Thursday, September 29, 2011

ஆகாஸ் ராஜா சொல்லுவது என்ன ?

ஆகாஸ் ராஜா

சொல்லுவது என்ன ? what king AHAZ says ...

கடந்த வாரம் bible studyல் நான் கேட்டது :

செய்தி : சார்லஸ் தாசன்

வரப்போகும் செய்தியை படிப்பதற்குமுன் நீங்கள் கருத்திலே கொள்ளவேண்டிய வசனம்
யாக்கோபு 4 :

       17. ஆதலால், ஒருவன் நன்மைசெய்ய அறிந்தவனாயிருந்தும், அதைச் செய்யாமற்போனால், அது அவனுக்குப் பாவமாயிருக்கும்.


ஒருவன் செய்யவேண்டியதை , செய்ய தெரிந்து இருந்தும் செய்யாமல் போனால் அது அவனுக்கு குற்றம் அல்ல, தவறு அல்ல ஆனால் அது பாவம்... பாவத்தின் சம்பளம் மரணம் என்று வேதம் சொல்லுகிறது. இதை மனதிலே வைத்துக்கொண்டு வாசிக்கலாம்,

II இராஜாக்கள் 16 அதிகாரம் 



     1. ரெமலியாவின் குமாரனாகிய பெக்காவின் பதினேழாம் வருஷத்தில் யூதாவின் ராஜாவாகிய யோதாமின் குமாரன் ஆகாஸ் ராஜாவானான்.


     2. ஆகாஸ் ராஜாவாகிறபோது இருபது வயதாயிருந்து, எருசலேமிலே பதினாறு வருஷம் அரசாண்டான்; அவன் தன் தகப்பனாகிய தாவீதைப்போல் தன் தேவனாகிய கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்யாமல்,

II நாளாகமம் 28 அதிகாரம் 



     1. ஆகாஸ் ராஜாவாகிறபோது இருபது வயதாயிருந்து, பதினாறு வருஷம் எருசலேமில் அரசாண்டான்; ஆனாலும் அவன், தன் தகப்பனாகிய தாவீதைப்போல், கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்யாமல்,

     இந்த வசனங்களை வாசிக்கும்போது யோதாமின் மகன், ஆகாஸ் 20 வயதிலே ராஜாவாகிறான். அவன் கர்த்தரின் பார்வைக்கு செம்மையானதை செய்யாமல் .. என்று குறிப்பிடப்பட்டுள்ளது .

மற்ற எல்லா ராஜாக்களை பற்றி வேதத்திலே பார்க்கும் போது, சிலர் கர்த்தரின் பார்வைக்கு செம்மையானதை செய்தார்கள் என்றும் , சிலர் கர்த்தரின் பார்வைக்கு பொல்லாப்பானதை செய்தார்கள் என்றும் சொல்லப்படிருக்கிறது.

ஆனால் ஆகாஸ் ராஜாவுக்கு மட்டும் அப்படி சொல்லவில்லை. கர்த்தரின் பார்வைக்கு செம்மையானதை செய்யாமல் .. என்றே குறிப்பிட்டு சொல்லப்பட்டு உள்ளது .

அவன் தாத்தா உசியா , தகப்பன் யோதாம் , இவர்களை பார்த்தும் , பாரம்பரியமாகவோ அல்லது மறந்தும் கூட இவன் கர்த்தரின் பார்வைக்கு சரியானதை செய்யவில்லை . 

    அப்படியானால் அவன் செம்மையானதை செய்ய அறிந்து இருந்தும்   செய்யவில்லை . இந்த காரியம் அவனுக்கு பாவமாயிற்று.



ஒருவன் நல்ல பெயர் எடுப்பதோ, அல்லது கெட்ட பெயர் எடுப்பதோ உடனே நடக்கக்கூடிய காரியம் அல்ல. இரண்டிற்குமே சற்று காலம் பிடிக்கும்.

ஆனால் ஆரம்பிக்கும்போதே கர்த்தரின் பார்வைக்கு செம்மையானதை செய்யாமல் .. என எடுத்த எடுப்பிலே இவன் எதிர்மறையான பதிப்பை இவன் ஏற்ப்படுத்திவிட்டதாக பார்க்கிறோம்.(very first he made a negative impact.)

First impression is the Best impression .. but we never find a second chance to make a first impression

சரி அவன் என்ன அப்படி செய்துவிட்டான் . பார்ப்போம் .

