Sunday, October 30, 2011

எசேக்கியா ராஜா - 3 (முக்கியத்துவம்)

எசேக்கியா ராஜா - 3 (முக்கியத்துவம்)

எசேக்கியா ராஜா - 2  ( http://prithiviraj23.blogspot.com/2011/10/2.html ) 

எசேக்கியா ராஜாவின் அறிமுகத்தையும், அவன் செய்கின்றவற்றையும் பார்த்துக்கொண்டு வருகிறோம். வாசிக்கலாம்,

2  நாளாகமம் 29-3 
    3. அவன் தன் ராஜ்யபாரத்தின் முதலாம் வருஷம் முதலாம் மாதத்தில் கர்த்தருடைய ஆலயத்தின் கதவுகளைத் திறந்து, அவைகளைப் பழுதுபார்த்து..,
    எசேக்கியா ராஜாவாக பொறுப்பேற்ற முதல் வருஷம், முதல் மதத்திலே அவன் தன் தகப்பன் பூட்டிப்போட்ட கர்த்தருடைய ஆலயத்தின் கதவுகளை திறந்து அதை பழுது பார்கிறான்.
    முதல் வருஷம், முதல் மாதம் இது நாம் கவனிக்கவேண்டிய  வார்த்தைகளாய் இருக்கிறது. எசேக்கியா ராஜா ராஜ்யபாரம் ஏற்ற சில மாதங்கள் கழித்துக்கூட இதை அவன் செய்திருக்கலாம். ஆனால் அவன் முதல் வருஷம், முதல் மாதத்திலே தானே கர்த்தருடைய ஆலயத்தைத்திறந்து பழுதுப்பர்க்கிறான். 
    இது நெடுநாளாய் அவனுடைய உள்ளத்தில் இருந்த காரியம் என்றுத்தான் நான் நினைக்கிறேன். எனவேதான் உடனே அவசரமாய் இதை செய்கிறான்.
    இதிலிருந்து அவன் கர்த்தருக்கு முதல் இடத்தை கொடுக்கிறதை நாம் அறிந்துக்கொள்ள முடியும். (he gave a high priority to open the doors of the house of the lord and repaired them)
    மத்தேயு 6:33 முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்; அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்.
அடுத்ததாக 2 நாளாகமம் 29 :
    4. ஆசாரியரையும் லேவியரையும் அழைத்துவந்து, அவர்களைக் கிழக்கு வீதியிலே கூடிவரச்செய்து, 
    5. அவர்களை நோக்கி: லேவியரே, கேளுங்கள் ...
    யார் இந்த லேவியர்?
    லேவி யாக்கோபுக்கு பிறந்த 3வது மகன். அவர் என்னோடு சேர்ந்திருப்பார் சென்று சொல்லி லேவி என்று அவன் தாய் பெயரிட்டாள். லேவி என்றால் சேர்ந்திருப்பது.(combined or united) 
    ஆதியாகமம் 49 ஆம் அதிகாரத்தை படித்தால், யாக்கோபு தன் கடைசி நாட்களில் தன் பிள்ளைகளை ஆசீர்வதிக்கும் நேரத்தில் லேவியை சபிப்பதை காணாலாம். ஆனால் கர்த்தரோ அதை ஆசீர்வாதமாக மாற்றினார். இதை எண்ணாகமம் 3 ஆம் அதிகாரத்தில் காணாலாம். 
    எண்ணாகமம் 3:41 இஸ்ரவேல் புத்திரரிலுள்ள முதற்பேறான யாவுக்கும் பதிலாக லேவியரையும், இஸ்ரவேல் புத்திரரின் மிருகஜீவன்களிலுள்ள தலையீற்றான யாவுக்கும் பதிலாக லேவியரின் மிருகஜீவன்களையும் எனக்கென்று பிரித்தெடு; நான் கர்த்தர் என்றார்.

