Friday, November 1, 2019

என் கேள்விக்கு என்ன பதில்



               பார்பதற்கு சினிமா பாடல் வரி போல் இருந்தாலும் உண்மையாகவே பல கேள்விகளுக்கு பதிலை நாம் தேடிகொண்டுதான் இருக்கிறோம் . அதில்  ஒரு கேள்வி தான் இது .

                ஈசாக்கு விதை விதைத்தான் . தேவன் அதை நூறு மடங்கு ஆசீர்வதித்தார்.  ஆபிரகாம் தேவனிடத்தில் விசுவாசமாக இருந்தார் , ஒவ்வொரு காரியத்திலும் அவர் ஆண்டவருக்கு பிரியமாக நடந்து கொண்டார்  எனவே தேவன் அவரை பலமடங்கு ஆசீர்வதிப்பதாக வாக்குத்தத்தம் செய்தார் , அப்படியே ஆசீர்வதித்தார் , அவர்  மூலமாக ஒரு சந்ததியையும் ஆசீர்வதித்தார்.  யாக்கோபு தேவனிடத்தில் போராடி மேற்கொண்டார் , ஆசீர்வாதத்தை  கேட்டு வாங்கி கொண்டார் என்றே வேதத்தில் பார்க்கிறோம். ஆனால்   ஆபிரகாமின் மகன் , யாக்கோபின் தகப்பனாகிய  ஈசாக்கு  அப்படி செய்ததாக காண முடியவில்லை . 
            தேவன் ஈசாக்கை ஆசீர்வதிக்க அவர் அப்படி என்ன தான் செய்தார் ? ஏன்  தேவன் அவர் செய்த எல்லாவற்றையும் ஆசீர்வதித்தார் என்ற் கேள்வி தான் எனக்கு ?  ஒருவேளை பலருக்கு இந்த கேள்வி ஒரு சாதாரணமான அல்லது ஒரு சிறிய கேள்வியாக இருக்கலாம் . சாமானியனான எனக்கு இந்த கேள்வி கொஞ்ச நாளாக இரவில் தூங்கவிடாமல்  ரீங்காரமிடும் கொசுவை போல  என் யோசனையில் வட்டமடித்துக்கொண்டே இருந்தது .

             இப்படி நான் இந்த கேள்வியை கொஞ்சம் நாளாக யோசித்துக்கொண்டு இருக்கும் போதே இதற்கான பதிலை பெற்றுக்கொண்டேன் ......அப்படி என்ன பதில் ?

             தேவன் ஆபிரகாமுக்கு தரிசனமாகி  உன்னுடைய ஏகசுதணும்  உனக்கு பிரியமான மகனாகிய ஈசாக்கை எனக்கு பலி கொடுக்க வேண்டும் என்று அவரை சோதிப்பதற்க்காக கேட்டார் , ஆபிரகாமும் ஈசாக்கை பலியிட தேவன்  குறித்த இடத்திற்கு வந்தார் . ஒரு குறிப்பிட்ட இடம் வந்தவுடன் அவரது வேலையாட்களை அங்கேயே இருக்க சொல்லிவிட்டு , ஆபிரகாமும் ஈசாக்கும்  குன்றின் மேல்  பலியிட சென்றார்கள். இப்பொழுது ஈசாக்கு ஆபிரகாமை பார்த்து அப்பா பலிக்கான விறகு இருக்கிறது ஆனால் பலிமிருகம் எங்கே என்று கேட்க ஆபிரகாம் தேவன் பார்ததுக்கொள்ளவர் என்று ஆபிரகாம் சொல்ல இப்படி  ஒரு முக்கியமான  சம்பாஷணை  அப்பாவுக்கும் பிள்ளைக்கும் இடையே (ஆம் அடுத்த நிகழ்வை தீர்மானிக்க போகும் சம்பாஷணை அது ).  குறித்த இடமும் வந்தது . பலிபீடமும் கட்டியாயிற்று , ஆனால் பலி மிருகம் இல்லை. இங்கே தான் என்னுடைய கேள்விக்கான பதில் ஒளிந்து இருக்கிறது .
வேத்தில் இந்த பகுதியை பார்த்தால்    ஆதியாகமம் 22. அதிகாரம்  9.வது வசனம் .
 தேவன் அவனுக்குச் சொல்லியிருந்த இடத்துக்கு வந்தார்கள்; அங்கே ஆபிரகாம் ஒரு பலிபீடத்தை உண்டாக்கி, கட்டைகளை அடுக்கி, தன் குமாரனாகிய ஈசாக்கைக் கட்டி, அந்தப் பலிபீடத்தில் அடுக்கிய கட்டைகளின்மேல் அவனைக் கிடத்தினான்.

