சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு நான், எனது சபை மூப்பரும் , என் குடும்ப நண்பருமான திரு .சுந்தர் ராஜன் அண்ணன் வீட்டிற்க்கு சென்றேன் , நேரம் கிடைக்கும்போது நான் அங்கு செல்வது வழக்கம், பொதுவாக நாங்கள் எல்லா TOPIC'ஐயும் பேசுவோம் . அண்ணன் பொதுவாக பேசுவார் .குறிப்பாக, நாட்டு நிலைமை முதல் ரோட்டு நிலைமை வரை தனது ஆதங்கத்தை பகிர்ந்து கொள்ளவார், ஏனென்றால் எனக்கும் அந்த ஆதங்கம் உண்டு என்பது அவருக்கு தெரியும். திருமதி சுந்தர் ராஜன் (நான் அவர்களை அண்ணன் , அக்கா என்று அழைப்பேன் ) அவர்கள் நன்றாக காரியங்களை புரிந்து கொண்டு விளக்ககூடியவர், நான் அவர்களிடம் என்னுடைய கேள்விகள், எனக்கு அறிவுரைகள் ,...பொதுவாக என் சம்பந்தப்பட்ட எந்த விஷயத்தையும் பகிர்ந்துக் கொள்வேன், ஏனென்றால் சிலநேரங்களில் நான் தவறு செய்திருக்க கூடும், எனவே மறைக்காமல் சொல்லி அறிவுரைகளை கேட்டுக்கொள்வேன், எங்களுடைய 70 % பேச்சு, வேதத்தை பற்றி , தேவனைப்பற்றியதாக இருக்கும்.
ஒருமுறை நான் என்னை சுற்றி நடந்த விஷயங்களால் சற்று பாதிக்கப்பட்டு அக்காவிடம் புலம்பிக்கொண்டு இருந்தேன், ஏன் இப்படி நடந்துக் கொள்கிறார்கள், கடவுள் இவர்களை கேட்கமாட்டாரா, இப்படி மாற்றவர்கள் மேல் இருந்த கோபத்தை கடவுள் பக்கமாக திருப்பிவிட்டேன்,கடவுள் ஏன் இப்படி இருக்கிறார், கடவுள் சில விஷயங்களை உடனே செய்தால், தானே எலோருக்கும் பயம் வரும், என்று புலம்பினேன் , ஆனால் எனக்கு ஒன்று தெரியாமல் போய்விட்டது அந்த உரையாடலில் நங்கள் மட்டுமல்ல கடவுளும் இருந்தார் என்பது, அக்காவும் நான் சொன்னதுபோலவே சொல்லி, பிறகு "நா ஒரு book'அ படிச்சேன்,அதுல ஒரு வசனம் இருக்குப் பாரு" என்று சொல்லி வேதத்தில் இருந்து அந்த வசனத்தை எடுக்க வேதத்தை புரட்டினார்கள். அதே சமயம் " நானும் ஒரு அதிகாரத்த படிச்சேன் அக்கா, நல்லா இருக்கு"ன்னு சொல்லி அந்த அதிகாரத்தை எடுத்தேன், அது ரோமர் 12 .
நான் அந்த அதிகாரத்தை படிக்க காரணம் இருக்கிறது, அதை நான் பிறகு சொல்லுகிறேன்.
அந்த வாரத்தில் மட்டும் நான் ரோமர் 12 ம் அதிகாரத்தை பலமுறை படித்து இருந்தேன். 11 ம் அதிகாரத்தில் உள்ள கடைசி வசனத்தையும் படித்தேன், ஆனால் அதற்கு மேல் உள்ள வசனத்தை நான் பார்க்கவில்லை. அன்று நான் ரோமர் 12 ம் அதிகாரத்தை எடுத்தவுடன் என் கண்ணில் பட்ட வசனமும் ,அக்கா எடுத்த வசனமும் ஒரே அர்த்தத்தை சொல்லிற்று, ஆனால் அக்கா எடுத்த நிருபமும் அதிகாரமும் வேறு ...அந்த 2 வசனத்தையும் பார்ப்போம்.
ரோமர் 11:34 : கர்த்தருடைய சிந்தையை அறிந்தவன் யார் ? அவருக்கு ஆலோசனைக்காரனாய் இருந்தவன் யார் ?
35 :தனக்கு பதில்கிடைக்கும்படிக்கு முந்தி அவருக்கு ஒன்றைக் கொடுத்தவன் யார் ?
அக்கா எடுத்த வசனம் : 1 கொரிந்தியர் 2 : 16 : கர்த்தருக்கு போதிக்கதக்கதாக அவருடைய சிந்தையை அறிந்தவன் யார் ? எங்களுக்கோ கிறிஸ்துவின் சிந்தை உண்டாயிருக்கிறது ...
இதை படித்தப் பிறகு நாங்கள் தேவனும் எங்கள் உரையாடலில் கலந்துகொண்டார் என்று உணர்ந்தோம் .
அந்த உணர்வு எப்படி இருந்தது என்றால் " நீ யாருடா மகனே, என்னை கேள்வி கேட்க ? என்று கேட்டதுப்போல் இருந்தது, ஒருபக்கம் கேள்விக்கு பதில் கிடைத்தது என்ற சந்தோஷம், மறுபக்கம் 2 வது முறையாக நான் அப்பிடியே ஷாக் ஆயிட்டேன் !!!.
Subscribe to:
Post Comments (Atom)
ஊற்று கேட்கும் தேவன் உடனடி பதில் - 2 : மேவிபோசேத் - கண்ணீரை துடைக்க கர்த்தர் உண்டு கலங்காதே
அப்பொழுது நானும் ஏன் குடுபத்தினரும் சபைக்கு சென்றுக்கொண்டிருந்தோம் . சில நாட்களாக பிரச்னைககளால் மனம் நொந்து என் குடுபத்திரிடம் நான...
-
எசேக்கியா ராஜா - அறிமுகம். ( http://en.wikipedia.org/wiki/Hezekiah ) கடந்த வாரங்களில் நடந்த வேதப்பாடங்களில் நான் கேட்டது. செய்தி : சார்லஸ்...
-
அப்பொழுது நானும் ஏன் குடுபத்தினரும் சபைக்கு சென்றுக்கொண்டிருந்தோம் . சில நாட்களாக பிரச்னைககளால் மனம் நொந்து என் குடுபத்திரிடம் நான...
-
எசேக்கியா ராஜா -2 (வைராக்கியம்) எசேக்கியாவின் அறிமுகத்தை ( http://prithiviraj23.blogspot.com/2011/10/blog-post.html ) பார்த்தோம். தன்னு...
No comments:
New comments are not allowed.