Sunday, October 30, 2011

எசேக்கியா ராஜா - 3 (முக்கியத்துவம்)

எசேக்கியா ராஜா - 3 (முக்கியத்துவம்)

எசேக்கியா ராஜா - 2  ( http://prithiviraj23.blogspot.com/2011/10/2.html ) 

எசேக்கியா ராஜாவின் அறிமுகத்தையும், அவன் செய்கின்றவற்றையும் பார்த்துக்கொண்டு வருகிறோம். வாசிக்கலாம்,

2  நாளாகமம் 29-3 
    3. அவன் தன் ராஜ்யபாரத்தின் முதலாம் வருஷம் முதலாம் மாதத்தில் கர்த்தருடைய ஆலயத்தின் கதவுகளைத் திறந்து, அவைகளைப் பழுதுபார்த்து..,
    எசேக்கியா ராஜாவாக பொறுப்பேற்ற முதல் வருஷம், முதல் மதத்திலே அவன் தன் தகப்பன் பூட்டிப்போட்ட கர்த்தருடைய ஆலயத்தின் கதவுகளை திறந்து அதை பழுது பார்கிறான்.
    முதல் வருஷம், முதல் மாதம் இது நாம் கவனிக்கவேண்டிய  வார்த்தைகளாய் இருக்கிறது. எசேக்கியா ராஜா ராஜ்யபாரம் ஏற்ற சில மாதங்கள் கழித்துக்கூட இதை அவன் செய்திருக்கலாம். ஆனால் அவன் முதல் வருஷம், முதல் மாதத்திலே தானே கர்த்தருடைய ஆலயத்தைத்திறந்து பழுதுப்பர்க்கிறான். 
    இது நெடுநாளாய் அவனுடைய உள்ளத்தில் இருந்த காரியம் என்றுத்தான் நான் நினைக்கிறேன். எனவேதான் உடனே அவசரமாய் இதை செய்கிறான்.
    இதிலிருந்து அவன் கர்த்தருக்கு முதல் இடத்தை கொடுக்கிறதை நாம் அறிந்துக்கொள்ள முடியும். (he gave a high priority to open the doors of the house of the lord and repaired them)
    மத்தேயு 6:33 முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்; அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்.
அடுத்ததாக 2 நாளாகமம் 29 :
    4. ஆசாரியரையும் லேவியரையும் அழைத்துவந்து, அவர்களைக் கிழக்கு வீதியிலே கூடிவரச்செய்து, 
    5. அவர்களை நோக்கி: லேவியரே, கேளுங்கள் ...
    யார் இந்த லேவியர்?
    லேவி யாக்கோபுக்கு பிறந்த 3வது மகன். அவர் என்னோடு சேர்ந்திருப்பார் சென்று சொல்லி லேவி என்று அவன் தாய் பெயரிட்டாள். லேவி என்றால் சேர்ந்திருப்பது.(combined or united) 
    ஆதியாகமம் 49 ஆம் அதிகாரத்தை படித்தால், யாக்கோபு தன் கடைசி நாட்களில் தன் பிள்ளைகளை ஆசீர்வதிக்கும் நேரத்தில் லேவியை சபிப்பதை காணாலாம். ஆனால் கர்த்தரோ அதை ஆசீர்வாதமாக மாற்றினார். இதை எண்ணாகமம் 3 ஆம் அதிகாரத்தில் காணாலாம். 
    எண்ணாகமம் 3:41 இஸ்ரவேல் புத்திரரிலுள்ள முதற்பேறான யாவுக்கும் பதிலாக லேவியரையும், இஸ்ரவேல் புத்திரரின் மிருகஜீவன்களிலுள்ள தலையீற்றான யாவுக்கும் பதிலாக லேவியரின் மிருகஜீவன்களையும் எனக்கென்று பிரித்தெடு; நான் கர்த்தர் என்றார்.