    எண்ணாகமம் 3:45 நீ இஸ்ரவேல் புத்திரரிலுள்ள முதற்பேறான யாவருக்கும் பதிலாக லேவியரையும், அவர்களுடைய மிருகஜீவன்களுக்குப்பதிலாக லேவியரின் மிருகஜீவன்களையும் பிரித்தெடு; லேவியர் என்னுடையவர்களாயிருப்பார்கள்; நான் கர்த்தர்
    கர்த்தர் லேவியை முதல் பிறந்தவனுக்கு ஈடாக தெரிந்துக்கொண்டார். லேவி முதலிலே பிறக்கவில்லை, ஆனால் அவன் கர்த்தருக்காக வைராக்கியமாக நிற்கிறவனாக காணப்பட்டான். எனவே லேவியை கர்த்தர் பிரித்தெடுப்பதை காணலாம். 
    நாமும் கூட அப்படிதான். கர்த்தர் நம்மேல் கிருபையாய் இருக்க நமக்கு தகுதி இல்லை, ஆனாலும் முதற்பெறானவராகிய, ஆண்டவராகிய இயேசுவையே தந்து நம்மை தெரிந்துக் கொண்டார். அப்படியானால் நீங்களும் நானும் ஒரு லேவியன் தான். 
    எனவே, லேவியரே கேளுங்கள்.., 
    2 நாளாகமம் 29
    5. அவர்களை நோக்கி: லேவியரே, கேளுங்கள்; நீங்கள் இப்போது உங்களைப்பரிசுத்தம் பண்ணிக்கொண்டு, உங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தருடைய ஆலயத்தைப் பரிசுத்தம்பண்ணி அசுத்தமானதைப் பரிசுத்த ஸ்தலத்திலிருந்து வெளியே கொண்டுபோங்கள்.
    தெளிவாக சொல்லவேண்டுமானால், முதலாவது உங்களை பரிசுத்தம் பண்ணிக்கொண்டு, பிறகு கர்த்தருடைய ஆலயத்தை பரிசுத்தம் பண்ணுங்கள். (sanctify now yourselves and then sanctify the house of the lord.)  நாம் பொதுவாக மற்றவற்றை தான் குறையாக சொல்லுவோம். நம்மை நாம் கவனிப்பதே இல்லை. ஆனால் இங்கு எசேக்கியா உங்களை என்று குறிப்பிட்டு சொல்லுகிறான்,பிறகு கர்த்தருடைய ஆலயத்தை பரிசுத்தம் செய்யலாம் என வழிகாட்டுகிறான். 
    இந்த வசனத்தை கவனிக்கலாம்...
    சங்கீதம் 29:2 கர்த்தருடைய நாமத்திற்குரிய மகிமையை அவருக்குச் செலுத்துங்கள்; பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள்.
    சங்கீதம் 96:9 பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள்;
    பரிசுத்தம் என்பது அசுத்தத்தை பிரிப்பது, அலங்காரம் என்பது இன்னும் அழகை சேர்ப்பது (மெருகூட்டுவது, அழகோடு அழகை சேர்ப்பது.)
    எனவே பிரியமானவர்களே கர்த்தருக்கு பிரியமில்லதவைகளை நம்மிலிருந்து பிரித்து, கர்த்தரை பிரியப்படுத்துகிறவற்றை நம்முடன் சேர்ப்போம். பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுதுகொள்ளுவோம்.
    சரி இதை எப்போது செய்ய வேண்டும். இப்பொழுது என்று பார்க்கிறோம். இதுவும் முக்கியத்துவம் கொடுப்பதை பற்றித்தான். 
    வசனம் 5 ; இபோழுது உங்களை பரிசுத்தம் பண்ணிக்கொண்டு..., 
    வசனம் 10 ; இப்போதும் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய உக்கிரகோபம் நம்மைவிட்டுத் திரும்பும்படிக்கு, அவரோடே உடன்படிக்கைபண்ண மனதிலே நிர்ணயித்துக்கொண்டேன்.
    வசனம் 11 ;  இப்பொழுது அசதியாயிராதேயுங்கள்; 
    இந்த இப்பொழுது என்ற வார்த்தையை கவனியுங்கள்.
    இப்பொழுது பரிசுத்தம் செய்யுங்கள், இப்பொழுது அசதியயிராதேயுங்கள், இப்பொழுது உடன்படிக்கை பண்ண தீர்மானம், 
வசனம் 31. அதின்பின்பு எசேக்கியா: இப்போதும் நீங்கள் கர்த்தருக்கென்று உங்களைப் பரிசுத்தம்பண்ணினீர்கள்; 
    காரியம் முடிந்துவிட்டது. இபோழுதே செய்ததால் அவர்கள் அவர்களை பரிசுத்தம் பண்ணிக்கொன்டர்கள். 
    நேற்று என்பது முடிந்து விட்டது, நாளை நம்முடையது அல்ல, எனவே இன்றைய பொழுதை பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்று சொல்ல கேள்விப்பட்டிருப்பீர்கள். அது இது தான். இபோழுது தீர்மானம் பண்ணுங்கள், இப்பொழுது ஜாக்கிரதையாய் இருங்கள், இப்பொழுது உங்களை பரிசுத்தம் பண்ணிக்கொள்ளுங்கள். இப்பொழுது  உங்களை பரிசுத்தம் பண்ணினீர்கள். இபோழுதே காரியம் முடிந்து விட்டது. இப்பொழுது என்பது நாம் தேவனுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்பதை காட்டுகிறது.
    முதலாவது கர்த்தரை தேடவேண்டும், முதலாவது இப்பொழுதே நம்மை பரிசுத்தம் செய்துக்கொள்ள வேண்டும். ஆமென்.

