Saturday, January 22, 2011

மிக அருகில் இருந்தும் மிக தொலைவு (SO CLOSE BUT YET SO FAR)

மிக அருகில் இருந்தும் மிக தொலைவு (SO CLOSE BUT YET SO FAR).....
2 நாட்கள் முன்பு அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தேன், நானும் என் நண்பனும் மின்சார ரயிலில் வழக்கம் போல பேசிக்கொண்டே வந்தோம் . என்னுடைய இறங்கும் நிலையம் வந்துவிட்டது , எனவே நான் அவனிடம் விடை பெற்றுக்கொண்டு இறங்க ஆயத்தமானேன் . அவனோ... ம்ம்ம்ம்ம்ம்ம்ம்....  இன்னும் 25 நிமிடங்கள் நான் போக வேண்டும் என்றான் , உடனே நான் , என்ன அடுத்த 5 நிமிடத்தில் உன்னுடைய இறங்கும் நிலையம் வந்துவிடுமே என்றேன் ! . அவன் சொன்னான், எங்க வரும் , வண்டியை வழக்கம் போல signal ல் நிறுத்தி விடுவார்கள் என்றான் . உடனே எனக்கு இதுதான் ஞாபகம்  வந்தது. அவன் இறங்கி நடந்தாலே போதும் 15 நிமிடத்தில் வீட்டிற்கே  போய் சேர்ந்து விடுவான். இப்படித்தான் நாமும் நம்மை காண்கின்ற  தேவனை நாம் காணாமல், எங்கெங்கோ தேடிக்கொண்டு இருக்கிறோம். அவருக்காக நேரம் ஒதுக்கினாலே போதும் நாம் அவரை மிக அருகிலே ஒரு நண்பனை போல காண முடியும். அவருக்கு நேரம் ஒதுக்கவில்லை என்றால் அவர் நமக்கு மிக அருகில் இருந்தும் நாம் அவரை  காணமுடியாது . இது நம் வீட்டை எதிரிலேயே வைத்துக்கொண்டு ஊரெல்லாம் தேடுவதுபோலத்தான் . இதை தான் வேதம் கர்த்தரிடத்தில் சேருங்கள், அவர் நம்மிடத்தில் சேருவார்  என்று சொல்லுகிறது.

Sunday, January 16, 2011

கிருபை

உங்க கிருபை தான் என்னை தாங்குகின்றது,
உங்க கிருபை தான் என்னை நடத்துகின்றது ... என்ற பாடலுடன் இன்றைய செய்தி ஆரம்பித்தது. எங்கள் சபை போதகர், Dr.Joe Prem kumar அவர்களை செய்தி கொடுக்கும் படி அழைக்க அவர் வந்தவுடன் இந்த பாடலை பாடி செய்திக்குள்  அழைத்து சென்றார்.
இந்த செய்தி நான் பயிற்சி செய்துக்கொண்டிருக்கும் ஒரு செயல்முறையை அடிப்படியாக கொண்டது. அது எதையும் உணர்ந்து சொல்லுவது. இவ்வாறாக செய்தால் முடிந்தவரை நாம் நமக்கே  உண்மையாக இருக்க முடியும். சரி செய்திக்கு வருவோம்.....
ஒரு விசுவாசியின் வாழ்வில் அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தை எது ?....
BROTHER  உங்களுக்கு போன வாரம் உடம்பு சரியில்லைன்னு சொன்னிங்களே இப்போ எப்படி இருக்கு BROTHER ...பதில் என்ன தெரியுமா? கர்த்தருடைய கிருபைல நல்லா இருக்கேன் BROTHER, SISTER நல்லா இருக்கீங்களா?   கர்த்தருடைய கிருபைல நல்லா இருக்கேன் BROTHER .
தம்பி வேலைக்காக நாம ஜெபித்தொமே இப்போ என்ன பண்றீங்க தம்பி ? 
கர்த்தருடைய கிருபைல நல்ல வேலை கிடைச்சிடுச்சு BROTHER . இங்க என்ன வார்த்தையை நாம் அடிக்கடி பயன்படுத்தினோம்?.... ஆம் கிருபை, நாம் பலமுறை கிருபை என்ற வார்த்தையை மிக சாதாரணமாக பயன்படுத்துகிறோம். கிருபை என்னவெல்லாம் செய்யும்?  கிருபை என்ற வார்த்தையின் சத்துவம் என்ன ?  வாசிக்கலாம்
தீத்து(TITUS) 2 : 11,12...
11. ஏனெனில் எல்லா மனுஷருக்கும் இரட்சிப்பை அளிக்கத்தக்க தேவகிருபையானது பிரசன்னமாகி,...
                  தேவ கிருபையானது எல்லா மனுஷருக்கும் பிரசன்னமாகி .... நல்லவருக்கும் , பாவிகளுக்கும் தேவ கிருபையானது பிரசனமாகுகிறது . சரி இந்த கிருபை என்ன செய்கிறது என்று 12 வசனத்தில் பார்க்கலாம் ....