II நாளாகமம் 28 அதிகாரம்

       2. இஸ்ரவேல் ராஜாக்களின் வழிகளில் நடந்து, பாகால்களுக்கு வார்ப்பு விக்கிரகங்களைச் செய்தான்.


    வார்ப்பு விக்கிரகங்கள் என்றால் அந்த சிலைகளுக்கு அச்சு (mold)  செய்து அதை அதிக எண்ணிக்கையில் மிக துரிதமாக தயாரிக்க வழி செய்தான் , அது மட்டுமில்லாமல் இந்நாட்களில் நாம் பார்ப்பது போல புதுப்புது வடிவமைப்புகளை உண்டாக்கினான். 


II இராஜாக்கள் 16 அதிகாரம்

     3. இஸ்ரவேல் ராஜாக்களின் வழியிலே நடந்து, கர்த்தர் இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாகத் துரத்தின ஜாதிகளுடைய அருவருப்புகளின்படியே தன் குமாரனை முதலாய்த் தீக்கடக்கப்பண்ணினான்.

    அவன் ஜீவனுள்ள தேவனை தேடாமல், கர்த்தர் இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாகத் துரத்தின ஜனங்களுடைய தெய்வங்களை தேடினான். தன் குமாரரை தீக்கடக்கப்பண்ணினான்.

இங்கு தீயை கடக்க பண்ணினான் என குறிப்பிடப்பட்டு உள்ளது, தீ கடக்க பண்ணுவது என்றால் தீ மிதிப்பது அல்ல, ஆனால்

II நாளாகமம் 28 அதிகாரம் 3 ஆம் வசனத்தை படித்தால் அவன் தன் குமாரனை அந்நிய தெய்வங்களுக்காக தீயில் தகித்தான் என தெரிகிறது.

    3. அவன் இன்னோம் குமாரரின் பள்ளத்தாக்கிலே தூபங்காட்டி, கர்த்தர் இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாகத் துரத்தின ஜாதிகளுடைய அருவருப்புகளின்படியே தன் குமாரரை அக்கினியிலே தகித்துப்போட்டு,....பாருங்கள் இந்த ஆகாஸ் கர்த்தரின் பார்வைக்கு செம்மையானதை செய்திருக்க வேண்டும். அவன் செய்யவில்லை , அவன் பொல்லாப்பானதையும் செய்யவில்லை, இந்த நிலைமை அவனை மிக மிக மோசமான நிலைக்கு இழுத்து சென்றது. இதைவிட இன்னும் மோசமான நிலைக்கு அவன் செல்லவதை அந்த அதிகாரங்களை படித்தால் தெரியும்.

II நாளாகமம் 28 அதிகாரம்

       5. ஆகையால் அவனுடைய தேவனாகிய கர்த்தர் அவனைச் சீரியருடைய ராஜாவின் கையில் ஒப்புக்கொடுத்தார்; அவர்கள் அவனை முறிய அடித்து, அவனுக்கு இருக்கிறவர்களிலே பெரிய கூட்டத்தைச் சிறைபிடித்துத் தமஸ்குவுக்குக் கொண்டுபோனார்கள்; அவன் இஸ்ரவேலுடைய ராஜாவின் கையிலும் ஒப்புக்கொடுக்கப்பட்டான்; இவன் அவனை வெகுவாய் முறிய அடித்தான். 
      6. எப்படியெனில், யூதா மனுஷர் தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரை விட்டபடியினால், ரெமலியாவின் குமாரனாகிய பெக்கா அவர்களில் ஒரேநாளில் லட்சத்திருபதினாயிரம்பேரைக் கொன்றுபோட்டான்; அவர்கள் எல்லாரும் மகா வீரராயிருந்தவர்கள்.


அவன் கர்த்தரைவிட்டபடியினால் ஒரே நாளில் லட்சத்திருபதினாயிரம் மகா வீரர்களை இழந்தான். அதுமட்டுமல்ல 

     7. அன்றியும் எப்பிராயீமின் பராக்கிரமசாலியான சிக்ரியும், ராஜாவின் குமாரனாகிய மாசேயாவையும், அரமனைத் தலைவனாகிய அஸ்ரிக்காமையும், ராஜாவுக்கு இரண்டாவதான எல்க்கானாவையும் கொன்றுபோட்டான்.

ஏறக்குறைய தன்னுடைய எல்லா பெலத்தையும் , தன்னுடைய மெய்காவலர்களையும்  இழந்தான். அப்படியும் அவன் தேவனை தேட மனம் திருந்தவில்லை.

