அன்று ஆகஸ்ட் 13 காலை சுமார் 8 மணி இருக்கும், எனது தோழியிடம் கேள்வியின் நாயகனான எனக்கு இருந்த பல கேள்விகளில் ஒரு கேள்வியை பற்றி பேசிக்கொண்டு இருந்தேன். அந்த கேள்வி இது தான், ஏன் ஆண்டவர் நம்மை அதிகமாக ஆசிர்வதிக்கவில்லை , நாம் ஏன் இவ்வாறாக நடுத்தர மக்களாகவே இருக்கிறோம்? நான் இவ்வாறு கேட்பதற்கு காரணம் உண்டு. எல்லாரும் இவ்வாறாகத் தான் கேள்விகளை கேட்பார்களா என்று எனக்கு தெரியாது ,,, ஆனால் நான் இப்படியாகத்தான் யோசிப்பேன். வேதத்திலே தேவன், ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, இன்னும் பலரை அதிகமாக ஆசிர்வதித்தார் , 30 மடங்கு , 60 மடங்கு,100 மடங்கு என்று ஆசிர்வாதங்களின் மடங்கு அல்லது அறுவடையின் பலன்கள் உண்டு , இதை நான் கோடிட்டு, மட்டுமல்லாமல் கர்த்தருடைய ஆசிர்வாதமே ஐஸ்வரியத்தை தரும், அதனோடே வேதனையைக்கூட்டார் என்ற நீதிமொழிகளில் உள்ள வசனத்தையும் காரணமாக வைத்துக்கொண்டு பேசிக்கொண்டு இருந்தேன்.
என்னுடைய இந்த சந்தேகத்தை முதலாவது ஒரு போதகரிடம் கேட்டேன், அவர் : அது பழைய ஏற்பாடு காலம், புதிய ஏற்பாட்டிலே ஆசிர்வதங்களின் அடிப்படை பணம் அல்ல என்று சொன்னார், எனக்கு இந்த பதில் ஏற்புடையதாக இல்லை,என் மனமும் இதை ஒத்துக்கொள்ளவில்லை.ஏனெனில் கர்த்தருடைய ஆசிர்வாதமே ஐசுவரியத்தை தரும் .என்று சொல்லி அது எந்த ஆசிர்வதமாய் இருந்தாலும் அது ஐஸ்வரியத்தில் தான் முடியும் என்றும் சொன்னேன். ஒரு சில தினங்களில் என்னுடைய சபை போதகரை சில காரியங்களுக்காக சந்தித்தேன் அப்போது நான் இந்த கேள்வியை அவரிடம் கேட்டேன் அதற்கு அவர் ; தேவன் என்னை அவ்வாறாக தான் ஆசிவதிக்கிறார் என்று சொன்னார் இப்படி பேசிக்கொண்டு இருக்கும்போது அவரைப்பார்க்க சிலர் வந்ததினால் என்னிடம் விடைபெற்றுக்கொண்டு அவர் சென்றுவிட்டார் ,எனக்கோ என்னுள் திருப்தியே இல்லை, அடுத்தநாள் என் மூத்த சகோதரியின் திருமணம் எனவே எனக்கு யோசிக்க நேரம் இல்லை , ஆனால் அடுத்த நாள் ஆகஸ்ட் 13 எனது தோழியிடம் இதை பற்றி பேசினேன் , ஏன் தேவன் நம்மை 30 மடங்கு , 60 மடங்கு,100 மடங்குஆசிர்வதிக்கவில்லை என்று பேசிக்கொண்டு இருக்கும் போது அங்கு ஒரு வசனம் என் கண்ணில் பட்டது அது, நீங்கள் இப்பொது இருக்கிறதை பார்க்கிலும் கர்த்தர் உங்களை ஆயிரம் மடங்கு ஆசிர்வதிப்பார் என்பது (உபாகமம் 1 : 11 ) , எத்தனையோ முறை நான் அந்த இடத்திற்கு சென்று இருக்கிறேன் ஆனால் அந்த வசனம் என் கண்ணில் பட்டதே இல்லை, இதை என்னால் நம்பவே முடியவில்லை, நம்பாமல் இருக்கவும் முடியாது ,ஏனென்றால் நான் பல முறை அதே இடத்தில அமர்ந்து பேசி இருக்கிறேன் அந்த வசனமும் அங்கே தான் இருந்தது ,ஆனால் அந்த நேரத்தில் , அந்த TOPIC 'ஐ பேசும்போதுத்தான் அது என் கண்ணில்பட்டது.
நான் வெறும் 30 ,60 ,100 மடங்கு ஆசிர்வததிலே என் தேவனை மட்டுப்படுத்திவிட்டேன் ஆனால் தேவனோ இரக்கமும் உருக்கமும் நிறைந்தவர், அவர் எல்லாவற்றிலும் எல்லைகளற்றவர் என்பதை புரிந்துக்கொண்டேன்.
வேதத்தில் ஒரு வசனம் உண்டு கர்த்தருக்கு பயந்தவர்கள் பேசிக்கொள்வார்கள்,கர்த்தர் உற்று கவனிப்பார் என்று ... அதை முதல் முறையாக அனுபவித்தேன் ....
உங்கள் கருத்துக்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் - prithiviraj23@gmail.com
Tuesday, November 30, 2010
Sunday, November 28, 2010
அற்பமான ஆரம்பம் ஆச்சரியமான முடிவு - எழுப்புதல்
இன்று ஞாயிற்றுக் கிழமை, இதோ தேவ செய்தி,
போதகர் : கடந்த வாரத்தில் ஒரு சாட்சியை கேட்டேன், ஒரு சிறுவன் இறந்து விட்டான் , போதகர் அந்த சிறுவனிடம் வந்து இறந்துப்போன அவனுடைய கையை பிடித்துக்கொண்டிருக்கிறார், சற்று நேரம் கழித்து அந்த கைகளிலே அசைவு, சிறுவன் பிழைத்துக்கொண்டான், அந்த போதகர் ஒன்றும் செய்யவில்லை, ஜெபிக்கவில்லை , ஆண்டவரே இந்த சிறுவனுக்கு இறங்கும் என்று அழவில்லை, ஆனால் காரியம் நடந்ததம்மா ...அந்த ஒரு contact தான், இப்படி ஒரு contact தேவனிடம் நமக்கு இருந்தால் போதும் யாரும் நம்மை ஜெபிக்கவோ, ஆராதிக்கவோ உந்தித்தள்ளவேண்டிய அவசியம் இருக்காது, அந்த விதமான ஆராதனையே வித்தியாசமானதாய் இருக்கும்.