12. நாம் அவபக்தியையும் லௌகிக இச்சைகளையும் வெறுத்து, தெளிந்தபுத்தியும் நீதியும் தேவபக்தியும் உள்ளவர்களாய் இவ்வுலகத்திலே ஜீவனம்பண்ணி, ....
இங்கு 5 காரியங்களை கிருபை செய்கிறது என்று பார்க்கிறோம்  .
முதலாவது , அவபக்தி ...  கர்த்தருக்கு பிடிக்காத எல்லாமே அவபக்தித்  தான் ..
உதாரணமாக cigarette பிடிப்பது கர்த்தருக்கு பிடிக்குமா ?  கண்டிப்பாக பிடிக்காது  . இது தான் அவபக்தி .  
இரண்டாவதாக லௌகிக இச்சை. அது என்ன brother லௌகிக இச்சை (worldly lust) இந்த உலகத்தோடு சம்பந்தம்  உடைய, தேவனுக்கு பிரியமில்லாத காரியங்கள்.
உதாரணமாக : ஒரு sister எல்லா ஞாயிறு ஆராதனைகளிலும் கலந்துக்கொள்வார்கள் . ஞாயிற்று கிழமைகளில் நடக்கும் ஒரு ஆராதனையை கூட தவறவிடுவதில்லை . ஆனால் அவர்கள் புதன் கிழமை prayer meeting மட்டும் வருவதே இல்லை. இதை அந்த சபை போதகர் ஒரு நாள் அவரது வீட்டிற்க்கு சென்று கேட்டுவிட்டார். அதற்கு அந்த sister, அதுவா pastor புதன் கிழமை தான்  சித்தி வரும் . உடனே  அந்த pastor , இந்த  sister எவ்வளவு நல்லவர்கள், சித்தியை நன்றாக கவனிக்கிறார்கள்  என்று சொல்லி சித்திக்கும் சேர்த்து ஜெபித்துவிட்டு வந்தாராம்,  சித்தி என்பது T.V யில் வரும்  mega serial என்று தெரியாத PASTOR . ... இச்சைகளில் இருந்து விடுபடுவது சற்று கடினம் . ஆனால் கிருபை
அவபக்தியையும்  லௌகிக இச்சைகளையும் வெறுக்க வைக்கிறது .
மூன்றவதாக கிருபை தெளிந்த புத்தியை (SOUND MIND ) தருகிறது .
நான்காவதாக நீதியை தருகிறது , இன்னொரு வார்த்தையில் சொன்னால் நீதிமான்களாக்கி  இருக்கிறது .
வேதம் சொல்லுகிறது நாம் நீதிமான்களாக்கபட்டு இருக்கிறோம் என்று ! .
இப்போ  ஒரு கேள்வி , நாம் நீதிமான்களாக்கபட்ட படியால்  நாம் நீதி செய்கிறோமா அல்லது நீதி செய்வதினால் நீதிமான்களாக்கப்பட்டோமா?
பதில் : நாம் நீதிமான்களாக்கபட்டபடியால் நீதி செய்கிறோம் .
உதாரணமாக DOCTOR  ஆனபடியால்  DOCTOR க்கு PRACTICE செய்கிறேனா ? அல்லது DOCTOR ஆக PRACTICE செய்வதால்  DOCTOR ஆனேனா ?
DOCTOR  ஆனபடியால்  DOCTOR க்கு PRACTICE செய்கிறேன் . ...
இப்படித்தான் தேவன் நம்மை நீதிமான்களாக்கிவிட்டார். அடுத்து
ஐந்தாவதாக  தேவபக்தி. இங்கு இந்த வசனம் முழுமை பெறுவதை நாம் கவனிக்க வேண்டும். முதலாவது அவபக்தியை வெறுத்து என்று பார்க்கிறோம், கடைசியாக தேவபக்தியுள்ளவர்களாய், என்று பார்க்கிறோம் . இங்கு,  ஜீவனம் பண்ணி என்ற வார்த்தையை கவனிக்க வேண்டும் . இவை எல்லாம் இந்த பூமியிலே கடைபிடிக்க வேண்டியவையே . இவ்வுலகத்தில் ஜீவனம்பண்ணி  என்று தெளிவாக பார்க்கிறோம் .