இந்த அதிகாரங்களை படித்துப்பார்த்தால் சிரியா ராஜா மற்றும் இஸ்ரவேல் ராஜா இருவரும் யுதாவுடன் யுத்தம் செய்ததை தெரிந்துக்கொள்ளமுடியும்.

2 நாளாகமம் 28
     8. இஸ்ரவேல் புத்திரர் தங்கள் சகோதரரில் இரண்டு லட்சம்பேராகிய ஸ்திரீகளையும் குமாரரையும் குமாரத்திகளையும் சிறைபிடித்து, அவர்களுடைய அநேக திரவியங்களைக் கொள்ளையிட்டு, கொள்ளைப்பொருளைச் சமாரியாவுக்கு, கொண்டுபோனார்கள்.



அப்போது கர்த்தருடைய வார்த்தை அங்கே இருக்கும் ஒரு தீர்க்கதரிசிக்கு வெளிபடுகிறது, 
   9. அங்கே ஓதேத் என்னும் பேருள்ள கர்த்தருடைய தீர்க்கதரிசி ஒருவன் இருந்தான்; அவன் சமாரியாவுக்கு வருகிற சேனைக்கு திரளாகப் போய், அவர்களை நோக்கி: இதோ, உங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் யூதாவின்மேல் கோபங்கொண்டபடியினால் அவர்களை உங்கள் கைகளில் ஒப்புக்கொடுத்தார்; நீங்களோ வானபரியந்தம் எட்டுகிற உக்கிரத்தோடே அவர்களைச் சங்காரம்பண்ணினீர்கள்.


   அந்த தீர்க்கதரிசி இஸ்ரவேலரை பார்த்து தேவன் உங்களை அடிக்க சொன்னால் நீங்களோ குனிய குனிய குட்டவேண்டும் என்று மிகவும் அடித்துவிட்டீர்கள் என அவர்கள் செய்த தவறை சுட்டிக்காட்டினான். 
அபோதுதான் அவர்கள் அந்த ஸ்திரிகளுக்கும், பிள்ளைகளுக்கும் உடுக்க வஸ்திரம் கொடுக்கிறர்கள். யூதாவிலிருந்து சமரியாவிற்க்கு ஏறக்குறைய 30 மைல், இவளவு தூரம் அவர்கள் நிர்வாணமாய் செல்கின்றனர்.எவ்வளவு ஒரு மோசமான நிலைமை. அவர்கள் கர்த்தரை விட்டபடியால், கர்த்தர் அவர்களை விட்டார். கர்த்தருடைய வார்த்தையை கேட்டும் ஆகாஸ் திருந்தியபாடில்லை.
ஆகாஸ் கர்த்தரை தேடாமல் அசீரியா ராஜாவுக்கு தனக்கு பாதுகாப்பு தரும்படிக்கு தன் ஆட்களை அனுப்புகிறான். கூடவே  கர்த்தருடைய ஆலயத்திலிருந்து பொன்னையும் வெள்ளியையும் எடுத்து காணிக்கையாக அனுப்புகிறான்.


II இராஜாக்கள்16 அதிகாரம்   
   7. ஆகாஸ் அசீரியாவின் ராஜாவாகிய திகிலாத்பிலேசரிடத்திற்கு ஸ்தானாபதிகளை அனுப்பி: நான் உம்முடைய அடியானும் உம்முடைய குமாரனுமாயிருக்கிறேன்; நீர் வந்து, எனக்கு விரோதமாயெழும்பின சீரியா ராஜாவின் கைக்கும், இஸ்ரவேல் ராஜாவின் கைக்கும் என்னை நீங்கலாக்கிவிடும் என்று சொல்லச்சொல்லி;  
   8. கர்த்தருடைய ஆலயத்திலும் ராஜாவின் அரமனைப் பொக்கிஷங்களிலும் அகப்பட்ட வெள்ளியையும் பொன்னையும் எடுத்து, அசீரியாவின் ராஜாவுக்குக் காணிக்கையாக அனுப்பினான். 
   9. அசீரியா ராஜா அவனுக்குச் செவி கொடுத்து, தமஸ்குவுக்குப்போய் அதைப் பிடித்து, அதின் குடிகளைக் கீர்பட்டணத்திற்குச் சிறைபிடித்துக்கொண்டுபோய், ரேத்சீனைக் கொன்றுபோட்டான்.
    இப்பொது ஆகாஸ் ராஜா செய்வது என்ன? தான் நினைத்தது போலவே அசீரியா ராஜா உதவி செய்யவில்லை.
II நாளாகமம் 28 அதிகாரம்
       21. ஆகாஸ் கர்த்தருடைய ஆலயத்தில் ஒரு பங்கும் ராஜ அரமனையில் ஒரு பங்கும், பிரபுக்களின் கையில் ஒரு பங்கும் எடுத்து, அசீரியாவின் ராஜாவுக்குக்கொடுத்தும், அவனுக்கு உதவிகிடைக்கவில்லை.