நாம் தள்ளு வண்டியாய் இராமல் ,engine ஆக இருக்கவண்டும். தள்ளு வண்டி யாராவது தள்ளினால்த்தான் போகும், ஆனால் engine மற்றவற்றை இழுத்துச்செல்லும்.
இந்தவருட தொடக்கத்தில் இருந்து நாம் எழுப்புதலை எதிர்பார்த்துக் கொண்டிருகிறோம். ஆனால் தொடங்கிய இடத்திலேயேத்தான் இன்னும் இருக்கிறோம். இதைக்குறித்து தேவன் எனக்கு உணர்த்தின காரியத்தை உங்களிடம் சொல்ல விரும்புகிறேன்.
எந்த ஒரு நல்லக்கரியத்தின் தொடக்கமும் தெய்வத் தன்மை வாய்ந்ததாக இருக்கிறது.
ஆதியாகமம் 1 : 26 பின்பு தேவன் : நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாகுவோமாக ; ....
தேவன் தாமாகவே இந்த முடிவை எடுக்கிறார், இந்த முடிவு எடுப்பதற்கு யாரும் அவரிடம் சொல்லவில்லை, எந்த காரியங்களும் தேவனை தூண்டவில்லை, தேவன் உலகத்தை படைத்தார், பின்பு மனிதனை படைத்தார், அவர் தமது சாயலாகவே படைத்ததினால் மனிதனுக்கும் சுயமாகவே எதையும் ஆரம்பிக்க கூடிய ,அல்லது தொடங்கக்கூடிய தன்மை இருக்கிறது . இது தேவனுடைய சுபாவமாய் இருக்கிறது.
ரூத் 2 : 2 மோவாபிய ஸ்திரீயான ரூத் என்பவள் நகோமியைப் பார்த்து : நான் வயல்வேளிக்குப் போய், யாருடைய கண்களில் தயைகிடைக்குமோ, அவர் பிறகே கதிர்களைப் பொறுக்கிக் கொண்டுவருகிறேன் என்றாள் ; .........
முதல் அதிகாரத்தை படித்தால் ரூத் எவ்வளவு கடினமான சூழ்நிலையில் இவ்வாறு கூறுகிறாள் என்று புரியவரும் ,
மோவாபிய ஸ்திரீ என்று கூறப்பட்டிருக்கிறது, மோவாபிய சந்ததி சபிக்கப்பட்ட சந்ததி, இந்த சபிக்கப்பட்ட ஒரு சந்ததியில் இருந்து வந்தவள்தான் இந்த ரூத்.
ரூத் ஒரு விதவை ,தன் இளவயதின் வாழ்க்கையை ,சந்தோஷத்தை இழந்த நிலைமை, அதுமட்டுமல்ல தன் எதிர்க்கால நம்பிக்கை அற்றுப்போன நிலைமை என்று பார்க்கிறோம், இந்த சூழ்நிலையில் ரூத் என்பவள் ; நான் போய் என்று ஒரு காரியத்தை ஆரம்பிக்கிறாள்,
இது ஒரு நற்க்கிரியையாய் இருக்கிறது, பிறகு சபிக்கப்பட்ட சந்ததியில் வந்த ரூத் ஒரு ஆசிர்வாததின் வாய்க்காலாக ஆசிர்வாததின் சந்ததியை பெற்றவளாக மாறினாள்.
1 சாமுவேல் 14 : 1 ஒருநாள் சவுலின் குமாரனாகிய யோனத்தான் தன் ஆயுததாரியாகிய வாலிபனை நோக்கி : நமக்கு எதிராக அந்தப்பக்கத்தில் இருக்கிற பெலிஸ்தரின் தாணையத்திற்க்குப்போவோம் வா என்று சொன்னான் ; ....
இந்த சூழ்நிலை முந்தைய அதிகாரங்களை படித்தால் தெளிவாக புரியும் , தன் தகப்பன் தவறு செய்து ரஜ்ஜியபாரத்தை இழந்துவிட்டான், இஸ்ரவேல் மக்களும் பயந்து சிதறி ஓடிபோனார்கள், இவனிடம் இருபவர்களோ 600 பேர் மட்டுமே, அவர்களும் பயந்து கொண்டிருக்கிறார்கள், இவனுடைய ஆயுததாரியிடமோ ஆயுதங்களே இல்லை, ஏனென்றால் இஸ்ரவேலிலே ஆயுதங்கள் செய்ய கொல்லர்களும் இல்லை, யோனதானிடமும் , அவன் தகபனிடமும் மட்டுமே பட்டயம் இருக்கிறது, கடலத்தனையாய் எதிரிகள் சூழ்ந்து இருக்கிறார்கள், என்ன செய்வது, அந்த நேரத்தில் தன் ஆயுததாரியை நோக்கி,
9 வது வசனம்: அந்த தாணையத்திற்க்குப்போவோம் வா , ஒருவேளை கர்த்தர் நமக்காக ஒரு காரியம் செய்வார்; அநேகம்பேரைக் கொண்டாகிலும் , கொஞ்சம்பேரைக் கொண்டாகிலும், ரட்சிக்க கர்த்தருக்கு தடையில்லை என்றான். ஒரு சின்ன ஆரம்பம்தான், முடிவு கர்த்தர் இஸ்ரவேலுக்கு ஜெயத்தை கட்டளையிட்டார்.
1 சாமுவேல் 17 : 26 அப்பொழுது தாவிது தன்னண்டையிலே நிற்கிறவர்களைப் பார்த்து ,இந்த பெலிஸ்தனை கொன்று இஸ்ரவேலுக்கு நேரிட்ட நிந்தையை நீக்குகிறவனுக்கு என்ன செய்யப்படும் ; ஜீவனுள்ள தேவனுடைய சேனைகளை நிந்திக்கிறதற்கு விருத்தசேதனம் இல்லாத இந்த பெலிஸ்தன் எம்மாத்திரம் என்றான்.