எனவே கிருபை ....
நாம் அவபக்தியையும் லௌகிக இச்சைகளையும் வெறுத்து, தெளிந்தபுத்தியும் நீதியும் தேவபக்தியும் உள்ளவர்களாய்.... இருக்க உதவி செய்கிறது .
கர்த்தருடைய கிருபைக்காக ஸ்தோத்திரம் . ..
இனி இந்த கிருபை என்ற வார்த்தையின் சத்துவத்தை உணர்ந்து சொல்வோம்  .

உங்க கிருபை தான் என்னை தாங்குகின்றது ,
உங்க கிருபை தான் என்னை நடத்துகின்றது ...

உங்கள் கருத்துக்களை prithiviraj23@gmail.comக்கு தெரியப்படுத்துங்கள்

Saturday, January 15, 2011

தமிழர்(மனிதர் ) திருநாள்

அனைவருக்கும் தமிழர் திருநாள் நல் வாழ்த்துக்கள் ....

இத்திருநாளில் தன்மானத் தமிழர்களாகிய நாம் ,
தரம் குறையாத தமிழர்களாய் வாழ உறுதி ஏற்ப்போம் ...

தரம் என்று சொல்லும் போது  அன்பு ,உண்மை , மானம் , வீரம் ,பேராண்மை,  பண்பு உடையவராய் விட்டுகொடுப்பதை மட்டும் விட்டுக்கொடுத்து மற்றவற்றிற்கு இல்லை
என்று மார்த் தட்டி நிற்பது... (இன்னொரு வார்த்தையில் சொன்னால் இது மனிதம் தானே)
தரம் (QUALITY ) என்று மட்டும் சொன்னால் போதுமா ...
தரம் நிரந்தரம் என்று எப்பொழுது சொல்ல போகிறோம் .

தமிழன் என்று சொல்லடா, தலை குனிந்து நில்லடா  என்ற வாசகம் மேடை பேச்சுகளில்  பழகிவிட்ட  காலம் இது .
தரம் நிரந்தரம் என்ற நிலை வந்தால்  தமிழன் தலைவன் என்ற வழக்க சொல் வழக்கமாகி போகும் !

தமிழை மது என்று சொல்லி பருகி மயக்கமடைந்தோர் பலர்.
அவர்கள் மயக்கம் தெளியும் நாள் எந்நாளோ ?

