Tuesday, March 15, 2011

கடைசி காலத்தின் கடைசி மணித்துளிகளில் நாம்...

கடைசி காலத்தின் கடைசி மணித்துளிகளில் நாம் நின்றுக் கொண்டு இருக்கிறோம் என்பதை எல்லோரும் ஒட்டுமொத்தமாக ஒத்துக்கொள்ளக்கூடும் என்றே நினைக்கிறன். 
சமிபத்தில் ஜப்பானில் நடந்த நிலநடுக்கம் ஒட்டு மொத்த உலகத்தையே அசைத்துவிட்டு இருக்கிறது . 
ஜப்பான் தீவே 8 அடி நகர்ந்து விட்டது என்று சொல்லுகிறது ஆய்வு  அறிக்கைகள்.
ஏற்கனவே இந்தோனேஷியா கடல் பகுதியில் ஏற்ப்பட்ட நில நடுக்கம் சுனாமி பேரலைகளை உண்டாக்கி பல நாடுகளை தாக்கியது . இந்தோனேஷியா, இலங்கை,தென் இந்தியா-இவைகள்  வெகுவாக பாதிப்படைந்தது .
இது ஒட்டு மொத்த உலகத்தில் மூன்றில் ஒரு பங்கு உலக நில அமைப்புகளை மாற்றிவிட்டது . 
நம்மை சுற்றி நடக்கும்  அத்தனையும், நாம் கடைசி காலத்தின் மடியில் தவழ்ந்து கொண்டிருக்கிறோம் என்றே சொல்லுகிறது. மன்னிக்கவும் எச்சரிக்கிறது . 

வளைகுடா நாடுகளில் ஏற்பட்டிருக்கும் கிளர்ச்சி, உலக மக்களுக்கு, குறிப்பாக கிறிஸ்து இயேசுவை பின்பற்றுபவர்களுக்கு எச்சரிக்கை மணி அடிக்கிறது. 
ராஜ்யத்திற்கு விரோதமாக ராஜ்யமும் , ஜனத்திற்கு விரோதமாக ஜனமும் எழும்பும் என்ற வேத வசனம் கடைசி கால அடையாளமாகவே சொல்லப்பட்டு இருக்கிறது . 

 சமிப காலத்தில் நடந்து முடிந்த அல்லது இன்னும் முற்றுப்பெறாத , ஈராக்- அமெரிக்கா போர் , இலங்கையில் நடந்த உள்நாட்டு போர் , சீனாவின் அதிகாரப்பூர்வ ஆயுத அறிவிப்பு, ஆப்கானிஸ்தான் - தலிபான்களுடன் நடந்த போர், எல்லை தாண்டும் பயங்கரவாதம், இஸ்ரேல்- பாலஸ்தீனா ஓயாத சண்டை இவை எல்லாம் இந்த வசனத்தை நிறைவேற்றிக்கொண்டு இருக்கிறது.

பஞ்சம் , கொள்ளை நோய்களை பற்றிக் கேள்விபடுவீர்கள் - என்று வேதம் தெளிவாக சொல்லுகிறது. பஞ்சத்தால் இன்னும் சோமாலியா நாட்டவர்கள் கடல் கொள்ளையில் ஈடுபடுகிறார்கள், நோய்களுக்கோ அளவே இல்லை . 

எச்சரிக்கை . எச்சரிக்கை . எச்சரிக்கை . 

கடலோ கொந்தளிக்கிறது , ஜனங்களோ தத்தளிக்கிறார்கள், காலமோ எச்சரிக்கிறது. .
நமுடைய பாவங்களுக்காக அடிக்கப்பட்டு, நமுடைய மீறுதலுக்காக நொறுக்கப்பட்ட , நம்முடைய பாவங்களை சிலுவையில் சுமந்த தீர்த்த , நமக்கு சமாதானத்தை உண்டுப்பன்னும்படி ஆக்கினை தீர்ப்படைந்த, கர்த்தரும், இரட்சகருமான  இயேசுவை உங்கள் மனதிலே ஏற்றுக்கொள்ளுங்கள், பரலோகத்தை பிடித்துக்கொள்வீர்கள். அழியாத ஆக்கினைக்கு தப்பித்துக்கொள்வீர்கள் ..