    எண்ணாகமம் 3:45 நீ இஸ்ரவேல் புத்திரரிலுள்ள முதற்பேறான யாவருக்கும் பதிலாக லேவியரையும், அவர்களுடைய மிருகஜீவன்களுக்குப்பதிலாக லேவியரின் மிருகஜீவன்களையும் பிரித்தெடு; லேவியர் என்னுடையவர்களாயிருப்பார்கள்; நான் கர்த்தர்
    கர்த்தர் லேவியை முதல் பிறந்தவனுக்கு ஈடாக தெரிந்துக்கொண்டார். லேவி முதலிலே பிறக்கவில்லை, ஆனால் அவன் கர்த்தருக்காக வைராக்கியமாக நிற்கிறவனாக காணப்பட்டான். எனவே லேவியை கர்த்தர் பிரித்தெடுப்பதை காணலாம். 
    நாமும் கூட அப்படிதான். கர்த்தர் நம்மேல் கிருபையாய் இருக்க நமக்கு தகுதி இல்லை, ஆனாலும் முதற்பெறானவராகிய, ஆண்டவராகிய இயேசுவையே தந்து நம்மை தெரிந்துக் கொண்டார். அப்படியானால் நீங்களும் நானும் ஒரு லேவியன் தான். 
    எனவே, லேவியரே கேளுங்கள்.., 
    2 நாளாகமம் 29
    5. அவர்களை நோக்கி: லேவியரே, கேளுங்கள்; நீங்கள் இப்போது உங்களைப்பரிசுத்தம் பண்ணிக்கொண்டு, உங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தருடைய ஆலயத்தைப் பரிசுத்தம்பண்ணி அசுத்தமானதைப் பரிசுத்த ஸ்தலத்திலிருந்து வெளியே கொண்டுபோங்கள்.
    தெளிவாக சொல்லவேண்டுமானால், முதலாவது உங்களை பரிசுத்தம் பண்ணிக்கொண்டு, பிறகு கர்த்தருடைய ஆலயத்தை பரிசுத்தம் பண்ணுங்கள். (sanctify now yourselves and then sanctify the house of the lord.)  நாம் பொதுவாக மற்றவற்றை தான் குறையாக சொல்லுவோம். நம்மை நாம் கவனிப்பதே இல்லை. ஆனால் இங்கு எசேக்கியா உங்களை என்று குறிப்பிட்டு சொல்லுகிறான்,பிறகு கர்த்தருடைய ஆலயத்தை பரிசுத்தம் செய்யலாம் என வழிகாட்டுகிறான். 
    இந்த வசனத்தை கவனிக்கலாம்...
    சங்கீதம் 29:2 கர்த்தருடைய நாமத்திற்குரிய மகிமையை அவருக்குச் செலுத்துங்கள்; பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள்.
    சங்கீதம் 96:9 பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள்;
    பரிசுத்தம் என்பது அசுத்தத்தை பிரிப்பது, அலங்காரம் என்பது இன்னும் அழகை சேர்ப்பது (மெருகூட்டுவது, அழகோடு அழகை சேர்ப்பது.)
    எனவே பிரியமானவர்களே கர்த்தருக்கு பிரியமில்லதவைகளை நம்மிலிருந்து பிரித்து, கர்த்தரை பிரியப்படுத்துகிறவற்றை நம்முடன் சேர்ப்போம். பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுதுகொள்ளுவோம்.
    சரி இதை எப்போது செய்ய வேண்டும். இப்பொழுது என்று பார்க்கிறோம். இதுவும் முக்கியத்துவம் கொடுப்பதை பற்றித்தான். 
    வசனம் 5 ; இபோழுது உங்களை பரிசுத்தம் பண்ணிக்கொண்டு..., 
    வசனம் 10 ; இப்போதும் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய உக்கிரகோபம் நம்மைவிட்டுத் திரும்பும்படிக்கு, அவரோடே உடன்படிக்கைபண்ண மனதிலே நிர்ணயித்துக்கொண்டேன்.
    வசனம் 11 ;  இப்பொழுது அசதியாயிராதேயுங்கள்; 
    இந்த இப்பொழுது என்ற வார்த்தையை கவனியுங்கள்.
    இப்பொழுது பரிசுத்தம் செய்யுங்கள், இப்பொழுது அசதியயிராதேயுங்கள், இப்பொழுது உடன்படிக்கை பண்ண தீர்மானம், 
வசனம் 31. அதின்பின்பு எசேக்கியா: இப்போதும் நீங்கள் கர்த்தருக்கென்று உங்களைப் பரிசுத்தம்பண்ணினீர்கள்; 
    காரியம் முடிந்துவிட்டது. இபோழுதே செய்ததால் அவர்கள் அவர்களை பரிசுத்தம் பண்ணிக்கொன்டர்கள். 
    நேற்று என்பது முடிந்து விட்டது, நாளை நம்முடையது அல்ல, எனவே இன்றைய பொழுதை பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்று சொல்ல கேள்விப்பட்டிருப்பீர்கள். அது இது தான். இபோழுது தீர்மானம் பண்ணுங்கள், இப்பொழுது ஜாக்கிரதையாய் இருங்கள், இப்பொழுது உங்களை பரிசுத்தம் பண்ணிக்கொள்ளுங்கள். இப்பொழுது  உங்களை பரிசுத்தம் பண்ணினீர்கள். இபோழுதே காரியம் முடிந்து விட்டது. இப்பொழுது என்பது நாம் தேவனுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்பதை காட்டுகிறது.
    முதலாவது கர்த்தரை தேடவேண்டும், முதலாவது இப்பொழுதே நம்மை பரிசுத்தம் செய்துக்கொள்ள வேண்டும். ஆமென்.

    உங்கள் கருத்துக்களை prithiviraj23@gmail.com க்கு தெரியப்படுத்துங்கள்; 

ஊற்று கேட்கும் தேவன் உடனடி பதில் - 2 : மேவிபோசேத் - கண்ணீரை துடைக்க கர்த்தர் உண்டு கலங்காதே

       அப்பொழுது நானும் ஏன் குடுபத்தினரும் சபைக்கு சென்றுக்கொண்டிருந்தோம் . சில நாட்களாக பிரச்னைககளால் மனம் நொந்து என் குடுபத்திரிடம் நான...