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு தானே  .
அமுதாகிய தமிழும் அப்படித் தான்  . தமிழ் அப்படித்தான் பருக பருக பரவசம் தரும், மயக்கம் வரும். தமிழின் மயக்கத்திலே, தமிழன் தமிழ்(மனிதத்தின் ) பண்பினை இழக்கலாமா ?

எல்லாவற்றிலும் உலக தரத்தை விரும்பும் நாம்  பண்பில் தரத்தை, தரத்தின்  நிரந்தரத்தை விரும்பாதது ஏன் ?


வேதம் மனிதத்தின் தரத்தை தக்கவைத்துக்கொள்ள ஒரு வழியை கற்றுத்தருகிறது  .

 பிலிப்பியர் 4: 8
   கடைசியாக, சகோதரரே, உண்மையுள்ளவைகளெவைகளோ, ஒழுக்கமுள்ளவைகளெவைகளோ, நீதியுள்ளவைகளெவைகளோ, கற்புள்ளவைகளெவைகளோ, அன்புள்ளவைகளெவைகளோ, நற்கீர்த்தியுள்ளவைகளெவைகளோ, புண்ணியம் எதுவோ, புகழ் எதுவோ அவைகளையே சிந்தித்துக்கொண்டிருங்கள்.

Sunday, January 2, 2011

முதல் காதல்

இன்று  சபைக்கு சென்றிருந்தேன் ...ஆராதனை வேளையில் போதகர் சொன்ன கருத்து.உங்கள் சிந்தனைக்காக ... இது முதல் காதலை பற்றியது, நாம் அனைவரும் இந்த அனுபவத்தினூடே வந்திருப்போம் என்று நம்புகிறேன்.  நாம் ஒருவரை நேசிக்க ஆரம்பிக்கும் போது, அது நட்ட்பாக,காதலாக அல்லது திருமணமாக இருக்கலாம், 3   சூழ்நிலைக்கும் இது பொருந்தும். இந்த அன்பை, ஒருவர் மீது ஒருவர் காட்டும் நேசத்தை சொல்ல வார்த்தைகள் பொருந்தாது. எடுத்துகாட்டாக சொன்னால் இந்த ஆரம்ப காலக்கட்டத்தில்  ஏதாவது  ஒரு சிறு பரிசை ஒருவர் இன்னொருவருக்கு கொடுத்தால் கூட அது  அவருக்கு விலை மதிக்கமுடியாத ஒரு பொக்கிஷமாகவே இருக்கும், எந்த காலக்கட்டத்திலும். நாட்கள் செல்லச்செல்ல எவளவு பெரிய பரிசு கொடுத்தாலும் அதிலே சுவாரசியம் இருக்காது. இப்படித்தான் கர்த்தரை தேட ஆரம்பித்த புதிதில் அதிக நேரம் ஜெபிப்பது, ஊழியம் செய்வது என்று பேச்சு முச்சு எல்லாமே  கர்த்தர் என்று இருப்போம் ஆனால் நாட்கள் செல்லச் செல்ல  தொய்வு ஏற்ப்பட்டு விடும். இதைத் தான் வெளிபடுத்தின விசேஷம் 2 :4
ஆனாலும், நீ ஆதியில் கொண்டிருந்த அன்பை விட்டாய் என்று உன்பேரில் எனக்குக் குறை உண்டு. என்று கர்த்தர் எபேசு சபைக்கு சொலுகிறார் . எபேசு சபைக்கு மட்டும் அல்ல நமக்கும் பொருந்தக்கூடிய ஒன்று தான் இந்த வசனம் ... அந்த முதல் காதல் அனுபவத்தை, ஆதி அன்பை விடாமல் தொடர வேண்டிய அவசியம் நமக்கு உண்டு ....

Saturday, January 1, 2011

திறவுகோல்

திறவுகோல் ... தேவன் என்னிடம் மிக தெளிவாக விளக்கிய செய்தி ...