   இந்த சூழ்நிலையிலாவது ஆகாஸ் கர்த்தரை தேடி இருக்க வேண்டும் செய்யாததினால் என்ன நடக்கிறது என்று அடுத்த வசனத்தை படித்தால் தெரியும்.
II இராஜாக்கள்16 அதிகாரம் 
   10. அப்பொழுது ராஜாவாகிய ஆகாஸ் தமஸ்குவிலுள்ள அசீரியாவின் ராஜாவாகிய திகிலாத்பிலேசருக்கு எதிர்கொண்டு போய்த் தமஸ்குவிலுள்ள பலிபீடத்தைக் கண்டான். ராஜாவாகிய ஆகாஸ் அந்தப் பலிபீடத்தின் சாயலையும், அதினுடைய சகல வேலைப்பாடாகிய அதின் மாதிரியையும் ஆசாரியனாகிய உரியாவுக்கு அனுப்பினான்.

   11. ராஜாவாகிய ஆகாஸ் தமஸ்குவிலிருந்து வருகிறதற்குள் ஆசாரியனாகிய உரியா அப்படிக்கொத்த பலிபீடத்தைக் கட்டி, ராஜாவாகிய ஆகாஸ் தமஸ்குவிலிருந்து அனுப்பின கட்டளையின்படியெல்லாம் செய்தான்.
       12. ராஜா தமஸ்குவிலிருந்து வந்தபோது, அவன் அந்தப் பலிபீடத்தைப் பார்த்து, அந்தப் பலிபீடத்தண்டையில் சேர்ந்து, அதின்மேல் பலியிட்டு, 

       13. தன் சர்வாங்க தகனபலியையும் தன் போஜனபலியையும் தகனித்து, தன் பானபலியை வார்த்து, தன் சமாதானபலிகளின் இரத்தத்தை அந்தப் பலிபீடத்தின்மேல் தெளித்தான். .... 

      14. கர்த்தரின் சந்நிதியில் இருந்த வெண்கலப் பலிபீடத்தை அவன் தன் பலிபீடத்திற்கும் கர்த்தரின்ஆலயத்திற்கும் நடுவே ஆலயத்தின் முகப்பிலிருந்து எடுத்து, அதைத் தன் பலிபீடத்திற்கு வடபுறமாய் வைத்தான் 
   15. ராஜாவாகிய ஆகாஸ் ஆசாரியனாகிய உரியாவை நோக்கி: இந்தப் பெரிய பலிபீடத்தின்மேல் நீ காலைச் சர்வாங்க தகனபலியையும், மாலைப்போஜனபலியையும், ராஜாவின் சர்வாங்க தகனபலியையும், அவருடைய போஜனபலியையும், தேசத்தினுடைய சகல ஜனத்தின் சர்வாங்க தகனபலியையும், அவர்கள் போஜனபலியையும், அவர்கள் பானபலிகளையும் செலுத்தி, அதின்மேல் சர்வாங்க தகனங்களின் சகல இரத்தத்தையும், பலிகளின் சகல இரத்தத்தையும் தெளிப்பாயாக; அந்த வெண்கலப் பலிபீடமோ, நான் சன்னதம் கேட்கிறதற்கு உதவும் என்றான்.
  16. ராஜாவாகிய ஆகாஸ் கட்டளையிட்டபடியெல்லாம் ஆசாரியனாகிய உரியா செய்தான்.
  ஏன் ஆகாஸ் இவ்வாறு  செய்ய வேண்டும்? 
       தன்னை யுத்தத்தில் வெற்றிக்கொள்ள அவர்கள் தெய்வங்கள் அவர்களுக்கு உதவி செய்கிறது, நாமும் அவர்கள் தெய்வத்தை வணங்கினால் நமக்கும் உதவி கிடைக்கும் என எண்ணினான் . 

