புதிய மனிதா ....பூமிக்கு வா ..... என்ற பாடலை நேற்று காலை எனது நண்பனை cell phone'ல் அழைத்தபோது நான் கேட்டேன் ,அவருடைய caller tune அதுவாக இருந்தது , என்னுடைய நோக்கம் அவரை சபைக்கு போக சொல்லுவது . ஏன் நான் அவரை அவ்வாறு சொல்ல வேண்டும். ஏனென்றால் என்னை ஒருவர் இவ்வாறாக வருந்தி அழைத்ததால் நான் சபைக்கு சென்றேன்,என் கேள்விகளுக்கு பதிலை பெற்றுக்கொண்டேன்.அதை பின் வரும் நாட்களில் விவரிக்கிறேன் . சரி ,
உண்மையாக புதிய மனிதன் இருக்கிறானா , எங்கு இருக்கிறான் ?
வேதம் என்ன சொல்லுகிறது என்று பார்ப்போம் ...
2 கொரிந்தியர் 5 : 17 - இப்படியிருக்க ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான் ; பழையவைகள் ஒழிந்துபோயின .எல்லாம் புதிதாயின ...
இது எப்படி என்று நீங்கள் கேட்கலாம்...அதே அதிகாரத்தில் 21 வது வசனம் - நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படி , பாவம் அறியாத அவரை நமக்காக பாவமாக்கினார் . என்று பார்க்கிறோம் ... நமக்காக அவரே பலியானார் என்று வேதம் சொலுகிறது. ஏன் அவர் நமக்காக பலியானார்? அருமையானவர்களே மனிதன் பாவம் செய்து தேவனிடம் இருந்த தொடர்பை துண்டித்துக்கொண்டான். வேதம் சொல்லுகிறது நம்முடைய பாவமே நமக்கும் தேவனுக்கும் நடுவே பிரிவினை சுவராய் இருக்கிறது, பாவத்தின் சம்பளம் மரணம் என்று வேதம் தெளிவாக கூறுகிறது.
இதற்கு வேறு வழி இல்லையா? நான் மரித்தால்தான் விமோசனமா ?
வழி இருக்கிறது அன்பானவர்களே ...! குற்றமில்லாத ஒருவர் நமக்காக மரிக்க வேண்டும், இந்த பூமியிலே குற்றமில்லாமல் யார் இருக்கமுடியும், விலங்குகளை பலி இடலாமா ? ஆனால் விலங்கிற்கு குற்றம் என்றால் என்னவென்றே தெரியாது. இப்படியானால் எனக்காக யார் மரிப்பார். இதற்க்க்காகதான் இயேசு உலகத்தில் மனிதனாய் பிறந்து 100 % மனிதனாய் வாழ்ந்து குற்றமில்லாமல், பாவமில்லாமல் நமக்காக சிலுவையில் பலியானார், எனக்காக, என் பாவத்திற்காக இயேசு மரித்தார் இதை நம்பினால் போதும், நாம் கிறிஸ்துவை நம் உள்ளத்துக்குள் வர அனுமதிக்கிறோம். அதுமட்டும் போதாது அவர் நம் உள்ளத்திற்குள் வந்துவிட்டால், அவருடைய சுபாவங்களை நாம் பிரதிபலிபோம். அவர் நம்மிலே, நாம் அவரிலே நிலைத்து இருந்தால் நிச்சயமாக நாம் நம்முடைய பழைய சுபாவங்களை விட்டு புதிய மனிதனாய் இருப்போம் .இயேசு: நானே வழியும்,சத்தியமும் ,ஜீவனுமாயிருக்கிறேன் என்று கூறுகிறார்.
அடுத்து ரோமர் 12 : 2 நீங்கள் இந்த பிரபஞ்சத்துக்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக ,உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள் .
இந்த அதிகாரத்தை நீங்கள் படித்தால் மனம் மறுரூபமாக என்ன செய்யவேண்டும் என்று தெரியும் ... படியுங்கள் , பயிற்சி செய்யுங்கள், புதிய மனிதனை பூமிக்கு வர விடுங்கள். உங்கள் எண்ணங்களை எனக்கு தெரியப்படுத்துங்கள் ....prithiviraj23@gmail .com மூலமாக ...
Subscribe to:
Post Comments (Atom)
ஊற்று கேட்கும் தேவன் உடனடி பதில் - 2 : மேவிபோசேத் - கண்ணீரை துடைக்க கர்த்தர் உண்டு கலங்காதே
அப்பொழுது நானும் ஏன் குடுபத்தினரும் சபைக்கு சென்றுக்கொண்டிருந்தோம் . சில நாட்களாக பிரச்னைககளால் மனம் நொந்து என் குடுபத்திரிடம் நான...
-
எசேக்கியா ராஜா - அறிமுகம். ( http://en.wikipedia.org/wiki/Hezekiah ) கடந்த வாரங்களில் நடந்த வேதப்பாடங்களில் நான் கேட்டது. செய்தி : சார்லஸ்...
-
அப்பொழுது நானும் ஏன் குடுபத்தினரும் சபைக்கு சென்றுக்கொண்டிருந்தோம் . சில நாட்களாக பிரச்னைககளால் மனம் நொந்து என் குடுபத்திரிடம் நான...
-
எசேக்கியா ராஜா -2 (வைராக்கியம்) எசேக்கியாவின் அறிமுகத்தை ( http://prithiviraj23.blogspot.com/2011/10/blog-post.html ) பார்த்தோம். தன்னு...
No comments:
New comments are not allowed.