இந்த வார்த்தையை பற்றி  நான்  KEY AND THE KEY ANSWER என்ற  தலைப்பிலே தேவன் என்னிடம் விளக்கியதை உங்களுக்கு என்னால் முடிந்தவரை  கொடுக்க  விரும்புகிறேன் ....

DO NOT RUN BEHIND THE GIFTS BUT KEY (ஆசிர்வாதத்தை நாடாமல், திறவுகோலை நாடுங்கள்) இதுதான் அந்த செய்தி சுருக்கம்.

வெளி 3 :7. பிலதெல்பியா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: பரிசுத்தமுள்ளவரும், சத்தியமுள்ளவரும், தாவீதின் திறவுகோலை உடையவரும், ஒருவரும் பூட்டக்கூடாதபடிக்குத் திறக்கிறவரும், ஒருவரும் திறக்கக்கூடாதபடிக்குப் பூட்டுகிறவருமாயிருக்கிறவர் சொல்லுகிறதாவது; 8. உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன், உனக்குக் கொஞ்சம் பெலன் இருந்தும், நீ என் நாமத்தை மறுதலியாமல், என் வசனத்தைக் கைக்கொண்டபடியினாலே, இதோ, திறந்தவாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன், அதை ஒருவனும் பூட்டமாட்டான்.
 ஏசாயா 22 : 20. அந்நாளிலே இலக்கியாவின் குமாரனாகிய எலியாக்கீம் என்னும் என் ஊழியக்காரனை நான் அழைத்து: 21. உன் வஸ்திரத்தை அவனுக்குத் தரித்து, உன் கச்சையால் அவனை இடைக்கட்டி, உன் அதிகாரத்தை அவன் கையிலே கொடுப்பேன்; அவன் எருசலேமின் குடிகளுக்கும் யூதாவின் வம்சத்துக்கும் தகப்பனாயிருப்பான். 22. தாவீதுடைய வீட்டின் திறவுகோலை அவன் தோளின்மேல் வைப்பேன்; ஒருவரும் பூட்டக் கூடாதபடிக்கு அவன் திறப்பான். ஒருவரும் திறக்கக் கூடாதபடிக்கு அவன் பூட்டுவான்.


       உனக்குக் கொஞ்சம் பெலன் இருந்தும், நீ என் நாமத்தை மறுதலியாமல், என் வசனத்தைக் கைக்கொண்டபடியினாலே திறந்த வாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்...... என வேதம் சொல்லுகிறது . இருக்கிற கொஞ்ச பெலத்தோடே கர்த்தருக்காக நிற்கும் பொது , வசனத்தை முழுமனதோடு பின்பற்றும்போது வாசல் திறக்கப்படுகிறது அல்லது தேவன் திறந்து நமக்கு முன்பாக அதை வைக்கிறார் . இதுவும்  திறவுகோலை பெறும்  வழி .


