Sunday service ல் கொடுக்கப்பட்ட செய்தி :
செய்தி : Pastor. Charles Dawson :
கடந்த வாரத்தில் பல குடும்பங்களில் பிரச்சனை என்று கேள்வி பட நேர்ந்தது. இப்படி கேள்வி பட்டவுடனே மனதிலே சஞ்சலப்பட்டு தேவனிடத்தில் இப்படி பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு தான் என்ன என்று கேட்கும்பொழுது கர்த்தர் என் உள்ளத்தில் பேசிய வார்த்தை :
All you need is with in you (The Answer which you need is with in you)
ஆதியாகமம் 2 : 7 - 9
- 7. தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான்.
- 8. தேவனாகிய கர்த்தர் கிழக்கே ஏதேன் என்னும் ஒரு தோட்டத்தை உண்டாக்கி, தாம் உருவாக்கின மனுஷனை அதிலே வைத்தார்.
- 9. தேவனாகிய கர்த்தர், பார்வைக்கு அழகும் புசிப்புக்கு நலமுமான சகலவித விருட்சங்களையும், தோட்டத்தின் நடுவிலே ஜீவவிருட்சத்தையும், நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தையும் பூமியிலிருந்து முளைக்கப்பண்ணினார்...
- ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான்........
- தோட்டத்தின் நடுவிலே ஜீவவிருட்சத்தையும், நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தையும் பூமியிலிருந்து முளைக்கப்பண்ணினார்...
ஜீவ சுவாசத்தை அவர் ஊதும் போது மனுஷன் முழுமையை பெற்றுக்கொண்டான்... நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தை முளைக்க பண்ணும் முன்னமே , அதற்கான பதிலை அவனுக்குள்ளே தேவன் வைத்துவிட்டார்.
ஆதியாகமம் 2 : 18
18. பின்பு தேவனாகிய கர்த்தர்: மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல, ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன் என்றார்...
19. தேவனாகிய கர்த்தர் வெளியின் சகலவித மிருகங்களையும், ஆகாயத்தின் சகலவிதப் பறவைகளையும் மண்ணினாலே உருவாக்கி, ஆதாம் அவைகளுக்கு என்ன பேரிடுவான் என்று பார்க்கும்படி அவைகளை அவனிடத்தில் கொண்டுவந்தார்; அந்தந்த ஜீவஜந்துக்கு ஆதாம் எந்தெந்தப் பேரிட்டானோ அதுவே அதற்குப் பேராயிற்று.
20. அப்படியே ஆதாம் சகலவித நாட்டுமிருகங்களுக்கும், ஆகாயத்துப் பறவைகளுக்கும், சகலவிதக் காட்டுமிருகங்களுக்கும் பேரிட்டான்; ஆதாமுக்கோ ஏற்ற துணை இன்னும் காணப்படவில்லை....
ஏற்ற துணை எங்கே இருக்கிறது ?
கர்த்தர் அவனுக்கு ஏற்ற துணையை அவனுக்குள் இருந்து கொடுத்தார்,
கர்த்தர் அவனுக்கு ஏற்ற துணையை அவனுக்குள் இருந்து கொடுத்தார்,
- 21. அப்பொழுது தேவனாகிய கர்த்தர் ஆதாமுக்கு அயர்ந்த நித்திரையை வரப்பண்ணினார், அவன் நித்திரையடைந்தான்; அவர் அவன் விலா எலும்புகளில் ஒன்றை எடுத்து, அந்த இடத்தைச் சதையினால் அடைத்தார். 22. தேவனாகிய கர்த்தர் தாம் மனுஷனில் எடுத்த விலா எலும்பை மனுஷியாக உருவாக்கி, அவளை மனுஷனிடத்தில் கொண்டுவந்தார்....
ஏற்ற துணையை உண்டாக்குவேன் என்று தேவன் சொன்னதை
நம்புகிற நாமும் கூட நம் துணையை குரங்கே , எருமை மாடே, பன்றியே ஏன் பிசாசே என்று கூட சில நேரங்களில் அழைக்கிறோம்.
. அப்படித்தானே !........ஏற்ற துணை எங்கே இருக்கிறது ?
நம் துணை நமக்குள்ளே..... அப்படியானால் நாம் யார் ?
- தேவன் உண்டாக்கிய மனிதனிடத்தில் முழுமை காணப்படுகிறது, தேவன் ஊதிய அந்த ஆவியினாலே முழுமை, சத்துவம் காணப்படுகிறது. உன்னுடைய பிரச்சனைக்கு பதில் உனக்குள்ளே.... எப்பொழுது ஒரு பிரச்சனை என் பிரச்சனையாக மாறுகிறதோ அப்பொழுது நாம் அறிய வேண்டிய ஒன்று என் பிரச்னைக்கு தீர்வு எனக்குள்ளே ...
பொதுவாக நாம் பிரச்சனைக்கு மற்றவர்கள்தான் கரணம் என்று நாம் சொல்லுவதுண்டு. . .
என் பிரச்சனைக்கு மற்றவர்கள் எப்படி காரணமாய் இருக்க முடியும் ?
இப்படி இருக்க என் பிரச்சனைக்கு மற்றவர்கள் ஏன் மாற வேண்டும் ?
ஏற்கனவே உங்களுக்குள்ளே இருக்கும் அன்பை தெரியப்படுத்துங்கள்.
