ஆட்டமா ஆராதனையா ? என்ற கேள்விக்கு எனது விளக்கம்
சமீப காலமாக சபைகளில் ஆராதனை முறைகள் மாறி கொண்டே வருகிறது .இளம் தலைமுறையினர் ஊழியத்தை வழி நடத்துவது வரவேற்கத்தக்கது . ஆனால் அதே நேரத்தில் வழி மாறி நடத்துவது வருந்தத்தக்கது. இதை மூத்த ஊழியர்கள் சுட்டிக்காட்ட அதை ஒத்துக்கொள்ளாமல் அதற்கு வசனங்களை மேற்கோள் காட்டுவது வருத்தத்திற்குரிய ஒன்று . இதற்கு தாவீதை உதாரணமாக சொல்லப்படுகிறது .
தாவீது நடனமாடினார் எனவே ஆடுவது தவறல்ல என்று சொல்கிறார்கள் .தாவீது தேவனுடைய உடன்படிக்கை பெட்டியை எருசலேமுக்கு கொண்டுவரும்போது அவர் வீதியில் ஆடினார். அவர் அந்த நாட்டின் ராஜா , அந்த நாட்டிலே தலைசிறந்த வீரன் , ராக தலைவன் வீதியில் உடன்படிக்கை பெட்டிக்கு முன்பாக ஆடினார் எனவே மற்றவர்கள் அவரை ஏளனமாக பார்த்தார்கள் அதை பற்றி அவர் சிறிதும் கவலை படவில்லை . தேவனுக்கு முன்பாக இன்னும் நீசனாவேன் என்று சொல்லி தன்னை தாழ்த்தினார் . அவர் முன் தேவன் மட்டுமே இருந்தார் .
தன்னை தாழ்த்தி நடனம் ஆடினால் உண்மையில் அது ஆராதனை ஆகும் . தன்னை உயர்த்த ஆடினால் தேவனுக்கு கொடுக்கவேண்டிய ஆராதைனயை நீங்கள் எடுத்துக்கொள்ள விரும்புகிறீர்கள் என்றே பொருள் .நீங்கள் ஆராதனையின் போது எப்படி,எதை நினைக்கிறீர்கள் என்பதை தேவன் அறிவார் .
இப்பொழுது ஆராதனை மிகவும் தொழில்நுட்ப ரீதியாக மிகவும் மேம்பட்டதாக இருக்கிறது. மிக இனிமையான இசை .இது தவறா என்றால் தவறில்லை ஆனால் தேவனை ஆராதிப்பதை விட்டு இசையும் மற்றவையும் நம்மை அது இழுக்குமானால் அது தவறு . இல்லை , இல்லை அது பாவம் . .இன்னொரு வகையில் சொல்லவேண்டும் என்றால் கவர்ச்சியாக இருக்கிறது அல்லது கவர்ந்து இழுப்பதாக இருக்கிறது . . . வாலிபர்கள் இந்த வகையான ஆராதனையை நோக்கி ஓடுகிறார்கள் . இது அவர்களுக்கு ஆராதனையை பற்றி சரியான வழிநடத்துதல் இல்லை என்பதை காட்டுவதாய் இருக்கிறது. ஜாக்கிரதை,தேவனை ஆராதிக்கும் பணியில் இருந்த லூசிஃபர் மனம் மேட்டிமையினால் வீழ்ந்தான் என்பதை இங்கே நினைவு கூறவேண்டும். எனவே ஆராதனை நடத்துபவர்கள் மிக ஜாக்கிரதையாக ஆராதனை நடத்த வேண்டி உள்ளது .
நாமும் கூட சில ஆராதனை பாடல்களை கேட்டுவிட்டு
அந்த TUNE மனசுலேயே இருக்குன்னு சொல்கிறோம் .நமக்கு இங்கேதான் பிரச்சனை . மீண்டும் தாவீது ராஜாவை நினைவில் கொள்ளவேண்டும்.அவர் துதி எப்போதும் என் வாயிலிருக்கும் . துதி மட்டும் தான் வாயிலிருக்கும் தவிர அந்த TUNE அல்ல .
.ரோமர் 12 : 1 மற்றும் 2ஆம் வசனங்கள் மிக தெளிவாக எது ஆராதனை மிக தெளிவாக சொல்கிறது .
எனவே ஆட்டம் போடுங்க, ரொம்ப ஆடாம ஆட்டம் போடுங்க.