      தேவன் திறந்தால் யாரும் பூட்ட முடியாது, அவர் பூட்டினால் யாரும் திறக்க முடியாது. ஆனால் அவர் எலியாக்கிம்கு திறவுகோலை தருகிறார். அவன் திறந்தால் யாரும் பூட்ட முடியாது, அவன் பூட்டினால் யாரும் திறக்க முடியாது. எலியாக்கீம் என்றால்  - தேவனால்  ஏற்படுத்தப்பட்டவன் (PERSON SET BY GOD)என்று  அர்த்தம். தாவீதின்  பண்டகசாலையில் அநேகம் ஆயிரம் பொக்கிஷங்கள் உண்டு, அதின் சாவியைத்தான் தேவன் நமக்கு தருகிறார். சரி  திறவுகோலை பெறுவதைபற்றி  நாம்  ஏசாயா  22 :20 ல்   பார்த்தோம் 
எபேசியர் 1 : 
3. நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம்; அவர் கிறிஸ்துவுக்குள் உன்னதங்களிலே ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார். ஏற்க்கனவே அவர் நம்மை ஆசிர்வதித்து விட்டார்
ஒரு நல்ல வெற்றி என்பது ஒருமுறை பெறுவது அல்ல ,பெற்ற வெற்றியை தக்க வைத்துக்கொள்ளுவது . (GOOD SUCCESS IS A SUCCESS WHICH  SUSTAINED FOR EVER  )
எப்படி திறவுகொலை  தக்கவைத்துகொள்ளுவது ?
யோசுவா  1 :8 
இந்த நியாயப்பிரமாண புஸ்தகம் உன் வாயைவிட்டுப் பிரியாதிருப்பதாக; இதில் எழுதியிருக்கிறவைகளின்படியெல்லாம் நீ செய்யக் கவனமாயிருக்கும்படி, இரவும் பகலும் அதைத் தியானித்துக்கொண்டிருப்பாயாக; அப்பொழுது நீ உன் வழியை வாய்க்கப்பண்ணுவாய், அப்பொழுது புத்திமானாகவும் நடந்துகொள்ளுவாய்.

திறவுகோலை தக்கவைத்துக்கொள்ள சிலவற்றை கைக்கொண்டுத் தான் ஆகவேண்டும் .
1 :நம்பிக்கைக்கு பாதிரவானாய் இருக்க வேண்டும் . need to be a trusted one .... if god  trust me  he might have give something which is valuable . உணமையாய் இருந்தால் மட்டுமே தேவனிடத்திலே எதையும் எதிர்பார்க்கலாம் . இதைத்  தான்  கொஞ்சத்தில் உண்மையாய் இரு அனேகதிற்கு அதிகாரியாய் வைப்பேன் என்று தேவன் சொல்லுகிறார் . கொஞ்சம் பணத்தில் உணமையாய் இருந்தால்  அதிக பணம் , கொஞ்சம் அதிகாரத்தில் உண்மையாய் இருந்தால் அதிக அதிகாரம் , கொஞ்சம் நண்பர்களிடத்தில் உணமையாய் இருந்தால் அதிக நட்பு,  இப்படித்தான்......  நம்பிக்கைக்கு பாதிரவானாய் இருக்க வேண்டும் .
நம்பிக்கைக்கு பாதிரவானாய் இருக்க என்ன செய்ய வேண்டும் ? 
என்னை நான் நம்ப வேண்டும் , என்னை நான் முழுமையாய் நம்ப வேண்டும். என்னை நான் ஏற்றுக்கொள்ளாவிட்டால், மோசேவைப்போல் ஆரோனை அனுப்பும் என்று சொல்ல நேரிடும் .  

2 . தேவனுடைய தயவை பெறுகிறவனாய் இருக்க வேண்டும் .
தேவனுடைய தயவை பெறுகிறவனாய் மட்டுமல்ல தொடர்ந்து பெருகிறவனாய் இருக்க வேண்டும் . ஆதியாகமம் 37 : 23,24
யோசேப்பு தன் சகோதரரிடத்தில் சேர்ந்தபோது, யோசேப்பு உடுத்திக்கொண்டிருந்த பலவருண அங்கியை அவர்கள் கழற்றி, அவனை எடுத்து, அந்தக் குழியிலே போட்டார்கள்; அது தண்ணீரில்லாத வெறுங்குழியாயிருந்தது.
யோசேப்பு தேவனுடைய தயவை பெற்றவனாய் இருந்தான் . ஆனால் அவனது சகோதரரோ அந்த பலவருண அங்கியை கழற்றி விட்டால் அவனுக்கு எல்லாம் முடிந்துவிட்டது என்றே நினைத்தார்கள். ஆனால் அவனுக்கு பலவருண அங்கியால் அங்கிகாரம் இல்லை, பலத்த துருகமாகிய கர்த்தரிடத்தில் அங்கிகாரம் உண்டு என்பதை அறியாமல் இருந்தார்கள். தேவனுடைய தயவு யோசேப்போடு இருந்தது.
தயவு என்பது அநியாயமாய் பாராட்டுகிற அன்பு  .
தேவனுடைய தயவு தொடர்ந்து கிடைக்க யோசேப்பு என்ன செய்தான் ? 