தன் சகோதரருக்கு பால் கட்டிகளை கொண்டுவந்தவன்,தன் சகோதரருடைய நலத்தை விசாரிக்க வந்தவன்த்தான் இந்த தாவீது,ஆனால் அந்த சூழ்நிலையை பார்த்து அவனால் அமைதியாக இருக்க முடியவில்லை , அங்கே ஆரம்பித்துவிட்டான்,யாரையும் அவன் எதிர்பார்க்கவில்லை,தேவன் அவனுக்கு உதவினார்,ஒரே கல்லால் கோலியாத்தை கொன்றான்,சத்துருவை வென்றான்,அவன் உயிரோடு இருந்த நாளெலாம் தோல்வியையே சந்திக்கவில்லை
நெகேமியா 2 : 3 ராஜாவை நோக்கி :ராஜா என்றைக்கும் வாழ்க ;என் பிதாக்களின் கல்லறைகள் இருக்கும் ஸ்தலமாகிய நகரம் பழானதும் ,அதின் வாசல்கள் அக்கினியால் சுட்டெரிக்கப்பட்டதுமாய்க் கிடக்கும்போது, நான் துக்க முகத்தோடு இராதிருப்பது எப்படி என்றேன் .
தன் சொந்தப்பட்டினம் இடிக்கப்பட்டது என்று கேள்விப்பட்டவுடன் மகா வேதனை அடைந்து தன் இதயத்தினுள் அடக்க முடியாதபடி முகம் வாடி இருந்தான், ராஜா இதை பார்த்து என்ன காரியம், ஏன் முகம் வாடி இருக்கிறது என்று கேட்டவுடன் நிலைமையை சொல்லி , எருசலேமை கட்டப்பட வேண்டும் ராஜாவிடம் சொல்ல ராஜாவும் அனுமதி கொடுக்கிறார் ,எருசலேமை கட்ட ஆரம்பிக்கிறான் , எவ்வளவோ பிரச்சனை வந்தபோதும் தொடர்ந்து கட்டி முடிக்கிறான் .
2 இராஜாக்கள் 7 : 3 , 9 (படிக்க) , நான்கு குஷ்ட்டரோகிகள் தன்னுடைய நாட்டு மக்கள் படும் கஷ்டத்தை பார்த்து ஒரு காரியத்தை தொடங்கினார்கள்.
அவர்களுடைய நோய் அவர்களை கண்டிப்பாக தடுத்து இருக்கும் . ஏனெனில் குஷ்ட்டரோகம் உள்ளவர்கள் ஊர் எல்லைக்குள்ளே வரவே கூடாது என அந்த நாட்டின் கட்டளை, அப்படி வந்தால் தீட்டு , தீட்டு என்று கத்திகொண்டுத்தான் வரவேண்டும் ,யாரும் தொட மாட்டார்கள்,யாரும் அருகே வரவும் மாட்டார்கள், அதே நாட்டு மக்கள் தான் அவர்களை ஊரை விட்டு வெளியேற செய்தவர்கள், ஆனால் அந்த நாட்டு மக்களுக்காக அவர்கள் அந்த முடிவை எடுக்கிறார்கள்,ஏனெனில் அந்த நாட்களில் கொடிய பஞ்சம் இருந்தது, எந்த அளவுக்கு பஞ்சம் என்றால் தன் மகனையே சமைத்து சாப்பிடும் அளவுக்கு பஞ்சம் கொடியதாய் இருந்தது , அந்த குஷ்ட்டரோகிகள் தொடங்கிய காரியத்தால் நாட்டு மக்களுக்கு நன்மை.
அடுத்த உதாரணமாய் ஏன் நீங்கள் இருக்க கூடாது ?
எதாவது ஒரு காரியத்தை தேவனுக்காக நீங்கள் ஏன் தொடங்க கூடாது ?
ரூத் , யோனத்தான் , தாவீது ,நெகேமியா இவர்களுகெல்லாம் சூழ்நிலைகள் சாதகமாக இல்லை , சாதகமான சூழ்நிலைக்காக அவர்கள் காத்திருக்கவில்லை, மற்றவர்களுக்காக அவர்கள் காத்திருக்கவில்லை.மறவர்களும் அவர்களுக்கு சாதகமாக இல்லை, அவர்கள் தொடங்கினார்கள் . எழுப்புதலை பெற்றுக்கொண்டார்கள் ,
எதற்காக உங்கள் காத்திருக்குதல் ? மற்றவர்கள் துணைக்கு வேண்டுமா ? மற்றவர்கள் உங்களை தூண்ட வேண்டுமா ?
அல்லது நாம் மற்றவர்களை தூண்டுவோமா ?
அல்லது தேவனுடைய வார்த்தை உறுதி பட காத்து காலத்தை கடத்துகிறோமா ?
உங்கள் ஆரம்பத்தை யாரும் கண்டுக் கொள்ளாமல் இருக்கலாம் , ஆனால் எழுப்புதல் நிச்சயம். எதை தொடங்கவேண்டும் ? தேவனிடம் கேளுங்கள்
அற்பமான ஆரம்பத்தை அசட்டை செய்யாதே ... என்று வேதம் சொல்லுகிறது
DO THE BEST GOD WILL DO THE REST என்று நாம் கேள்விப்பட்டு இருப்போம்.
உங்களில் நற்கிரியையை தொடங்கினவர் தேவன் ...
தேவன் ஏற்கனவே நற்கிரியையை தொடங்கி இருக்க , நாம் ஏன் காத்திருக்க வேண்டும் ...
இது சிந்திக்கும் காலம்மட்டுமல்ல , செயல்படும் நேரமும் இது தான்,
மௌனமாய் இருக்காதே ...

Wednesday, November 24, 2010
மனிதனின் மறுபக்கம் - cricket .
இப்பொதுத்தான் test match முடிந்தது, இந்திய அணி வெற்றிப் பெற்றது . நாம் ஆவலுடன் எதிர்பார்த்த டெண்டுல்கர் 50 th century' ஐ தொட இன்னும் ஒரு match காக்க வேண்டும் .
cricket ஏன் இவ்வளவு புகழ் அடைந்தது என்று எனக்கு புரியவில்லை. எப்படியோ cricket ஒரு விளையாட்டாய் இருந்தாலும் அது மனிதனின் இன்னொரு பரிமாணத்தை காட்டுவதாகவே உள்ளது ... அது என்ன , மறுபக்கம் .... கொஞ்சம் யோசிங்க ....