இதெல்லாம் தெரியும் என்பவர்களுக்கு - அறுவடை மிகுதி ஆட்களோ கொஞ்சம் . அறுவடைக்கு ஆட்களை அனுப்பும்படி உங்கள் எஜமானனை வேண்டிக்கொள்ளுங்கள் . 

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது . 
உங்கள் கருத்துக்களை prithiviraj23@gmail.com க்கு தெரியப்படுத்துங்கள். 

Sunday, March 13, 2011

கிரிகெட் - மனிதனின் மறுப்பக்கம் 1


cricket  ஏன் இவ்வளவு புகழ் அடைந்தது என்று எனக்கு புரியவில்லை. எப்படியோ  cricket  ஒரு விளையாட்டாய் இருந்தாலும் அது மனிதனின் இன்னொரு பக்கத்தை காட்டுவதாகவே உள்ளது ... அது என்ன , மறுபக்கம் .... கொஞ்சம் யோசிங்க ....
என்று அப்படியே உங்களை மிகவும் யோசிக்க  வைத்துவிட்டேன் .
உலக கோப்பை நடக்கும் இந்த சமயத்தில் கிரிகெட்டை நம்மோடு ஒப்பிடுவது இன்னும் அர்த்தமுள்ளதாகவே இருக்கும் என நினைக்கிறேன்.
முதலாவது stumps and bails  :
ஒவ்வொரு stumps ஐ ஆவி , ஆத்துமா , சரிரம் என சொல்லலாம் . இதை தான் பொதுவாக உடல்,பொருள், ஆவி என்று சொல்கிறோம் 
நாம் முதலாவது ஆவிக்கு முதலிடம் கொடுக்க வேண்டும் , ஆனால் நாம் சரிரதிற்க்கு முதலிடம் கொடுக்கிறோம் ... வேதத்தில் ஆவிக்கு முதலிடம் கொடுத்து ஆவி ,ஆத்துமா ,சரிரம் என்றே கூறப்பட்டு இருக்கிறது . bails ஐ ஆவியையும் ஆத்துமாவையும் இணைக்கக்கூடிய  ஆவிக்குரிய சிந்தை என்றும் ஆத்துமாவையும் சரிரத்தையும் இணைக்ககூடிய மாம்சச்சிந்தை என்றும் சொல்லலாம் . 

சிந்தைகள் நாம் யார் என்பதை தீர்மானிக்கிறது . 

ஆவியையும் ஆத்துமாவையும் இணைக்கக்கூடிய  ஆவிக்குரிய சிந்தைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தால் நாம் தேவனிடத்தில் அதிக நட்டமுடையவர்களாய் இருப்போம் . 

ஆத்துமாவையும் சரிரத்தையும் இணைக்ககூடிய மாம்சச்சிந்தைக்கு  அதிகமுக்கியத்துவம் கொடுத்தால் பொழுதுபோக்கில் பிரியம் உள்ளவர்களையும் , தேவனற்ற வாழ்க்கை வாழ்பவர்களாக இருப்போம் .

எப்படி இருந்தாலும் ஆவி ,ஆத்துமா , சரிரம் மற்றும் சிந்தைகளை நாம் காக்கத்தான் வேண்டும் .
சரி . எப்படி காப்பது ? ... அதற்குத்தான் நாம் சிறந்த BATSMANகளாக இருக்க வேண்டும் என்று ஒப்பனையாக வேதம் சொல்லுகிறது . அதை பற்றி அடுத்த இதழில் சொல்கிறேன் . 


Saturday, March 5, 2011

என்ன செய்ய வேண்டும் ....

  நாம்   பொதுவாக....இப்போ  என்ன செய்ய வேண்டும்  என்று எப்பொழுது யோசிப்போம் ? 
நிச்சயமாக நாம் என்ன செய்வது என்று தெரியாத சமயத்தில், நம்மால் சமாளிக்க முடியாத வேளைகளில்,  நாம் என்ன செய்ய வேண்டும் என்று யோசித்துக்கொண்டே இருப்போம், கடைசியில் என்ன செய்வது என்னவென்றே தெரியாமல் புலம்பிக்கொண்டு இருப்போம் . அப்படித்தானே  ...! 