அவன் அவனை காத்துக்கொண்டான்
தொடர்ந்து நம்மை காத்துக்கொள்ளவேண்டும் (எல்லா காவலோடும் உன் இருதயத்தை காத்துக்கொள் என்று வேதம் சொல்லுகிறது ) .
1 கர்த்தர் என்ன சொல்லுகிறாரோ அதை  யாராய் இருந்தாலும் பயப்படாமல் அப்படியே சொல்ல யோசேப்பால் முடிந்தது .
2 . அவன் சிறையில் இருந்தபோது கூட, தேவனிடத்தில் தன் நிலைமையை எண்ணி,  ஒரு நாள் கூட  முறுமுறுத்தது   இல்லை .
3 . அவன் வாலிபனாய், வாலிபத்திற்க்கான தேவைகள் இருந்தும்
 தன்னிடம்  இருந்தே தன்னை காத்துக்கொண்டான் ,
தனிமை, தணியாத தாகம் தனகத்தே  கொண்ட பெண், தவிர்க்க முடியாத சூழ்நிலை  - அத்தனையும்  ஒருசேர பலமுறை  அழைத்தது அவனை - தன்னை காத்துக்கொண்டன் .
ஆதியாகமம் 39 : 3
கர்த்தர் அவனோடே இருக்கிறார் என்றும், அவன் செய்கிற யாவையும் கர்த்தர் வாய்க்கப்பண்ணுகிறார் என்றும், அவன் எஜமான் கண்டு:........
எல்லா இடத்திலேயும் கர்த்தர் அவனோடு இருந்தார் என்று மற்றவர்கள் கண்டார்கள்.
செய்யாத தவறுக்காக சிறை சென்றான் , கர்த்தர் அவனோடு இருந்தார் .
தண்டனையைகூட சலிக்காமல் ஏற்றுக்கொள்ள்கிறான்.
உதவி பெற்றவன் கூட மறந்து விட்டான் - மனம் தளரவில்லை . தன்னை தாழ்த்தினான் , கர்த்தர் அவனை உயர்த்தினார் . சகல அதிகரங்களையும் கொடுத்தார் .
யாக்கோபு 4 :
 10. கர்த்தருக்கு முன்பாகத் தாழ்மைப்படுங்கள், அப்பொழுது அவர் உங்களை உயர்த்துவார்.
...................... ஆமென்.  ஆசீர்வத்திதை அல்லது அதின் திறவுகோலை தக்க வைத்துக்கொள்வதற்கு  மனத்தாழ்மை மிக மிக முக்கியம் . வேதத்திலே நாம் பார்க்கும்போது தேவன் பயன்படுத்திய அனைவரும் கர்த்தருக்கு முன்பாக தன்னை   தாழ்த்தினவர்களாகவே இருக்கிறார்கள் என்றும்
தேவன் உள்ளத்தை தான் பார்க்கிறார் என்றும் மேன்மைக்கு முன்னானது தாழ்மை என்றும் வேதத்தில் நாம் பார்க்கலாம் .

இந்த பதிவு உங்களுக்கு பிரயோஜனமாக இருக்கும் என நம்புகிறேன் 

ஊற்று கேட்கும் தேவன் உடனடி பதில் - 2 : மேவிபோசேத் - கண்ணீரை துடைக்க கர்த்தர் உண்டு கலங்காதே

       அப்பொழுது நானும் ஏன் குடுபத்தினரும் சபைக்கு சென்றுக்கொண்டிருந்தோம் . சில நாட்களாக பிரச்னைககளால் மனம் நொந்து என் குடுபத்திரிடம் நான...