கடந்த வரத்திலே நடந்த bible study ல் நான் கேட்டது :
செய்தி : சார்லஸ் தாசன் .
2 இராஜாக்கள் 15 : 32. இஸ்ரவேலின் ராஜாவாகிய ரெமலியாவின் குமாரன் பெக்காவின் இரண்டாம் வருஷத்தில், யூதாவின் ராஜாவாகிய உசியாவின் குமாரன் யோதாம் ராஜாவானான்.
- 33. அவன் ராஜாவாகிறபோது, இருபத்தைந்து வயதாயிருந்து, எருசலேமிலே பதினாறுவருஷம் அரசாண்டான்; சாதோக்கின் குமாரத்தியாகிய அவன் தாயின் பேர் எருசாள்.
- 34. அவன் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்; தன் தகப்பனாகிய உசியா செய்தபடியெல்லாம் செய்தான். 35. மேடைகள்மாத்திரம் அகற்றப்படவில்லை; ஜனங்கள் இன்னும் மேடைகளின்மேல் பலியிட்டுத் தூபங்காட்டி வந்தார்கள்; இவன் கர்த்தருடைய ஆலயத்தின் உயர்ந்த வாசலைக் கட்டினான். 36. யோதாமின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்தவை யாவும், யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.
- இந்த பகுதி ராஜாவாகிய யோதாமைப்பற்றியது...முதலாவதாக நாளாகமத்தில் யோதாமை பற்றி பார்க்கலாம்.
- 2 நாளாகமம் 27 :
- 1. யோதாம் ராஜாவாகிறபோது இருபத்தைந்து வயதாயிருந்து, பதினாறு வருஷம் எருசலேமிலே அரசாண்டான்; சாதோக்கின் குமாரத்தியாகிய அவன் தாயின்பேர் எருசாள்.
- 2. அவன் தன் தகப்பனாகிய உசியா செய்தபடியெல்லாம் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்;
இந்த யோதாம் ராஜாவை பற்றி... அவன் தன் தகப்பனாகிய உசியா செய்ததுப்போல கர்த்தரின் பார்வைக்கு செம்மையானதை செய்தான்.
தன் தகப்பன் செய்தது போல என்று சொல்லும்போது இது ஒரு பாரம்பரியமான(traditional) ஒன்றாக இருக்கிறது. சரி அப்படியான அவன் தகப்பன் சரியாக செய்தானா என்று பார்க்க வேண்டிய அவசியம் நமக்கு உண்டு .
2 நாளாகமம் 26 : 4
- 4. அவன் தன் தகப்பனாகிய அமத்சியா செய்தபடியெல்லாம் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்து,...
- இந்த வசனத்தை பார்த்தால் , அவன் தகப்பனும் அவனுடைய தகப்பனை பின்பற்றுவதை பார்க்கிறோம் .
ஆனாலும் அவனைப்போலக் கர்த்தரின் ஆலயத்திற்குள்பிரவேசியாதிருந்தான்;
இந்த காரியத்தை தன் தகப்பனிடம் இருந்து கற்றுகொண்டான். அவன் ஆலயத்துக்குள் பிரவேசிக்கவில்லை.
உசியா ராஜா தேவ ஆலயத்திற்குள் துணிகரமாக நுழைந்து கர்த்தருடைய கோபத்துக்கு ஆளானான். கர்த்தர் அவனை அடித்ததால் அவன் நெற்றியிலே குஷ்டம் வந்தது. எனவே இதை பார்த்த யோதமும் அந்த தவறை செய்ய முற்படவில்லை.
ஒரு விஷயத்தில் தோல்வி ஏற்படுவது என்பது அந்த விஷயத்தில் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் ஒன்று உண்டு என்பதை சுட்டிக்காட்டுகிறது. நாம் பாடம் கற்றுக்கொள்ளாத வரை நாம் அதே விஷயத்தில் தோற்றுக்கொண்டே இருப்போம் எனபது தெளிவாக தெரிகிறது.
இந்த காரியத்தை தன் தகப்பனிடம் இருந்து கற்றுகொண்டான். அவன் ஆலயத்துக்குள் பிரவேசிக்கவில்லை.
உசியா ராஜா தேவ ஆலயத்திற்குள் துணிகரமாக நுழைந்து கர்த்தருடைய கோபத்துக்கு ஆளானான். கர்த்தர் அவனை அடித்ததால் அவன் நெற்றியிலே குஷ்டம் வந்தது. எனவே இதை பார்த்த யோதமும் அந்த தவறை செய்ய முற்படவில்லை.