நான் அப்பிடியே ஷாக் ஆயிட்டேன் !!!
சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு நான், எனது சபை மூப்பரும் , என் குடும்ப நண்பருமான திரு .சுந்தர் ராஜன் அண்ணன் வீட்டிற்க்கு சென்றேன் , நேரம் கிடைக்கும்போது நான் அங்கு செல்வது வழக்கம், பொதுவாக நாங்கள் எல்லா TOPIC'ஐயும் பேசுவோம் . அண்ணன் பொதுவாக பேசுவார் .குறிப்பாக, நாட்டு நிலைமை முதல் ரோட்டு நிலைமை வரை தனது ஆதங்கத்தை பகிர்ந்து கொள்ளவார், ஏனென்றால் எனக்கும் அந்த ஆதங்கம் உண்டு என்பது அவருக்கு தெரியும். திருமதி சுந்தர் ராஜன் (நான் அவர்களை அண்ணன் , அக்கா என்று அழைப்பேன் ) அவர்கள் நன்றாக காரியங்களை புரிந்து கொண்டு விளக்ககூடியவர், நான் அவர்களிடம் என்னுடைய கேள்விகள், எனக்கு அறிவுரைகள் ,...பொதுவாக என் சம்பந்தப்பட்ட எந்த விஷயத்தையும் பகிர்ந்துக் கொள்வேன், ஏனென்றால் சிலநேரங்களில் நான் தவறு செய்திருக்க கூடும், எனவே மறைக்காமல் சொல்லி அறிவுரைகளை கேட்டுக்கொள்வேன், எங்களுடைய 70 % பேச்சு, வேதத்தை பற்றி , தேவனைப்பற்றியதாக இருக்கும்.
ஒருமுறை நான் என்னை சுற்றி நடந்த விஷயங்களால் சற்று பாதிக்கப்பட்டு அக்காவிடம் புலம்பிக்கொண்டு இருந்தேன், ஏன் இப்படி நடந்துக் கொள்கிறார்கள், கடவுள் இவர்களை கேட்கமாட்டாரா, இப்படி மாற்றவர்கள் மேல் இருந்த கோபத்தை கடவுள் பக்கமாக திருப்பிவிட்டேன்,கடவுள் ஏன் இப்படி இருக்கிறார், கடவுள் சில விஷயங்களை உடனே செய்தால், தானே எலோருக்கும் பயம் வரும், என்று புலம்பினேன் , ஆனால் எனக்கு ஒன்று தெரியாமல் போய்விட்டது அந்த உரையாடலில் நங்கள் மட்டுமல்ல கடவுளும் இருந்தார் என்பது, அக்காவும் நான் சொன்னதுபோலவே சொல்லி, பிறகு "நா ஒரு book'அ படிச்சேன்,அதுல ஒரு வசனம் இருக்குப் பாரு" என்று சொல்லி வேதத்தில் இருந்து அந்த வசனத்தை எடுக்க வேதத்தை புரட்டினார்கள். அதே சமயம் " நானும் ஒரு அதிகாரத்த படிச்சேன் அக்கா, நல்லா இருக்கு"ன்னு சொல்லி அந்த அதிகாரத்தை எடுத்தேன், அது ரோமர் 12 .
நான் அந்த அதிகாரத்தை படிக்க காரணம் இருக்கிறது, அதை நான் பிறகு சொல்லுகிறேன்.
அந்த வாரத்தில் மட்டும் நான் ரோமர் 12 ம் அதிகாரத்தை பலமுறை படித்து இருந்தேன். 11 ம் அதிகாரத்தில் உள்ள கடைசி வசனத்தையும் படித்தேன், ஆனால் அதற்கு மேல் உள்ள வசனத்தை நான் பார்க்கவில்லை. அன்று நான் ரோமர் 12 ம் அதிகாரத்தை எடுத்தவுடன் என் கண்ணில் பட்ட வசனமும் ,அக்கா எடுத்த வசனமும் ஒரே அர்த்தத்தை சொல்லிற்று, ஆனால் அக்கா எடுத்த நிருபமும் அதிகாரமும் வேறு ...அந்த 2 வசனத்தையும் பார்ப்போம்.
ரோமர் 11:34 : கர்த்தருடைய சிந்தையை அறிந்தவன் யார் ? அவருக்கு ஆலோசனைக்காரனாய் இருந்தவன் யார் ?
35 :தனக்கு பதில்கிடைக்கும்படிக்கு முந்தி அவருக்கு ஒன்றைக் கொடுத்தவன் யார் ?
அக்கா எடுத்த வசனம் : 1 கொரிந்தியர் 2 : 16 : கர்த்தருக்கு போதிக்கதக்கதாக அவருடைய சிந்தையை அறிந்தவன் யார் ? எங்களுக்கோ கிறிஸ்துவின் சிந்தை உண்டாயிருக்கிறது ...
இதை படித்தப் பிறகு நாங்கள் தேவனும் எங்கள் உரையாடலில் கலந்துகொண்டார் என்று உணர்ந்தோம் .
அந்த உணர்வு எப்படி இருந்தது என்றால் " நீ யாருடா மகனே, என்னை கேள்வி கேட்க ? என்று கேட்டதுப்போல் இருந்தது, ஒருபக்கம் கேள்விக்கு பதில் கிடைத்தது என்ற சந்தோஷம், மறுபக்கம் 2 வது முறையாக நான் அப்பிடியே ஷாக் ஆயிட்டேன் !!!.

Monday, November 22, 2010
புதிய மனிதா ....பூமிக்கு வா ...
புதிய மனிதா ....பூமிக்கு வா ..... என்ற பாடலை நேற்று காலை எனது நண்பனை cell phone'ல் அழைத்தபோது நான் கேட்டேன் ,அவருடைய caller tune அதுவாக இருந்தது , என்னுடைய நோக்கம் அவரை சபைக்கு போக சொல்லுவது . ஏன் நான் அவரை அவ்வாறு சொல்ல வேண்டும். ஏனென்றால் என்னை ஒருவர் இவ்வாறாக வருந்தி அழைத்ததால் நான் சபைக்கு சென்றேன்,என் கேள்விகளுக்கு பதிலை பெற்றுக்கொண்டேன்.அதை பின் வரும் நாட்களில் விவரிக்கிறேன் . சரி ,
உண்மையாக புதிய மனிதன் இருக்கிறானா , எங்கு இருக்கிறான் ?
