நேற்று மாதத்தில் 3 வது சனிக்கிழமை , ஆம்மாம் என்ன அதற்கு ? என்று கேட்கலாம் , 3 வது சனிகிழமை என் வீட்டில் ஜெப கூடூகை , ஆரம்ப ஜெபத்தை தொடர்ந்து 2 பாடல் பாடினோம் , பின்னர் சாட்சி (தேவன் கடந்த மாததில் என்ன நன்மை செய்தார் என்று சொல்ல வேண்டும்) . எல்லாரும் சாட்சி சொன்னோம் , பின்னர் செய்தி ....
வேதத்தில் இருந்து ஒரு மனிதனின் வாழ்வில் நடந்த சம்பவங்களின் அடிபடையில் நம்முடைய வாழ்வில் நாம் எப்படி செயல்படுகிறோம் என்பதுதான் எப்போதும் செய்தின் அடிப்படையாக இருக்கும் .எல்லா செய்தியும் அப்படிதானே .
இதில் என்ன வித்தியாசம் என கேள்வி வரும் , கேள்வின் மன்னனான எனக்கு இப்படி தான் கேள்விகள் உதிக்கும் .
ஆனால் ஒரு உண்மை என்னவென்றால் செய்தி எதுவாய் இருந்தாலும் நான் என்னை விட்டு கொடுக்கும்போது செய்தி தன் வேலையை செய்ய ஆரம்பிக்கும் , இது என்னுடைய அனுபவம் ! எதை விட்டு கொடுக்கவேண்டும் என்பது அந்த நேரத்தில் நமக்கே தெரியும் , இதைதான் ஆவியானவரின் இடைபடுதல் என்று சொல்லுகிறார்கள் .
சரி செய்திதான் என்ன ? ஆதியாகமம் 31 : 25 - 34
யாக்கோபு என்னும் ஒருவன் தான் குடும்பத்துடன் தன் மாமனார் வீட்டிலிருந்து தன்னுடைய சம்பாத்தியத்தை எல்லாம் எடுத்து கொண்டு மாமானாருக்கு தெரியாமல் புறப்பட்டு வந்து விடுகிறான் .
அவனுடைய மாமனாரின் பெயர் லாபான் -எப்போதுமே லாபத்திலே கண் அவனுக்கு .
தன் மருமகன் என்றும் பாராமல் பத்து முறை அவன் சம்பளத்தை மாற்றினான் ,
யாக்கோபு தன் மாமாக்கு தெரியாமல் வர இதுவும் ஒரு காரணம் , ஆனால் யாக்கோபுக்கு தேவனுடைய இரக்கம் இருந்ததினால் அவன் மாமா எத்தனை முறை சம்பளத்தை மாற்றினாலும் தேவன் யாக்கோபை ஆசீர்வதித்தார் !
யாக்கோபுவுக்கு இரண்டு மனைவிகள் , இருவரும் சகோதரிகள் , லாபானின் மகள்கள் .
யாக்கோபு புறப்பட்டு வரும்போது அவனின் 2வது மனைவி ராகேல் தன் தகப்பனுடைய சொருபங்களை திருடி கொண்டு வந்துவிடுகிறாள், இதை தேடி லாபானும் பின் தொடர்ந்து வருகிறான் . இது யாக்கோபுவுக்கு தெரியாது . லாபான் வந்து யாக்கோபுவிடம் தன் சொருபங்களை காணவில்லை என்று சொல்லி அவர்களுடைய கூடாரங்களை சோதனை செய்தான் . . . நிற்க. . .
இதற்கும் நமக்கும் என்ன ...நாம் தெரிந்தோ தெரியாமலோ கண்டிப்பாக பாவம் செய்கிறோம் , இது பிசாசின் காரியமாக இருக்கிறது எனவே அவன் நம்மை பின் தொடர்ந்து வருகிறான் ,சோதனைகளும் சேர்ந்து தான் ...!
இதை தான் இயேசு : இதோ இந்த உலகத்தின் அதிபதி வருகிறான் ,அவனுக்கு என்னிடத்தில் ஒன்றும் இல்லை என்று சொல்லுகிறார் ....ஏனென்றால் அவர் பாவம் அறியாதவராய் பூமியில் வாழ்ந்தார் .... நாம் சோதிக்கபடாதபடி பாவம் செய்யாமல் இருப்போமாக என்று வேதம் சொல்லுகிறது . ஏனென்றால் பாவம் பிசாசின் காரியமாய் இருக்கிறது ,நாம் அதற்கு இணங்கி கொடுக்க வேண்டாம் .
அடுத்து, ஆதியாகமம் 32 : 24 யாக்கோபு தன் சகோதரனுக்கு பயந்து தனியே இருக்கிறான் . சகோதரன் தன் சொந்த மாம்சம் . இப்பொது மாம்சம் நாமை தொடர்கிறது . மாம்சத்தின் காரியங்கள் வெளியரங்கமாய் இருகிறது என்று கலாத்தியர் 5 : 19 - 21 சொல்லுகிறது . ஆனால் ஆவியின் கனியோ ... அதற்கு எதிரிடையாக இருக்கிறது கலாத்தியர் 5 : 22 - 25 .
என்று வேதம் சொல்லுகிறது . ஆதலால் பிசாசுக்கும் , மாம்சத்துக்கும் இடம்கொடாமல்
நம்மை விட்டுகொடுத்து தேவனுக்கு பிரியமாய் வாழ்வோமாக .... !
இதுதான் செய்தி ... நம்மை விட்டு கொடுப்போம் , ஆசீர்வாதத்தை பெற்று கொள்வோம் ....
Subscribe to:
Post Comments (Atom)
ஊற்று கேட்கும் தேவன் உடனடி பதில் - 2 : மேவிபோசேத் - கண்ணீரை துடைக்க கர்த்தர் உண்டு கலங்காதே
அப்பொழுது நானும் ஏன் குடுபத்தினரும் சபைக்கு சென்றுக்கொண்டிருந்தோம் . சில நாட்களாக பிரச்னைககளால் மனம் நொந்து என் குடுபத்திரிடம் நான...
-
எசேக்கியா ராஜா - அறிமுகம். ( http://en.wikipedia.org/wiki/Hezekiah ) கடந்த வாரங்களில் நடந்த வேதப்பாடங்களில் நான் கேட்டது. செய்தி : சார்லஸ்...
-
அப்பொழுது நானும் ஏன் குடுபத்தினரும் சபைக்கு சென்றுக்கொண்டிருந்தோம் . சில நாட்களாக பிரச்னைககளால் மனம் நொந்து என் குடுபத்திரிடம் நான...
-
எசேக்கியா ராஜா -2 (வைராக்கியம்) எசேக்கியாவின் அறிமுகத்தை ( http://prithiviraj23.blogspot.com/2011/10/blog-post.html ) பார்த்தோம். தன்னு...
No comments:
New comments are not allowed.