    உங்கள் கருத்துக்களை prithiviraj23@gmail.com க்கு தெரியப்படுத்துங்கள்; 

Sunday, October 23, 2011

எசேக்கியா ராஜா -2 (வைராக்கியம்)

எசேக்கியா ராஜா -2 (வைராக்கியம்)

எசேக்கியாவின் அறிமுகத்தை ( http://prithiviraj23.blogspot.com/2011/10/blog-post.html ) பார்த்தோம். 

தன்னுடைய சூழ்நிலைகள் தனக்கு சாதகமாக இல்லாத நிலையிலும் கர்த்தரிடம் பற்றுதலாய் அவன் வளர்க்கப்பட்டான். 

நீதிமொழிகள் 22:6 பிள்ளையானவன் நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து; அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான்.
அபியாள் அவனை கர்த்தரிடமாய் நடத்தினாள். 
சரி அவன் என்ன செய்தான் - பார்ப்போம்.

2 இராஜாக்கள் 19:4 
     அவன் மேடைகளை அகற்றி, சிலைகளைத் தகர்த்து, விக்கிரகத்தோப்புகளை வெட்டி, மோசே பண்ணியிருந்த வெண்கலச் சர்ப்பத்தை உடைத்துப் போட்டான்; அந்நாட்கள்மட்டும் இஸ்ரவேல் புத்திரர் அதற்குத் தூபங்காட்டி வந்தார்கள்; அதற்கு நிகுஸ்தான் என்று பேரிட்டான்.
    பாருங்கள் இதுவரைக்கும் இஸ்ரவேலையும், யூதாவையும் ஆண்ட ராஜாக்கள் யாரும் செய்யாததை எசேக்கியா செய்கிறதை பார்க்கிறோம். 
    அவன் மேடைகளை அகற்றுகிறான்(HE REMOVED THE HIGH PLACES). மேடான இடங்கள் மேடைகள் ஆக்கப்பட்டது. இதுமட்டுமல்ல ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு போன்றவர்கள் கர்த்தருக்கு பலியிட பலிபிடத்தை கட்டி பலியிட்டு பின்பு அதை அப்படியே விட்டு சென்றுவிட்டார்கள், இந்த பலிபிடங்கள் மேடைகள் ஆக்கப்பட்டது. இந்த மேடைகளை ஜனங்கள் அந்நிய தெய்வங்களுக்கு பலியிட பயன்படுத்திக்கொண்டார்கள். இதைத்தான் எசேக்கியா ராஜா அகற்றுகிறான். 
    அந்த வசனத்தை படித்தால், அவன் மேடைகளை அகற்றி, சிலைகளைத் தகர்த்து, விக்கிரகத்தோப்புகளை வெட்டி... 
    விக்கிரக ஆராதனைக்கு உண்டான எல்லாவற்றையும் அவன் அழிக்கிறதை பார்க்கிறோம். 
    சரி அவன் மேடைகளை அகற்றினான், பிறகு ஏன் சிலைகளை அழிக்க வேண்டும், தோப்புகளை வெட்டவேண்டும். 
    அருமையானவர்களே எசேக்கியா மிக சரியாக செயல்படுவதை நாம் பார்க்கலாம். விக்கிரகதோப்புகள் இருந்தால் கண்டிப்பாக சிலைகள் வரும். சிலைகள் வந்தால் அது வெறும் சிலைகளாக இருக்காது, விக்கிரகமாக மாறும். பிறகு அதற்கு பலியிட மேடைகள் வரும்.(நம்ம ஊர்ல இத நல்லா பார்க்க முடியும், முதல 3 செங்கல் வரும், பிறகு அது கோயிலாக மாறும்.)  எனவே தான் அவன் எல்லாவற்றையும் அழிக்கிறான்.  
