கள் துணைக்கு வேண்டுமா ? மற்றவர்கள் உங்களை தூண்ட வேண்டுமா ?
அல்லது நாம் மற்றவர்களை தூண்டுவோமா ?
அல்லது தேவனுடைய வார்த்தை உறுதி பட காத்து காலத்தை கடத்துகிறோமா ?

உங்கள் ஆரம்பத்தை யாரும் கண்டுக் கொள்ளாமல் இருக்கலாம் , ஆனால் எழுப்புதல் நிச்சயம்.      எதை தொடங்கவேண்டும் ?  தேவனிடம் கேளுங்கள்
அற்பமான ஆரம்பத்தை அசட்டை செய்யாதே ... என்று வேதம் சொல்லுகிறது
 DO THE BEST GOD WILL DO THE REST என்று நாம்  கேள்விப்பட்டு இருப்போம்.

உங்களில் நற்கிரியையை  தொடங்கினவர் தேவன்  ...
தேவன் ஏற்கனவே நற்கிரியையை தொடங்கி இருக்க , நாம் ஏன் காத்திருக்க வேண்டும் ...  
            
             இது சிந்திக்கும் காலம்மட்டுமல்ல , செயல்படும் நேரமும் இது தான்,  
                                             மௌனமாய் இருக்காதே ...

No comments:

ஊற்று கேட்கும் தேவன் உடனடி பதில் - 2 : மேவிபோசேத் - கண்ணீரை துடைக்க கர்த்தர் உண்டு கலங்காதே

       அப்பொழுது நானும் ஏன் குடுபத்தினரும் சபைக்கு சென்றுக்கொண்டிருந்தோம் . சில நாட்களாக பிரச்னைககளால் மனம் நொந்து என் குடுபத்திரிடம் நான...