உங்க கிருபை தான் என்னை தாங்குகின்றது,
உங்க கிருபை தான் என்னை நடத்துகின்றது ... என்ற பாடலுடன் இன்றைய செய்தி ஆரம்பித்தது. எங்கள் சபை போதகர், Dr.Joe Prem kumar அவர்களை செய்தி கொடுக்கும் படி அழைக்க அவர் வந்தவுடன் இந்த பாடலை பாடி செய்திக்குள் அழைத்து சென்றார்.
இந்த செய்தி நான் பயிற்சி செய்துக்கொண்டிருக்கும் ஒரு செயல்முறையை அடிப்படியாக கொண்டது. அது எதையும் உணர்ந்து சொல்லுவது. இவ்வாறாக செய்தால் முடிந்தவரை நாம் நமக்கே உண்மையாக இருக்க முடியும். சரி செய்திக்கு வருவோம்.....
ஒரு விசுவாசியின் வாழ்வில் அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தை எது ?....
BROTHER உங்களுக்கு போன வாரம் உடம்பு சரியில்லைன்னு சொன்னிங்களே இப்போ எப்படி இருக்கு BROTHER ...பதில் என்ன தெரியுமா? கர்த்தருடைய கிருபைல நல்லா இருக்கேன் BROTHER, SISTER நல்லா இருக்கீங்களா? கர்த்தருடைய கிருபைல நல்லா இருக்கேன் BROTHER .
தம்பி வேலைக்காக நாம ஜெபித்தொமே இப்போ என்ன பண்றீங்க தம்பி ?
கர்த்தருடைய கிருபைல நல்ல வேலை கிடைச்சிடுச்சு BROTHER . இங்க என்ன வார்த்தையை நாம் அடிக்கடி பயன்படுத்தினோம்?.... ஆம் கிருபை, நாம் பலமுறை கிருபை என்ற வார்த்தையை மிக சாதாரணமாக பயன்படுத்துகிறோம். கிருபை என்னவெல்லாம் செய்யும்? கிருபை என்ற வார்த்தையின் சத்துவம் என்ன ? வாசிக்கலாம்
தீத்து(TITUS) 2 : 11,12...
11. ஏனெனில் எல்லா மனுஷருக்கும் இரட்சிப்பை அளிக்கத்தக்க தேவகிருபையானது பிரசன்னமாகி,...
தேவ கிருபையானது எல்லா மனுஷருக்கும் பிரசன்னமாகி .... நல்லவருக்கும் , பாவிகளுக்கும் தேவ கிருபையானது பிரசனமாகுகிறது . சரி இந்த கிருபை என்ன செய்கிறது என்று 12 வசனத்தில் பார்க்கலாம் ....
12. நாம் அவபக்தியையும் லௌகிக இச்சைகளையும் வெறுத்து, தெளிந்தபுத்தியும் நீதியும் தேவபக்தியும் உள்ளவர்களாய் இவ்வுலகத்திலே ஜீவனம்பண்ணி, ....
இங்கு 5 காரியங்களை கிருபை செய்கிறது என்று பார்க்கிறோம் .
முதலாவது , அவபக்தி ... கர்த்தருக்கு பிடிக்காத எல்லாமே அவபக்தித் தான் ..
உதாரணமாக cigarette பிடிப்பது கர்த்தருக்கு பிடிக்குமா ? கண்டிப்பாக பிடிக்காது . இது தான் அவபக்தி .
இரண்டாவதாக லௌகிக இச்சை. அது என்ன brother லௌகிக இச்சை (worldly lust) இந்த உலகத்தோடு சம்பந்தம் உடைய, தேவனுக்கு பிரியமில்லாத காரியங்கள்.
உதாரணமாக : ஒரு sister எல்லா ஞாயிறு ஆராதனைகளிலும் கலந்துக்கொள்வார்கள் . ஞாயிற்று கிழமைகளில் நடக்கும் ஒரு ஆராதனையை கூட தவறவிடுவதில்லை . ஆனால் அவர்கள் புதன் கிழமை prayer meeting மட்டும் வருவதே இல்லை. இதை அந்த சபை போதகர் ஒரு நாள் அவரது வீட்டிற்க்கு சென்று கேட்டுவிட்டார். அதற்கு அந்த sister, அதுவா pastor புதன் கிழமை தான் சித்தி வரும் . உடனே அந்த pastor , இந்த sister எவ்வளவு நல்லவர்கள், சித்தியை நன்றாக கவனிக்கிறார்கள் என்று சொல்லி சித்திக்கும் சேர்த்து ஜெபித்துவிட்டு வந்தாராம், சித்தி என்பது T.V யில் வரும் mega serial என்று தெரியாத PASTOR . ... இச்சைகளில் இருந்து விடுபடுவது சற்று கடினம் . ஆனால் கிருபை
அவபக்தியையும் லௌகிக இச்சைகளையும் வெறுக்க வைக்கிறது .