    இப்படித்தான் பாவ பழக்கமும் கூட, உதாரணமாக ஒருவர் புகை பிடிப்பதை விட வேண்டுமானால், வழக்கமாக புகை பிடிக்கும் இடங்களுக்கு செல்வதை தவிர்ப்பது மட்டுமல்ல, புகை பிடிக்கும் நண்பர்களை கூட தவிர்க்க வேண்டும். ஏன் இதை குறிப்பிட்டு சொல்கிறேன் என்றால் புகை பிடிப்பவர்கள் அவர்களுக்கு ஏற்ற புகைபிடிக்கும் பழக்கமுள்ள நண்பர்களை வைத்திருப்பார்கள். குடிப்பவர்களும் அப்படிதான்...என்னதான் முயன்றாலும் அந்த நண்பர்களுடன் இருக்கும்போது என்றாவது மீண்டும் பழைய பழக்கத்திற்கு செல்ல நேரிடும். அந்த பழக்கத்தோடு தொடர்பு உடையவற்றை துண்டிக்க வேண்டும்.  
    இவைகள் தான் நம் வாழ்க்கையில் மேடைகள். இந்த மேடைகள் அகற்றப்பட வேண்டும். அதாவது வேரோடு பிடுங்கப்பட வேண்டும். 
    பிறகு அவன் மோசே பண்ணியிருந்த வெண்கலச் சர்ப்பத்தை உடைத்துப் போட்டான்; அந்நாட்கள்மட்டும் இஸ்ரவேல் புத்திரர் அதற்குத் தூபங்காட்டி வந்தார்கள்; அதற்கு நிகுஸ்தான் என்று பேரிட்டான். 
    நன்றாக கவனியுங்கள், இது சாதாரண வெண்கல சர்ப்பம் அல்ல, உங்களுக்கு தெரியுமா இந்த வெண்கல சர்ப்பம் கர்த்தர் செய்ய சொன்னது,  உங்களுக்கு தெரியுமா இந்த வெண்கல சர்ப்பம் மோசே செய்தது, உங்களுக்கு தெரியுமா இந்த வெண்கல சர்ப்பம் அநேகரை மரணத்திலிருந்து காப்பாற்றியது. இப்படி ஜனங்கள இந்த வெண்கல சர்ப்பத்திற்கு தெய்வத்திற்கு நிகரான மதிப்பளித்து தூபங்காட்டி வந்தார்கள். 
    இப்படி வெண்கல சர்ப்பத்தை போல சில ஊழியர்களை மக்கள் கொண்டாடுவதை நாம் பார்க்ககூடும்.உங்களுக்கு தெரியுமா அவர் கை வைச்சி ஜெபித்தார் நான் சுகம் பெற்றேன், உங்களுக்கு தெரியுமா இவரால தான் எனக்கு இந்த அற்புதம் நடந்தது என்று கர்த்தரை விட்டுவிட்டு மனிதனை பிடித்துக்கொள்கிறார்கள்.  
    இந்த காரணத்தினால்தான் இந்த வெண்கல சர்ப்பத்தை எசேக்கியா உடைத்துப்போட்டன். உடைத்தது மட்டுமல்ல அதற்கு நிகுஸ்தான் என்று பெயரிட்டான். நிகுஸ்தான் (NEHUSHTAN ) என்றால் வெறும் வெண்கலத்துண்டு (" JUST A PIECE OF BRONZE" ) என பொருள். இப்படி இதன் மதிப்பை குறைத்தான் ( HE DEVALUED THE BRASEN SERPENT )  
    2 இராஜாக்கள் 18 :
      5. அவன் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின்மேல் வைத்த நம்பிக்கையிலே, அவனுக்குப் பின்னும் அவனுக்கு முன்னும் இருந்த யூதாவின் ராஜாக்களிலெல்லாம் அவனைப்போல் ஒருவனும் இருந்ததில்லை. 6. அவன் கர்த்தரை விட்டுப் பின்வாங்காமல் அவரைச் சார்ந்திருந்து, கர்த்தர் மோசேக்குக் கற்பித்த அவருடைய கற்பனைகளைக் கைக்கொண்டு நடந்தான்.
      இந்த மாதிரி செய்ய சொல்லி யார் எசேக்கியாவிற்கு சொன்னது. யாரும் சொல்லவில்லை. அவனாகவே முன்வருவதை பார்க்கிறோம். 
      மீண்டும் அந்த வசனத்தை பார்க்கலாம், 