ஏற்கனவே இருக்கும் உங்கள் காரியங்களை பகிர்ந்துக்கொள்ளுங்கள் .
கர்த்தருக்குள் ஒருவருக்கொருவர் கிழ்ப்படியுங்கள் .
ஒருவரை ஒருவர் உற்சாகமுட்டுங்கள். ஒருவரை ஒருவர் தாங்குங்கள் .
உன் வாழ்க்கையில் சில மாற்றங்கள் அவசியமாய் இருக்கலாம் .
உன் வாழ்க்கையில் சில கிழ்ப்படிதல் அவசியமாய் இருக்கலாம்
நீ மாற, நீ கிழ்படிய ஆயத்தமா..... ?
மல்கியா 2
என் பிரச்சனைக்கு மற்றவர்கள் எப்படி காரணமாய் இருக்க முடியும் ?
இப்படி இருக்க என் பிரச்சனைக்கு மற்றவர்கள் ஏன் மாற வேண்டும் ?
என் பிரச்சனைக்கு தீர்வு எனக்குள்ளே இருக்கிறது .
ஆபிரகாமை தேவன் அழைக்கும்பொழுது அவருக்கு 75 வயது, ஏற்கனவே அவர் SENIOR CITIZEN . அந்த சமயத்தில் அவருக்கு பிள்ளை இல்லாதிருந்தது. ஆனால் கர்த்தரோ ஆபிரகாமுக்கு பிள்ளை பிறக்கும் என வாக்கு கொடுத்தார்.
ஆபிரகாமோ தன் பிரச்சனைக்கு லோத் மற்றும் இஸ்மவேலை நம்பி இருந்தான். ஆனால் கர்த்தரோ ஆபிரகாமுக்கும் , சாராளுக்கும் தான் வாக்கு செய்தபடி பிள்ளை பிறக்கும் என்று சொன்னார் (ஆதியாகமம் 17 : 19 ) ஆபிரகாமின் பிரச்சனைக்கு தீர்வு அவனுக்குள்ளே ....
மோசே முதல் 40 வருடங்கள் எகிப்த்திலே அனைத்தையும் கற்றுத்தேர்ந்தான்,
அடுத்த 40 வருடங்கள் வனாந்திரத்திலே ஆடுகளை மேய்க்கிறான். தான் கற்றுத்தேர்ந்த அனைத்தையும் மறந்து போனான். கர்த்தர் அவனை தான் தெரிந்துக்கொண்ட இஸ்ரவேல் மக்களை அடிமை தனத்திலிருந்து மீட்டுக்கொண்டு வரும்படி அழைக்கிறார். அவனோ என்னிடத்தில் கோலை தவிர ஒன்றுமில்லை என்று சொல்லுகிறான். ஆனால் அந்த கோலைக் கொண்டுத்தான் பல அற்ப்புதங்களை செய்கிறான்.
மோசேயின் பிரச்னைக்கு தீர்வு அவனிடத்தில் .
இப்படி தீர்வு என்னிடத்தில் இருக்கும்போது நான் ஏன் மற்றவர்கள் மாறவேண்டும் என நினைக்க வேண்டும் .
நான் ஏன் என் தீர்வை , என் தாலந்துகளை , என் அபிஷேகத்தை பயன்ப்படுத்த கூடாது ?
கிதியோனே உனக்கு இருக்கிற இந்த பெலத்தோடு போ (நியாயாதிபதிகள் 6 :14)

II தீமோத்தேயு 1:6 இதினிமித்தமாக, நான் உன்மேல் என் கைளை வைத்ததினால் உனக்கு உண்டான தேவவரத்தை நீ அனல்மூட்டி எழுப்பிவிடும்படி உனக்கு நினைப்பூட்டுகிறேன்......
நீ பெற்ற தேவ வரத்தை அனல் மூட்டி எழுப்பு... அப்பொழுது தான் நீ மற்றவர்களை மாற்ற முடியும் .
நீ பெற்ற தேவ வரத்தை அனல் மூட்டி எழுப்பு... அப்பொழுது தான் நீ மற்றவர்களை மாற்ற முடியும் .
ஏற்கனவே உங்களுக்குள்ளே இருக்கும் அன்பை தெரியப்படுத்துங்கள்.
ஏற்கனவே இருக்கும் உங்கள் காரியங்களை பகிர்ந்துக்கொள்ளுங்கள் .
கர்த்தருக்குள் ஒருவருக்கொருவர் கிழ்ப்படியுங்கள் .
ஒருவரை ஒருவர் உற்சாகமுட்டுங்கள். ஒருவரை ஒருவர் தாங்குங்கள் .
உன் வாழ்க்கையில் சில மாற்றங்கள் அவசியமாய் இருக்கலாம் .
உன் வாழ்க்கையில் சில கிழ்ப்படிதல் அவசியமாய் இருக்கலாம்
நீ மாற, நீ கிழ்படிய ஆயத்தமா..... ?
மல்கியா 2
- 15. அவர் ஒருவனையல்லவா படைத்தார்? ஆவி அவரிடத்தில் பரிபூரணமாயிருந்ததே. பின்னை ஏன் ஒருவனைப்படைத்தார்? தேவபக்தியுள்ள, சந்ததியைப் பெறும்படிதானே....
- ஜெபித்து, புரிந்து செயல்படுங்கள் .
கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக ...ஆமென் .
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன ....உங்கள் கருத்துக்களை prithiviraj23@gmail.comக்கு தெரியப்படுத்துங்கள்.