மூன்றவதாக கிருபை தெளிந்த புத்தியை (SOUND MIND ) தருகிறது .
நான்காவதாக நீதியை தருகிறது , இன்னொரு வார்த்தையில் சொன்னால் நீதிமான்களாக்கி இருக்கிறது .
வேதம் சொல்லுகிறது நாம் நீதிமான்களாக்கபட்டு இருக்கிறோம் என்று ! .
இப்போ ஒரு கேள்வி , நாம் நீதிமான்களாக்கபட்ட படியால் நாம் நீதி செய்கிறோமா அல்லது நீதி செய்வதினால் நீதிமான்களாக்கப்பட்டோமா?
பதில் : நாம் நீதிமான்களாக்கபட்டபடியால் நீதி செய்கிறோம் .
உதாரணமாக DOCTOR ஆனபடியால் DOCTOR க்கு PRACTICE செய்கிறேனா ? அல்லது DOCTOR ஆக PRACTICE செய்வதால் DOCTOR ஆனேனா ?
DOCTOR ஆனபடியால் DOCTOR க்கு PRACTICE செய்கிறேன் . ...
இப்படித்தான் தேவன் நம்மை நீதிமான்களாக்கிவிட்டார். அடுத்து
ஐந்தாவதாக தேவபக்தி. இங்கு இந்த வசனம் முழுமை பெறுவதை நாம் கவனிக்க வேண்டும். முதலாவது அவபக்தியை வெறுத்து என்று பார்க்கிறோம், கடைசியாக தேவபக்தியுள்ளவர்களாய், என்று பார்க்கிறோம் . இங்கு, ஜீவனம் பண்ணி என்ற வார்த்தையை கவனிக்க வேண்டும் . இவை எல்லாம் இந்த பூமியிலே கடைபிடிக்க வேண்டியவையே . இவ்வுலகத்தில் ஜீவனம்பண்ணி என்று தெளிவாக பார்க்கிறோம் .
எனவே கிருபை ....
நாம் அவபக்தியையும் லௌகிக இச்சைகளையும் வெறுத்து, தெளிந்தபுத்தியும் நீதியும் தேவபக்தியும் உள்ளவர்களாய்.... இருக்க உதவி செய்கிறது .
கர்த்தருடைய கிருபைக்காக ஸ்தோத்திரம் . ..
இனி இந்த கிருபை என்ற வார்த்தையின் சத்துவத்தை உணர்ந்து சொல்வோம் .
உங்க கிருபை தான் என்னை தாங்குகின்றது ,
உங்க கிருபை தான் என்னை நடத்துகின்றது ...
உங்கள் கருத்துக்களை prithiviraj23@gmail.comக்கு தெரியப்படுத்துங்கள்
Sunday, January 16, 2011
ஊற்று கேட்கும் தேவன் உடனடி பதில் - 2 : மேவிபோசேத் - கண்ணீரை துடைக்க கர்த்தர் உண்டு கலங்காதே
அப்பொழுது நானும் ஏன் குடுபத்தினரும் சபைக்கு சென்றுக்கொண்டிருந்தோம் . சில நாட்களாக பிரச்னைககளால் மனம் நொந்து என் குடுபத்திரிடம் நான...
-
எசேக்கியா ராஜா - அறிமுகம். ( http://en.wikipedia.org/wiki/Hezekiah ) கடந்த வாரங்களில் நடந்த வேதப்பாடங்களில் நான் கேட்டது. செய்தி : சார்லஸ்...
-
அப்பொழுது நானும் ஏன் குடுபத்தினரும் சபைக்கு சென்றுக்கொண்டிருந்தோம் . சில நாட்களாக பிரச்னைககளால் மனம் நொந்து என் குடுபத்திரிடம் நான...
-
எசேக்கியா ராஜா -2 (வைராக்கியம்) எசேக்கியாவின் அறிமுகத்தை ( http://prithiviraj23.blogspot.com/2011/10/blog-post.html ) பார்த்தோம். தன்னு...