      நீதிமொழிகள் 22:6 பிள்ளையானவன் நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து; அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான்.

    உங்கள் கருத்துக்கள் வரவேற்க்கப்படுகின்றன. கருத்துகளை prithiviraj23@gmail.com க்கு தெரியப்படுத்துங்கள். 






    Saturday, October 22, 2011

    எசேக்கியா ராஜா - அறிமுகம்.

    எசேக்கியா ராஜா - அறிமுகம். 

    கடந்த வாரங்களில் நடந்த வேதப்பாடங்களில் நான் கேட்டது.
    செய்தி : சார்லஸ் தாசன்.

    II இராஜாக்கள்
    18 அதிகாரம்

      1. இஸ்ரவேலின் ராஜாவாகிய ஏலாவின் குமாரன் ஓசெயாவின் மூன்றாம் வருஷத்திலே ஆகாஸ் என்னும் யூதாவுடைய ராஜாவின் குமாரனாகிய எசேக்கியா ராஜாவானான்.
      2. அவன் ராஜாவாகிறபோது, இருபத்தைந்து வயதாயிருந்து, எருசலேமிலே இருபத்தொன்பது வருஷம் அரசாண்டான்; சகரியாவின் குமாரத்தியாகிய அவன் தாயின் பேர் ஆபி.
      3. அவன் தன் தகப்பனாகிய தாவீது செய்தபடியெல்லாம் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்.
      2  நாளாகமம் 29 
      1. எசேக்கியா இருபத்தைந்தாம் வயதில் ராஜாவாகி, இருபத்தொன்பது வருஷம் எருசலேமில் அரசாண்டான்; சகரியாவின் குமாரத்தியாகிய அவனுடைய தாயின்பேர் அபியாள்.
      2. அவன் தன் தகப்பனாகிய தாவீது செய்தபடியெல்லாம் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்.
      எசேக்கியா ஆகாஸ் ராஜாவினுடைய குமாரன். இவன் தன் தகப்பன் மரித்தபின்பு தன்னுடைய 25 வயதிலே ராஜாவாகிறான். 
      எசேக்கியா என்றால் யேகோவா என் பெலன் (Jehovah is my strength) என பொருள். 
      II இராஜாக்கள்
      18 அதிகாரம்
      3. அவன் தன் தகப்பனாகிய தாவீது செய்தபடியெல்லாம் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்.
      மற்ற எல்லா ராஜாக்களை பார்த்ததால் தன் தகப்பனாகிய தவிதைப்போல கர்த்தரின் பார்வைக்கு செமையானத்தை செய்தார்கள் என்று குறிப்பிட்டு இருக்கும் , 
      யோசபாத் ராஜாவுக்கு தன் தகப்பனாகிய தாவிதின் முன் நாட்களில் நடந்தது போல என குறிப்பிட்டு இருக்கிறது .(2 நாளாகமம் 17- 3) 
      ஆனால் எசேக்கியாவோ தன் தகப்பனாகிய தாவீது செய்தபடியெல்லாம் கர்த்தரின் பார்வைக்கு செமையானத்தை செய்தான்.
