Saturday, March 5, 2011

என்ன செய்ய வேண்டும் ....

  நாம்   பொதுவாக....இப்போ  என்ன செய்ய வேண்டும்  என்று எப்பொழுது யோசிப்போம் ? 
நிச்சயமாக நாம் என்ன செய்வது என்று தெரியாத சமயத்தில், நம்மால் சமாளிக்க முடியாத வேளைகளில்,  நாம் என்ன செய்ய வேண்டும் என்று யோசித்துக்கொண்டே இருப்போம், கடைசியில் என்ன செய்வது என்னவென்றே தெரியாமல் புலம்பிக்கொண்டு இருப்போம் . அப்படித்தானே  ...! 

சரி நாம் என்ன செய்வது என்று தெரியாத சமயத்தில்  நாம் என்ன செய்ய வேண்டும் ...?
வேதத்தில் இதுப்போன்ற சூழல்கள்  எப்படி கையாளப்பட்டு இருக்கிறதென்று
பார்ப்போம்.

2 இராஜாக்கள் 6 : 14-15


     அப்பொழுது அவன் அங்கே குதிரைகளையும் இரதங்களையும் பலத்த இராணுவத்தையும் அனுப்பினான்; அவர்கள் இராக்காலத்திலே வந்து பட்டணத்தை வளைந்துகொண்டார்கள்.


    தேவனுடைய மனுஷனின் வேலைக்காரன் அதிகாலமே எழுந்து வெளியே புறப்படுகையில், இதோ, இராணுவமும் குதிரைகளும் இரதங்களும் பட்டணத்தைச் சுற்றிக் கொண்டிருக்கக் கண்டான்; அப்பொழுது வேலைக்காரன் அவனை நோக்கி: ஐயோ, என் ஆண்டவனே, என்னசெய்வோம் என்றான்..


 இங்கு சீரியாவின் ராஜா, எலிசா என்னும் தீர்க்கதரிசியை, கர்த்தருடைய மனுஷனை பிடிக்கும்படி தன்னுடைய படையை அனுப்புகிறான். அவர்கள் வந்து எலிசா இருக்கும் அந்த மலையை சுற்றிலும் வளைத்துக்கொள்கிறார்கள் . அதை பார்த்த எலிசாவின் வேலைக்காரன் என்ன செய்வது என்று தெரியாமல் புலம்புகிறான். 


2 நாளாகமம் 20 : 1-2
 ௦
       இதற்குப்பின்பு மோவாப் புத்திரரும், அம்மோன் புத்திரரும்,  அவர்களோடே அம்மோனியருக்கு அப்புறத்திலுள்ள மனுஷருங்கூட யோசபாத்திற்கு விரோதமாய் யுத்தம்பண்ண வந்தார்கள்.


    சிலர் வந்து, யோசபாத்தை நோக்கி: உமக்கு விரோதமாய் ஏராளமான ஜனங்கள் கடலுக்கு அக்கரையிலிருக்கிற சீரியாவிலிருந்து வருகிறார்கள்; இதோ, அவர்கள் எங்கேதியாகிய ஆசாசோன்தாமாரில் இருக்கிறார்கள் என்று அறிவித்தார்கள்.
   
  இங்கு கர்த்தருக்கு முன் உத்தமனாகிய யோசபாத்துக்கு விரோதமாக 3
விதமான மக்கள் கூடி யுத்தம் செய்ய வருகிறார்கள் .
இப்படி இக்கட்டான சூழ்நிலையில், என்ன செய்ய வேண்டும் என்றே தெரியாத நிலையில் என்ன செய்ய
வேண்டும் என்பதை விட,  என்ன செய்யக்கூடாது என்று பார்ப்போம்.


என்ன செய்யக்கூடாது :
       இதுபோன்ற நேரங்களில் முதலில் நமக்கு உதவிக்கு வருவது பயம் தான்.
பயம் ஒரு ஆவி மட்டுமல்ல, அது ஒரு ஆளை போல நம்மை தவறான முடிவு எடுக்க தூண்டும் . தவறான ஆலோசனைகளை கேட்கசெய்துவிடும். எனவே பயப்பட கூடாது .
பிறர் ஆலோசனையை கேட்க கூடாது .

