Friday, April 22, 2011

கிரிகெட் - மனிதனின் மறுப்பக்கம் 2

           கடந்த இதழில் STUMPS ஐ ஆவி, ஆத்துமா, சரிரம் என்றும் BAILS ஐ ஆவி,ஆத்துமா,சரிரம் இவைகளை இணைக்க கூடிய சிந்தனைகள்  என்று பார்த்தோம். இவற்றை பாதுகாக்க வேண்டிய அவசியம் நமக்கு உண்டு அதற்கு நாம் சிறந்த BATSMANகளாக இருக்க வேண்டும் என்று வேதம் ஒப்பனையாக சொல்லுகிறது என்று சொல்லுகிறது என்று முடித்திருந்தேன்.

BATSMANகளை வேதத்திலிருந்து பார்ப்பதுக்கு முன் ஆவி,ஆத்துமா,சரிரத்தை பற்றி இன்னும் அதிகமாக பார்க்கலாம் என்றே நினைக்கிறன்.


ஆவி....
       கண்ணால் பார்க்க இயலாது...மன சாட்சி, உள்ளுணர்வு இவைகளுக்கு ஆவி தலையாய் இருக்கிறது . ஆவி இல்லையேல் மனிதன் உயிருடன் இருக்க இயலாது. (ஆவி -உயிர் )

தேவன் ஆவியாய் இருக்கிறார். (யோவான் 4 : 24)
ஆவியான தேவன் நம்முடைய ஆவியோடு தொடர்புகொள்ள விரும்புகிறார்.
இந்த ஆவியான தேவனுக்கு ஒப்பானவர் யாரும் இல்லை. 

நாம் இந்த ஆவியின் நிலைமையை உணராத நிலையில் தேவன் நம்முடன், திர்க்கதரிசனம் மூலமாகவோ, சபையின் செய்திகள் மூலமாகவோ, சூழ்நிலைகள்  மூலமாகவோ நம்முடன் பேசுகிறார்.  
ஆவி நம்மை தேவனிடத்திற்கு நேராக நடத்துகிறது. ஆனால் தேவனை தேடுவதை ஆத்துமா தீர்மானிக்கிறது .

சில வேத வசனங்களை பாப்போம் .

மத்தேயு 26:41 நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள்; ஆவிஉற்சாகமுள்ளதுதான், மாம்சமோ பலவீனமுள்ளது என்றார்.
யோவான் 6:63 ஆவியே உயிர்ப்பிக்கிறது, மாம்சமானது ஒன்றுக்கும் உதவாது; நான் உங்களுக்குச் சொல்லுகிற வசனங்கள் ஆவியாயும் ஜீவனாயும் இருக்கிறது.
ரோமர் 8:6 மாம்சசிந்தை மரணம்; ஆவியின் சிந்தையோ ஜீவனும் சமாதானமுமாம்.
கலாத்தியர் 5:22 ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம்,
I தெசலோனிக்கேயர் 5:19 ஆவியை அவித்துப்போடாதிருங்கள்.


ஆத்துமா...(பொருள்)

       கண்ணால் பார்க்க இயலாது . முதலில் ஆத்துமா இருக்கிறது என்பதை நம்ப வேண்டும் .
              நாம் இதை மனம்(மனசு) ,will , என்று சொல்லுகிறோம் .இது தான் நாம் என்ன செய்ய வேண்டும் . என்ன செய்யக்கூடாது . நல்லது எது , கெட்டது எது என்று வேறு பிரிக்கிறது, விருப்பு வெறுப்பு எல்லாவற்றையும்  தீர்மானிக்கிறது 
நம் ஆத்துமா நாம் என்ன செய்ய வேண்டும் என தீர்மானிக்கிறது. 
நம் சிந்தனைகளை நம் ஆத்துமா மட்டுமே தீர்மானிக்கிறது. நம் நித்திய வாழ்வையே ஆத்துமா தான் தீர்மானிகிறது .

     இதைதான் நம் முன்னோர் பொருளுக்கு பொருள் தேடு என்று சொன்னார்கள். 
பொருள் என்பது பணம் மற்றும் சொத்துக்களை குறிப்பது இல்லை. ஆனால் ஒன்றான மெய் தேவனாகிய இயேசு கிறிஸ்துவை(மெய் பொருளை) குறிக்கிறது .

யாக்கோபு 1:21 ஆகையால், நீங்கள் எல்லாவித அழுக்கையும் கொடிய துர்க்குணத்தையும் ஒழித்துவிட்டு, உங்கள் உள்ளத்தில் நாட்டப்பட்டதாயும் உங்கள் ஆத்துமாக்களை இரட்சிக்க வல்லமையுள்ளதாயுமிருக்கிற வசனத்தைச் சாந்தமாய் ஏற்றுக்கொள்ளுங்கள்.

மத்தேயு 16:26 மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்?


சரிரம் (உடல்).
      இது நாம் பார்த்து, தொட்டு உணரக்கூடிய ஒன்று .சரிரத்தைப்பற்றி நாம் அதிகம் அறிந்து இருந்தாலும் ,நாம் அறிய வேண்டிய ஒன்று உண்டு , அது தான் நமது உருவம் .

ஆதியாகமம் 1 :26. பின்பு தேவன்: நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக; அவர்கள் சமுத்திரத்தின் மச்சங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், மிருகஜீவன்களையும், பூமியனைத்தையும், பூமியின்மேல் ஊரும் சகலப் பிராணிகளையும் ஆளக்கடவர்கள் என்றார்.


இந்த வசனத்தின் படி நாம் தேவனுடைய உருவத்தின்படியே இருக்கிறோம். 
என்ன ஒரு ஆச்சரியமான படைப்பு நாம் !


                                       கிரிகெட் - தொடரும் ...


                              உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.
                    கருத்துக்களை prithiviraj23@gmail.com க்கு தெரியப்படுத்துங்கள் .

ஊற்று கேட்கும் தேவன் உடனடி பதில் - 2 : மேவிபோசேத் - கண்ணீரை துடைக்க கர்த்தர் உண்டு கலங்காதே

       அப்பொழுது நானும் ஏன் குடுபத்தினரும் சபைக்கு சென்றுக்கொண்டிருந்தோம் . சில நாட்களாக பிரச்னைககளால் மனம் நொந்து என் குடுபத்திரிடம் நான...