ஒரு விஷயத்தில் தோல்வி ஏற்படுவது என்பது அந்த விஷயத்தில் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் ஒன்று உண்டு என்பதை சுட்டிக்காட்டுகிறது. நாம் பாடம் கற்றுக்கொள்ளாத வரை நாம் அதே விஷயத்தில் தோற்றுக்கொண்டே இருப்போம் எனபது தெளிவாக தெரிகிறது.
அடுத்ததாக,
யோதாம் ராஜாவுக்கு அனேக ஆலோசனைகாரர்கள் இருந்தார்கள். என்று சற்று கூர்ந்து கவனித்தால் தெரியும் . - முதலாவதாக அவன் தகப்பன் உசியா, அவனை தேவன் அடித்ததால் அவன் தனியே இருந்து தன் மகனுக்கு ஆலோசனை கொடுத்தான் .
- மட்டுமல்லாமல் ஓசியா (ஓசியா 1 :1 ), மீகா (மீகா:1:1 ) போன்ற தீர்க்கதரிசிகள் அவனுக்கு ஆலோசனை வழங்கினார்கள் என்று பார்க்கிறோம் .
நீதிமொழிகள் 19:20 உன் அந்தியகாலத்தில் நீ ஞானமுள்ளவனாயிருக்கும்படி, ஆலோசனையைக்கேட்டு, புத்திமதியை ஏற்றுக்கொள்.
- அவனுக்கு அனேக ஆலோசனைகாரர்கள் இருந்தார்கள் என்பது அவன் ஆலோசனையை கேட்க தயாராகவே இருந்தான் என்றே தெரிகிறது .
நீதிமொழிகள் 13:10 அகந்தையினால்மாத்திரம் வாது பிறக்கும்; ஆலோசனையைக் கேட்கிறவர்களிடத்திலோ ஞானம் உண்டு.
அடுத்ததாக,
அடுத்ததாக,
2 நாளாகமம் 27:
- 3. அவன் கர்த்தருடைய ஆலயத்தின் உயர்ந்த வாசலைக் கட்டினதுமல்லாமல், ஓபேலின் மதிலின்மேல் அநேக கட்டடங்களையும் கட்டினான். 4. யூதாவின் மலைகளிலே பட்டணங்களையும், காடுகளிலே கோட்டைகளையும் கோபுரங்களையும் கட்டினான்.
- இந்த வசனங்கள் அவன் வெறும் கட்டடங்களை கட்டினான் என்பதை மாத்திரம் குறிக்கவில்லை, அவன் தன் அரணாக இந்த மதில்களையும், கோட்டைகளையும், கோபுரங்களையும் நம்பினான் என்று ஓசியா தீர்ககதறின புத்தகத்திலே பார்க்கலாம்.
ஓசியா 8 :
- 14. இஸ்ரவேல் தன்னை உண்டாக்கினவரை மறந்து கோவில்களைக் கட்டுகிறான்; யூதா அரணான பட்டணங்களைப் பெருகப்பண்ணுகிறான்;
இஸ்ரவேலருக்கு கர்த்தரே அரண். தாவீது கூட கர்த்தரே எனக்கு அரண், அவரே என் கோட்டை , என் துருகம் என்று சொல்லுவதை சங்கீதங்களின் புத்தகத்திலே பார்க்க முடியும். இதை தான் யோதாம் மறந்து போனான். கட்டடங்களை கட்டுவது தவறல்ல. தன் நம்பிக்கையை தான் கட்டின கோட்டைகளின் மேல் வைத்தான். அது தான் தவறு.
நாமும் கூட நம் நம்பிக்கையை எங்கு , எதில் , யார் மேல் வைக்கிறோம்
சிலர் நம் நம்பிக்கையை நம்முடைய savings மேல் வைக்கிறோம்.
எல்லா காலத்திலும், எல்லா சூழ்நிலையிலும் கர்த்தரே நமக்கு நம்பிக்கையாக இருக்க வேண்டும்.
அடுத்ததாக
2 நாளாகமம் 27 :
6. யோதாம் தன் வழிகளைத் தன் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக நேராக்கினதினால் பலப்பட்டான்.
தன் வழிகளை கர்த்தருக்கு முன்பாக நேராகினான்.
நேராகினான் என்றால் அதற்கு முன் அவனுடைய வழி நேராக இல்லை.
அவன் தன் வழியை நேராக்க தீர்மானம் பண்ணினான்.
நான் தான் இதை செய்ய வேண்டும். ஏதும் தானாக நடக்காது. நான் தான் கர்த்தரை தேட வேண்டும் , நான் தான் என் வழியை சரி செய்ய வேண்டும் .