வேதம் என்ன சொல்லுகிறது என்று பார்ப்போம் ...
2 கொரிந்தியர் 5 : 17 - இப்படியிருக்க ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான் ; பழையவைகள் ஒழிந்துபோயின .எல்லாம் புதிதாயின ...
இது எப்படி என்று நீங்கள் கேட்கலாம்...அதே அதிகாரத்தில் 21 வது வசனம் - நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படி , பாவம் அறியாத அவரை நமக்காக பாவமாக்கினார் . என்று பார்க்கிறோம் ... நமக்காக அவரே பலியானார் என்று வேதம் சொலுகிறது. ஏன் அவர் நமக்காக பலியானார்? அருமையானவர்களே மனிதன் பாவம் செய்து தேவனிடம் இருந்த தொடர்பை துண்டித்துக்கொண்டான். வேதம் சொல்லுகிறது நம்முடைய பாவமே நமக்கும் தேவனுக்கும் நடுவே பிரிவினை சுவராய் இருக்கிறது, பாவத்தின் சம்பளம் மரணம் என்று வேதம் தெளிவாக கூறுகிறது.
இதற்கு வேறு வழி இல்லையா? நான் மரித்தால்தான் விமோசனமா ?
வழி இருக்கிறது அன்பானவர்களே ...! குற்றமில்லாத ஒருவர் நமக்காக மரிக்க வேண்டும், இந்த பூமியிலே குற்றமில்லாமல் யார் இருக்கமுடியும், விலங்குகளை பலி இடலாமா ? ஆனால் விலங்கிற்கு குற்றம் என்றால் என்னவென்றே தெரியாது. இப்படியானால் எனக்காக யார் மரிப்பார். இதற்க்க்காகதான் இயேசு உலகத்தில் மனிதனாய் பிறந்து 100 % மனிதனாய் வாழ்ந்து குற்றமில்லாமல், பாவமில்லாமல் நமக்காக சிலுவையில் பலியானார், எனக்காக, என் பாவத்திற்காக இயேசு மரித்தார் இதை நம்பினால் போதும், நாம் கிறிஸ்துவை நம் உள்ளத்துக்குள் வர அனுமதிக்கிறோம். அதுமட்டும் போதாது அவர் நம் உள்ளத்திற்குள் வந்துவிட்டால், அவருடைய சுபாவங்களை நாம் பிரதிபலிபோம். அவர் நம்மிலே, நாம் அவரிலே நிலைத்து இருந்தால் நிச்சயமாக நாம் நம்முடைய பழைய சுபாவங்களை விட்டு புதிய மனிதனாய் இருப்போம் .இயேசு: நானே வழியும்,சத்தியமும் ,ஜீவனுமாயிருக்கிறேன் என்று கூறுகிறார்.
அடுத்து ரோமர் 12 : 2 நீங்கள் இந்த பிரபஞ்சத்துக்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக ,உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள் .
இந்த அதிகாரத்தை நீங்கள் படித்தால் மனம் மறுரூபமாக என்ன செய்யவேண்டும் என்று தெரியும் ... படியுங்கள் , பயிற்சி செய்யுங்கள், புதிய மனிதனை பூமிக்கு வர விடுங்கள். உங்கள் எண்ணங்களை எனக்கு தெரியப்படுத்துங்கள் ....prithiviraj23@gmail .com மூலமாக ...

திருஷ்டாந்தங்கள்
இன்று ஞாயிறு .... காலை வேலை , ஆம் , சபை கூடி வரும் நேரம் ...
கர்த்தருடைய சபைக்கு சென்றேன் , செய்தியை கேட்டேன் , இதோ செய்தி சுருக்கம் ...
போதகர் : விட்டு கொடுப்பவர்கள் மாற்றத்தை எதிர்பார்க்காமல் தங்களை மாற்றிக்கொள்ளுகிறார்கள் ,
... என் வீட்டில் இருந்த கம்ப்யூட்டர் சரியாக இயங்கவில்லை , கம்ப்யூட்டர் சரி செய்ய service engineer'ம் வந்தார் ,கம்ப்யூட்டர் 'ஐ பார்த்துவிட்டு அவர் கேட்டார் உங்கள் CD-DRIVE வேலை செய்யுமா ? என்று ...CD-DRIVE வேலை செய்தால் உங்கள் கம்ப்யூட்டர்'ஐ நான் சரி செய்துவிடுவேன் என்றார் ... ஆனால் CD -DRIVE வேலை செய்யவில்லை , வேறே CD-DRIVE'ஐ மாற்றிய பிறகு கம்ப்யூட்டர் 'ஐ சரி செய்தார் ... இப்படித்தான் நாமும் கூட இருக்கிறோம் ...இது நம்மை போலத்தான் , நம் வாழ்க்கயை காண்பிக்கிறதாய் இருக்கிறது , தேவனோடு POINT OF CONTACT இல்லாதவர்களாய் நாம் இருக்கிறோம் ..மிக நன்றாக நாம் தேவனுக்குள்ளாக இருப்போம் ஆனால் ஒரு சின்ன சோதனை வந்தால் சிக்கிவிடுவோம் , சபையிலே நாற்காலி காலியாக இருக்கும் ,மீண்டும் ஆரம்பிக்க வேண்டும் . RE-BOOT (OR ) RE-INSTALL செய்ய வேண்டிய அவசியம் இருக்கிறது ..!
எப்படி ஒரு CD-DRIVE வேலை செய்யாமல் இருந்ததால் கம்ப்யூட்டர்'ஐ சரி செய்ய முடியவிலையோ அப்படியே நாமும் கூட நம்மை விட்டுக்கொடுக்காமல், சில காரியங்களை மாற்றிக்கொள்ளாமல், தேவனை நம்மிடம் கிரியை செய்யாமல் தடுக்கிறவர்களாய் இருக்கிறோம் ,,, எப்படி இது உண்மை தானா ... ? தேவனை நான் தடுக்க முடியுமா ? அருமையானவர்களே முடியும் (சங்கீதம் 78 : 42 ). ஆம் உலகம் கொள்ளக்கூடாத பெரிய தேவனை மட்டுப்படுத்த இந்த களிமண்ணலே முடியும் என்பதுத்தான் உண்மை ...எத்தனை கொடுமை ஐயா இது ...