சரி நாம் என்ன செய்வது என்று தெரியாத சமயத்தில்  நாம் என்ன செய்ய வேண்டும் ...?
வேதத்தில் இதுப்போன்ற சூழல்கள்  எப்படி கையாளப்பட்டு இருக்கிறதென்று
பார்ப்போம்.

2 இராஜாக்கள் 6 : 14-15


     அப்பொழுது அவன் அங்கே குதிரைகளையும் இரதங்களையும் பலத்த இராணுவத்தையும் அனுப்பினான்; அவர்கள் இராக்காலத்திலே வந்து பட்டணத்தை வளைந்துகொண்டார்கள்.


    தேவனுடைய மனுஷனின் வேலைக்காரன் அதிகாலமே எழுந்து வெளியே புறப்படுகையில், இதோ, இராணுவமும் குதிரைகளும் இரதங்களும் பட்டணத்தைச் சுற்றிக் கொண்டிருக்கக் கண்டான்; அப்பொழுது வேலைக்காரன் அவனை நோக்கி: ஐயோ, என் ஆண்டவனே, என்னசெய்வோம் என்றான்..


 இங்கு சீரியாவின் ராஜா, எலிசா என்னும் தீர்க்கதரிசியை, கர்த்தருடைய மனுஷனை பிடிக்கும்படி தன்னுடைய படையை அனுப்புகிறான். அவர்கள் வந்து எலிசா இருக்கும் அந்த மலையை சுற்றிலும் வளைத்துக்கொள்கிறார்கள் . அதை பார்த்த எலிசாவின் வேலைக்காரன் என்ன செய்வது என்று தெரியாமல் புலம்புகிறான். 


2 நாளாகமம் 20 : 1-2
 ௦
       இதற்குப்பின்பு மோவாப் புத்திரரும், அம்மோன் புத்திரரும்,  அவர்களோடே அம்மோனியருக்கு அப்புறத்திலுள்ள மனுஷருங்கூட யோசபாத்திற்கு விரோதமாய் யுத்தம்பண்ண வந்தார்கள்.


    சிலர் வந்து, யோசபாத்தை நோக்கி: உமக்கு விரோதமாய் ஏராளமான ஜனங்கள் கடலுக்கு அக்கரையிலிருக்கிற சீரியாவிலிருந்து வருகிறார்கள்; இதோ, அவர்கள் எங்கேதியாகிய ஆசாசோன்தாமாரில் இருக்கிறார்கள் என்று அறிவித்தார்கள்.
   
  இங்கு கர்த்தருக்கு முன் உத்தமனாகிய யோசபாத்துக்கு விரோதமாக 3
விதமான மக்கள் கூடி யுத்தம் செய்ய வருகிறார்கள் .
இப்படி இக்கட்டான சூழ்நிலையில், என்ன செய்ய வேண்டும் என்றே தெரியாத நிலையில் என்ன செய்ய
வேண்டும் என்பதை விட,  என்ன செய்யக்கூடாது என்று பார்ப்போம்.


என்ன செய்யக்கூடாது :
       இதுபோன்ற நேரங்களில் முதலில் நமக்கு உதவிக்கு வருவது பயம் தான்.
பயம் ஒரு ஆவி மட்டுமல்ல, அது ஒரு ஆளை போல நம்மை தவறான முடிவு எடுக்க தூண்டும் . தவறான ஆலோசனைகளை கேட்கசெய்துவிடும். எனவே பயப்பட கூடாது .
பிறர் ஆலோசனையை கேட்க கூடாது .

என்ன செய்ய வேண்டும் :

2 நாளாகமம் 20 : 12 

     எங்கள் தேவனே, அவர்களை நீர் நியாயந்தீர்க்கமாட்டீரோ? எங்களுக்கு விரோதமாக வந்த இந்த ஏராளமான கூட்டத்திற்கு முன்பாக நிற்க எங்களுக்குப் பெலனில்லை; நாங்கள் செய்யவேண்டியது இன்னதென்று எங்களுக்குத் தெரியவில்லை; ஆகையால் எங்கள் கண்கள் உம்மையே நோக்கிக்கொண்டிருக்கிறது என்றான்.
 