சங்கீதம் 16:8 கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்; அவர் என் வலதுபாரிசத்தில் இருக்கிறபடியால் நான் அசைக்கப்படுவதில்லை
இந்த வசனத்தை இன்னும் தெளிவாக சொன்னால் கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக நான் வைத்திருக்கிறேன்.
சங்கீதம் 119 :
- 57. கர்த்தாவே, நீரே என் பங்கு; நான் உமது வசனங்களைக் கைக்கொள்ளுவேன் என்றேன்.
- 93. நான் ஒருபோதும் உம்முடைய கட்டளைகளை மறக்கமாட்டேன்; அவைகளால் நீர் என்னை உயிர்ப்பித்தீர்.
- 105. உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது.
நான் என் வாய்க்கு காவல் வேண்டும் என்று சங்கீதகாரன் சொல்லுகிறான் .
சங்கீதம் 141:3 கர்த்தாவே, என் வாய்க்குக் காவல் வையும்; என் உதடுகளின் வாசலைக் காத்துக்கொள்ளும்.
சங்கீதம் 5:6 பொய் பேசுகிறவர்களை அழிப்பீர்; இரத்தப்பிரியனையும் சூதுள்ள மனுஷனையும் கர்த்தர்அருவருக்கிறார்
நீதிமொழிகள் 12:22 பொய் உதடுகள் கர்த்தருக்கு அருவருப்பானவைகள்; உண்மையாய் நடக்கிறவர்களோ அவருக்குப் பிரியம்.
இருதயமே திருக்குள்ளது என்று வேதம் சொல்லுகிறது . நம் இருதயத்தை தேவனுக்கு முன்பாக சீரக்குவோம்.
சங்கீதம் 27:8 என் முகத்தைத் தேடுங்கள் என்று சொன்னீரே, உம்முடைய முகத்தையே தேடுவேன் கர்த்தாவே, என்று என் இருதயம் உம்மிடத்தில் சொல்லிற்று
சங்கீதம் 141:3 கர்த்தாவே, என் வாய்க்குக் காவல் வையும்; என் உதடுகளின் வாசலைக் காத்துக்கொள்ளும்.
சங்கீதம் 5:6 பொய் பேசுகிறவர்களை அழிப்பீர்; இரத்தப்பிரியனையும் சூதுள்ள மனுஷனையும் கர்த்தர்அருவருக்கிறார்
நீதிமொழிகள் 12:22 பொய் உதடுகள் கர்த்தருக்கு அருவருப்பானவைகள்; உண்மையாய் நடக்கிறவர்களோ அவருக்குப் பிரியம்.
இருதயமே திருக்குள்ளது என்று வேதம் சொல்லுகிறது . நம் இருதயத்தை தேவனுக்கு முன்பாக சீரக்குவோம்.
சங்கீதம் 27:8 என் முகத்தைத் தேடுங்கள் என்று சொன்னீரே, உம்முடைய முகத்தையே தேடுவேன் கர்த்தாவே, என்று என் இருதயம் உம்மிடத்தில் சொல்லிற்று
மேலே சொல்லப்பட்ட வசனங்கள் அனைத்தும் தேவனுக்கு முன்பாக அவர்களுடைய தாங்களாகவே எடுத்த தீர்மானத்தை காட்டுகிறது. எனவே
இதற்கு முன் நாம் எப்படி இருந்தாலும் பரவாயில்லை ஆனால் இனி நாம் நம் வழியை கர்த்தருக்கு முன்பாக நேராக்குவோம். ஆமென்.
குறிப்பு:
2 நாளாகமம் 27
8. அவன் ராஜாவாகிறபோது இருபத்தைந்து வயதாயிருந்து, பதினாறு வருஷம் எருசலேமில் அரசாண்டான்.
ராஜாவாகிய யோதாம் 41 வயதிலே மரித்துப்போகிறான். அவன் வியாதிப்பட்டோ அல்லது யுத்தத்திலோ மரித்தான் என குறிப்பிட படவில்லை. ஆனால் அவன் ஜனங்களை கர்த்தரிடம் திருப்பாமல் போனது அவன் செய்த மிக பெரிய தவறு ஆகும். 2 ஆம் வசனத்தின் கடைசி பகுதி
- ஜனங்கள் இன்னும் தங்களைக் கெடுத்துக்கொண்டிருந்தார்கள்.
- அவன் ஜனகளை பற்றி கவலைப்பட்டதாக தெரியவில்லை. ராஜாவாக இருந்தும் பிரோஜனமற்ற வாழ்க்கை வாழ்ந்ததால், அவனுடைய வாழ்க்கை மிக குறுகிய காலத்திலே முற்றுப்பெற்றது.
உங்கள் கருத்துக்களை prithiviraj23@gmail.com க்கு தெரியப்படுத்துங்கள்