கடல் எவ்வளவு பெரியதாய் இருந்தாலும் அது கடக்க கூடாதபடி எல்லையை குறித்தவர் அவர் அல்லவா...
எரேமியா 5 : 22 . கடல் எவ்வளவு பெரியது , எவ்வளவு பெரிய பெரிய அலைகள் வந்தாலும் அதை தடுப்பது எது தெரியுமா ... சிறு மணல்... ஆற்று மணல் கடல் மணலைவிட சற்று பெரியது ... அலையை தடுப்பது பெரிய கல்லோ அல்லது, பெரிய சுவரோ அல்ல ..சிறு மணல்.
நம்மிடம் உள்ள சின்ன சின்ன விஷயங்கள் கூட உலகம் கொள்ளக்கூடாத தேவனை நம்மிடம் செயலிழக்க செய்துவிடும் , எத்தனை பரிதாபம் ... நாம் சாத்தானை அல்லவா செயல்பட அனுமதிக்கிறோம் ...
தானியேல் 3 வேளையும் தவறாமல் ஜெபித்தான் , சட்டம் மாறியது , மீறினால் மரணத்தை தழுவ வேண்டியதுதான் ... ஆண்டவருக்காக மிறினான், ராஜாவை ஆண்டவருக்காக மாற்றிவிட்டான் (தானியேல் 6'ம் அதிகாரம் ).
சாத்ராக்,மேஷாக்,ஆபேத்நேகோ , என்பவர்கள் தங்கள் உயிரையும் ஒரு பொருட்டென்று எண்ணாமல் பொற்ச்சிலையை வணங்காமல் , அக்கினிக்கு தங்களை ஒப்பு கொடுத்தனர் , தேவனை அக்கினிக்கு இறக்கினார்கள் (தானியேல் 3).
மோசே பார்வோனுடைய மகன் எனபடுவதை வெறுத்து துன்பத்தை அனுபவிப்பதை தெரிந்துகொண்டு , கிறிஸ்துவினிமித்தம் வரும் நிந்தையை அதிக பாக்கியம் என்று எண்ணினான் (எபிரெயர் 11 : 24 -26) ,ஒரு நாட்டையே வழிநடத்தினான் , தேவனை நண்பன் ஆக்கினான்....
எஸ்தர் தன்னை விட்டுகொடுத்ததினால் 120 நாடுகளிலுள்ள மக்களை காப்பாற்றினாள்(எஸ்தர் 1)
பவுல் தனக்கு இருக்கும் முள் மிக பாரமாய் இருந்தாலும் அதையும் பொருட்படுத்தாமல் எத்தனை ஊழியங்களை செய்தான் ,எத்தனையோ நாடுகளுக்கு கிறிஸ்துவை கொண்டு சென்றான் .
வில்லியம்கேரி ஊழியத்திநிமிதம் தன்னுடைய மகனை இழந்த நிலைமைலே சவத்தை அடக்கம் செய்யக்கூட வழி இல்லாமல் தானே தன்னுடைய மகனுடைய சவத்தை தானே அடக்கம் செய்தார், அதை பார்த்த அவரது மனைவிக்கு பைத்தியம் பிடித்துவிட்டது, அவர் ஆயிரக்கணக்கான மக்களை தேவனுக்கென்று ஆதாயப்படுத்திகொண்டார் என்று வரலாறு சொல்லுகிறது . ஏன், எதற்காக இந்த பாடுகள்...., நீங்களும் நானும் தேவனை அறிந்துக்கொள்ள ...
எத்தனையோபேர் தங்கள் உயிரையும் பாராமல் கிறிஸ்துவை அறிவித்ததினால் நாம் இன்றைக்கு இத்தனை சுகங்களோடு ,கல்வியோடு, அறிவோடு , கிறிஸ்துவோடு இருக்கிறோம் , இதை மறந்து நாம் எப்படி இருக்கமுடியும் ...
நாம் எதை ஆண்டவருக்காக, மற்றவருக்காக இழக்க ஆயத்தமாய் இருக்கிறோம்?
இயேசு தன் மரணதருவாயிலும் தன் வலியையும் , தன் வேதனையை பாராமல் ஒரு கள்ளனை ஆதாயப்படுத்திக்கொள்வதை வேதத்தில் பார்க்கிறோம் ... எது நம்மை தடுக்கிறது ,,, நம்முடைய STATUS , நம்முடைய பெருமை, மன்னிக்க முடியாதத்தன்மை, நம்முடைய கசப்பு, நம்முடைய வேதனை, எது நம்மை தேவனிடம் இருந்து தடுக்கிறது, அல்லது எது தேவனை நம்மிடம் கிரியை செய்யவிடாமல் தடுக்கிறது, விட்டுக்கொடுப்போம் அருமையானவர்களே விட்டுக்கொடுப்போம் , தேவனுடைய மகத்துவத்தை காண்போம் ...!
ஆதலால் மேகம் போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மை சூழ்ந்து இருக்க .... சாக்கு சொல்லவே முடியாது ... இப்படி செய்யாமல் போனால் உம்முடைய இராஜ்ஜியம் வருவதாக என்று நாம் பொய் சொல்லுவதாக இருக்கும் ... மாற்றத்தை விரும்பி நம்மை மாற்றிகொள்வோம்...
செய்தி : (தேவன்- சார்லஸ் தாசன் மூலமாக ...)