இங்கு அதே அதிகாரத்தில் யோசபாத் என்ன செய்கிறான் என்று பார்க்கிறோம் .
அவன் கர்த்தரை நோக்கிப்பார்க்கிறான் .


சங்கீதம் 121 : 1-2
    எனக்கு ஒத்தாசை வரும் பர்வதங்களுக்கு நேராக என் கண்களை         ஏறெடுக்கிறேன். வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தரிடத்திலிருந்து எனக்கு ஒத்தாசை வரும்.

சங்கீதம் 123 : 2-3 
      இதோ, வேலைக்காரரின் கண்கள் தங்கள் எஜமான்களின் கையை நோக்கியிருக்குமாப்போலவும், வேலைக்காரியின் கண்கள் தன் எஜமாட்டியின் கையை நோக்கியிருக்குமாப்போலவும், எங்கள் தேவனாகியகர்த்தர் எங்களுக்கு இரக்கஞ்செய்யும்வரைக்கும், எங்கள் கண்கள் அவரை நோக்கியிருக்கிறது. எங்களுக்கு இரங்கும் கர்த்தாவே, எங்களுக்கு இரங்கும்; நிந்தனையினால் மிகவும் நிறைந்திருக்கிறோம்.

கர்த்தரை நோக்கி பார்க்கவேண்டும் . அவரை நோக்கிப்பார்த்த முகங்கள் பிரகாசம் அடையும் என்று வேதம் சொல்லுகிறது . 

யாத்திராகமம் 14: 13

    அப்பொழுது மோசே ஜனங்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; நீங்கள் நின்றுகொண்டு இன்றைக்குக்கர்த்தர் உங்களுக்குச் செய்யும் இரட்சிப்பைப் பாருங்கள்; இன்றைக்கு நீங்கள் காண்கிற எகிப்தியரை இனி என்றைக்கும் காணமாட்டீர்கள்.

இங்கு நின்று என்ற வார்த்தையை கவனிக்க :

2 நாளாகமம் 20 : 17. 
    இந்த யுத்தத்தைப் பண்ணுகிறவர்கள் நீங்கள் அல்ல; யூதா மனுஷரே, எருசலேம் ஜனங்களே, நீங்கள் தரித்துநின்று கர்த்தர் உங்களுக்குச் செய்யும் இரட்சிப்பைப் பாருங்கள்; பயப்படாமலும் கலங்காமலும் இருங்கள்; நாளைக்கு அவர்களுக்கு எதிராகப் புறப்படுங்கள்; கர்த்தர் உங்களோடே இருக்கிறார் என்றான்.
இங்கு  தரித்து நின்று என்ற வார்த்தையை கவனிக்க :


எபேசியர் 6:  

10. கடைசியாக, என் சகோதரரே, கர்த்தரிலும் அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் பலப்படுங்கள்.

11. நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்துநிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் தரித்துக்கொள்ளுங்கள்.

12. ஏனெனில், மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு.

13. ஆகையால், தீங்குநாளிலே அவைகளை நீங்கள் எதிர்க்கவும், சகலத்தையும் செய்துமுடித்தவர்களாய் நிற்கவும் திராணியுள்ளவர்களாகும்படிக்கு, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள்.

கர்த்தரை நோக்கி பார்க்க வேண்டும் .
தரித்து நிற்க வேண்டும் .
கர்த்தரிலும் அவருடைய சத்துவத்திலும் பெலப்பட வேண்டும்

வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரம் படைத்த கர்த்தர் உங்களுக்கு உதவி செய்வாராக ... ஆமென் .

உங்கள் கருத்துகளை prithiviraj23@gmail.com க்கு தெரியப்படுத்துங்கள் 

ஊற்று கேட்கும் தேவன் உடனடி பதில் - 2 : மேவிபோசேத் - கண்ணீரை துடைக்க கர்த்தர் உண்டு கலங்காதே

       அப்பொழுது நானும் ஏன் குடுபத்தினரும் சபைக்கு சென்றுக்கொண்டிருந்தோம் . சில நாட்களாக பிரச்னைககளால் மனம் நொந்து என் குடுபத்திரிடம் நான...