   அவன் , தன் பிதாக்களை இந்நாள்  மட்டும் வழிநடத்தின, சத்துருக்களிடம் இருந்து காத்த,தன் தெய்வமாகிய கர்த்தரை மறந்தே போனான். 

வாசிக்கலாம் 2 நாளாகமம் 28 .
   23. எப்படியென்றால்: சீரியா ராஜாக்களின் தெய்வங்கள் அவர்களுக்குத் துணைசெய்கிறபடியினால், அவர்கள் எனக்கும் துணைசெய்ய அவர்களுக்குப் பலியிடுவேன் என்று சொல்லி, தன்னை முறிய அடித்த தமஸ்குவின் தெய்வங்களுக்கு அவன் பலியிட்டான்; ஆனாலும் அது அவனும் இஸ்ரவேல் அனைத்தும் நாசமாகிறதற்கு ஏதுவாயிற்று.
  ஆகாஸ் ராஜா இதோடு நிறுத்திக்கொள்ளாமல் தேவனுடைய ஆலயத்திள்ளவற்றை எடுத்து, ஆலயத்தை பூட்டி போடுகிறான்.

   24. ஆகாஸ் தேவனுடைய ஆலயத்தின் பணிமுட்டுகளைச் சேர்த்து, தேவனுடைய ஆலயத்தின் பணிமுட்டுகளைத் துண்டுதுண்டாக்கி, கர்த்தருடைய ஆலயத்தின் கதவுகளைப் பூட்டிப்போட்டு, எருசலேமில் மூலைக்குமூலை பலிபீடங்களை உண்டுபண்ணி,
  
   25. அந்நிய தெய்வங்களுக்குத் தூபங்காட்டும்படிக்கு, யூதாவின் ஒவ்வொரு பட்டணத்திலும் மேடைகளை உண்டுபண்ணி, தன் பிதாக்களின் தேவனாகிய கர்த்தருக்குக் கோபமூட்டினான்.

இந்த காரணத்தினால்தான் கர்த்தர் யுதாவை தாழ்த்துவதை பார்க்கிறோம்.

2 நாளாகமம் 28 
   19. யூதாவின் ராஜாவாகிய ஆகாசினிமித்தம் கர்த்தர் யூதாவைத் தாழ்த்தினார்; அவன் யூதாவைச் சீர்குலைத்து, கர்த்தருக்கு விரோதமாய் மிகவும் துரோகம்பண்ணினான்.

   27. ஆகாஸ் தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின்பு, அவனை எருசலேம் நகரத்தில் அடக்கம்பண்ணினார்கள்; ஆனாலும் இஸ்ரவேல் ராஜாக்களின் கல்லறைகளில் அவனைக் கொண்டுவந்து வைக்கவில்லை;
    இவ்வாறாக அவனுடைய வாழ்க்கை முடிகிறது. எதை செய்ய வேண்டுமோ, செய்ய பெலன் இருந்தும் செய்யாமல் போனதினால் இவனுடைய ஆத்துமாவும், ராஜ்யமும், மக்களையும், தன் செல்வாக்கையும் இழந்து போனான். 
    இவன் தேவனாகிய கர்த்தரை தேடி இருக்கவேண்டும், கர்த்தரை தேட சமயமும், உதாரணங்களும், ஆலோசனைகளும் நிச்சயம் அவனுக்கு இருந்தது. இதை செய்யாததினால் கர்த்தரின் பார்வைக்கு பொல்லாப்பானதை செய்த ராஜாக்களைவிட இவன் மிக மோசமான நிலைக்கு சென்றான்.அவன் மட்டுமல்ல அவனை சார்ந்தவர்களும் தான். மீண்டும் வசிக்கலாம்,
    யாக்கோபு 4 :
    17. ஆதலால், ஒருவன் நன்மைசெய்ய அறிந்தவனாயிருந்தும், அதைச் செய்யாமற்போனால், அது அவனுக்குப் பாவமாயிருக்கும்.  
    உங்கள் கருத்துக்களை prithiviraj23@gmail.comக்கு தெரியப்படுத்துங்கள் 

ஊற்று கேட்கும் தேவன் உடனடி பதில் - 2 : மேவிபோசேத் - கண்ணீரை துடைக்க கர்த்தர் உண்டு கலங்காதே

       அப்பொழுது நானும் ஏன் குடுபத்தினரும் சபைக்கு சென்றுக்கொண்டிருந்தோம் . சில நாட்களாக பிரச்னைககளால் மனம் நொந்து என் குடுபத்திரிடம் நான...