என்ன செய்ய வேண்டும் :

2 நாளாகமம் 20 : 12 

     எங்கள் தேவனே, அவர்களை நீர் நியாயந்தீர்க்கமாட்டீரோ? எங்களுக்கு விரோதமாக வந்த இந்த ஏராளமான கூட்டத்திற்கு முன்பாக நிற்க எங்களுக்குப் பெலனில்லை; நாங்கள் செய்யவேண்டியது இன்னதென்று எங்களுக்குத் தெரியவில்லை; ஆகையால் எங்கள் கண்கள் உம்மையே நோக்கிக்கொண்டிருக்கிறது என்றான்.
 
இங்கு அதே அதிகாரத்தில் யோசபாத் என்ன செய்கிறான் என்று பார்க்கிறோம் .
அவன் கர்த்தரை நோக்கிப்பார்க்கிறான் .


சங்கீதம் 121 : 1-2
    எனக்கு ஒத்தாசை வரும் பர்வதங்களுக்கு நேராக என் கண்களை         ஏறெடுக்கிறேன். வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தரிடத்திலிருந்து எனக்கு ஒத்தாசை வரும்.

சங்கீதம் 123 : 2-3 
      இதோ, வேலைக்காரரின் கண்கள் தங்கள் எஜமான்களின் கையை நோக்கியிருக்குமாப்போலவும், வேலைக்காரியின் கண்கள் தன் எஜமாட்டியின் கையை நோக்கியிருக்குமாப்போலவும், எங்கள் தேவனாகியகர்த்தர் எங்களுக்கு இரக்கஞ்செய்யும்வரைக்கும், எங்கள் கண்கள் அவரை நோக்கியிருக்கிறது. எங்களுக்கு இரங்கும் கர்த்தாவே, எங்களுக்கு இரங்கும்; நிந்தனையினால் மிகவும் நிறைந்திருக்கிறோம்.

கர்த்தரை நோக்கி பார்க்கவேண்டும் . அவரை நோக்கிப்பார்த்த முகங்கள் பிரகாசம் அடையும் என்று வேதம் சொல்லுகிறது . 

யாத்திராகமம் 14: 13

    அப்பொழுது மோசே ஜனங்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; நீங்கள் நின்றுகொண்டு இன்றைக்குக்கர்த்தர் உங்களுக்குச் செய்யும் இரட்சிப்பைப் பாருங்கள்; இன்றைக்கு நீங்கள் காண்கிற எகிப்தியரை இனி என்றைக்கும் காணமாட்டீர்கள்.

இங்கு நின்று என்ற வார்த்தையை கவனிக்க :

2 நாளாகமம் 20 : 17. 
    இந்த யுத்தத்தைப் பண்ணுகிறவர்கள் நீங்கள் அல்ல; யூதா மனுஷரே, எருசலேம் ஜனங்களே, நீங்கள் தரித்துநின்று கர்த்தர் உங்களுக்குச் செய்யும் இரட்சிப்பைப் பாருங்கள்; பயப்படாமலும் கலங்காமலும் இருங்கள்; நாளைக்கு அவர்களுக்கு எதிராகப் புறப்படுங்கள்; கர்த்தர் உங்களோடே இருக்கிறார் என்றான்.
இங்கு  தரித்து நின்று என்ற வார்த்தையை கவனிக்க :


எபேசியர் 6:  

10. கடைசியாக, என் சகோதரரே, கர்த்தரிலும் அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் பலப்படுங்கள்.

11. நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்துநிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் தரித்துக்கொள்ளுங்கள்.

12. ஏனெனில், மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு.

13. ஆகையால், தீங்குநாளிலே அவைகளை நீங்கள் எதிர்க்கவும், சகலத்தையும் செய்துமுடித்தவர்களாய் நிற்கவும் திராணியுள்ளவர்களாகும்படிக்கு, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள்.

கர்த்தரை நோக்கி பார்க்க வேண்டும் .
தரித்து நிற்க வேண்டும் .
கர்த்தரிலும் அவருடைய சத்துவத்திலும் பெலப்பட வேண்டும்

வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரம் படைத்த கர்த்தர் உங்களுக்கு உதவி செய்வாராக ... ஆமென் .

உங்கள் கருத்துகளை prithiviraj23@gmail.com க்கு தெரியப்படுத்துங்கள் 

ஊற்று கேட்கும் தேவன் உடனடி பதில் - 2 : மேவிபோசேத் - கண்ணீரை துடைக்க கர்த்தர் உண்டு கலங்காதே

       அப்பொழுது நானும் ஏன் குடுபத்தினரும் சபைக்கு சென்றுக்கொண்டிருந்தோம் . சில நாட்களாக பிரச்னைககளால் மனம் நொந்து என் குடுபத்திரிடம் நான...