       ஈசாக்கை கட்டி அந்த பலிபீடத்தில் கிடத்தினான்.  இருங்க  ....   இருங்க  அப்படியென்றால   எப்படி ஈசாக்கு இதற்கு ஒத்துக்கொண்டார்  ?  ஒருவேளை ஆபிரகாம் ஈசாக்கை கட்டாயப்படுத்தி கட்டினாரா  ? 
இதை என்னுடைய போதகரிடம் நான் கேட்ட பொது அவர் சொன்ன பதில் இங்கே . 
5ஆம் வசனத்தை பார்த்தால் 
ஆபிரகாம் தன்னுடைய வேலைக்காரரை சற்று தூரத்திலேயே  அவர்களை இருக்க சொல்லிவிட்டு வந்துவிட்டார் . 
            பலி கொடுக்க தேவையான அளவு விறகுகளை சுமக்க வேண்டுமென்றால் அது ஒரு சிறுவனால்  முடியாது , கண்டிப்பாக ஆபிரகாம் இல்லை , ஏனென்றால் அவர் வயது சென்றவர்.
அப்படியானால் அந்த விறகுகளை யார் சுமந்து வந்து இருப்பார்  ?

        எனவே கண்டிப்பாக ஈசாக்கு தான் விறகுகளை சுமந்து வந்து இருப்பார். எனவே நிச்சயமாக அந்த சமயத்தில் ஈசாக்கு ஒரு இளைஞனாகத்தான் இருந்திருக்க  வேண்டும் .  ஒருவேளை ஈசாக்கு தப்பித்து ஓட முயற்சி செய்தால் கூட ஆபிரகமால் நிச்சயமாக தடுக்கவோ அல்லது பிடிக்கவோ  முடியாது . இப்பொழுது   
மீண்டும்  தகப்பன் மற்றும் மகனின் சம்பாஷணை : ஆனால்  இந்த முறை  விசுவாசிகளின் தகப்பனாகிய ஆபிரகாமிடமிருந்து  :  மகனே தேவன் உன்னைத்தான் பலியாக வேண்டும் என்கிறார் என்று  சொல்லி இருப்பார். இந்த வயதில் வானத்தையும் பூமியையும் படைத்த , ஆபிரகாமை  சந்தித்த, ஆபிரகாமுக்கு வாக்குத்தத்தம் பண்ணின தேவனை பற்றி ஆபிரகாம் மூலமாக ஈசாக்கு தெரிந்து கொண்டு இருந்து இருப்பார் . இப்பொழுது  பலிகொடுக்க தகப்பன் ஆயத்தம் . மகன் ஆயத்தமா இல்லையா என்பதை மகன் தான்  முடிவு  செய்ய வேண்டும் . மகனாகிய ஈசாக்கு தான் பலியாக ஆயத்தம் என ஆபிரகாமுக்கு சொல்லி இருப்பார். ஆபிரகாம் தன்        தவப்புதல்வனை , நேச குமாரனை , அவர் வளர்ச்சியை பார்த்தது பார்த்து பூரித்த  தன் மகிழ்ச்சியை  பலிகொடுக்க அவரை கட்டி பலிபீடத்தில் கிடத்தினார் .....

         இந்த நிகழ்வு ஈசாக்கு       தன்னை     பலியாக ஒப்புக்கொடுத்தார் என்பதை நிரூபிக்கிறது . இவரை  இயேசுவுக்கு ஒப்பனையாக  பார்க்கலாம் .  இதுதான் தேவன் ஈசாக்கை  பலமடங்கு ஆசீர்வதிக்க காரணம் .  ஈசாக்கை பற்றி அதிகமாக வேதத்தில் நாம் பார்ப்பதில்லை , 4 அல்லது 5 நிகழ்வுகள் தான் , ஆபிரகாமை போல விசுவாசமாக இருந்ததாக வேதத்தில் குறிப்பிடவில்லை, யாக்கோபை போல போராடி மேற்கொண்ண்டதாக தெரியவில்லை ,  ஆனால் ஈசாக்கு தன்னையே பலியாக ஒப்புக்கொடுத்தார் என்பதை வேதம் சொல்லாமல் சொல்லிக்கொண்டு இருக்கிறது .

        இவருக்காக இல்லை தன்னுடைய தகப்பனுடைய  தேவனிடத்தில்  தகப்பன் கொண்ட விசுவாசத்திற்க்காக , தேவனை பற்றிய நம்பிக்கைக்காக  இவர் பலியாக ஒப்புக்கொடுத்தார். கர்த்தர் ஆபிரகாமின் விசுவாசத்தையும் பார்த்தார் கூடவே ஈசாக்கையும் பார்த்தார் .

 இது தான் என்னுடைய கேள்விக்கான பதில் .


இப்படி உங்களுக்கு ஏதாவது கேள்விகளிருப்பின் prithiviraj23@gmail.com க்கு தெரியபடுத்துங்கள்



ஊற்று கேட்கும் தேவன் உடனடி பதில் - 2 : மேவிபோசேத் - கண்ணீரை துடைக்க கர்த்தர் உண்டு கலங்காதே

       அப்பொழுது நானும் ஏன் குடுபத்தினரும் சபைக்கு சென்றுக்கொண்டிருந்தோம் . சில நாட்களாக பிரச்னைககளால் மனம் நொந்து என் குடுபத்திரிடம் நான...