கேள்வியின் நாயகனுக்கு இன்னுமொரு பதில் ..ஆம் ... நான் ஜெபிப்பதில் சோர்ந்துவிட்டேன் , தேவனிடம் கேட்டேன் , என்னிடம் என்ன கோளாறு , எதை நான் சரி செய்ய வேண்டும் என்று , சரியான பதில் . செய்தி முடியும்முன் ஓவென்று கத்தி அழ வேண்டுமென்று இருந்தது எனக்கு , அழுகையும் வந்துவிட்டது ,என்னை அடக்கிகொண்டேன், எனக்குள் ஏதோ செய்தது . ஏனென்றால் , ஏசாயா : 4 படி அவர் என்னை காலைதோறும் எழுப்புகிறார், நானோ எழுந்து என் பணியை செய்யாமல் வேறு எதையாவது யோசித்து கொண்டு இருக்கிறேன் ,சில நேரங்களில் மட்டுமே ஜெபிக்கிறேன் ... என் இந்த நிலைமை மாற்றப்பட வேண்டும், நான் என்னை மாற்றிக்கொள்ள தேவன் எனக்கு உதவி செய்வராக.....ஆமென்.

Sunday, November 21, 2010
நம்மை விட்டு கொடுப்போம் , ஆசீர்வாதத்தை பெற்று கொள்வோம்
நேற்று மாதத்தில் 3 வது சனிக்கிழமை , ஆம்மாம் என்ன அதற்கு ? என்று கேட்கலாம் , 3 வது சனிகிழமை என் வீட்டில் ஜெப கூடூகை , ஆரம்ப ஜெபத்தை தொடர்ந்து 2 பாடல் பாடினோம் , பின்னர் சாட்சி (தேவன் கடந்த மாததில் என்ன நன்மை செய்தார் என்று சொல்ல வேண்டும்) . எல்லாரும் சாட்சி சொன்னோம் , பின்னர் செய்தி ....
வேதத்தில் இருந்து ஒரு மனிதனின் வாழ்வில் நடந்த சம்பவங்களின் அடிபடையில் நம்முடைய வாழ்வில் நாம் எப்படி செயல்படுகிறோம் என்பதுதான் எப்போதும் செய்தின் அடிப்படையாக இருக்கும் .எல்லா செய்தியும் அப்படிதானே .
இதில் என்ன வித்தியாசம் என கேள்வி வரும் , கேள்வின் மன்னனான எனக்கு இப்படி தான் கேள்விகள் உதிக்கும் .
ஆனால் ஒரு உண்மை என்னவென்றால் செய்தி எதுவாய் இருந்தாலும் நான் என்னை விட்டு கொடுக்கும்போது செய்தி தன் வேலையை செய்ய ஆரம்பிக்கும் , இது என்னுடைய அனுபவம் ! எதை விட்டு கொடுக்கவேண்டும் என்பது அந்த நேரத்தில் நமக்கே தெரியும் , இதைதான் ஆவியானவரின் இடைபடுதல் என்று சொல்லுகிறார்கள் .
சரி செய்திதான் என்ன ? ஆதியாகமம் 31 : 25 - 34
யாக்கோபு என்னும் ஒருவன் தான் குடும்பத்துடன் தன் மாமனார் வீட்டிலிருந்து தன்னுடைய சம்பாத்தியத்தை எல்லாம் எடுத்து கொண்டு மாமானாருக்கு தெரியாமல் புறப்பட்டு வந்து விடுகிறான் .
அவனுடைய மாமனாரின் பெயர் லாபான் -எப்போதுமே லாபத்திலே கண் அவனுக்கு .
தன் மருமகன் என்றும் பாராமல் பத்து முறை அவன் சம்பளத்தை மாற்றினான் ,
யாக்கோபு தன் மாமாக்கு தெரியாமல் வர இதுவும் ஒரு காரணம் , ஆனால் யாக்கோபுக்கு தேவனுடைய இரக்கம் இருந்ததினால் அவன் மாமா எத்தனை முறை சம்பளத்தை மாற்றினாலும் தேவன் யாக்கோபை ஆசீர்வதித்தார் !
யாக்கோபுவுக்கு இரண்டு மனைவிகள் , இருவரும் சகோதரிகள் , லாபானின் மகள்கள் .
யாக்கோபு புறப்பட்டு வரும்போது அவனின் 2வது மனைவி ராகேல் தன் தகப்பனுடைய சொருபங்களை திருடி கொண்டு வந்துவிடுகிறாள், இதை தேடி லாபானும் பின் தொடர்ந்து வருகிறான் . இது யாக்கோபுவுக்கு தெரியாது . லாபான் வந்து யாக்கோபுவிடம் தன் சொருபங்களை காணவில்லை என்று சொல்லி அவர்களுடைய கூடாரங்களை சோதனை செய்தான் . . . நிற்க. . .
இதற்கும் நமக்கும் என்ன ...நாம் தெரிந்தோ தெரியாமலோ கண்டிப்பாக பாவம் செய்கிறோம் , இது பிசாசின் காரியமாக இருக்கிறது எனவே அவன் நம்மை பின் தொடர்ந்து வருகிறான் ,சோதனைகளும் சேர்ந்து தான் ...!
இதை தான் இயேசு : இதோ இந்த உலகத்தின் அதிபதி வருகிறான் ,அவனுக்கு என்னிடத்தில் ஒன்றும் இல்லை என்று சொல்லுகிறார் ....ஏனென்றால் அவர் பாவம் அறியாதவராய் பூமியில் வாழ்ந்தார் .... நாம் சோதிக்கபடாதபடி பாவம் செய்யாமல் இருப்போமாக என்று வேதம் சொல்லுகிறது . ஏனென்றால் பாவம் பிசாசின் காரியமாய் இருக்கிறது ,நாம் அதற்கு இணங்கி கொடுக்க வேண்டாம் .
அடுத்து, ஆதியாகமம் 32 : 24 யாக்கோபு தன் சகோதரனுக்கு பயந்து தனியே இருக்கிறான் . சகோதரன் தன் சொந்த மாம்சம் . இப்பொது மாம்சம் நாமை தொடர்கிறது . மாம்சத்தின் காரியங்கள் வெளியரங்கமாய் இருகிறது என்று கலாத்தியர் 5 : 19 - 21 சொல்லுகிறது . ஆனால் ஆவியின் கனியோ ... அதற்கு எதிரிடையாக இருக்கிறது கலாத்தியர் 5 : 22 - 25 .
என்று வேதம் சொல்லுகிறது . ஆதலால் பிசாசுக்கும் , மாம்சத்துக்கும் இடம்கொடாமல்
நம்மை விட்டுகொடுத்து தேவனுக்கு பிரியமாய் வாழ்வோமாக .... !