      சரி இவன் இப்படி செய்ய காரணம் என்ன ? இவன் வளர்ந்த சூழ்நிலைதான் என்ன ?  என்று பார்த்தால் நாம் அவனுடைய தகப்பனாகிய ஆகாஸ் ராஜாவினுடைய வாழ்க்கையை ( http://prithiviraj23.blogspot.com/2011/09/blog-post_29.html ) சற்று பார்க்க வேண்டும். ஆகாஸ் ராஜா தன் தேவனாகிய கர்த்தரை விட்டு அந்நிய தெய்வங்களின் உதவியை நாடினான் . அவைகளுக்கு பலிபிடங்களையும் கட்டினான் , அவனால் யூதா நாடு முழுவதும் சிறுமைப்பட்டு போவதாக வேதம் கூறுகிறது. 
      இந்த பாதகமான சூழ்நிலையில் எசேக்கியாவை  கர்த்தரின் மேல் பற்றுதலாய் அவன் தாய் வளர்த்தாள். அவன் தாயின் பெயர் ஆபி (அபியாள்
      யார் இந்த அபியாள் ?
      II இராஜாக்கள் 18 அதிகாரம் 2 வசனம் 
      சகரியாவின் குமாரத்தியாகிய அவன் தாயின் பேர் ஆபி ( அபியாள் ). 
      அபியாள் என்றால் யேகோவா என் தகப்பன்Jehovah is my father ) என பொருள்.
      சகரியா தன் மகளை கர்த்தருக்குள் வளர்த்தான். அப்படியானால் யார் இந்த சகரியா என்று நாம் பார்க்கத்தானே வேண்டும். 
      II நாளாகமம் 26 அதிகாரம் 5 ஆம் வசனம்
        தேவனுடைய தரிசனங்களில் புத்திமானாயிருந்த சகரியாவின் நாட்களிலே தேவனைத் தேட மனதிணங்கியிருந்தான்; 
        சகரியா என்பவன் தேவனுடைய தரிசனங்களில் புத்திமானாய் இருந்தான் என வேதம் சொல்லுகிறது. இவன் ராஜாவாகிய உசியாவை கர்த்தர் பக்கமாக திருப்பினான். 
        நம்முடைய நண்பர்கள், நமக்கு ஆலோசனை சொல்பவர்கள் யார் என நாம் சற்று சிந்தித்து பார்க்கவேண்டும். அவர்கள் தேவனிடமாக நம்மை வழி நடத்துகிறார்களா ? அவர்களுடைய ஆலோசனைகள் வசனத்திற்கு ஒத்து இருக்கிறதா? என்று நாம் பார்க்க வேண்டும் . 
        உசியாவிற்கு சகரியா ...
        எசேக்கியவிற்கு அபியாள் ... நமக்கு ...?  
        அபியாள் தன் மகனை கர்த்தரிடம் பற்றுதலாய் வளர்த்தாள். அவனும் எல்லாவற்றிலும் கர்த்தரை தேடினான். கர்த்தர் அவனை கட்டினார். 
        சூழ்நிலைகள் பாதகமாக இருந்தாலும் கர்த்தரிடம் பற்றுதலாய் இருப்போம். இதற்கு நம்முடைய ஐக்கியம் மிகமிக முக்கியம். இதனால் தான் சபை கூடிவருதலை அசட்டை செய்யாதீர்கள் என்று வேதம் தெளிவாய் சொல்லுகிறது. 
        அபியாள் தன் மகனை சரியாய் வளர்த்தாள். அவன் தன் நாட்டு மக்களை கர்த்தரிடமாய் திருப்பினான். 
      உங்கள் கருத்துக்களை prithiviraj23@gmail.com க்கு தெரியப்படுத்துங்கள்.




            ஊற்று கேட்கும் தேவன் உடனடி பதில் - 2 : மேவிபோசேத் - கண்ணீரை துடைக்க கர்த்தர் உண்டு கலங்காதே

                   அப்பொழுது நானும் ஏன் குடுபத்தினரும் சபைக்கு சென்றுக்கொண்டிருந்தோம் . சில நாட்களாக பிரச்னைககளால் மனம் நொந்து என் குடுபத்திரிடம் நான...