இதுதான் செய்தி ... நம்மை விட்டு கொடுப்போம் , ஆசீர்வாதத்தை பெற்று கொள்வோம் ....

நம்ப முடியவில்லை...! அது ஒரு இனிய நாள்
அது ஒரு ஞாயிறு (sunday)... இனிய காலை நேரம் . ஆம் சபை கூடி வரும் நேரம் .அன்று என் நண்பரை சபைக்கு அழைத்து செல்வது என் எண்ணம் , அதற்கு காரணமும் உண்டு . அது ஒரு வித்தியாசமான தருணம் ...ஆம் ! உண்மை தான் .அது ஒரு வித்தியாசமான தருணம் ... அவரது வீட்டிற்க்கு சென்றேன் , வீட்டு முற்றத்தில் 55 வயது மதிக்க தக்க ஒரு பெண்மணி அழுது கொண்டு நின்றார் ..... முகமெல்லாம் கண்ணீர் ...அச்சச்சோ சோகத்தின் விளிம்பில் நின்றார் அவர் ... எனக்கு அப்பொழுது தெரியாது என் வாழ்வில் மிக முக்கியமான தருணம் அது என்று ... நண்பர் வந்தார் . இருவரும் இரு-சக்கர மோட்டார் வண்டியில் சென்று கொண்டிருக்கும்போது அவர் சொன்ன அந்த வார்த்தை என்னை அதிகமாக யோசிக்கவைத்துவிட்டது , நல்லவர்களுக்கே எப்போதும் பிரச்சனை என்பது தான் அது .
ஏன் அப்படி .?
கடவுள் என்னதான் செய்கிறார் ....நல்லவர்களையே தேடி தேடி சோதிக்கிறாரா ?
கேள்வியின் மேல் கேள்வி ... அந்த கடவுளிடம் ...
சபையின் வாயிலை அடைந்தோம் .
வண்டியை நிறுத்திவிட்டு சபைக்கு செல்வதற்காக முதல் படி எடுத்து வைக்கும் நேரத்தில் மின்னல் போன்ற ஒரு எண்ணம் ,,,
நம்ப முடியவில்லை. ஆம் என் கேள்விக்கு பதில் தான் அது !
அக்கினியில் தான் தேவனை பார்க்க முடியும் ,
இது தான் அந்த எண்ணம் .
அது ஒரு வேத பகுதி. நான் ஏற்கனவே ஒரு முறை என் சிறு வயதில்
படித்த பகுதி தான் அது வேதத்தில்(bible) இருந்து ... என் கேள்விக்கு பதில் கிடைத்த சந்தோஷம் ஒரு பக்கம் இருக்க, கூடவே சந்தேகம் ஒரு பக்கம் , உண்மையாகவே தேவனுடைய வார்த்தைதான என்று ?
ஆம் சந்தேகம் வேண்டாம் அது தேவனுடைய வார்த்தை தான் , என் மனம் தெளிவானது
கேள்வியில் இருந்து மீண்டது ,தெளிந்த நீரோடை போல் இருந்தது அப்பொழுது எனக்கு !
அது தானியேல் 3 : 25 .
ஒரு பக்கம் கொழுந்து விட்டெறியும் நெருப்பு .
மறு பக்கம் ராஜாவின் பொற்சிலை.
இன்னொரு பக்கம் தேவன் .
பொற்சிலையை வணங்கினால் உயிர் தப்பும் ,தேவனுக்காக பொற்சிலையை வணங்க மறுத்தால்........அடுத்த கணம் தீக்கு இரை ஆகவேண்டும் என்பது ராஜாவின் கட்டளை .ஏற்கனவே கைதியாக கொண்டுவரப்பட்டவர்கள் சாத்ராக் ,மேஷாக்,ஆபேத்நேகோ எனவே நிச்சயமாக ஒரு பெரிய பாடுகள் ,துன்பங்கள் ,பயம் இவையெல்லாம் இருந்து இருக்கும் .
பாபிலோன் ராஜாவான நேபுகாத்நேச்சாரின் தாரள மனபாங்கு, அடிமைகளுக்கு பயிற்சி, அரசாங்க வேலைக்காக ,தேர்ச்சி பெற்றனர் மூவரும் . அந்நிய நாட்டினில் அடிமைக்கு அரசாங்க வேலை கிடைப்பதே பெரிய விஷயம் ! இந்த நேரத்தில் இப்படி ஒரு சோதனையா ?
ஊரோடு ஒத்து போவது தானே அறிவாளிக்கு அழகு !
பொற்சிலையா அல்லது தேவனா ?
பொற்சிலையை வணங்கினால் உயிர் தப்பும்.
யோசிக்கவில்லை அடுத்தகணம் அந்த 3 பேரும் எடுத்த முடிவு
தேவனை அக்கினியில் இறக்கியது ...! என்ன ஒரு பதில் என் மனதில் .... நம்ப முடியவில்லை...!
அது ஒரு இனிய நாள் ...!

Subscribe to:
Posts (Atom)
ஊற்று கேட்கும் தேவன் உடனடி பதில் - 2 : மேவிபோசேத் - கண்ணீரை துடைக்க கர்த்தர் உண்டு கலங்காதே
அப்பொழுது நானும் ஏன் குடுபத்தினரும் சபைக்கு சென்றுக்கொண்டிருந்தோம் . சில நாட்களாக பிரச்னைககளால் மனம் நொந்து என் குடுபத்திரிடம் நான...
-
எசேக்கியா ராஜா - அறிமுகம். ( http://en.wikipedia.org/wiki/Hezekiah ) கடந்த வாரங்களில் நடந்த வேதப்பாடங்களில் நான் கேட்டது. செய்தி : சார்லஸ்...
-
அப்பொழுது நானும் ஏன் குடுபத்தினரும் சபைக்கு சென்றுக்கொண்டிருந்தோம் . சில நாட்களாக பிரச்னைககளால் மனம் நொந்து என் குடுபத்திரிடம் நான...
-
எசேக்கியா ராஜா -2 (வைராக்கியம்) எசேக்கியாவின் அறிமுகத்தை ( http://prithiviraj23.blogspot.com/2011/10/blog-post.html ) பார்த்தோம். தன்னு...